84.முதியோர் ஞாயிறு . " கனி தரும் முதியோர்". FRUITFULNESS OF THE ELDERLY. Genesis. தொட.நூல் 17:1-8, திரு.பாட 92. பிலமோன் 1:8-22. மத்தேயு 7:13-20.
முன்னுரை: கிறித்துவின் அன்பு விசுவாசிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். "கனிதரும் முதியோர் " என்ற தலைப்பை குறித்து சிந்திக்க இருக்கின்றோம். இத்தலைப்பில் முதியோர் என்பவர் கனி தருபவர்கள். எனவேதான் ஐக்கிய நாடுகள் சபை 1990 முதல் அக்டோபர் 1 தேதியை அகில உலக முதியோர் தினமாக கொண்டாடி வருகிறது. ஒளவையார் எழு திய அறநூல்களில் ஒன்று கொன்றைவேந்தன். அதில்
"மூத்தோர் சொல் வார்த்தை அமுதம் என்று கூறுகிறது". இதை புரிந்து கொண்டால்
முதியோரை கருவறையில் வைத்துகாத்துக்கொள்வர்.முதியோர்கள் பல நூலகங்க ளுக்கு சமம். தமிழ்நாட்டில் 2021 வது சென்சஸ் படி ஒன்று 1.04 கோடியே முதி யோர்கள் இருக்கிறார்கள் எனகணக்கிட்டியிருக்கிறது. இந்தியாவில்18.2 கோடி
முதியோர் என்பவர் மூத்த குடிமக்கள் ஆவர். இன்றைய இளையோர் நாளைய முதியோர் என்பதை மறந்து போகக்கூடாது. "இன்றைக்கு நாம் எப்படி முதியோரை கவனிக்கிறோமோ அப்படி யே நாம் நம் முதிர் வயதில் கவனிக்கப்படுவோம்."பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே முதலானவர்கள் தங்கள் முதிர்வயதிலேயே அதிகம் சாதித்தார்கள். காலேப் முதியோருக்கு ஒரு சவால்! எண்பத்தைந்து வய திலும் மலைநாட்டைக் கேட் டார் – யோசுவா 14:10-14.
நெறிகெட்ட உலகில் நீதியான மனிதனாய் தன் 600 ம் வயதிலும் நோவா கடவுள் முன் மாசற்றவராய் இருந்ததால் குடும்பத்துடன் காப்பாற்றப்பட்டார். முதிர் வயது கடவுலோடு நெருக்க மாய்இருக்கின்ற ஏற்ற வயது. யோபு கூறுகிறார்
"முதியோரிடம் ஞானமுண்டு; ஆயுள் நீண்டோரிடம் அறிவு ண்டு. (யோபு 12:12) என்கிறார். முதியோராகிய நமக்கு கடவுள் கூறும் நம்பிக்கையின் வார்த்தை
"4 உங்கள் முதுமை வரைக் கும் நான் அப்படியே இருப் பேன்; நரை வயதுவரைக் கும் நான் உங்களைச் சுமப் பேன்; உங்களை உருவாக்கி ய நானே உங்களைத் தாங்கு வேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப் பேன். (எசாயா 46:4) நம்மை காக்கும் தேவன் நம்மோடு இருக்கிறார். யார் என்னைக் கைவிட்டாலும் என்இயேசு என்னை என்றும் கைவிடமா ட்டார்.இதுதான் நாம் அனுதி
னமும் தியானிக்கின்ற வார்த்தையாக இருக்க வேண்டும். ஏனேனில் நாம்
14 அவர்கள் முதிர் வயதி லும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; (திரு.பா.(சங்கீத 92:14) என நாம் என்றும் கனி தறுபவர் என நம்ப வேண் டும். சாலமோனின் மகனாகிய ரெகோபியாம் முதியோர்களின் சொல் கேளாதபடியினால் அவனு டைய ராஜயபாரம் அவனி டம் இருந்து பிடுங்கப்பட்டது. இது இக்கால பிள்ளைகளு க்கு ஒரு பாடமாகும். தன் பெற்றோர்களை கவனிக் காத பிள்ளைகளுக்கு கொடு க்கப்பட்ட ஆசீர்வாதங்கள் பிடுங்கப்படும்.பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங் கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற் கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயை யும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்த முள்ள முதலாங் கற்பனை யாயிருக்கிறது” (எபேசியர் 6:1-3). இதை மீறுவோர்
17 தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும் வயது முதிர்ந்த தாயை இக ழும் விழிகளையும் இடு காட்டுக் காக்கைகள் பிடுங்க ட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 30:17) என சாலமன் அரசர் சபிக்கிறார்.முதியோர் இல்லத்திலே தங்கள் தகப்ப னையும்,தாயையும்கொண்டு போய் சேர்த்து விட்ட பிள் ளைகள் ஏராளம். இவர்களு க்கு கடவுள் நல்லறிவு வழங் குவாராக. "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ (கலாத்தியர் 6:7)
1. ஆபிரகாம் பல நாடுக ளின் தந்தை: The Father of Great Nations Abraham. Genesis 17:1-8. தொட.நூல்.
