பரிசுத்த நற்கருணை என்னும் சாக்கிரமெந்து. SACRAMENT OF HOLY EUCHARIST. தொட.நூல்.14:17-24 திரு.பாட.104 : 14:30. 1.கொரிந்: 10:15-17. மாற்கு 14 : 12-26

முன்னுரை: கிறித்துவின் அன்பு நண்பர்களே!. "பரிசுத்த நற்கருணை என்னும் சாக்கிரமெந்து "
( திருவருட்சாதனம்) என்ற தலைப்பில்; பரிசுத்த நற்கருணை( திருவிருந்து) என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
திருவிருந்து என்பது கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் நாம் பங்கேற் பதாகும்.  கடைசி திருவிருந் தின்போது  "இது என் உடல், இது என் இரத்தம்” “என்னை நினைவுகூரும் வகையில் இதைச் செய்யுங் கள்" என்று இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படை யில் இந்த நம்பிக்கை நிறு வப்பட்டது. இயேசு "புளிப்பி ல்லாத அப்பத்தின் முதல் நாளில்" நற்கருணையை நிறுவினார் - மத். 26:17; மாற்கு 14:12. பொதுவாக, பாரம்பரிய பஸ்காவில் தலைவர் முதலில் பருகி விட்டு, அடுத்தவர் பருகக் கொடுப்பார். கடைசியில், மீதி இருப்பதை மிச்சம்வைக் காமல் தலைவர் பருகி பஸ் காவை நிறைவு செய்வார்.
இதன் உட்கருத்து: 1.இது கர்த்தருடைய மரணத்தை யும், 2. உயிர்த்தெழுதலை யும் மற்றும் 3. எதிர்காலத் தில் அவருடைய மகிமை யான வருகையையும் நினைவுகூரச் செய்கியப்படு கின்றது.
விடுதலையின் நாளைத் திரும்பிப் பார்க்கும் ஒரு நினைவு கூறுதல் பண்டி கைதான் யூதர்களின் பஸ்கா. இதை நினைவுப் படுத்தவே திருவிருந்தாகும். "என்னை நினைவு கூரும் படி"என்றசொல்லாடல்
வழி, திருவிருந்து எதிர்கால த்திலும் கடைபிடிக் கப்பட வேண்டிய ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். எனவேதான் பவுல் அடிக ளார் "ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவரு டைய மரணத்தை தெரிவிக் கிறீர்கள்" -என்றுகூறுகிறார்.
"Sacraments are the Testament  of Christians" அரசியலமைப்பு சட்டம் போல்; இது தான்  கிறித்தவர்களின் " இறுதி ஒப்பந்த ஆவனமாகும்" திருச்சபையின் சாக்கிர மெந்தை கிறித்தவர்கள் மதித்துநடத்தல்வேண்டும்.  சீர்திருத்த கிறித்தவர்க ளின் தலைவரான மார்ட்டின்லூத்தர் அவர்கள் "" பொருள் மாறாக் கொள்  கையை (Consubstantiation) வலியுறுத்தினார். நெருப்பு, பழுக்கக் காய்ச்சின இரும் பில் இருப்பது போல, அப்பத்தில் கிறிஸ்துவின் உடலும், பிரசன்னமாயி ருக்கிறது என்றார். அதன்படி பொருள் மாறாக் கொள்கையின்படி "அப்பம் மற்றும் திராட்சை ரசத்தி ல் எந்த மாற்றமும் நிகழ் வதில்லை. ஆனால் கடவுளின்பிரசன்னம் தூய ஆவியின் வழியாக அப்பம் மற்றும் திராட்சை ரசம் ஆகியவற்றில் வந்து அவற்றை ஆசீர்வதிக்கி றது." என்ற உண்மையை நாம் நம்ப வேண்டும். நற்கருணை விருந்தில் நாம் பங்கேற்கின்ற போது, நமக் கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஆழப்படுத்துகின்றது. நமக்கும் பிற மனிதருக்கும் உள்ள உறவுகள் வளர்ச்சி அடைகின்றன,விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. (இயேசு) இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.’ ( யோவான் 6:51) திருவிருந்து என்பது ஆண்டவரின் புதிய உடன் படிக்கை "ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப் படும் இரத்தம்". (மத்தேயு நற்செய்தி 26:28) என்பதை நாம் என்றும் மறக்கவே கூடாது. பவுல் அடிகளார் கூறுவதுபோல் "எனவே ஒருவர் கிறிஸ்து வோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! (2 கொரிந்தியர் 5:17)" திருவிருந்தில் பங்கு பெறு வோர் மட்டுமே புதிதாக படைக்கப்பட்டோர். ஏனெனில் ஆண்டவரின் தூய ரத்தம் மட்டுமே நம்மை விடுதலையாக்கும். "மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப் போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டி ருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத் தினின்றும் நம்மைத் தூய் மைப்படுத்தும். (1 யோவான் 1:7) நாம் அபாத்திரமாக கர்த்தருடைய பந்தியில் சேரக்கூடாது, அப்படி ஒரு சடங்காச்சாரத்திற்காகவோ, பெருமைக்காகவோ, சோதித் துப் பார்க்கும்படியாகவோ, பந்தியில் சேர்ந்தால் அவன் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும்,இரத்தத்தையும்  குறித்து குற்றமுள்ளவ னாக இருப்பான் என்று வேதம் சொல்லி யிருக்கி றது, இது எச்சரிக்கை . நாம் திருவிருந்தில் பங்கு பெற முழங்கால் படியிட்டு ஆயர் முன்பு ஆலயத்தில் வரிசை யில் இருக்கும்போது நம் மனக்கண்ணில் படமாக நினைவில் வர வேண்டியது இயேசுவின் சிலுவை பாடு கள், இரத்தம், முள்முடி, ஆணிகள் அனைத்தும் என் மீட்பிற்காக என்ற சிந்தனை மட்டுமே. இந்த நற்கருணை யில் பங்கு பெறுவதால் நமக்கு கிறிஸ்துவோடும் பிற விசுவாசிகளோடும் ஐக்கியப்படுகின்றனர் என்பது வலியுறுத்தப்படு கிறது.சீர்திருத்த கிறிஸ்த வர்களின் (Protestants) மிக முக்கிய சாக்கிரமந்துகள் இரண்டு. ஒன்று திருமுழு க்கு என்கின்ற ஞானஸ் தானம்:(Baptism) இரண்டு திருவிருந்து என்கின்ற பரிசுத்த நற்கருணை.(Eucharist)இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் பரத்திற்கு ஏறிச்செல்லும் முன்னர் கொடுத்த கடைசிக் கட்டளையில்தான் ஞானஸ் நானம்(மத்தேயு28:19).ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் கடைசிக் கட்டளைப்படி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் இவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" என்று பகிரங்கமாய் அறிவிக்கி றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடனாய் நான் என்றென்றும் வாழ்வேன் என்ற அர்ப்பணிப்பையும் ஞானஸ்நானம் என்ற திருமுழுக்கு மனந்திரும்பி தியதற்கான முக்கிய அடையாளமாகும். இதன் மூலம் கிறிஸ்துவின் சிலுவை அடையாளம் நம் நெற்றியில் ஆயர் அவர் களால் அணியப்படுகிறது. அது முதற்கொண்டு நாம் கிறிஸ்துவின் பிள்ளை களாக இருக்கிறோம். கிறி ஸ்துவுக்கு சொந்தமாகி றோம். கிறிஸ்தவர்களாக மாறுகிறோம். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதின் அடை யாளமாக இருக்கிறது. திருமுழுக்குப்பெறாமல் கிறிஸ்தவர்கள் என்று சொல்லவேமுடியாது.எனவே முதல் சாக்கிரமமாகிய திருமுழுக்கை ஒவ்வொரு கிறிஸ்தவர்கள் பெற்றிருக்க வேண்டும்‌. தண்ணீரில் மூழ் கிய திருமுழுக்காக இருக்க லாம். இது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்கான ஒரு முக்கிய அடையாளம் என்பதை நாம் மனதில் புரிந்து கொள்ள வேண்டும்

