பெண் குழந்தைகளுக்கான நல் எதிர்காலத்தை உறுதி செய்தல். (96) ASSURING GOOD FUTURE FOR THE GIRL CHILD. 2.அரசர்கள் 5: 1-5; திருப்பாடல் 8; அப்போஸ்தலர் 12 : 11-17; மாற்கு 5: 21-45.

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரத்தில் தியானிக்கின்ற தலைப்பு பெண் குழந்தைகளுக்கான  நல் எதிர் காலத்தைஉறுதிசெய்தல். இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-21 (NFHS-5) இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாகக் குறிப் பிடுகிறது, இது முந்தைய கணக் கெடுப்புகளை காட்டிலும் அதிகமானது மற்றும் ஆச்சரிய மானதாய் இருக்கிறது.
ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கும் கல்வி உள்பட அனைத்திலும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது உள்ளார்ந்த கருத்தாகும். இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த அறிக்கையில், மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத் திலும் பெண்களின் பிரதிநிதித்து வம் தொடர்ந்து மோசமாகஉள்ளது. அரசியல் கட்சிகளில் முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களின் இருப்பு மிகக் குறைவாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள்,மாநில சட்டப் பேரவைகள், நாடாளுமன்றம், அமைச்சர்கள் நிலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து முடிவெடுக்கும் அமைப்பு களிலும் பெண்களுக்கு குறைந்த பட்சம் 50% இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது பரவலான கருத் தாகும்.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா செப்டம்பர் 20, 2023, அன்று பல தடைகளை கடந்து , 33% சதவி கிதம் இடங்களை ஒதுக்க பாராளு மன்றத்தில் நிறைவேறியது வரலா ற்று நிகழ்வாகும். இது எதிர்காலத் தில் பெண்களுக்கு அரசியலிலும் சமூகத்திலும் உரிய மதிப்பும் மரியாதையையும் வழங்கும். இந்த உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி பெற்றவராகவும், கண்ணில் காணும் தெய்வமாகவும், வாழும் கடவுளாகவும் பெண்கள் இருக்கின் றார்கள். தனது இரத்தத்தைப் பாலாகக் பச்சிளம் குழந்தைக்குக் கொடுக்கும் தாய் பாலோடுசேர்த்து,தன்னம்பிக்கை,  மகிழ்ச்சி, விடா முயற்சி, என எல்லாவற்றையும் தன் குழந்தைக்கு அளிக்கின்றார்கள். நாம் வாழ்கின்ற சமுதாயம் முன்னேற பெண்களின் பங்கு மிகவும்முக்கியமானது.இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமமே. ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறுவது மடமையின் உச்சம். பெண் குழந்தை களின் எதிர்கால பாதுகாப்பின் ஆயுதங்கள் இரண்டுதான். ஒன்று கல்வி இரண்டு ஒழுக்கம். உலகில் சணடைகள், இயற்கை சீீீீற்றங்க ளால் பாதிக்கப்படுபவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. இயேசுவின் காலம் பெண்களின் 
அடிமை காலம்.அவர் பிறப்பின் காலமே எருசலேமின் இரண்டு வயதிற்கான ஆண் குழந்தைகள் 
கொள்ளப்பட்டனர். ஆனால் ஆண்டவர் குழந்தைகளை நேசித் தார். அவர்களே விண்ணரசின் உதாரகமாக காட்டுகிறார். பெண்களைநேசிக்கின்றவர்.பன்னிரெண்டு ஆண்டுகளாகக் கடும் இரத்தப் போக்கால் துயர வாழ்வு வாழ்ந்து வந்த ஒரு பெண், இயேசு வீதியில் வருவதைப் பார்த்து, ஓடிச் சென்று அவரைத் தொடுகிறாள். அந்த வினாடியே அவள் குணமடைந்தாள். இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடம்கொள், உன் நம்பிக்கை உன்னை மீட்டது என்றார். (மத்தேயு 9:22) யூத மண்ணில் அன்று நிலவிய பொதுச்சட்டத்தின்படி, மாதவிலக்கு ஒரு நோய்க்கூறாகி அவதிப்படும் பெண்கள், மக்கள் நடமாடும் பொது இடங்களுக்கு வரக் கூடாது. இயேசு, பெண்களை மரியாதையுடன் நடத்தினார். மேலும் சாதி மற்றும் இன வேறுபாடு காட்டவில்லை. மிக முக்கியமாக அவர் ஆண் - பெண் பாகுபாடே பார்க்கவில்லை. தான் உயிர்த்தெழுந்ததை முதன் முதலில் தான் தேர்வு செய்த சீடர்கள் கூட காட்சியாக தோன்றவில்லை. பெண் களான மகதலேனா மரியாள் என்ற பெண்ணுக்கும் ‘மற்ற மரியாளுக்கும் தோன்றினார்  சாட்சியாய் மாற்றி னார். உயிர்த்தெழுந்த நற்செய்தியை பெண்கள்தான் முதன் முதலில்  இவ் வுலகில் அறிவித்தனர் அவரது முத ன்மைச் சீடர்கள் என்று கருதப்படும் பேதுருவுக்கோ யோவானுக்கோகூட அவர் தனது முதல் தரிசனத்தைத் தரவில்லை. இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கான நல் எதிர் காலத்தை உறுதி செய்தல் யார்?