அன்பின் இறை மக்களே ஆண்டவர் விசுவாசத்தின் தகப்பனாக ஆபிரகாமை அவருடைய முதிர் வயதில் தான் அழைக்கிறார். இவர் தான் யூதர்களின் தந்தையா கவும் முதல் யூதராகவும் கருதப்படுகிறார். கானான் என்ற மாபெரும் நாட்டை அவருக்கு உடன்படிக்கை யாகவழங்குகிறார்.ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடி யிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந் தத்தை நினைவுபடுத்தும் விதமாக இஸ்ரேல்,ஐக்கிய அமீரகம், அமெரிக்காஆகிய
நாடுகள் இனணந்து ஆகஸ்ட் 13,2020 அன்று "ஆபிரகாம் ஒப்பந்தம்" என்ற அமைதிஒப்பந்தத்தை ஏற்படுத்தினர.அமெரிக்க அதிபர்டொனால்ட்டிரெம்ப் அவர்களால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் மூலம் இஸ்ரேல் உடனான உறவை சுமூகமாக்கி கொள்வதாக ஐக்கியஅமீரகம்மற்றும் பஹ்ரைன் நாடுகள்அறிவித்தன. யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களாலும் முக்கிய தீர்க்கதரிசியாக கருதப்படும் முதுபெரும்தந்தை ஆபிரகாம் பெயரே இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு சூட்டப்பட்டு ள்ளது. இது ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை விளக்குகிறது.
ஆண்டவர் எப்பொழுதும் முதியோரை எல்லாவற்றி லும் மகிமைப் படுத்துகிறார் இளையவர்கள் எடுத்துப் போட்டாலும், தூக்கி எறிந்தாலும் முதியோர்கள் கடவுளுக்கு பிரியமானவர் கள். ஆனால் இக்கால மக்கள் வேதம் கூறுவது போல்"முதிர் வயதில் என்னைத்தள்ளிவிடாதேயும்” என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” என்ற திருப்பாடல் (71:9) எழுப்பும் அபயக்குரல் இன்று ஒரு சமுதாயப் பிரச்சனையாக இருக்கிறது. " பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 23:22 எச்சரிக்கிறது.
கிறிஸ்துவின் அன்பர்களே! நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட ஒரு கதையை நினைவுபடுத்துகிறேன். ஓர் ஊரில் யூதாஸ் என்ற தச்சன் இருந்தான். அவரன் தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது வயதான தந்தை பெயர் சீமோன் இவருடன் வசித்து வந்தார். மிகவும் பலவீனமா கவும், நடக்க முடியாமல் வீட்டின் திண்ணையிலே படுத்து கிடந்தார். அவருக்கு போதுமான உணவு கொடுக் கப்படவில்லை. அவருடைய கை கால்கள் நடுங்கின. அவருக்கு ஒரு சிறிய மண் தட்டில் சிறிதளவு தான் உணவு கொடுப்பார்கள். இந்த தச்சனாகிய யூதாஸ் அன்பு இல்லாதவன். கடவுள் பயம் இல்லாதவன். அவனுடைய மனைவியும் அவ்வாறே இருந்தாள். இருவரும் தந்தையை மோசமாக நடத்தினர். இரவு மழை குளிர் காலங்களில் சீமோன் தின்னைலையே படுத்து கிடந்தார். இவர்களு க்கு யோவான் என்ற 10 வயது மகன் இருந்தான். இவன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிரு ந்தான். இவன் அன்புள்ள வன். தன் தாத்தாவோடு தினமும் விளையாடுவான். அவருடன் அன்புடன் பேசு வான். சிறுசிறு உதவிகளை செய்வான். இவனுக்கு தன் தந்தை தாய் செயல்கள் அறவே பிடிக்கவில்லை. தன் தாத்தாவை மோசமாக நடத்தும் விதம் அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஒரு நாள் தாத்தா மண்தட்டில் தன் தாயிடமிரு ந்து உணவு வாங்கும் போது அந்த மண் தட்டு தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. தச்சனும் அவன்மனைவியும் வயதான