1. யார் இந்த மெல்கி சேதேக்? Who was  Melchizedek? தொட.நூல் 14:17-24.

கிறிஸ்துவின் அன்பர்களே!நீதியின் ராஜா"     (King of Righteousness.")  என்று பொருள்படும்மெல்கிசேதேக், சாலேமின் ராஜா (எருசலேம்) மற்றும் மிகவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியன் ஆவார் என (ஆதியாகமம் 14: 18-20; சங்கீதம் 110: 4; எபிரெயர் 5:6–11; 6:20-7: 28) குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதியாகமம் புத்தகத்தில் மெல் கிசேதேக்கின் திடீர் தோற் றம் மற்றும் பின்பு காணா மல் போனது சற்றே மர்ம மானது.கெதர்லாகோமேரையும் அவரது மூன்று கூட்டா ளிகளையும் ஆபிரகாம் தோற்கடித்த பிறகு மெல்கி சேதேக் மற்றும் ஆபிரகாம் முதன்முதலில் சந்தித்தனர். மெல்கிசேதேக் ஆபிரகாமு க்கும் அவனுடைய சோர் வுற்ற மனிதர்களுக்கும் அப்பத்தையும் திராட்சரசத் தையும் வழங்கினார், அதன்மூலம் தனது நட்பை வெளிப்படுத்தினார். அவர் ஏல் எலியோன் (“மிகவும் உன்னதமான தேவன்”) என்ற பெயரில் ஆபிரகா முக்கு ஒரு ஆசீர்வாதத்தை வழங்கினார், மேலும் போரி ல் ஆபிரகாமுக்கு வெற்றி யைக் கொடுத்ததற்காக தேவனைப் புகழ்ந்தார் (ஆதியாகமம்14:18:20).மெல்கிசேதேக் மற்றும் கிறிஸ்து இருவரும் நீதியின் மற்றும் சமாதானத்தின் அரசர்களாக கருதப்படுகிறார்கள்.எபிரெயர் 6:20 கூறுகிறது, “நமக்கு முன்னோடினவராகிய இயேசு, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.” 

எபிரெயர் 7:3 கூறுகிறது, மெல்கிசேதேக் “தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல் லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின்  முடியு மாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவ னாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக் கிறான்.”. ஆரோனின் முறைப்படி முதல் பிரதான ஆசாரியன் ஆரோன். மெல்கிசேதேக்கின் முறையின்படி முதல் பிரதான ஆசிரியர் நம் ஆண்டவர்இயேசுகிறித்து.தேவன் புதிதாய் மெல்கிசே தேக்கின் முறைமை ஒன்றை கொண்டு, யூதா கோத்திரத் தில் பிறந்த, தம் குமாரன் இயேசுவை பிரதான ஆசாரி யராக அபிஷேகம் செய் கிறார்.  

2.நற்கருனை கிறித்து வில் ஒன்றுபடுவதே! Union with the Christ is the Holy Communion.1. கொரிந்தியர் 10:15-17.      கிறித்துவின் அன்பர்களே!. பவுலடிகளாரின் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாக விளங்கி யது; சுமார்7,00,000 மக்கள் வாழ்ந்தனர்; அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள்.இது உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக் கான கோவில்கள் இருந்த ன.  பவுல் தம் இரண்டாம் தூதுரைப் பயணத்தின் போது இங்குத் திருச்சபை ஏற்படுத்தினார் (காண்க: 1 கொரி 3:6,10; 4:5; திப 18:1-7).  மற்றும்கொரிந்திய திருச்சபை பவுல்அடிகளாரிடம் ஒரு கடிதம் எழுதிக் கொரிந்தில் காணப்பட்ட சில சிக்கல் களுக்கு விடை கேட்டு இருந்தது (7:1). இக்கடிதம் வழியாகவும், கடிதத்தைக் கொண்டுவந்த மூவர் வாய்மொழி வழியாகவும் (16:17) அறிந்துகொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும்முறையில்  இத்திருமுகத்தை வரைந்துள்ளார்.1 கொரிந்தியர் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்த முடைய அறிவுரைகளை வழங்குகிறது. அன்பு பற்றிய சிறந்த ஒரு கவிதை இம்மடலில் உள்ளது. இவர் இம்மடளை (15) உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல் வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங் கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத் திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத் தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! என தூய நற்கருனையின் முக்கி யத்துவத்தைவிளக்குகிறார்.வசனம்17 ல் "அப்பம்ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய்இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்" என நமக்கும் ஆண்டவருக்கும் மற்றும் நமக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் உள்ள  உறவையும்,அன்பையும்,:ஒற்றுமையையும்விளக்குவதாக இந் நற்கருணையை நமக் கும் ஆண்டவருக்குமான உடன்படிக்கையின் அடை யாளமாக விளக்குகிறார். நாம் ஆசீர்வதிக்கிற பாத்தி. ரமும், பிட்கிற அப்பமும் கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் சரீரத்தின் ஐக்கிய மாய் இருக்கிறது என்று பவுல் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 10:16) கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! நாம் தூய நற்கருனை என்னும் அன்பின் விருந்தோம்பலில் பங்கு பெறுவதற்கு முன்பு  பாவ அறிக்கைக் கென ஒரு நேரம் ஒதுக்கப் படுகின்றது. ஏனென்றால் நாம் தூய நற்கருணையில் பங்கு பெற்றால் மட்டுமே நமக்கு ஆண்டவர் அருளும் பாவமன்னிப்பு கிடைக்கி ன்றது.யோவான்6:54-56ல் எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண் டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையானஉணவு.எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திரு ப்பேன். என்ற வாக்குறுதி நமக்குகொடுக்கப்படுகிறது.கர்த்தருடைய பந்தி என்பது நாம் பாவ அறிக்கையுடனும் மனந்திரும்புதலுடனும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூரும் வேளை என்பதை கிறித்துவின் பிள்ளைகளாகியநாம்           மறக்கவே கூடாது.

