(85) தென்னிந்திய திருச்சபை உருவாக்க நாள்.( 27-09-2023) சாட்சியில் கூட்டுறவு. UNITY IN WITNESSING. எசே 37:15:22; திரு.பாட.122; எபேசியர் 4:1-6; யோவான்: 17: 20-26.
முன்னுரை:
கிறிஸத்துவின் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும்இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தென்னிந்திய திருச்சபை யின் உருவாக்க நாளான செப்டம்பர் 27ம் நாளில் சாட்சியில் கூட்டுறவு (Unity in Witnessing) என்ற தலைப்பில் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த மாதத்திலேயே செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபை CSI நிறுவப்பட் டது.இது தென்னிந்திய ஆங்கலிகன், மெதாடிஸ்ட், பிரேஸ்பிடேரியன் மற்றும் புரட்டஸ்டண்ட், பாப்டிஸ்ட் திருச்சபைகள் இணைத்து" "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்ற ("That They All May be One" யோவான் 17:21) இறை வாக்கின் செம்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தற்சமயம் நான்குமில்லியன் (40 இலட்சம்) உறுப்பினர்க ளுடன் இந்தியாவின் இரண்டாவது மகா பெரிய திருச்சபை தென்னிந்திய திருச்சபையாகும். முதலாவதுபெரியதிருச்சபை 1 கோடியே 79 இலட்சம் மக்களை கொண்ட கத்தோ லிக்க திருச்சபையாகும்.
ஆண்டவரின் அருள் வாக்கான "நான் உங்களோ டு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடிதிராட்சைச்செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என் னோடுஇணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. (யோவான் நற்செய்தி 15:4)
என்ற அருள் வார்த்தையை இவ்வுலகில் நிறைவேற்ற தென்னிந்திய திருச்சபை என்றும் கடவுளோடு இணை ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல் படுவே உருவாக்கப்பட்டது.
திருச்சபையை இந்தியா வில் முதன்முதலில் விதைத் தவர்கள் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், ஆஸ்தி ரேலியநற்பணியாளர்களுமே ஆவர். தற்சமயம் தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் யாழ்ப் பாணம் பகுதிகளை உள்ள டக்கிய 26 பேராலயங்கள் அடங்கியது.திருச்சபை.என்பது,"கடவுளுக்கே உரியது" என பொருள்படும் வார்த் தை.இதற்கு 'புனித மக்கள் கூட்டம்" எனபொருள்படும்.கிறிஸ்துவின் உடலானது திருச்சபை. இது பெந்தகோ ஸ்து நாளில்தூயஆவியரால் துவங்கப்பட்டது.திருத்தூதர்களின்திருச்சபை தூயதாக இருந்தது. அதாவது அந்த திருச்சபையை இறை வனாம் இயேசு கிறிஸ்துவே நிறுவியதால் அது தூய்மை யானதாக இருந்தது.இன்று நம்திருச்சபைகள்எப்படிஇருக்கிறது?
தென்னிந்திய திருச்சபை நமக்கு இரண்டு அருட்சாத னங்களைகொடுத்திருக்கிறது. ஒன்று திருமுழுக்கு மற்றொன்று திருவிருந்து எனும் தூய நற்கருனை. மிகவும் பாராட்டக் கூடியது. ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறித்து தான் காட்டிகொடுக்கப்படுகின்ற அந்த இரவில் சீடர்களின் கால்களை கழுவினார்.
இயேசுவின் வாழ்வின் இறுதி நாட்களில் அவர் அவர்களுக்கு செய்த மாதிரி விளக்கம் அது. அன்று தான் இயேசு தமது சீடர்களுக்கு கால்களைக் கழுவி “….. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே.நான்போதகர் தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடையகாலடிகளைக் கழுவக்கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.”(யோவான்13:12-15.திருவிவிலியம்).
இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வைநினைவுகூரும் விதமாக, கத்தோலிக்க தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்த 12 சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவித் துடைத்தார்.
இதை ஏன் நம் தென்னிந் திய திருச்சபை பின்பற்ற வில்லை.? கடவுளின் கட்டளையை இது மீறுவது ஆகாதா?.