தந்தையை மிக வும் கடுமையாக திட்டினார் கள். இதை கவனித்த மகன் யோவான் மிகவும் வருந்தினான். மறுநாள் சனிக்கிழமை பள்ளி விடு முறை. அவன் தந்தையின் தச்சு கருவிகளை எடுத்துக் கொண்டான். ஒரு மரத்தட் டை தயாரித்தான். அதை அவன் தந்தை பார்த்தான். யோவான் நீ என்ன செய்கிறாய் ? என தன் மகனிடம் கேட்டார். அவன் அப்பா நான் ஒரு மரத்தட்டை தயாரிக்கிறேன். அதற்கு அவன் தந்தை எதற்காக மரத்தட்டு என கேட்கிறான். அப்பா நான் அதை உங்களு க்காக வயதான காலத்தில் கொடுக்க தயாரிக்கிறேன். மண் தட்டு எளிதில் உடை கிறது. எனவே உங்களுக் காக மரத்தட்டை தயாரிக்கி றேன் என்றான். இதைக்கேட்ட தச்சன் யூதாசு அதிர்ச்சடைந்தான். அவரின் மனைவியும் தங்கள் தவறை உணர்ந்து அவனிடம் அவர் கள் மன்னிப்பு கேட்டனர். பிறகு அவருடைய தந்தை யை இருவரும் நேசிக்கவும் கவனிக்கவும் தொடங்கினர்.
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்" என திருவள்ளுவர் முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற் றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும். என கூறுகிறார்.
"மனுசன்எதைவிதைக்கிறானோ அதையே அறுப்பான்". (கலா 6:7) என முதியோரை மதியாதாவரை இது எச்சரிக் கிறது.
2.ஒநேசிமுக்காக பவுலின் மன்றாட்டு . Paul's Plea for Onesimus பிலமோன் 1:8-22.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! திருத்தூதர் பவுல் அவர்கள் தன் முதுமை வயதில்தான் திருச்சபைகளுக்கு கடிதங் கள் மூலமாக திருச்சபை மக்களை ஆண்டவரின் அருள் வார்த்தையினால் வழிநடத்தினார். இந்த பிலெமொனுக்கு எழுதிய கடிதம் அவர் ரோமச் சிறைச் சாலையில் இருந்து கி.பி 64ம் ஆண்டில் தன் வயதான காலத்தில் தனக்கு அன்பாய் நேசிக்கப்பட்ட ஒனேசிமுக் காக ஒரு அன்பின் நிருபம் தான் இந்த கடிதம்.
கொலோசெ பட்டணம் பிரிகியா தேசத்திலுள்ளது. இவருக்கு ஒநேசிமு என்னும் பெயரில் ஒரு அடிமை வேலைக்காரர் இருந்தார். இவர் பிலேமோனின் பொருளுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கவேண்டும்அல்லது அவருடைய பொரு ளை திருடி எடுத்துக் கொண் டு, அவரை விட்டு ஓடிவந்தி ருக்கவேண்டும். இதற்கு உரோமைச் சட்டப்படி மரண தண்டனை கொடுக்கலாம். ஆனால் ஒனேசிம் தம் தலைவரின் நண்பரான தூய பவுலை நாடி வந்தார்; சிறிது காலம் அவரோடு இருந்து கிறிஸ்தவராகிய பின்னர் தம் தலைவரிடம் திரும்பிச் செல்ல விழைந் தார். அப்போது பவுல், பிலமோன் ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஓர் அடிமையாக
அல்ல,ஒருசகோதரக்கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப்பரிந்துரைக் கடிதத்தை எழுதிஅனுப்புகிறார்.இவற்றில் பவுல் அடிகளாரின் தூய அன்பு வெளிப்படுத் துகிறது கிறிஸ்துவுக்குள் அடிமை என்பதும் சுயா தினம் என்பதும் இல்லை அனைவரும் சமம் என்பதை விளக்குகிறார்.
பவுல் வாழ்ந்த காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டில் அடிமைகளை வாங்குவதும் விற்பதும் வழக்கமாய் இருந்தது. கிரேக்க மற்றும் உரோமை கலாச்சாரங்கள் அடிமைத்தனத்தை ஏற்றிருந்தன. அடிமைகள் மனித மாண்போடு நடத்தப்படவில்லை, மாறாக, விற்பனைப்பொருள்போலவே கருதப்பட்டார்கள்.
