83.அமைதியும் முரண் பாட்டினற்கான தீர்வும். PEACE AND CONFLICT RESOLUTION. தொட.நூல் 13 : 2-12 . திரு.பாட. 16:1-11. திரு.தூத.6:1-6. மத்தேயு:20:1-16.
முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியும் முரண்பாட்டினற்கான தீர்வும் என்ற தலைப்பு
ஐக்கிய நாடுகள் சாசனம் (பட்டயம்) (Charter of the United Nations) 50 நாடுகள் கையொப்பம் இட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உரு வாக்கிய ஒப்பந்த ஆவண மாகும். இது சூன் 26, 1945 அன்று அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ என்ற இடத்தில் உருவாக்கப் பட்டது.நாடுகளுக்கிடையேயானஇறையாண்மையையும், சமத்துவத்தையும், நிலை நாட்டும் பொறுட்டும் எந்த நாட்டிற்கும் எதிராக படை களை பயன்படுத்தவும் தடுக்கவே இந்த சாசனம் ஏற்படுத்தப்பட்டது. வேதம் திட்டவட்டமாக சொல்கிறது.
"ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்; அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட் டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும், இருக்க வேண்டும்.(2 திமொத்தேயு 2:24) இது தனி மனிதனுக்கு மட்டு மல்ல; ஒவ்வொறு நாட்டிற் கும் பொறுந்தும். வேதத்தில் மோசே முதல் இயேசுகிறித் துவறை முரன்பாடுள்ள மனிதர்க ளோடு மோதிவந்ததை பார்க்கிறோம். கருத்தியல் மோதல்கள், இன மோதல் கள் நிகழ்ந்தவன்னமாகவே இருக்கின்றன. இவைகளை கையாளும் முறையே முக்கி யமானது.
Conflicts are inherent nature. கடவுள் படைத்த முதல் மனிதன் ஆதாமின் புதல்வர் காயின் தன் சொந்த சகோ தரன் ஆபேலை கொன்று முரன்பாட்டிற்ககே முன்னோ டியாய் திகழ்ந்தார். This was the first conflict taken place in the Bible. ஆண்டவர் தன் மக்களாகிய இஸ்ரவேலரை வழிநடத்தவும், பாதுகாக்க வும் முதலில் தலைவர்களை யும், பிறகு நியாயதிபதிக ளையும், தீர்க்கர்களையும், அதை தொடர்ந்து அரசர்க ளையும் ஏற்படுத்தினார். ஆனால் அவர்களால் நிலை யான அமைதியை மக்களுக் குத் தர இயலவில்லை. நம்மை இரட்சிக்க மேசியா தோன்றுவார் என எதிர்பார் துக்கொண்டிருந்தனர். ஆபிரகாமின் காலம் கி.மு 2166 முதல் கி.மு 970 தாவிதன் காலம் வரை சுமார்1196ஆண்டுகள்.தாவிதின் காலம் முதல் இயேசு கிறித்துவின் காலம் சுமார் 964 வருடங்கள்.ஆபிரகாம் முதல் இயேசு கிறித்துவின் தலைமுறை 3 பதினான்கு தலைமுறைகள்.14 X 3 = 42 தலைமுறைகள்.ஒரு தலை முறை 30 ஆண்டுகளை குறிக்கும். இப்படி தலை முறை தலைமுறையாக அமைதியற்ற உலகில் அமைதியை நிலை நாட்ட அமைதியின் அரசர் (The Prince of Peace) இயேசு கிறித்து தோன்றினார்.
"அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
(மத்தேயு நற்செய்தி 5:9) என
அமைதியை நிலைநாட்ட விரும்புகிறார். இயேசுவின் பிறப்பில் "14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"என்று கடவுளைப் புகழ்ந்தனர் வான் தூதர்கள்"
(லூக்கா நற்செய்தி 2:14)
ஆனால் உலக நாடுகள் அமைதியற்று முரன்பாட்டில் நிலை கொண்டுள்ளன. இந்த முரன் பாடுகளை வேதத்தின் அடிப்படையில் தீர்வு கான முயல்வோம்.
1.விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போனதில்லை:
The Person who gives up doesn't perish. Genesis. தொ.நூல்.13:2-12.