3.தூய நற்கருனை என்னும் திருவிருந்து ஏன் கொண்டாட வேண்டும்?Why should we celebrate the Holy Communion? மாற்கு 14:12-26.கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே!  நாம் ஏன் திரு விருந்து என்ற தூய நற் கருணையை அனுசரிக்க வேண்டும்? ஆண்டவராகிய ஏசு கிறித்து இந்த மூன்று ஆண்டுகால ஊழியத்தில் தன்னோடு இருந்த சீடர்களோடு பல முறை சேர்ந்தே உணவு அருந்தி இருக்கிறார். ஆனால் இந்த கடைசி திரு விருந்து என்ற உணவு இனி அவர்களுடன் இருக்க போவ தில்லை என்ற அடையாளத் தின் வெளிப்பாடு. இஸ்ரேல்  மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அடிமைத்தனமாக இருந்த  எகிப்து நாட்டின் விடுதலை யை குறிக்கும் வகையில் அதை நினைவு கூறும் வண்ணமாக இந்த பாஸ்கா வை கொண்டாடுவார்கள். இதை நினைவு கூறும் வண்ணமாக ஆண்டவரா கிய இயேசு கிறிஸ்து பாவத்தின் அடிமைத்தனத் தில் இருக்கின்ற மக்களா கிய நம்மை விடுதலை பெரும்படியாக இந்த நிகழ்வை ஏற்படுத்து கிறார்.அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல் லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்என்கிறார். இங்கு ஒரு ஆண் தண்ணீர் எடுத்து செல்வது யூத பாரம்பரியத்தில் இல்லை. பெண்கள் மட்டுமே தண்ணீர் சுமப்பர். இது ஆண்டவருக் கான முன்னேற்பாடு. மேலும் தண்ணீர் சமப்பவர் எந்த வீட்டுக்குச் செல்கி றாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன் னார்" எனக் கூறுங்கள். என தன் சீடர்களை அனுப்பி வைக்கிறார். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்." என்கிறார். சீடர்கள் ஆண்டவர் கூறியபடியே செய்தனர். இதில் வீட்டு உரிமையாளர் ஆண்டவர் யார் என்றும் கேட்கவில்லை சீடர்கள் ஆண்டவரின் பெயரையும் சொல்லவில்லை. இது கிறிஸ்துவின் இறை முன்னோடியான திட்டம். தன் பெயரை முன்கூட்டியே சொன்னால் ஒரு வேலை தன்னை யூதர்கள் சிறை பிடிப்பார்கள் என்ற எண்ண த்திலும் அவர் முழுமையாக இந்த திருவிருந்தை நிறை வேற்ற வேண்டுமென்று நோக்கத்தில் தான் இதை இங்கு ரகசியமாக செய்கி றார். இயேசுவிற்காக அந்த மேல் வீட்டரை தயாராக இருந்தது என்பது ஆண்டவ ருடைய மகிமையை வெளிப் படுத்துகிறது. "Jesus is Omnipresent and Omniscient.' இயேசு அவ்வாரத்தில் மாலைவேலையில் பெத்தா னியாவில் தான் இருந்தார். இயேசு தன் உடன் நண்பர்களில் ஒருவனால் தான் காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பது முன் கூட்டியேசீடர்களுக்குஅறிவி   த்திருந்தார். "என் உற்ற நணபன்;, நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண் டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான். (திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 41:9) இவ்வார்த்தை சீடர்களுக்கு மிகவும் அதிர்ச் சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.வசனம் 22ல் அவர்கள் உண்டுகொண்டி ருந்தபொழுது அவர் அப்ப த்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளு ங்கள்; இது எனது உடல்" என்றார். (மாற்கு நற்செய்தி 14:22) ஆண்டவர்தன்உடலை அப்பமாக ஒப்பிடுகிறார்.(the bread that he broke as, my body) மோசே "நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா ". (விடுதலைப் பயணம் 12:11