அடிமைத்தனம் 16ஆம் நூற்றாண்டிலும் அதன் பிறகும் கிறித்துவ நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் அடிமைகளை வாங்கி விற்று மிகுந்த ஆதாயம் ஈட்டின.அடிமைகள் தொன்மைகாலமாக போரினால் ஏற்பட்டது. எகிப்தியர், கிரேக்கர்கள் அடிமைமுறை கொண்டு வந்தவர்கள். ஆபிரகாம் 300க்கு மேற்பட்ட வர்களை அடிமைகளாக தனக்கு வேலையாட்களாய் வைத்திருந்தார்.எனவே! செல்வந்தர்கள்அடிமைகளை வைத்திருப்பது அக்காலத்தில் நடைமுறை யாக இருந்தது.சிறைச்சா லையில் ஒனேசிம் பல உதவிகளை பவுலடிகளாரு க்கு செய்திருக்கிறார். அப்பொழுது அவருடைய நடத்தை, கீழ்ப்படிதல் போன்ற அருங் குணங்கள் பவுலடிகளாரை மிகவும் அவரை நேசிக்க வைத்தது.
கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய் தோரையும்அன்புடன்ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துக் கூறுகிறது.
பவுல் ஒரு தனிஆளுக்கு எழுதியதாக அமைந்தது பிலமோன் திருமுகம். தம் நண்பரான பிலமோன் நடந்ததை மறந்துவிட்டு, ஓடிப்போன அடிமையாகிய ஒனேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் பரிந்துரையை பவுல் முன்வைக்கின்றார்.
சமூக அநீதியை, ஒரு முதியோராய்;ஒழிப்பதற்கான அடித்தளம் இம்மடலில் உள்ளது. அடிமை-எசமான் பாகுபாடுஅறவே கூடாது எனபவுல்விரும்புகிறார்.எனவே:தான் பவுல் "இனி ஒனேசிமுவை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிடமேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்" என்று பிலமோனுக்கு எழுதுகிறார்
மேலோர் கீழோர் உறவு மாறவில்லை என்றாலும் அவர்கள் இருவருமே இயேசுகிறித்துவில் உடன்பிறப்புகள் என்னும் உறவால் பிணைந்திருக்கிறார்கள்; எனவே, அந்த அன்புப் பிணைப்பு சகோதர, சமத் துவ நிலையின் அடித்த ளத்தில் அமைய வேண்டும். இந்த உண்மையைப் பவுல்
பிலமோனுக்கு உணர்த் தினார். தன் முதிர்வயதிலும்
அடிமை தனத்தை ஒழிக்க சமநிலையை நிலைப்படுத்த பவுலடிகளார் உழைத்தார். ஒனேசிம் ஒரு அடிமை தானே என அவனை தூக்கி எறியவில்லை; முதிர் வயதிலும் கணித்தரும் மரமாய் பவுலடிகாளார் தன்னையே வெளிப்படு த்தினார்.
3. முதியோர் கனிதரும் மரம்:Elderly are Fruitful trees. மத்தேயு 7:13-20.
கிறிஸ்துவின் அன்பர்களே!
ஆண்டவரின்மலைப்பொழிவு கிறிஸ்தவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள். இங்கு மனிதர்களை இரண் டுகூறுகளாகபிரிக்கின்றார்.
ஒன்று இடுக்கமான வாயில், மற்றொன்று வாழ்வுக்கு செல்லும் வாயில்; போலி இறைவாக்கினர், மற்றொரு வர் உண்மையான இறைவா க்கினர்; இறுதியாக நல்ல மரம் மற்றும் கெட்ட மரம்.என இரு தரபட்ட மனிதர்களாக. பிரிக்கிறார்.
நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். முதியோர்கள் கனி தரும் மரங்களுக்கு ஒப்பாக அவர்கள் நல்ல மரத்துக்கு சான்றாக இருக்கின்றார்கள்.எனவே முதியோரை மதிக்க வேண்டும்.
"பெற்ற தந்தைக்குச் செவி கொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 23:22) என வேதம் கூறுகிறது. முதியோர்கள்
" நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:3).என கூறுகிறது.இயேசுவிடம் முதியோர் என்றும் இனைந் திருத்தல்வேண்டும்.ஏனேனில் கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது (யோவான் 15 : 4 ) என்கிறார் இயேசு.