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே ! நம்முடைய வாழ் வில் விட்டுக்கொடுத்து வாழ் வதினால் கெட்டுப் போவதி ல்லை என்ற வார்த்தை எவ் வளவு முக்கியம் என்பதை விசுவாசிகளின் தகப்பனா கிய ஆபிராமிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.ஆண்டவர் ஆபிராமை நோக்கி; " நீ உன் வீட்டையும், உன் இனத்தை யும் விட்டு நான் காண்பிக் கும் நாட்டிற்கு செல் என கேட்கின்றார்.
கர்த்தரின் வார்த்தையின்படி ஆபிராம் மற்றும் அவரு டைய சகோதரரின் மகனா கிய லோத்தும் ஒன்றாக சென்று தங்கள் ஆடு மாடு களோடும் வேலையாட்க ளோடும் வாழ்ந்து வருகின்ற னர். அப்படி அவர்கள் வாழ் ந்து வருகின்ற வேளையில் இருவருடைய மேய்ப்பர்களு க்குள்ளே மந்தையை காப் பதில் சண்டை ஏற்படுகிறது. ஆபிரகாம் லோத்தைநோக்கி என் மேய்ப்பர்களுக்கும் உன் மேய்ப்பர்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண் டைகளும் வேண்டாம். நாம் சமாதானமாக; அமைதி யான வழியில் செல்வோம். நீ வலது பறம் போனால் நான் இடதுபுறம்போகிறேன். நீ இடதுபுறம் போனால் நான் வலது புறம் போகிறேன். உன் விருப்பம் என்ன என்று முதலாவதாக தன்னுடைய சகோதரன் மகனை முதலி டம் கொடுத்து கேட்கிறார். இவ்விடத்தில் ஆபிரகாம் அவர்களின் பெருந்தன்மை விட்டுக் கொடுத்தல், தியாகம், அன்பு வெளிப்படு த்தப்படுகிறது. லோத்து தன் கண்களை ஏறெடுத்து பச்சை பசேலென வளமிக்க பகுதியான யோர்தான் நதியின் நீர் வளம் நிறைந்த செழிப்பான பகுதிகளை கண்ணோக்கிப் பார்க்கின் றார் ; எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலு வும் எகிப்து நாட்டைப் போல. வும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது.
(தொடக்கநூல் 13:10)
அந்நகரவாசிகளின் பாவங் களுக்காக கடவுளால் அழிக் கப்பட்ட இரண்டு நகரங்க ளாகும். எபிரேய மொழியில் சொதோம் என்பது "எரிக்கப்பட்ட" எனவும் கொமோரா என்பது "அழிக்கப்பட்ட மேடு" எனவும் பொருள் படும். இந்நகரில் வாழ்ந்த மக்களின் அதீத பாவங்கள் காரணமாக சொதோம்,கொமோரா, அத்மா, செபோயிம் நகரங் கள் மீது "ஆண்டவர் வானத்திலிருந்து கந்தகமும் நெருப்பும் பொழியச் செய் தார்" இது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஈரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட அனுகுண்டுக ளுக்கு சமம்.
இயேசு லோத்துவின் சந்ததி யைச் சேர்ந்தவராகிறார். தாவீதின் பாட்டியாகிய ரூத் மோவாபியர் இனத்தைச் சேர்ந்தவர். மோவாப்பியர் லோத்தின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகளின் வாரிசுகளாவர்.
லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபின ருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன்.
(தொடக்கநூல் 13:15 )தன் சகோதரன் மகனுக்காக விட்டுக் கொடுத்ததினால் ஆபிரகாம் கடவுளிடமிருந்து நிலையான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறார்.விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் கெட்டு போவதில்லை என்பதே உண்மை.விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும் மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்.
2 மொழியினால் ஏற்பட்ட முரன்பாடுகள்: The Conflicts on Languages. Acts 6:1-6. திரு.தூதர் பணிகள்.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! மொழி மனிதனின் இனத்தை குறிக்கிறது. தாயின் மூலம் வரும் மொழியே தாய்மொழியாகும் மொழி மனிதனை யார் என்று உலகத்திற்கு அடையாளம் காட்டுவது. நாடும் மொழி யால்அடையாளப்படுத்தப்படுகின்றன. மொழியினால் கிரேக்கர்களுக்கும் எபிரேய ர்களுக்கும் முரண்பாடுகள், பிரச்சனைகள், ஏற்றத்தாழ் வுகள் அக்கால திருச்சபை யில் ஏற்பட்டது. பிரிவினை கள் உண்டானது.
"அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களு டைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
மொழியினால் எபிரேயர்கள் ஆதிக்கம் செலுத்தினர் கிரேக்கர்களை இரண்டாம் தரமாக பார்த்தனர். இச்சூழலில் " பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடு வது முறை அல்ல. (திருத்தூதர் பணிகள் 6:2) என திருதூதர்கள் ஒன்று சேர்ந்து; அன்பர்களே, உங்களிடமிருந்து, நற் சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். (திருத்தூதர் பணிகள் 6:3)
இப் பிரச்சினையை கையா ள்வதற்கு திருத்தூதர்கள் கடவுள் பக்தி மிக்க நடு நிலையான மக்கள் ஏழு பேரை தேர்ந்தெடுக்க முடிவு செய்கின்றனர். திருதூதர் கள் தங்களை முழுமையாக
" இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணி யிலும் உறுதியாய் நிலைத் திருப்போம்" என்று கூறினர்.
"திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்துஅவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத் தினார்கள். திருத்தூதர் தங் கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். இந்த ஏழு திருத்தூதர்களும் எபிரே யர்களுக்கும், கிரேக்கர்க ளுக்கும் இருந்த பிரச்சனை யை சுமூகமாக நல் வழியில் தீர்த்தனர். இது சாதாரன உணவு பிரச்சனைதான். பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இந்த ஏழு பேரில் ஸ்தேவான் மிகவும் சிறப்பு மிக்கவர் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களி டையே பெரும் அருஞ்செயல் களையும் அருள் அடையாள ங்களையும் செய்து வந்தார்.
(திருத்தூதர் பணிகள் 6:8)
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ் தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன் றாவது போதகர்களையும், பின்பு . ஊழியங்களையும், ஆளுகைகளையும் ஏற்படுத் தினார். திருச்சபைகள் அனைவருக்குமான திருச் சபையாக இருக்க வேண் டும். பிரிவினைகள், ஏற்றத் தாழ்வுகள், சாதி மத மோத ல்கள் விளக்கப்பட வேண் டும். பிரச்சனைகள் இருந்தால் இதை தீர்ப்பத ற்கு விசுவாசமுள்ள, Godly Character, சபை மூப்பர்களை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 யோவான் 5:10) “உலகம் முழுவதும்” என்பது இந்த உலகத்தின் அரசியல், மத, வர்த்தக அமைப்புகள் அனைத்தையு ம் உட்படுத்துகிறது.எனவே பிரச்சினைகள் ஏற்படுத்தும் திருச்சபையினரை நடுநி லையான விசுவாசிகளால் பேசி தீர்க்க வேண்டும். பிரச்சினைகளை வளர விடக்கூடாது அது திருச் சபையின் வளர்ச்சியை பாதிக்கும்.
3. வேலைக்கேற்ற கூலி என்பது சமுகவுடைமை: Wage Employment is a Socialism: மத்தேயு 20:1-16.
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! இங்கு சமத்துவ கூலி வழங்கப்படவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் நிர்ணயம் செய்யப்படாமல் தன் விருப்பப்படியே கூலி வழங்குவதால் இது முதலா ளித்துவத்தை (Capitalism) வலியுறுத்துகிறது. மனித உழைப்பை சுரண்டுவதா கும். எனவேதான் தொழிலா ளிகள் மத்தியில் முரன்பாடு, பொறாமை, ஒருவருக்கொரு வர் ஒப்பிடும் தன்மை, வருத் தம் ஏற்படுகிறது. இந்த முரன்பாட்டை (Conflicts) ஆண்டவர் எவ்வாறு கையா ளுகிறார் என்பதே மிக முக்கிய பாடமாகும்.
அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள் களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளி யே சென்றார்.இதில் அதிகாலையில் (6 மணி) மூன்றாம் மணி (9 மணி) ஆறாம்மணி(12 மணி) ஒன்பதாம் மணி(பிற்பகல் 3 மணி) பதினொன்றாம் மணி (மாலை 5 மணி) என்று யூதர்கள் கால அளவுபடி கூறப்பட்டுள்ளது. அவர்
நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களின் சம்மதத் துடன் அவர்களைத் தம் திரா ட்சைத் தோட்டத்துக்கு அனுப் பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்ப தைக் கண்டார். அவர்களி டம், நீங்களும் என் திராட் சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்றுமணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்ப தைக் கண்டார். அவர்களிட ம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்த வில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலை யானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார் வையாளரிடம், `வேலையாள் களை அழைத்துக் கடைசி யில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்த வர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர் கள்தங்களுக்குமிகுதியாகக்
கிடைக்கும் என்று எண்ணி னார்கள். ஆனால் அவர்களு ம் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவ தும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங் கிய எங்களோடு இவர்களை யும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள். அவரோ அவர் களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரி யம்கூலிக்குஒத்துக்கொள்ள வில்லையாஉமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய் விடும்.உமக்குக்கொடுத்தபடியே கடைசியில் வந்த இவ ருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர்
முதன்மையாவர். முதன்மை யானோர் கடைசியாவர்.'' என ஆண்டவர் இந்த உவ மையை முடிக்கிறார்.
கிருத்துவுக்கு பிரியமானவர் களே! இந்த உவமை விண் ணரசு யாருக்கானதாக ஆண்டவர் விளக்குகிறார் .
Points to ponder:
1. காலை ஒன்பது மணிக்கு சென்ற வேலையாட்கள் யூதர்கள். விண்ணரசு தங்களுக்கே உரியது என்பர்.
2. மாலை ஐந்து மணிக்கு சென்றவர்கள் " புற இனத் தார் (Gentiles).
3. காலை ஒன்பது மணிக்கு சென்றவர்கள் பூர்வீக கிறித்தவர்கள்.
4. மாலை 5 மணிக்கு சென்றவர்கள் புதிதாக கிறித்துவை ஏற்றுக் கொண்டவர்கள்.New Converts.
5. அதிகாலையில் சென்ற வேலையாட்கள் நாள் முழுதும் வேலை செய்தனர்.
6. இவர்கள் அதிகம் எதிர் பார்ப்பது தவறு இல்லை.
7. இவர்கள் ஏமாற்றப்பட்ட தாக கருதினர். எனவே இவர்கள் கோபப்பட்டனர்.
8. ஆனால் இவர்கள் ஏற்றுக் கொண்ட ஒரு தினாரி சரியாக கொடுக்கப்பட்டது.
9. காலையிலிருந்து வேலை செய்தவர்களைமாலைஐந்து மணிக்கு வந்து வேலை செய்தவர்களுடன் ஒப்பிட்டு கூலி வழங்கியது அநீதி என்கின்றனர்.
10.விண்ணரசு கடவுளுடை யது.அவரின் விருப்பப்படி யாருக்கும் கொடுக்க அதிகாரம் உடையவர்.
11. திராட்ச்சை தோட்ட உரிமையாளர் தன்னை நல்லவன் என்கிறார்.
12.விண்ணரசு கடவுளின் கிருபை; நம்முடைய தகுதியின் அடிப்படையில் இல்லை.
13.இந்த உவமை வேலைக் கேற்ற ஊதியம் வழங்கு வதற்கோ (அ) கால நிலை ஊதியத்திற்காகவோ கூறப்படவில்லை. இது முற்றிலும் விண்ணரசுக் கான உவமை.
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! ஒன்றே நாம் மிக கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ரோமர்கள் அதிகமாக வரி வசூலித்ததால் பலர் கடன் பட்டு தங்களுடைய சொந்த நிலங்களை இழந்தனர். பலர் வேலையற்று இருந்தனர்.இது கடவுளின் சட்டத்திற்கு புறம்பானது. (உபாகமம் 25:8-13)
எனவே கிறித்துவிற்கு பிரியமானவர்களே! கடவுள் தரும் விண்ணரசு அனைவருக்கும் ஆனது. இது கிருபையின் அடிப்ப டையில் வழங்கப்படுகிறது. இந்த விண்ணரசில் நாம் பங்கு பெற நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வோம் கடவுள் நம்மை என்றும் ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www.davidarulblogs.com
www.davidarulsermoncentre.com
"We cannot negotiate with people who say what's mine is mine and what's yours is negotiable." John. F. Kennedy.
`
* Reference: Matthew Henry's 1706 Commentary on the Bible.
Comments
Post a Comment