திருமுழுக்கு எனும் திருவருட் சாதனம். SACRAMENT OF BAPTISM. வி.ப.14:15-31. திரு.பா.32. தீத்து: 3:3-8. யோவான்: 3:1-8

முன்னுரை: 
கிறித்துவின் அன்பர்களே!
திருமுழுக்கு என்ற திருவருட் சாதனம் கிறித்துவின் மிக
முக்கிஅன்புகட்டளையாகும்.
திருமுழுக்கு என்னும் சொல் Βάπτισμα (baptisma) என்னும் கிரேக்கச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். அதற்குக் கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல் என்னும் பொருள் உண்டு. தண்ணீர் பயன் படுத்த காரணம் பாவக் கறை கழுவப்பட்டு, தூய்மை அடைதலை குறிக்கிறது. தூய்மை உள்ளோரே இறை அருள் பெறமுடியும். இதற்கு சான்றாக  திருதூதர் பேதுரு அவர்கள், '"நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங் களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொ ருவரும் இயேசு கிறிஸ்து வின் பெயரால் திருமுழுக் குப் பெறுங்கள்.அப்பொழுது தூய ஆவியைக் கொடையா கப் பெறுவீர்கள்' என்றார் (திருத்தூதர் பணிகள் 2:38). இதுவே திருமுழுக்கு பெறு வதன் நோக்கமாகும். திருமுழுக்கு பெறுவதன் மூலமாக தான் தூய ஆவி பெற முடியும். இதற்கு ஆதாரமாக " இயேசு திரு முழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளி யேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதை யும் அவர் கண்டார்." (மத்தேயு  3:16).
1. ஆண்டவரே உங்களுக் காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயி ருங்கள்" வி.ப. 14:14-14-31. The Lord will fight for you; you need only to be still.”
கிறித்துவின் அன்பர்களே!
பல தலைமுறைகளாக 430
ஆண்டுகாலம் எகிப்தியர்க ளிடம் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை கடவுள் மோசே தலைமை யில் மீட்டு செங்கடலுக்கு முன்பாக அவர்களை தங்கவைத்து.   அப்போது இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் வழி தெரியாமல் திண்டாடு கிறார்கள் என்று பார்வோன்
நினைத்து  அவன் தனது 600 தேர்ந்த படைகளின் ஒரு தொகுதியுடன் புறப்பட்டு வந்து உங்களைத் துரத்து வான். ஆனால் பாரவோனை யும் அவனது சேனையையும் நான் தோற்கடிப்பேன். என்று உறுதி கூறினார். அப்பொழுது பாரவோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவ தைக் கண்ட இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தனர். அவர்கள் மோசேயை நோக்கி, “எங்களை எகிப் திலிருந்து அழைத்து வந்தது இந்தப் பாலைவனத்தில் சாவதற்காகவா? எகிப்தில் நிறைய கல்லறைகள் இருக்கின்றன. இங்கு அது வுமில்லை. நாங்கள் இங்கு நிராதரவாக மடிவதைக் காட்டிலும் அங்கே அடிமை களாக வாழ்ந்து சாவதே நலமாக இருந்திருக்குமே” என்று கோழைகள்போல் கதறியழுதனர். இஸ்ரேல் மக்களை போல நம் மக்களும் பாவத்திற்கு அடிமையாக இருக்க விரும்புகிறார்கள்.  ஆனால் கடவுள் அவர்களுக்கு விடுதலை கொடுக்கின்ற வராய் என்றும் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

அப்பொழுது அவர்களை ஆறுதல்படுத்திய மோசே, “பயப்படாதீர்கள்! நம் கடவுளாகிய யகோவா தேவன் எதிரிகளின் கைக ளில் சிக்காதவண்ணம் இன்று உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர் களை இனி உங்கள் வாழ் நாட்களில் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள்! நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். அழுது புலம்பாமல் அமைதி யாக இருந்தாலே போதும், நம் கடவுள் நமக்காகப் போரிடுவார்”என்றார்.