ஆபிரகாம் தெய்வீக விருந்தி னர்கள் கால்களைக் கழுவி னார்(ஆதியா.தொன்மை நூல் 18:4) அவர் விருந்தோம் பலுக்குமுன்மாதிரியாகிறார்
.ஆசாரியர்கள் சேவைக்காக தேவாலயத்திற்க்குள்செல்ல பாதங்களைக் கழுவுதல் கட்டாயமாக்கப்பட்டது. (யாத் 30:17-21)
பேதுரு ஆண்டவரைப் பார்த் து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான்.இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.(யோவான் 13:6-8) எனவே ஆண்டவர் இடத்தில் பங்கு பெற வேண்டுமானால் ஆண்டவருடைய கட்டளை யின்படிஒவ்வொருவருடைய கால்களை கழுவுவது இறைப் பணியாளர்களின் திருப்பனியாகும் இதை ஏன் தென்னிந்திய திருச்சபை வலியுறுத்தவில்லை? இதனால் தான் பேராயர் கள், பிரதம பேராயர்கள், ஆயர்களும் இறை பணியா ளர்களும் திருச்சபையின் திருப்பனியை சிறப்பாக செய்யவில்லை ? தங்களின் பதவிக்காக பல கோடிகளை வழக்காடுவதற்காகவும், ஊழல் செய்து சொத்து சேகரிப்பவராகவும், திருச்சபைக்கு சொந்தமான நிலங்களை விற்பவராகவும் ஆடம்பர பிரியர்களாய் இருப்பதும், தனக்கு கீழ் பணிசெய்யும் பெண்பணி யாளர்களை தவறாக நடத்துவதும், கையூட்டு பெற்று வேலைவழங்கு வதும், தனக்கு வேண்டிய வர்கள் என்றால் தகுதி யில்லை என்றாலும் பணி நியமனம் வழங்குவதும் இறை பணிக்கு அனுப்பு வதும், தனக்கு பிடிக்காத ஆயர்களை நேர்மையா னவராக இருந்தாலும் தூக்கி அடிப்பதும் பேராயர்களின் அடாவடி செயல்களாகும். இவர்கள்
"போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
(மத்தேயு நற்செய்தி 7:15) என ஆண்டவர் எச்சரிக்கி றார். ஆண்டவர்
"இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்ப தற்கும் வந்தார்" என்று கூறினார். (மத்தேயு நற்செய்தி20:28)இவைகளை
இறைபணியாற்றுவோர் பின்பற்றவில்லை. எனவேதான் தற்சமயம் தன்னிச்சையான திருச்சபைகள் அதிகம் வளர்கின்றன. சீர்திருத்த திருச்சபைகள் விசுவாசி களை இழந்து கொண்டு வருகிறது. என்னுடைய அன்பான மாணவர்களில் ஒருவர் இறையியல் கல்வி B.Th கற்றவர். இவர் பால வாக்கத்தை சேர்ந்த மேசாக் ; அவர் மிசோரம் மாநிலத்தி ற்கு அருட்பணியாற்ற சென்றார்.அங்குள்ள கிறித்துவ குடும்பங்களை சந்திக்கின்ற போது அவர் கள் இவர்களின் கால்கலை கழுவி ஏற்றுக்கொண்டனர். ஒரு தலித் பேராயாரை அடித்த ஆயர்களும் சாதிய ரீதியாக செயல்பட்டதும் இந்த தமிழ் நாட்டில் நடந்து என்பது வெட்க கேடு. அடியாட்களை வைத்து (Bouncers) ஆயர்களை தாக்குவதும், அவர்களை பாதுகாப்பு என்ற போர்வை யில் பயன்படுத்துவது அவமானத்தின் சின்ன ங்கள். இவர்கள் எறி நரகத் தில்தள்ளப்படுவதுஉண்மை.குருத்துவத்தின் அடிப்படை த் தன்மை பணி செய்தல், பிறருக்குத் தொண்டு ஆற்றுதல் என்பதே.இதை ஆயர்கள், பேராயர்கள் அறவே மறந்து விட்டனர்.