கனிதருதல் என்பது முதியோராகிய நாம் நமக்கு கடவுள் தந்த ஆலோசனை யல்ல. கட்டளை. கனிதரும் வாழ்க்கை வாழ்வது என்பது நமது இறைவனின் விருப்பம். எனவே அன்பு மூத்த குடிமக்களே! இனி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது; இனிய முடிந்து விட்டது என்ற எண்ணம் கொள்ளாமல்; ஆண்டவர் நமக்கு புது வாழ்வை தருவார் புத்துணர்ச்சி தருவார் கழுகுகளைப் போல சட்டைகளை அடித்து எழும்ப செய்வார் என்ற மன உறுதியோடும், நம்பிக்கை யுடனும்:நாம் ஆண்டவர் வழங்கும் விண்ணரசுக்கு செல்லும் வரை அவர் பணியை உலகில் செவ்வ னே செய்வோம். இறைபணி ஆற்றுவோம் இதுதான் முதியோர்களாகிய நமக்கு ஆண்டவர் கொடுக்கும் பணி ஆகும். பவுலடிகளார் முதியோராகிய நமக்கு;
" எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளரு வதில்லை.
(2 கொரிந்தியர் 4:16)
17 நாம் அடையும் இன்னல் கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விழைவிக்கின்றன. அம்மாட்சி எள்றென்றும் நிலைத்திருக்கும்.
(2 கொரிந்தியர் 4:17) என்ற சிந்தனையுடன் நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்.
4. முதிர்வயதில் நாம் செய்ய வேண்டியது;
அன்பின் இறை மக்களே உதிர் வயது என்பது இயற்கையானது இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் துன்பங்கள் சோர்வுகள் பலவீனங்கள் வியாதிகள் ஏமாற்றங்கள் ஏற்படும் இவைகளை சமாளிக்கின்ற தாங்குகின்ற மனப்பக்குவத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பெருவாரியான நேரங்களை ஒரே வார்த்தைகளை தியானிப்பதிலும் பாடல்களை பாடி கடவுளை துதிப்பதிலும்; பேரப்பிள்ளைகளோடு விளையாடுவதிலும் நல்ல புத்தகங்களை படிப்பதிலும் நண்பர்களோடு உரையாடு வதிலும் நம் காலத்தை சிறு சிறு வேலைகள் செய்து ஆக்கப்பூர்வமாக நம்மால் முடிந்த சில உதவிகளை மற்றோருக்கு செய்து நம் காலத்தை கழிக்கவேண்டும்.
முதியோர்கள், மற்றவர்க ளுடன் மனம் விட்டு பேசுவதால், அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். துக்கம் காணாமல் போகும்.... கடவுள் நமக்கான ஒரு பெரும் திட்டத்தை நிச்சயம் வைத்திருப்பார் நம்மை பயன்படுத்துவார் கடவுள் என்று நம்மை கைவிட மாட்டார்.
இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர் களை முதியோர் இல்லத்தி லிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டு மென அன்புடன் வேண்டுகிறேன்..அன்பு நண்பர்களே! உங்கள் பிள்ளைகளை அவர்களுடைய ஆயா தாத்தா அவர்களிடம் வளர விடுங்கள் அவர்கள் அன்பான கதைகளை சொல்வார்கள். நீதி நெறிகளை வழங்குவார்கள். நல் ஆலோசனைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். சிறு பிள்ளைகள் விட்டு கொடுத்து வாழவும், பெரியோரை மதிக்கவும், கீழ்ப்படுதலையும் கற்றுத் கொள்வார்கள். மற்றும் சுத்தம் சுகாதாரத்தை உணர்த்துவார்கள்; நீதிக் கதைகளை கூறுவார்கள். வேதத்தின் அறிவுரைகளை வழங்குவார்கள். ஒற்றுமையை சொல்லித் தருவார்கள்.முதியோர் கரங்களில் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமுதாயத்தில் சிறந்துவிளங்குவார்கள்: நேசிக்கின்றவர்களாகவும், அன்புள்ளவராகவும் விளங்குவார்கள் என்பது என்னுடைய உறுதியான எண்ணமாகும்.
பேரா. முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
www davidarul sermon centre.com
www.davidarulblogspot.com.
கடவுளுக்கு நிகராக முதியோரைக் கருத வேண்டும்.
Comments
Post a Comment