1. சிறுமி என்று எண்ணாதே!. Don't think as a small child: 2.அரசர்கள் 5: 1-5
கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர் களே! சிறு துரும்பும் பல்குத்தஉதவும் என்பார்கள். ஒரு சிறுமிதான் ஒரு அற்புத தீர்க்கர் எலிசா என்பவர்   இஸ்ரவேலில்   இருக்கிறார் என்பதை  உலகத்திற்கு தெரிவித் தாள். சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலை வனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில், அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால், தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளை யடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணி விடை புரிந்து வந்தாள். அவள் பெயர் குறிப்பிடப் படவில்லை. இவள் குழந்தை தொழிலாளி. இவளுக்கு 12 வயது இருக்கலாம்.(May be a teenager) பெயர் ஒரு அடையாளம். அங்கீகாரம். தற்சமயம் அன்னிய நாட்டில் ஒரு அடிமை. ஆனாலும் தன் நாட்டையும், தன் நாட்டின் இறைவாக்கினரையும் மறக்கவில்லை. தன் எசமான்  நாமானை பழிவாங்க நினைக்க வில்லை. தன் நாட்டை கொள்ளை அடித்தவர்கள் என்றும் நினைக் காமல் மனித நேயத்தோடு  உதவி செய்ய முன்வருகிறாள் இதுதான் பண்பாடு. அக்காலத்தில்
தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில், அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.அந்த சிறுமி தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில்,அவர்இவரதுதொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள். இந்த சிறுமி சொல்லை நாமான் அலட்சியப்படுத் தவில்லை. சிறுமி எனக்கு ஆலோசனை கூறுவதா என்றும் ஒதுக்கவில்லை. இவள் சொல்லி நான் கேட்பதா என மறுக்க வில்லை. உடனே, நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார்.அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகி றேன்” என்றார். எனவே, நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளி யையும், ஆறாயிரம் பொற்காசுக ளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமா க்க வேண்டும்” என்று எழுதப்பட்டிரு ந்தது.இஸ்ரயேல் அரசன் அம்மடலை ப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்றான். அந்த சிறுமிக்கு இருந்த ஞானம் எலிசா என்ற தீர்க்கனால் முடியும் என்ற அறிவு இந்த மன்னனுக்கு இல்லை. எலிசா ஒரு கடவுளின் மனிதன், தீர்க்கன் என்ற எண்ணமும் இல்லை. ஆடையை கிழித்துக்கொண்டான்.
கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ர யேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார். அவ்வாறே நாமான் எலிசாவிடம் சென்றார். தீர்க்கர் அவனின் பரிசுகளை வாங்க
வில்லை. மாறாக நீ போய் யோர்தா னில் ஏழுமுறை மூழ்கினால் உன் உட‌ல் ந‌ல‌ம் பெறும்” என்று சொல்ல‌ச் சொன்னார். அவன் தொழுநோய் க‌ண்ட‌ இட‌த்துக்கு மேலே கைக‌ளை அசைத்து என‌க்கு சுக‌ம் கொடுப்பார் என‌ நினைத்தேன். நான் ச‌க‌தியாய்க் கிட‌க்கும் யோர்தானில் மூழ்க‌ வேண்டுமாம். எங்க‌ நாட்டில் ஓடும் அபானா, ப‌ர்பார் ந‌திக‌ளெல்லாம் யோர்தானை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு ந‌ல்ல‌து” என்று கோப‌த்துட‌ன் க‌த்திவிட்டு திரும்பிச் செல்ல‌த் தொட‌ங்கினார்.அப்போது அவ‌ரு டைய‌ வேலைக்கார‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் சென்று “எம் த‌ந்தையே” என‌ பாச‌ மாய்அழைத்துப்பேசினார்க‌ள்.ஒருவேளை இறைவாக்கின‌ர் க‌டுமை யான‌ ஒரு வேலையைச் செய்ய‌ச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்ல‌வா. அதே போல‌ இந்த‌ எளிய‌ செய‌லையும் செய்யுங்க‌ள்” என்றார்க‌ள்.நாமான் அவ‌ர்க‌ள் பேச்சுக்கு ம‌ரியாதை கொடுத்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது நாமான் முதலில் அந்த சிறு பெண்ணினுடைய ஆலோசனை கேட்டான் இரண்டாவதாக தன்னு டைய வேலைக்காரனுடைய ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறான்  அவருடைய பணிவு தன்மை வெளிப்படுகிறது.எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற் கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். கடவுளின் வார்த்தை அற்புதமானது மகத்தானது. வேண்டியதை செய்யும் ஏற்ற காலத்தில் செய்ய வேண்டியது செய்தேதீரும். உடனே நாமான்   சொன்னார்,”  இனிமேல் இஸ்ரயே லின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !” ஒரு சிறு பெண்ணால் ஏற்பட்ட மாற்ற த்தை பாரீர். பெண் குழந்தைகளுக் கான நல் எதிர்காலத்தை உறுதி செய்தல் யார்? பெற்றோர்களே.
2.தட்டுங்கள் திறக்கப்படும். Knock it shall be opened. திருத்தூதர் Acts: 12:11-17 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! திருத்தூதர் பணிகளில் ஏரோது அரசன், திருச் சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப் படுத்தினான். அவன் யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்க மாக வேண்டியது. வேதம் கூறுகிறது
" ஒருவர் மற்றவருக்காக இறைவனி டம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள்.நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்". (யாக்கோபு 5:16) எனவே திருச்சபையின் கூட்டு வின்னப்பம் விடுதலை தரும்.
முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிக ளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண் டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். வான் தூதர் மூலம் அவர் அற்புதமாக ஏரோதின் காவலிலிருந்து  விடுதலை செய்யப்பட்டார். யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்பட்ட யோவான் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். திருச்சபை மக்களின் ஒருங்கி ணைந்து இறைவனிடம் வேண்டிய விண்ணப்பத்தினால் பேதுருவின் சங்கிலிகள் உடைக்கப்பட்டன. இதுதான் விண்ணப்பத்தின் வல்லமை. "More things are
wroughten by prayers "*( Tennyson ). A Prayerless christian is a powerless Christian. ஜெபமே கிறிஸ்துவத்தின் அடையாளம். ஜெபிக்காமல் ஒரு நல்ல கிறிஸ்துவனாக இருக்க முடியாது. பேதுரு, மாற்கு எனப்பட்ட யோவான் வீட்டின் கதவை தட்டுகிறார். ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவும் நம் இல்லத்தின் கதவை தட்டுகிறவராய் இருக்கிறார் "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். (திருவெளிப்பாடு 3:20) நாம் குடும் பமாய் வீட்டில் ஜெபிக்கின்ற போது தான் ஆண்டவர் கதவைத் தட்டுவார் என்பது எவ்வளவு உண்மை.
அப்பொழுது ரோதி (Rhoda) என்னும் பெயருடைய அடிமை பணிப்பெண், தட்டியது யாரெனப் பார்க்க வந்தார்.