ஒவ்வொருஅருடப்பணியாளரும் பணியாளர்களே பக வான்களல்ல! பாட்டாளிகளே முதலானவரல்ல! – (ஆஸ்கர் ரொமேரோ) என கூறுகிறார்.
தனது வாழ்வின் இலக்கு “ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதும், சிறைப் பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழுக்கமிடுதலும்,ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புதலும்…” (லூக்4:18-19) மட்டுமே என்றத் தெளிவோடு தான் தனது பணிவாழ்வைத் இயேசு துவங்கினார். அதற்காகத் தன் உயிரையும் ஈந்தார். 75 ஆண்டுகளை கடந்த தென்னிந்திய திருச்சபை தன்னை சுய மதிப்பீடு செய்ய வேண்டும். உண்மையில் பிரதம பேராயரும், பேராயர்களும், ஆயர்களும் பேராயத்தை கிறித்துவின் வழியில் நடத்துகிறார்களா? என சிந்திக்க வேண்டும்.நம் ஆண்டவர் ஜீவனுள்ளவர்.
"இதற்கிடையில், தீங்கு புரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற் றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்."இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்க விருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
(திருவெளிப்பாடு 22: 11,12)
என எச்சரிக்கிறார். இத் திரு சடங்காகிய கால்களை கழுவுதல் (washing the feet)தாழ்மையை கற்றுத் தருகிது. பணிவை போதிக்கிறது. ஆண்டவரை பிரதி பலிக்கிறது. பிரதம பேராயர் பேராயர்களின் கால்களை கழுவ வேண் டும்.பேராயர்கள் தனக்கு கீழ் இருக்கும் ஆயர்களின் கால்களை கழுவ வேண்டும். ஆயர்கள் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களின் கால்களைகழுவவேண்டும். It will remove the bureacratic attitudes of the Bishops and Pastors திருச்சபை மக்கள் தங்கள் இல்லத்திற்கு வருகை புரியும் ஆயர்களின் கால்களை கழுவவேண்டும். இதுஆண்டவரின்அருட்கட்டளை.இதை செய்ய தவறிய தென்னிந்திய திருச்சபை நீதிபதிகளின் கால்களை கழுவிக்கொண்டிருக்கிறது. தவறான ஆட்ச்சி முறை யினால் எத்தனை கல்வி நிறுவனங்கள், மருத்துவம னைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. ஊழிய வாஞ்சை இல்லாத ஊழியர் களின் தவறான நடவடிக்கை களே இதற்கு காரணம். ஆயர்களின் மாதாந்திர செயல் அறிக்கையை பேராயம் கேட்கிறதா? எத்தனை திருச்சபைகளை கட்டுகிறார்கள், எத்தனை பேரை புதிதாக திருமுழுக்கு கொடுத்து திருச்சபையில் சேர்த்துள்ளனர். எத்தனை குடும்பங்களை சந்தித்து ள்ளனர் என செயல் அறிக்கையோ அல்லது Diary of Events எழுதி பேராயத் திற்கு அனுப்புகிறார்களா? சிறப்பாக பணிசெய்யும் ஆயர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப் படுகிறதா? இவைகளை சீர் செய்யாமல் இருக்கும் தென்னிந்திய திருச்சபை சீர்திருத்த திருச்சபை என்பதற்கான அடையாள ங்களை இழந்து வருகிறது தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம், மக்களைதேடி கல்வி போன்ற திட்டங்கள் மூலம் மக்களை தேடி பணி செய்கிறது. திருச்சபைகள் மக்களை தேடி செல்லும் காலம் எப்பொழுது வரும். இப்படி மக்கள் நலம் காணும் திட்டங்களை செயல்படுத்த தென்னிந்திய திருச்சபை யும் பேராயங்களும் முன் வருமானால் எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற சொல்லாடல் உயிர் பெறும். திருச்சபைகள் புனித மக்களின் கூட்டமா கும். தவறினால் கல்லர் குகையாகும்.(The Thieves of caves.) இதை உணர்ந்து தென்னிந்திய திருச்சபை தன்னை புதுப்பித்துக் கொண்டால் இதை உருவாக்கிய புனிதர்களின் கனவு நினைவாகும் இந்நன்னாளில் அனைவ ரும் சேர்ந்து நல்மாற்றங்கள் நம் திருச்சபையில் ஏற்பட மன்றாடுவோம்; உழைப்போம். ஆமேன்.