இதே எகிப்து நாட்டை 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் ஆறு நாள் யுத்த த்தில் சீனாய் பகுதிகளை போரிட்டு வெற்றி கண்டது.

ஆண்டவர் கூறியவாறு மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்ட வர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க செய்தார். செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் இரண்டாய்ப் பிளக்கும். பிளந்த இடத்தில் உலர்ந்த தரையைக் காண்பீர்கள். அப்போது உலர்ந்த தரை வழியே நடந்து கடலைக் கடந்து செல்லுங்கள். உங்க ளைத் துரத்திவரும் படியாக நானே எகிப்தியருக்குத் துணிவை அளித்தேன். ஆனால் நானே பார்வோ னையும், அவனது குதிரை கள் ரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்பதை அவர்கள் உணரும் படி செய்வேன்”என்றார்.

கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு மனதிடம் கொண்ட மோசே, தனது கைத்தடியை கடலைநோக்கி உயர்த்தி னார். அப்போது பலத்த காற்று வீசி, கடலை இரண் டாகப் பிரித்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. அதிசயித்த இஸ்ரவேல் மக்கள், கடலின் உலர்ந்த தரையின் மேல் நடந்து போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் கோட்டை மதிற்சுவர்போல் உயர்ந்து நின்றது. அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் அதே வழியில் இஸ்ரவேல் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தனர். இதைக் கண்டு மக்கள் மீண்டும் அஞ்சி நடுங்கினார்கள்.

அப்போது கடவுள் மோசே யிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தி யரின்இரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்”என்றார். அவ்வாறே மோசே தன்கை களை உயர்த்தினார். பிளந் து நின்ற கடல் தண்ணீர், முன்பு போல் தன் இயல் புக்குத் திரும்பி, சமமாக வந்து நின்றது. எகிப்தியர் கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பி யோட முயன்றார்கள். ஆனால் கடவுள் இரதங்க ளையும், குதிரை வீரர்களை யும் கடலின் அடியாழத்தில் மூழ்கடித்து விட்டார். பாரவோனின் தனிப்படை யில் இருந்த 600 பேரில் ஒரு வரும் பிழைக்க வில்லை! இஸ்ரவேலர்  செல்லும் பயணம் இஸ்ரவேலரின் அடிமை வாழ்வு முற்றிலும் நிறைவு பெறுகிறது.  செங்கடல் திருமுழுக்குத் தண்ணீருக்கு அடையா ளமாக அமைந்துள்ளது. இந்த மீட்பு பயணத்தை நிறைவு கூறும் வகையில் பாஸ்கா என்ற பண்டிகை இன்றளவும் கொண்டாடப் படுகிறது. 