அவள் கதவை திறக்காமல் பேதுரு வின் சத்தத்தை மட்டும் கேட்கிறாள். பேதுருவின் குரல் என்பதை உணர்ந் ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார். இப் பணிப்பெண் பேதுருவை கடவுளின் திருத்தூதர் 
என்றும், பிரசங்கிக்கிறவர் என்றும் நன்றாக அறிந்திருக்கிறாள். பேதுருவின் பிரசங்கத்தை பலமுறை கேட்டிருக்க வேண்டும் ஏனெனில் அவரின்  சத்தத்தை கேட்க உடனே அவள் பேதுரு என்று அடையாளம் காண்கிறாள் மகிழ்ச்சிகொள்கிறாள்.
ஒரு பிரசங்கியரை பார்த்தவுடன் மக்களுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி வர வேண்டும். இந்த உணர்வை இந்த பணிப் பெண்ணிடம் காண்கி றோம். பேதுருவின் பிரசங்கம் இப்பணிப் பெண்ணின் உள்ளத்தை ஆழமாக ஊடுருவி இருக்கிறது எவ்வளவு வல்லமையான பிரசங் கத்தை இப்பணிப்பெண் கேட்டிருக்க வேண்டும். இவள் பேதுருவின் பிரசங்கத்தை கேட்கும் அளவிற்கு யோவான் வீட்டினர் அனுமதியும் சுதந்திரமும் கொடுத்திருந்தனர். பேதுருதான் வெளியே நிற்கிறார் என்று தெரிந்தும்; அதிக மகிழ்ச் சியுடன்  வெளிப்பட்டாள். கதவை திறக்க மறந்து, ஓடி சென்று ஜெபிக்கின்ற மக்களிடம் பேதுரு வந்திருக்கிறார் என்று கூறுகிறாள். ஆனால் அவர்கள் அவளை நோக்கி, "உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா?" என்று கேட்டார்கள். ஆனால் அவர்,"அது உண்மையே" என்று வலியுறுத்திக் கூறினாள். அதற்கு அவர்கள், "அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்" என்றார் கள்.(திருத்தூதர் பணிகள் 12:15).
இதுதான் உண்மை யாருமே சிறுவர் கள் பேச்சை நம்புவதில்லை. ஏனெனில் நாம் அவர்களை மதிப்பது இல்லை. அவர்களை ஒரு பொருட் டாக கருதவில்லை.  எவ்வாறு ஆண்டவருடைய சீடர்கள் சிறுபிள் ளைகளை ஆண்டவரிடத்தில் கொண்டு வருகின்ற போது தடுத் தார்களோ அப்படியே நாம் நம் பிள்ளைகளை காது கொடுத்து கேட்பதில்லை, அவர்களின் உணர் வுகளை மதிப்பதில்லை, பொருமை காப்பது இல்லை, நம்புவதில்லை. நாம் நம் அணுகுமுறையை மாற் றிக்கொள்ள வேண்டும். 
பேதுரு விடாமல் தட்டிக் கொண்டே யிருந்தார். கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத் துப் போனார்கள். பேதுரு அவர்களை அமைதியாயிருக்குமாறு கையால் சைகை காட்டி ஆண்டவர் எவ்வாறு தம்மைச் சிறையிலிருந்து வெளியே கூட்டி வந்தார் என்பதை அவர்களு க்கு எடுத்துரைத்து யாக்கோபுக்கும் மற்றச் சகோதரர் சகோதரிகளுக்கும் இதை அறிவிக்குமாறு கூறினார். பின்பு அவர் புறப்பட்டு வேறோர் இடத்துக்குப் போய்விட்டார். கிறிஸ்துக்கு பிரியமானவர்களே ஆண்டவர் அற்புதமாக பேதுருவை ஏரோதின் கைகளில் இருந்தும் சிறைச்சாலையில் இருந்தும் தேவ தூதனால் விடுவிக்கப்பட்டு முதன் முதலில் ரோதை என்ற பணிப் பெண்ணை கானும்படியாக செய் கிறார்.அன்பானவர்களே! நாமானின்
வீட்டு வேலைக்கார பெண்ணிற்கும் யோவான் வீட்டு பணிப்பெண்ணி ற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன வெனில் நாமான் வீட்டு பணி பெண்ணிற்கு பெயர் குறிப்பிடவி ல்லை; ஆனால் யோவான் வீட்டு பணிப்பெண்ணுக்கு ரோதி என்ற பெயர் சிறப்பாக குறிப்பிடப்பட்டு ள்ளது. திருத்தூதர் பணிகள் எழுதிய திருத்தூதர் லூக்கா அவர்கள் தான் எழுதிய லூக்கா நற்செய்தி நூலை யும், திருத்தூதர் பணிகளையும் எழுதும்போது; திட்டமாய் விசாரித்து அறிந்து கொண்டு என குறிப்பிடு கிறார் எனவே ரோதை என்ற பெண்ணின் பெயர் இங்கு சரியாக குறிப்பிடப்படுகிறார்.(லூக்கா 1:1-4). 
