சகல பரிசுத்தவான்கள் நாள் ALL SAINTS DAY.( 91)எரேமியா: 31: 31-34. திருப்பாடல் 150; திருவெளிப்பாடு: 7:2-4; 9-17. மத்தேயு: 5:1-12. ( 1-11-2023)

முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சகல பரிசுத்தவான்கள் நாள் என்ற தலைப்பில் தியானிக்க இருக்கின்றோம் பரிசுத்தவான்கள் யார்? வேதம் கூறுகிறது  திருவெளிப்பாடு இருபதாம் அதிகாரம் 6 ஆம் வசனத்தில்; "இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்; அவர்கள் தூயோர் ஆவர். அவர்கள் மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய் இருப்பார்கள்; கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள். "
(திருவெளிப்பாடு 20:6) முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுபவரரே பரிசுத்தவான்கள். 
"கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”​ (⁠1 தெச லோனிக்கேயர் 4:16.)
"கட்டளை பிறக்க, தலைமை வான தூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினி ன்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர் என வேதம் கூறுகிறது,
இந்த பரிசுத்தவான்கள் பூமியிலே இறைபணியின் போது அற்புதங்கள் (Miracles) ஏசுவின் நாமத்தில் நிகழ்த் தியிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள்போல் அனைத்தையும் இழந்து அனுதினமும் சிலுவையை சுமந்தவர் களாக இருக்க வேண்டும் இரவும் பக லும் கர்த்தருடைய வேதத்தில் தியான மாய் இருப்பதே பரிசுத்தவான்களின் வாழ்வாகும் இப்படிப்பட்டவர்களே பரிசுத்தவான்கள்.இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று ஆவியானவரால் நடத்தப்படும் ஒவ்வொருவரும், ஆண்டவரின் பரிசுத்த ஆவியை தன்னுள் கொண்டுள்ளதால் அவர்கள் பரிசுத்தவான்களே! இந்த பரிசுத்தவான்களே ஆண்டவருடைய இரண்டாம் வருகையிலே உடன் வருபவர்கள். ஆண்டுவரோடு நியாயம் விசாரிப்பவர்கள். அனைத்து சபையின்  பரிசுத்தவான்களை நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகின்ற நாள்தான் சகல பரிசுத்தவான்களின் நாள். இது நவம்பர் ஒன்றாம் தேதி நம் திருச்சபையில் கொண்டாடப்படுகிறது.
1. புதிய உடன் படிக்கையின் மக்கள் : The People of New Covenent: எரேமியா: 31: 31-34.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே எரேமியா தீர்க்கர் "இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என் கிறார். இவருடைய காலத்திற்கும் மோசையின் காலத்திற்கும் பல்வேறு ஆண்டுகள் இடைபட்டுள்ளன. எரேமியா தீர்க்கரின் காலம்.கி.மு 626; ஆண்டவர் மோசையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை பழைய உடன்படிக்கை ஆகும், இதன் காலம் கி.மு 1391–1271.  சுமார்   765 வருடங்களுக்கு பிறகு  ஆண்டவர் இந்த புதிய உடன்படிக் கையை செய்து கொள்கிறார். காரணம்
அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலை வராய் இருந்தும், என் உடன்படிக் கையை அவர்கள் மீறி விட்டார்கள்.
இஸ்ரவேலர் வணங்கா கழுத்துள்ளோர். கடவுளுக்கு கீழ்ப்படியாதவர்கள். கடவுளை அதிக முறை சோதித்தவர்கள்.
ஆண்டவர் இந்த புதிய உடன்படிக் கையை  அவர்கள் உள்ளத்தில் பதிப் பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார். கடவுளின் மக்களாய் இருப்பவர்களே
தூய மக்கள். ஏனெனல்
 "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். "
(மத்தேயு நற்செய்தி 5:8) இவர்களே பரிசுத்தவான்கள் என ஆண்டவர் கூறுகிறார். இவர்கள்தான் கடவுளை முக முகமாய் காண்கிறவர்கள். ஆண்டவர் சிலுவையில் மரித்த பிறகு எருசலேம் வீதீகளில்ஓ மரித்த பரிசுத்தவான்கள் எழுந்து நடந்தார்கள்.
"கல்லறைகள் திறந்தன; இறந்த இறை மக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. "(மத்தேயு நற்செய்தி 27:52) இவர்கள்தான் பரிசுத்தவான்கள், தூய மக்கள் ஆண்டவரின் இரண்டாம் வருகையில் இயேசுவோடு வருகின்றவர்கள்
2. பரிசுததவான்கள் முத்திரையிடப் பட்டவர்கள்: The Saints are the Sealed People.  திரு வெளிப்பாடு; 7:2-4; 9-17.