1. ஒன்றினத்தலின் செயல்பாடு: An act of Conjugation.எசேக் 37:15-22
கிறித்துவின் அன்பர்களே!
சிதறிக் கிடந்த இஸ்ரேல் மக்களை ஒன்று படுத்துவத ற்காக இப்பகுதியில் தீர்க்கர் நம்பிக்கை கொடுக்கிறார். யூதாவும் இஸ்ரவேலும் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பது கடவுளின் திட்டம். அவர்கள் நம்பிக்கை இழந்து பல நாடுகளில் அடிமை களாய் ஆதரவற்றவர்களாய் உலர்ந்து எலும்புகளை போல இருந்தார்கள். அவர்களை ஒன்று கூடி சேர்த்து ஒரே ராஜ்யத்தின் கொண்டுவர ஆண்டவர் இப்பகுதியிலே நம்பிக்கை தருகிறார். தன்னுடைய மக்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வருவார்கள் அவர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரே தேசமாக இருப்பார்கள் ஆண்டவரே அவர்களின் தலைவராக இருப்பார் என்று ஆண்டவர் உரைக்கின்றார். இவ்வாறு கர்த்தர் யோவானை அழைத்து இங்கே ஏறி வா! இவைகளுக்கு பின்பு சம்பவிக்கவேண்டியவற்றை உனக்கு காண்பிப்பேன் (திருவெளிப்பாடு 4:1) என்றார். எசேக்கியேல் தீர்க் கதரிசிக்கும் இதே போன்ற அழைப்பு கொடுக்கப்பட்டது.
சிதறி கிடந்த இஸ்ரவேலர் களை குறித்து தீர்க்கர் வருந்துகிறார். அனைத்து இஸ்ரவேலரும்பாலஸ்தீனத்திற்கு வர வேண்டும் என்ற தீர்க்கதரிசனம் இந்நாள் வரையிலும் நிறைவேற வில்லை. இதையே பவுல் அடிகளார் "தாங்கள் விட்டு வந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக் கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். (எபிரேயர் 11:15) தன் நாட்டையே மறந்து போன மக்களாய் இருந்ததனால் கடவுள் அவர்களை ஒரே அரசின் பிள்ளைகளாய் அழைத்தார்.
2.ஒருமைபாட்டிற்கான செயல்பாடு: An Action for Unity; எபேசியர் 4:1-6
கிறிஸ்துவின் அன்பர்களே!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினிமி த்தம் சிறைச்சாலையில் இருந்து எபேசு மக்களுக்கு ஒருமைப்பாட்டிற்கான அழைப்பாக எழுதும் பவுல் அடிகளாரின் மடல் தான் இது . கடவுள் நம் ஆலோசனை கர்த்தர். தூய ஆவியின் அருளினாலே ஆலோசனை சொல்ல தகுதியுடையவர். இதை பவுல் அடிகளார் முழுமை யாக பெற்றிருந்தார். கடவுளின் திருப்பணிக்கு அழைக்கப்பட்டவர்கள் அழைக்கப்பட்ட அழைப்பி ற்கு பாத்திரமும் நடந்துக் கொள்ள வேண்டும். மனத்தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை, அன்பினாலும், அமைதியின் கட்டினால் ஒருவரை ஒருவர் தாங்கி ஒற்றுமையை காக்க வேண்டும். ஒரே நம்பிக்கை, ஒரே சரீரம், ஒரே ஆவி, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே திருமுழுக்கு, ஒரே பிதா என்ற ஒன்றினைப் பில் நாம் இனைந்திருக் கிறோம். திருச்சபைகள் இனைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். நாடுகள் ஒன்று சேர்கின்றன தனக்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்ற னர். அனைவரும் ஒன்றாக இருக்க திருச்சபைகள் ஒன்றிணைந்து செயல்பட இவ்வுலகில் ஆண்டவரின் இறையாட்சியை கொண்டு வருவதற்காக தென் இந்திய திருச்சபையும் ஒன்றிணை ந்து செயல்பட்டு வருகிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பர். தற்கால அரசியல் சூழலில் திருச்ச பைகள் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் மிக அவசியம். கூட்டுறவில் தான் நட்புறவு உண்டு. ஆண்டவர் ;
"நான் உங்களோடு இணை ந்து இருப்பதுபோல நீங்க ளும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட் சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
(யோவான் நற்செய்தி 15:4)
என்கிறார். இனைந்து செயல்படுவதுஆண்டவரின்
கட்டளை. ஆண்டவர் எச்சரிப்பது "என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப் பிலிட்டு எரிக்கப்படும்.