யாரையும் இழந்து விடக்கூடாது என்பதே கடவுளின் சித்தம்.
3.பெற்றோர்களே பெண் குழந்தை களுக்கான நல் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர்;Parents are assuring good future for girls. மாற்கு 5:21-45. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே பெற்றோர்கள் தான் பெண் குழந்தைகளுக்கான நல் எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மாற்கு நற்செய்தி நூலில் இயேசு கிறிஸ்து இரண்டு இஸ்ரேலிய பெண்களை (Daughters of Israel) குணப்படுத்து வதாக குறிப்பிடுகிறார்.இயேசு யூதர்கள் வாழும் பகுதிக்கு வருகி றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின் தொடர்ந் தனர்.அப்போதுபன்னிரு ஆண்டு களாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித் தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற் றது. இவர் மிகவும் தைரியசாலி எந்த ஆண் உதவி இல்லாமல் ஆண்டவரி டம் வருகிறாள். லேவீயர் ஆகமத்தில்
(15:19-24) தீட்டுடையவள், (Impurity),
விலக்கிவைக்கப்பட வேண்டும், இவள் யாரையாவது தொட்டாலும்
அவன் தீட்டாகிறான் என்பது வேத சட்டம். அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக் கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். (மாற்கு நற்செய்தி 5:27)
தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். அவ்வாறே
இயேசுவும்  தம்மிடமிருந்துவல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். 
(மாற்கு நற்செய்தி 5:30) அப்பெண் நலம் பெற்ற நிகழ்வும், ஆண்டவரிடத் தில் வல்லமை வெளிப்பட்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை. It's really a lightening experience and divine power.
It's a co-incidence. Mensuration is a natural factor and God's gift.
இருவருக்கும் ஏற்பட்ட மாற்றம் இவர்களக்கு  மட்டும் தான் தெரியும் யாருக்குமே தெரியாது. ஆண்டவரின் அனுமதியில்லாமல் அவரிடமிருந்து சுகத்தைப் பெற்றாள்.
அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதி யுடன் போ. நீ நோய் நீங்கி நல மாயிரு" என்றார். (மாற்கு நற்செய்தி 5:33,34) இந்நிகழ்வை உங்களிடத் தில் பகிர்கின்ற பொழுது ஆண்டவருடைய அன்பு என் கண் ணில் நீர் வழிய செய்கிறது. "மகளே" என்று அழைக்கின்ற அன்பின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து இவ் அதிகாரத்தில் யூதரல்லாத ஒருவனை குணப்படு த்திவிட்டு, யூதர்கள் வசிக்கும்  பகுதிக்கு வருகிறார்.அதிக மக்கள்
கூட்டத்தை பார்கிறார். யூத தலைவர் கள் அனேகர் அவர்மீது மதிப்பும், மரியாதையும்வைத்திருந்தனர்.அவர்களீல் ஒருவர்தான்  தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் (Jairus) என்பவர். இவன் மனாசே  கோத்திரத்தைச் சேர்ந்த யூதன்.  பாலஸ்தீனா  தேசத்தில்  உள்ள  கப்பர்நகூம்  பபட்டணத்தை   சேர்ந்தவன்..  இந்த கப்பர்நகூமில் இயேசு  அநேக  அற்புதங்களைச் செய்திருக்கிறார்.யூதர்களுக்கு எருசலேமில் பெரிய அழகிய ஆலயம் இருந்தது. உலகில் எங்கெல்லாம் யூதர்கள் வாழ்ந்தார்களோ, அங்கே யெல்லாம் ஒரு தொழுகைக் கூடத் தைக் கட்டி இறைவனைத் தொழுது வந்தார்கள். ஒரு தொழுகை கூடத்தில் ஒரு தலைவரும், ஒரு ஆட்சியாளரும் இருப்பார்கள். இத்தகைய ஒரு தொழுகைக் கூடத்தின் தலைவர் தான் யாவீரு. இவர் மக்களால் மதிக்கப்பட்டவர்