கிறிஸ்துக்கு பிரியமானவர்களே! விண்ணில் பரிசுத்தவரவான்கள் பெரும் திரல் கூட்டமாய் ஆண்டவரை ஓயாமல் துதிக்கின்றனர். இவர்கள் எல்லா நாட் டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; இவர்கள் முத்திரையிடப்பட்டவர்கள்.(Sealed)  அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந் தவர்களாய்க் கையில் குருத்தோலை களைப் பிடித்திருந்தார்கள். குருத் தோலைகளே அவர்களின் அடையாளம். Palm leaves are the symbol of the Saints.
இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடை களை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண் டவர்கள். வென்னிற ஆடைகளே இவர்களின் தூய்மையின் தோற்றம்.
இவர்கள் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றி ருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. 
(திருவெளிப்பாடு 7:15,16)
பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதுகின்ற போது; கடவுள் நம்மை அவருடன் என்றும் இருப்பதற்கான முத்திரையை பதித்திருக்கிறார் என்கிறார்.கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்து வோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.  அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார். (2 கொரிந்தியர் 1:21,22) என பரிசுத்தவான் களை முத்திரை பதித்து சிறப்பிக்கிறார்.
3.யார் பரிசுத்தவான்கள்? Who are the Saints? மத்தேயு 5:1-12.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! பரிசுத்தவான்களுக்கென்று  சில குணாதிசயங்களை ஆண்டவர் கோடிட்டு காட்டுகிறார். அவ்வாறு நாமும் இவ்  உலகில் கைகொள்ள வேண்டுகிறார். தன்னுடைய மலைப்பொழிவில் இதை வலியுறுத்துகிறார். ஏழையரின் உள்ளம் உடையவராக இருந்தால் விண்ணரசு அவர்களுக்கு உண்டு என்கிறார். விண்ணரசு பரிசுத்தவான்களின் இல்லமாய் இருக்கிறது. நன்மை செய்ததினால் துன்பம் அடைந்தவர் களுக்கு ஆறுதல் கிடைக்க செய்கிறார். இது சிலுவைபாடுகளை குறிக்கிறது. கனிவுடைய உள்ளம்( Meek) உரியவராய் இருந்தால் இந்த நாட்டை உரிமை சொத்தாக்கிக் கொள்வார்கள். நீதியை நிலைநாட்டுகின்றவராய் இருக்க எவ்விடத்திலும் செயல்படுத்த விரும்புகிறார். உள்ளத்தில் இரக்கமுள்ள மவரே இரக்கம் பெறுவர். மிக முக்கி யமாக உள்ளத்தில் தூய்மை, செயலில் தூய்மை உள்ளோர். இவர்களே கடவுளைக் காண்பார். கடவுளை காண்பவர்களே பரிசுத்தவான்கள்.
என்றும் ஆண்டவர் அமைதியின் அரசர். இவ்வுலகில் அமைதி ஏற்படுத்துவோரே கடவுளின் மக்கள் அதாவது பரிசுத்தவான்கள் என அழைக்கப்ப டுவர். நீதியின் பொருட்டு இவ்வுலகில் துன்புறுகின்றவர்கள்ஆண்டவர்அருளும் விண்ணரசுக்கு சொந்தக்காரர்கள் . ஆண்டவர் நீதியிநிமித்தமாக இவ்வுல கில் துன்புறுகின்றவர்களாய்; சிலுவை யின்ன பாடுகளை சுமந்தவர்களாக இருக்கின்ற பொழுது பேறுபட்டவர் களாய்,  பாக்கியவான்களாய் இருப்போம் என்கிறார் ஆண்டவர்.
சங்கீதகாரன் கூறூவதுபோல  ஆண்ட வரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், 
 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.(திருப்பாடல் 24:3-5) ஆக பரிசுத்தவான்கள்  எத்தகைய பண்புகளை உடையவராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இதற்கு முன்பாக மறித்த அனைத்து தூய உள்ளங்களும் ஆண்டவரிடம் வாசம் செய்கின்றனர்; இன்னும் சில
ஆன்மாக்கள் நியாய தீர்பிற்காக  ஆண்ட
வர் வர காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. 
(திருவெளிப்பாடு 22:12)
 ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக! 
(திருவெளிப்பாடு 22:21)



Prof. Dr. David Arul Paramanandam 
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com

































the night when a candles burn on all graves - it is very special experience


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.