இறை மக்கள் சாட்சி. WITNESS OF THE PEOPLE OF GOD. (86) லூக்கா 10:1-20. ( பொது நிலையில் ஞாயிறு).
முன்னுரை:
கிறிஸ்துவிற்கு பிரியமானவர்களே !.உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள். இறைமக்கள் சாட்சி என்ற தலைப்பில் சிந்திப்போம். யார் இறைமக்கள்? ஆண்டவரின் வார்த்தை படி வாழ்கின்ற வர்கள்! இயேசுவின் இறை மக்கள். இயேசுவின் வார்த்தைப் படி; 'இவ்வுலகில் வாழ்கின்ற மக்களே இயேசுவின் சாட்சிகள்.இயேசு தம் சீடர்கள் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தைநிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
(மத்தேயு நற்செய்தி 12:49,50)
1. ஆண்டவரின் அருட் பணி: ஆண்டவர் தம்முடைய திருப்பணிக்காக 12 பேரை சீடர்களாக தேர்வு செய்து அருட்பணி ஆற்றினார். மேலும்72பேரை தேர்வு செய்து குறிப்பாக இஸ்ரேல் மக்களுக்களிடம் செல்லும் படியாக அனுப்பு கிறார் அவர் முக்கியமாக இருவர் இருவராக அனுப்பு கிறார் அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற அடிப்படையில் அனுப்புகிறார். இவ்வுலகில் மிகுதியான ஊழியங்கள் உண்டு. ஆனால் அதை செயல்படுத்தும் ஊழியர் களோ மிகக் குறைவாக உள்ளனர். இந்தகுறைகளை நிறைவு செய்ய வேண்டியது நம்முடைய கடமை. திருச்சபைகளின் கடமை. அறுவடையின் ஆண்டவர் இயேசு. மக்கள் ஆளில்லா ஆடுகளைப் போல தவிக்கின்றனர். ஆண்டவர் அவர்கள் மீது மனம் இறங்குகிறார். இவர்களை வழிநடத்த சரியான, போதுமான, தகுதியான ஆட்கள் இல்லை என வருந்துகிறார். " யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாக போவான்? என வினவும் ஆண்டவரின் குரலை ஏசாயா தீர்க்கர் கேட்கிறார். அதற்கு "இதோ நான் இருக்கிறேன் அடியேனை அனுப்பும் என்கிறார்". இப்படி ஆண்டவரின் வார்த்தைக்கு அடிபணிந்து ஊழியத்திற்கு அர்ப்பணிக்கும் மக்களே இறைவனின் சாட்சி.
2.இதய மாற்றமே இறைபணி:
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே ஆண்டவரின் நற்செய்தி பணி மிகவும் கடினமானது. இங்கு ஆண்டவர் புறப்பட்டு போங்கள் ஓநாய்களில் ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன் என்றார். ஆண்டவர் காணா மல் போன இஸ்ரவேல் வீட்டாரிடம் தன் சீடர்களை அனுப்புகிறார். அவர் தமக்கு சொந்தமானவர்களிடம் வந்தார் . சொந்தமானவ ர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இவ்வுலகில் கல்லான இதயம் உள்ள மனிதர்களை நலமான இதயமாக மாற்றும் மிகப்பெரிய சவாலான செயல்தான் நற்செய்தி பணியாகும் இது மதமாற் றம் அல்ல மன மாற்றம். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது படைப்பாய் இருக்கிறான் பழையவை ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின. என மாற்றத்தை விதைக்கும்நற்பணியாளர்களே இயேசுவின் சாட்சிகள்.
3.இயேசுவின் நாமமே இறைசாட்சி:
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! இயேசுவின் நாமமே நம்முடைய அடை யாளங்கள். சீடர்கள் தங்கள் நற்செய்தி பணியில் பணப் பையோ, மிதியடிகளையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என்றார். ஆனால் அவர்கள் அமைதியின் நற்செய்தியை விதைத்தார்கள். அதன் பலனாக பிசாசுகள் ஓடின. அற்புதங்கள் நடந்தன. வியாதிகள் குணமாகின. ஆண்டவரின் வல்லமை யான நாமம் இயேசு என்ற நாமமே;: முழங்கால் யாவும் முடங்கும் நாமம். இந்த நாமத்தை மகிமைப்படுத் துவதே ஏசுவின் சாட்சிகள். ஆண்டவரின் இறைமக்கள். இவர்களே இவ்வுலகின் உண்மையான சாட்சிகள். கடவுள் தாமே நம்மை இவ்வுலகில் அவரின் சாட்சியின் பிள்ளைகளாக இருக்க கிருபை செய்வாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www.davidarulblogs.com.
www.david arul sermon centre.com.
Comments
Post a Comment