2. தண்ணீரே புதுப் பிறப்பு  அளிக்கும்.Water gives New Birth.தீத்து3:38. கிறிஸ்து வின் அன்பர்களே! திருதூதர் பவுல் அடிகளார்; தீத்து  அவர்கள் கிரேத்து தீவின் ஆயராக இருக்கும் போது இத்திருமுகம் எழுதப் பட்டது. இவர் கிரேக்கர். பிற இனத்தவர். பவுலடிகளாரின் உதவியாளர். விருத்த சேதனம் செய்து கொள்ளு மாறு அவரை யாரும் கட்டாயப் படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3) என கிறித்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்த சேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் இவருக் காக வாதாடினார். கிரேத்து தீவு மக்களுக்கு அறிவுறை யாக தம்முடைய சொந்த வாழ்க்யை அவர்களுக்கு அறிவுறையாக வழங்குகி றார்‌. நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல் வகைச் சிற்றின்பங்களுக் கும் அடிமைகளாய் இருந் தோம்; தீமையிலும் பொறா மையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்ட வராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம். (தீத்து 3:3) என கூறுகிறார்.நாம் செய்த அறச்செயல்களை முன்னி ட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு(NewBirth)அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். (தீத்து 3:5) இங்கு நீர் (water) என்கிற திருமுழுக்கையும், அதன் மூலம் கிடைக்கும் " புதுப்பிக் கும் தூய ஆவி("Renewing of the Holy Spirit,) மூலமாகவே நம்மை மீட்கிறார் என கூறுகிறார். நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழி யாகத் தூய ஆவியை நம் மீது நிறைவாகப்பொழி ந்தார்.. திருமுழுக்கு எனும் திருவருட்சாதனம் மூலமே தூய ஆவி நம்மீது அளிக்கி றார் என்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அன்பின் இறை மக்களே! நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொள் வோம். அதிகமாக திரு முழுக்குக் கொடுப்பது ஆண்டவருக்கு விருப்ப மானதா ? அதிகமாக திடப்படுத்தல் கொடுப்பது ஆண்டவருக்கு விருப்ப மானதா? என சிந்திக்க வேண்டுகிறேன். ஏனென் றால் திருச்சபை ஆயர்கள், நற்செய்தியாளர்கள்  அதிக மாக புதிய நபர்களுக்கு திருமுழுக்கு கொடுக்க முயற்சி செய்யவில்லை. அதற்காக உழைக்கவும் இல்லை. திடப்படுத்தல் கொடுப்பது  (Confirmation) மிக எளிது. திருமுழுக்கு மிக கடினமானது. அதில் இறை பணியாளர்கள் உழைக்க வேண்டும். பேதுருவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழு க்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப் பட்டனர். (திருத்தூதர் பணிகள் 2:41) "We are creating Guinness Record on Confirmation but not on Baptismal Ceremony ". Because of no thrust and strives in our Evangelical activities. We are not at all following Matthew 28:19.

