இறைவீட்டில் இளைப்பாறுகிற பற்றுறுதியாளர்களை நினைவு கூறுதல்.(92)COMMEMORATION OF THE FAITHFUL DEPARTED.ஏசாயா 25: 6-9. திருப்பாடல் 118; 14-15; 17-21. 2.கொரி 5: 1-10; எபிரேயர் 12: 1-2; யோவான் 11:21-27. (2-11-2023)
முன்னுரை : கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். " இறைவீட்டில் இளைப்பாறுகிற பற்றுறுதியாளர்களை நினைவு கூறுதல்" என்ற தலைப்பை தியானிக்க இருக்கின்றோம். நவம்பர் 2 , உலகெ ங்கும் வாழும் கிறித்துவ மக்கள் இன் றைய தினத்தை சகல ஆத்துமாக்கள் தினம் (All Saints Day) or (All Souls Day) அல்லது கல்லறைத் திருநாள் என கொண்டாடி வருகின்றனர். நம்முடைய அன்பு உறவுகள் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஜெபத்திலும் வேண்டுதலிலும் அவர்களை நினைவு படுத்துகின்றோம். கல்லறைக்கு சென்று கல்லறையை சுத்தப்படுத்தி, அழகு படுத்தி பூக்களா லும்,மெழுகுவர்த்தி,ஊதுவர்த்திகளாலும் அலங்கரிக்கின்றோம், சிலர் அவர் களை நினைத்து ஏழைகளுக்கு உணவு வழங்குவார்கள். கல்லரைக்கு சென்று ஜெபிப்பது இறந்தப் பிறகு ஆத்மாவைப் சுத்திகரித்து (purgatory) புனிதப்படுத்தும் செயல், இடம் என கத்தோலிக் திருச் சபையினரின் நம்பிக்கை. .ஆன்மாவின் பாவங்களை சுத்திகரித்து விண்ணரசு வாழ்விற்கு தகுதிபடுத்துவது இந் நாளின் முக்கியத்துவம் ஆகும். திருதூதர் யோவான் 6 ம் அதிகாரத்தில்; "த...