பாஸ்காவில் ஆடு பலியிடு வது போல் தன் உடலை அநேகரை மீட்கும் பொருளாக  பலியாக கொடுக்கிறார். அவ்வாறே தன் இரத்தத்தை அநேகருக் காக சிந்தப்படுகிறதிராட்சை இரசமாக, ஈவாக கொடுக் கிறார்."The wine of the feast wasthe blood ofthe covenant"   " The blood of Christ is the Endowment of the Entire Universe."  இயேசுவின் பாடுகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து உலகத்து மக்களுக்கானது‌ ஏனெனில் இவர் உலகத் தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டு குட்டி "

‌இயேசுவின் இரத்தம் அனைவருக்கும் பொருத்தமான ரத்தம். O negative is Jesus blood, which is called Universal Donar.   இது பாஸ்காவில் ஆட்டு குட்டியின் இரத்தம் இஸ்ரவேலரின் வீட்டு கதவுகளில் பூசப்பட்டதை நினைவுப் படுத்துகிறது. இதன் மூலம் இஸ்ரவேல் மக்கள் கடவுளுடைய நியாய தீர்ப்பின் தண்டனையிலிரு ந்து காப்பாற்றப் பட்டனர். இயேசுவின் இரத்தம் உடன்படிக்கையின் அடை யாளம்.  "8 அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்கு மிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கை யின் இரத்தம் இதோ" என்றார். (விடுதலைப் பயணம் 24:8)ஆண்டவரின் தூய திரு விருந்து ஒரு உறுதிமொழியை தருகிறது புதிய இறையரசு வரும் வரையில் நான் இதை உண்பதில்லை. ஆண்டவரின் திரு விருந்து ஒரு பாடலுடன் முடிவடை கிறது.(திருப்பாடல்கள் சங்கீதம் 115 -118)

Points to Ponder:

1. திருவிருந்தில் பயத்தோடும், பக்தியோடும், தூய சிந்தனையுடன் கலந்து கொள்ள வேண்டும்.

2. திருவிருந்து நம் பாவங்களை மன்னிக்கிறது

3. ஆண்டவரின் பாடுகளை நினைவுபடுத்துகிறது

4. என் பாவங்களுக்காகவும் மீறுதல்களுக்காகவும் அவர் சிலுவையில் அறையப் பட்டார் என்பதை நினைவுப் படுத்தவும்

5. அவரின் சிலுவை பாடுகளை சொந்தம் கொண்டாடவும் திரு விருந்து நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

6. The Holy Communion is not a customary but the fullfilment of the Covenant.

7. திருவிருந்து இறையரசின் நுழைவாயில்.

8. இது கிறித்துவின் கட்டளை.

9. திருவிருந்து சக மனிதர் களை நேசிக்கவும், அன்பு கூறவும் ஒப்பரவாகவும் செய்கிறது‌.

10. திருவிருந்து ஆண்டவரிடம் ஒன்றினைந்து.

கிறிஸ்துவின் அன்பு சகோதரர்களே! திருவிருந்து என்னும் தூய நற்கருணை கிறிஸ்தவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்‌  அருட் சாதனம் என்று சொல்லக்கூடிய இவற்றில் நாம் தகுதி யோடும், பக்தியோடும் என்றும் பங்கு பெற நம்மை நாம் தயார் படுத்துவோம்‌  கடவுள் நம்மை என்றும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.

www davidarul blogs com

www davidarul sermon centre.com








 

நற்கருணையோடு கிறிஸ்து

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.