3.புதிய படைப்பாக்கும் மறுபிறப்பு: Born Again makes the New Creation : யோவான் 3:1-8.   கிறித்துவின் பிரியமான வர்களே! மீண்டும் பிறப்பதே புதிய படைப்பாக கருதப் படுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிக்கொதேமு  என்ற பரிசேயனிடம் (Pharisee)  மீண்டும் பிறத்தல் (Born Again) குறித்து உரையாடு கின்றார்.இவர் எருசலேம் நகரின் மதிப்பு மிக்க அதிகாரி.இவர் விவிலியத் தின்படி ஆண்டவரின் சீடரா வார். இவர் மிக முக்கிய யூதத் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டு ள்ளார்.இவர் மிகப்பெரிய செல்வந்தர். அதனால் தான் யோவான் 19:39ல்; "ஆரம் பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்தி ருந்த நிக்கொதேமு என்ப வன் வெள்ளைப்போள மும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந் தான்.இது இந்திய மதிப்பில் ரூ.7932.(£75x ₹105.67253936). ஒரு பணக்காரனால் மட்டுமே இதுமுடியும். யூதர் களிலேயே மிக சிறந்வர்கள் பரிசேயர்களே! இயேசுவின் காலத்தில் சுமார் 6000 * பரிசேயர்கள் இருந்தனர். இவர்கள் Chaburah என்றழைக்கப்பட்டனர்‌.( Brotherhood). பரிசேயர்கள் தன் வாழ்நாள் முழுவதும் மத சட்டங்களை பின்பற்ற சத்தியபிரமானம் எடுத்த வர்கள். பரிசேயர்கள் என்றாலே "பிரித்து எடுத்த வர்கள்" என்ற பெயர். நிக்கொதேமு முதல் முறை யாக இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரை யாடியதாக யோவான் நற் செய்தி குறிக்கின்றது. இரண்டாம் முறையாக இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர் களிடமும் 'ஒருவரது வாக்கு மூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. இறுதியாக அரிமாத்தியா யோசேப்புக்கு  இயேசுவின் உடலை அடக்கம்செய்ய  இவர் உதவியதாக கூறுகின் றது. இயேசுவை இரவில் சந்தித்து உரையாடியப் பகு தியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.குறிப்பா யோவான் 3:16 நற்செய்தி யின் சுறுக்கம் என அழைக் கப்படுகின்றது.மீள்பிறப்பு கொள்கை (born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.ஏன் நிக்கொதேமு இரவில் இயேசு கிறிஸ்துவை சந்திக்க வேண்டும்? பகல் காலங்களில் இயேசு கிறிஸ்துவோடு அநேக மக்கள் இருந்தனர். அவர் எப்போதும் மக்களோடு இருந்தார். மற்றும் யூத மத குருமார்கள்; மத சட்டங் களை படிப்பதற்கு இரவு நேரம் தான் சரியான நேரம் என்பார்கள். எனவேதான் * இரவு நேரத்தில் ஆண்டவரா கிய இயேசுவை நிக்கொதேமு சந்தித்தார். ஒவ்வொரு கிறிஸ்தவர்களு க்கும் மறுபிறப்பு அனுபவ த்தை பெற்றிருக்க வேண் டும். இது தூய ஆவி அருளு ம்  ஈவு. திருமுழுக்கு எனும் சாக்கிரமந்தில் பெறப்படு கிறது.திருதூதர் பேதுரு "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வின் கடவுளும் தந்தையுமா னவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர் த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள் ளார். இவ்வாறு குன்றா எதிர் நோக்குடன் நாம் வாழ்கி றோம். (1 பேதுரு 1:3) நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் மறுபிறப்பை பின்வருமாறு கூறினார்;" "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகா விட்டால் விண்ணரசில் புக மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன். (மத்தேயு நற்செய்தி 18:3) என்றார்.விண்ணரசில் செல்ல தகுதி என்பது சிறு குழந்தைகள் போல தூய உள்ளம் உள்ளோர் தான் விண்ணரசில் செல்ல முடியும் என உறுதியாக கூறுகிறார். அன்பின் இறை மக்களே! நாம் தூய உள்ளத் தோடு இருக்கிறோமா? மீண்டும் பிறந்த அனுப வத்தைப் பெற்று இருக்கி றோமா? திருமுழுக்குப் பெறுகின்ற பொழுது தண்ணீரில் நாம் எவ்வாறுமூழ்குகின்றோமோ அந்த மூழ்குதலில் நம்முடை ய பாவங்கள் எல்லாம் மூழ்கி விடுகின்றன. நாம் தண்ணீரில் இருந்து எழுகி ன்ற பொழுது மறுபடியும் பிறந்த, தூயவுள்ளம் கொண்டவராய் விளங்கு கிறோம். இதுதான் திரு முழுக்கின் முக்கிய அடை யாளம்.

அன்பின் ஆண்டவரே! எங்களுக்கு தூய ஆவியின் அருளால் மறுபடியும் பிறந்த வாழ்வினை தாரும். திரு முழக்கில் நாங்கள் கடவுளி டம் கொடுத்த உறுதி மொழி யை நினைவுபடுத்தி உம் மிடத்தில் உண்மையாயும் அனைவரிடத்திலும், அன்பு டனும் வாழ எங்களுக்கு அருள் புரியும். எங்களால் முடிந்தவரை திருமுழுக்கில் பங்கு பெற பலரையும் மந்தையில் சேர்க்க உழைக் கின்றோம் ஆண்டவரே! ஆமேன்.

Prof.Dr. David Arul Paramanandam.Sermon Writer.


www.davidarulblogs.com

www.david Arul Sermon Centre.Com.


* References from William Barclays Commentary.



   










  • இயேசுவின்        திருமுழுக்கு
திருமுழுக்கு:
இயேசு திருமுழுக்குப் பெறுதல். ஓவியர்:த்ரெவிசனி
(1723),இத்தாலியா.

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.