(யோவான் நற்செய்தி 15:6) என்கிறார்.
3. கூட்டுறவில் நல்லுறவு: Harmony in Partnership: யோவான்: 17: 20-26.
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! இப்பகுதி இயேசு வின் இறுதி மன்றாட்டு செய லாகும். தென்னிந்திய திருச்சபையின் பணிகளில் ஒன்று பேராலாயங்கள் இடையே நல்லுருவைப் பேணுவதற்காக அமைக்க ப்பட்டது. ஆண்டவர் பிதாவோடு என்றும் நல்லு றவு கொண்டிருந்தார். அவ்வாறே சீடர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்.
ஆண்டவரின் மன்றாட்டு அனைவருக்குமானது. கூட்டுறவில் நல்லுறவு கொள்வதே ஆண்டவரின் விருப்பம். ஆண்டவரின் விண்ணப்பத்தின்நோக்கமே நாம் ஒன்றாகஇருக்கிறோம் என்ற அடையாளத்தையும்
நம் ஒற்றுமையையும் உலகிற்கு வெளிப்படுத்து வதே! எனக்கு கொடுக்கப் பட்ட மகிமையை அவர்களு க்கும் கொடுத்திருக்கிறேன். நான் அவர்களிலும் அவர் கள் என்னிலும் நிலைத் திருக்கிறார்கள். இந்த சாட்சியுடன் தென்னிந்திய திருச்சபையும் அனைத்து பேராலயங்களும் கிறிஸ்து வுக்குள்ஒன்றாய்இருக்கிறோம் என்று இனைந்து செயல்பட வேண்டும். இந்த வார்த்தைகள் அனைத்தும் ஆண்டவர் பிதாவோடு மன்றாட்டுகள் மூலமாக வேண்டிக் கொண்டார் எனவே கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே நாம் ஒருவரையொருவர் ஒன்று பட்டு திருச்சபையுடன் இனைந்து செயல்படுவோம்.
திருச்சபை பேராயத்துடனும் பேராயம் தென்னிந்திய திருச்சபையுடனும் இனை ந்து செயல்படவேண்டும். இவர்களின் கூட்டுறவு திருச்சபை மக்களுக்கு நல்லுறவாகட்டும். இயேசுவின் நாமம் மகிமைப் படட்டும். பிரதம பேராயரோ பேராயரோ நீதி மன்றங்க ளுக்கு செல்லாமல் தங்களு க்கான சிக்கல்களை பேசி தீர்த்துக் கொள்ளட்டும். திருச்சபைகளும் காவல் நிலையத்திற்கும் நீதி மன்றங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். யாரும் யாரையும் பழி வாங்க வேண்டாம். அது கடவுளின் வேலை. ஊழியங்கள், மக்கள் நலன் சார்ந்த பணிகளால் நிறைந்திருக் கட்டும். நற்செய்தி பரவட்டும் திருச்சபைகள் வளரட்டும். உலகில் ஆண்டவரின் நாமம் மகிமை படட்டும். ஆண்டவர் தாமே எங்களின் தவறு களை மன்னித்து தென்னிந்திய திருச்சபை வரும் காலங்களில் புத்தெழுச்சியுடன் செயல்பட கிருபை செய்வாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www.davidarulblogs.com
www.david arul sermon centre.com.
Comments
Post a Comment