மாற்றுத் திறனுடையோர் வாழ்வில் புனிதம். (87) DIFFERENTLY ABLED SANCTITY OF LIFE. விடு.பய.4 : 10-17 திரு.பா.37; 2கொரி 12:1-10; யோவான் 5:1-9.

முன்னுரை:
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள்.
மாற்றுத் திறனுடையோர் வாழ்வில் புனிதம் என்ற தலைப்பை சிந்திக்கிறோம். மாற்றுத்திறனுடையோர் இரு வகைப்படுவர் ஒன்று உடலளவில் குறையுடை யோர் மற்றொன்று உள்ள அளவில் குறைபாடு உள்ளவர்கள். எல்லா மக்களுமே ஏதாவது ஒரு குறை உடையவராக இருக்கிறார்கள். குறைவில்லாத மனிதன் யாரும் இல்லை. இத்தகைய மனிதர்களை நாம் எப்படி நோக்கு வேண்டும் என்பதே இன்றையசிந்தனை.வேதத்தில் தொட‌.நூல் 33:10ல்
"யாக்கோபு, ஏசாவைப் பார்த்து "இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மை யானால் நான் தரும் அன்ப ளிப்பை ஏற்றுக் கொள்ளும். "உமது முகத்தைக் காண் பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல்" இருக்கிறது. ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியு ள்ளீர். (தொட.நூல் 33:10)‌இப்படியாக நாம் சக மனிதர்களை கண்ணோக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்
கள். எனவே குறைபாடுள்ள
மனிதர்களை  சமுதாயத்தில் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள், மதிப்புகள், சம வாய்ப்புகள் மிக அவசிய மானது.. அவ்வையார் அவர்கள்; "அரிது அரிது மானிடா பிரத்தல் அரிது. அதிலும் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது" என்று சொன்னார். 
60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரு க்கும் ஒரு குறைபாடு உண்டு. இவர்கள் அனைவருமே குறைபாடு உடையவர் தான். இந்த குறைபாட்டில் நம்முடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். 
மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில்பார்க்கக் கூடாதுஎன்பதும்உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும்.
கடவுள் குறைபாடு உடைய வர்களையும் தன்னுடைய பெரும் பணியில் புனிதப்ப டுத்தி பயன்படுத்துகிறார். ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு கண் பார்வை மங்கியவராய் இருந்தார் அதனால் தான் தன் மகன் யாக்கோபிடம் ஏமாந்து போனார். யாக்கோபு தன் சகோதரன் ஏசாவைஇரண்டு முறை ஏமாற்றுகிறார். இதனால் யாக்கோபின் மாமனார் லாபான் 10 முறை இவரின் கூலியை மாற்றி அமைக்கிறார். இறை தூதன் ஒரு இரவு முழுதும் அவரிட த்தில் சண்டையிட்டு அவருடைய தொடைய எலும்பை இடம்பெயர் செய்தார். அதன் மூலமாக யாக்கோபு தாங்கி தாங்கி நடக்கின்ற ஒரு குறை பாட்டைப் பெற்றார்(Limp) அந்த குறைபாட்டிலும் கடவுள் அந்த வம்சங்களை ஆசீர்வதித்தார்.
உலகின் முதல் விடுதலைப் போராட்டம்; The World's First Liberation Struggle; விடு‌‌.பயணம் Exodus: 4:1-7
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! இவ்வுலகில் முதல் முதல் நடந்த விடுதலைப் போராட்டமானது 430 ஆண்டுகாலம் எகிப்தில் அடிமைப்பட்டு இருந்த இஸ்ரேல் மக்களை மோசஸ் தலைமையில் மீட்கப்பட்ட வரலாற்றை குறிக்கும். ஆண்டவர் இத் தூய  பயண த்திற்கு,  போராட்டத்திற்கு மோசசை அழைக்கின்றார். அவர் அழைக்கின்றபோது தன்னால் முடியாது? நீ யார்? என்னை யார்? என்று கேட்பார்கள்  இஸ்ரேலின் மூத்த தலைவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்? நான் திக்குவாய் உள்ளவன் என்னால் முடியவே முடியாது‌ என்று ஐந்து கேள்விகளை கடவுள் முன் வைக்கிறார். உண்மையில் மோசஸ் அவர்களுக்கு எபிரேய மொழியில் சரியாக பேச வராது‌ . அவர் எகிப்து பாரோ அரண்மனையில் வளர்ந் தவர்‌. பிறகு மீதியான் நாட்டிலே இருந்தார்‌. எனவே எபிரேயு மொழி அவருக்கு சிறப்பாக பேச வராது. இது உண்மைதான் ஆனால் ஆண்டவர் அவருடைய சகோதரனாகிய ஆரோனை உடன் செல்லும்படியாக பேசுவதற்காக அழைக்கி ன்றார்‌. ஆனால். பாரோ அரண்மனையில் ஆரோன் பேசியதாகவே தெரியவி ல்லை‌‌, ஆரோன் பேசியது இஸ்ரவேல் மக்களிடம் பொன்  கன்று குட்டியை செய்ய வைத்து விக்கிரக ஆராதனையை கொண்டு வந்தார். ஆனால் மோசை எப்பொழுதும் மக்களோடும் கடவுளோடும் பேசுகின்ற வராக இருந்தார். தன்னுடைய குறைபாட்டில் நிறைவே காண்கிறார் மக்களை மீட்கிறார்‌.
2. வலுவின்மையில் வல்லமை: My power is made perfect in weakness.” 2.கொரி:12:1-10.
கிறிஸ்துக்கு பிரியமானவர்களே!. இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவம் பரவி இருக்கிறது என்றால் திருச்சபையின் தூண்களாக இருந்த தூய பேதுரு அவர்களும் தூய பவுல் அடிகளுமே காரணம்.
முதலாவதாக. தூய பேதுருவும், பவுலும் பலவீனமானவர்களாக, வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் அவர்களை வலுவுள்ளவர் களாக, பலமுள்ளவர்களாக புனிதர்களாக மாற்றுகின் றார். ஆம், பேதுரு மீனவர் , படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்து கின்றார். தூய பவுலோ தொடக்கத்தில் திருச்சபை யைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுக் கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார்.  2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், “எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னைவருத்திக்கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய   தூத னைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையா திருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடு மாறு மும்முறை ஆண்டவரி டம் வருந்தி வேண்டினேன். ஆனால், அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார். தூய பவுலடியார்.  வலுவற் றவர். ஆனாலும் அவருடைய அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்து, தான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார். அடுத்ததாக தூயபேதுருவும், பவுலும் தங்களுடைய கொள்கையில் அதாவது ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்து வுக்காக தன்னுடைய உயி ரையும் தரமுன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களு டைய கொள்கையில் உறுதியாகஇருந்தார்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக உறுதியாக இருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.பவுலும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்த முன்மாதி ரியாய் விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையாது. பேதுரு உரோமையில்நற்செய்தியை அறிவித்தார். பவுலோ கொரிந்து, கலாத்தியா, பிலிப்பி போன்ற புர இனத்தாருக்கு பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து, வாழும் நற்செய் தியாகவே (Living Gospel) விளங்கினார். அதனால்தான் அவரால் வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று சொல்ல முடிந்தது. (கலா 2:20).திருமுழுக்குப் பெற்று, நற்செய்தியை அறிவிக்க அழைக்கப் பட்டிரும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.3.மனித நலமா? சமய சட்டமா? Is Human Welfare? or Religious Law? யோவான் 5:1-9.

 கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! ஆண்டவராக இயேசு கிறிஸ்து எப்பொழுதும் மக்கள் நலனில் அக்கறை உடையவராக இருந்தார். மதச் சட்டங்களை காட்டிலும் மக்கள் நலனே முக்கியம். ஓய்வு நாள் மனிதனுக்காக படைக்கப்பட்டது. மனிதன் ஓய்வு நாளுக்காக படைக் கப்படவில்லை என்ற கருத்துடையவர்‌. இயேசுவின் காலத்து எருச லேம் சுயநலமான சமூக மாகும். 38 வருடத்தில் ஒரு வனும் அவனை பெதஸ்த்தா குளத்தில் அழைத்துச் சென்றுகுணப்படுத்தவில்லை. பெதஸ்த்தா குளம் தேவாலயம் இருந்த இடத்தில் உள்ளது. ஆலயத்தில் சென்றவர்கள் ஒருவரும் இந்த மனிதரை திரும்பிப் பார்த்ததில்லை. அது மட்டும் அல்ல தேவ தூதன் அந்த குளத்தில் இறங்கி தண்ணீர் கலக்கிய உடன் முதலில் வந்து குளிப்பவரை சுகப்படுவார் என்ற தேவ தூதர்களின் செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அது ஒரு குறுகியகண்ணோட்டத்துடன் வைக்கப்பட்டுள்ளது கடவுள் எப்பொழுதும் நன்மை செய்கிறவராக இருந்தார். ஆண்டவர் அங்கு செல்கின்றார் 38 வருடமாக படுத்த படுக்கையாய் இருக் கின்றவனை கண்ணோக்கி பார்க்கின்றார். நலம் பெற விரும்புகிறீரா கேட்கிறார் ஆனால் அவரோ ஐயா தண்ணீர் கலங்கும்போது என்னை குளத்தில் இறக்கி விட ஆள் இல்லை நான் போவதற்குள் வேறு ஒருவர் இறந்து விடுகிறார் என்று சமுகத்தின் மீது அவரிடம் புகாராக கூறினார். ஆண்டவர் உடனே அவனை எழுந்து உன் படுக்கை எடுத்துக் கொண்டு நட என்று கூறுகிறார். அது தூய ஓய்வு நாளாகும். சட்டமா இரக்கமா? மதமா? மனிதனா? என்ற கேள்வியில் ஆண்டவர் மனிதநேயமேமுதன்மையாக எடுத்துக் கொள்கிறார். குணப்படுத்தப்பட்ட மனிதன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்துக்கு செல்கிறான் அவனிடம் புனிதத் தன்மை வருகிறது ஆண்டவர் புனித. மாற்றத்தை உருவாக் குகிறார். 

கர்த்தர் தாமே உங்களை காத்து நடத்துவராக!  ஆமேன்.


Prof.Dr.David Arul Paramanandam Sermon Writer 

www davidarul blogspot.com

www.davidarulsermoncentre com 

 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.