 இவன் வந்து, அவரைக் கண்டு அவரதுகாலில்விழுந்து,  "என் மகள் சாகுந்தறு வாயில் இருக்கிறாள் என வேண்டினார்.  யவீரு தொழுகைக் கூட தலைவராய் இருந்தபடியால் அவரிடம் பணம் இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், அதிகாரம் இருந்தது. இயேசுவை தனது வீட்டிற்கு அழைத்திருக்கலாம். ஆனால் யவீரு இயேசு இருக்கும் இடத்துக்கு சென்றார். நீர் வந்து அவள்மீதுஉம் கைகளை வையும். அப்போது அவள் நலம்பெற்றுப்பிழைத்துக்கொள்வாள்"என்று அவரை வருந்தி வேண் டினார். (மாற்கு நற்செய்தி 5:22,23)
அப்பெண்ணுககு 12 வயது.இவளின் வயதும் இயேசுவின் மகளாகிய பெறும்பாடுள்ள பெண்ணின் வியா தியின் ஆரம்பத்தில் பிறந்தவள். இவள் வயதும், வியாதியின் காலமும் 12 ஆண்டுகள் ஒன்றாக இருக்கிறது. 
இயேசு வீட்டிற்கு வரும் முன் குழந்தை இறந்து போனது என்ற செய்தி வந்தது. இதைக் கேட்ட இயேசு யவீருவைப் பார்த்து, பயப்படாதே, நம்பிக்கையுள்ளவனாக இரு என்றார். அவன் வீட்டிற்கு சென்றார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. (மாற்கு நற்செய்தி 5:37) இயேசு உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமிஇறக்கவில்லை,உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற் றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர் களையும் மொத்தம் 5 பேரை கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். 
பிள்ளையின் கையைப் பிடித்து `தலித்தா கூம்’ ( கிரேக்க மொழி) என்றார். அதற்கு சிறு பெண்ணே எழுந்திரு ( அராமிக் மொழி) என்று உனக்குச் சொல்லுகிறேன். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள்.  மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய் மறந்து நின்றார்கள்."இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப் பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார். 
விளம்பரத்தை விரும்பாத நம் ஆண்டவர்.
மாற்கு நற்செய்தியாளர் இரண்டு பெண்களின் பெயர்கள் என்ன என்று குறிப்பிடவே இல்லை.
யவீரு ஒரு தந்தையாக  மரண படுக்கையாக இருந்த மகளுக்கு ஆற்றிய பணியை சிந்திப்போம்.
இயேசுவிடம்  நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும். அப்பொழுது அவள் சுகம் பெறுவாள் என்றார். தனது பதவியைப் பற்றியோ கௌரவத்தைப் பற்றியோ, சுற்றி நின்ற மக்களைப் பற்றியோ கவலைப்படாமல், இயேசுவை மிகவும் வேண்டிக் கொண்டார்.  . எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளை மரண தருவாயில் இருக்கும்போது சும்மா இருக்க மாட்டார். ஜெப ஆலயத் தலைவரும் இதற்கு விதி விலக்கல்ல.
நம்முடைய சிந்தனைக்கு;       நாம் பெரிய பொறுப்புகளில் பதவியில் இருக்கலாம். ஆண்டவரின் வல்லமையின் முன் அவை ஒன்றுமேயில்லை என்பதை புரிந்து கொள்ளுவோம். வறட்டு கௌரவத்தை விட்டு இறைவனை நம்பி வாழுவோம். நமது மன்றாட்டுகளை இறைவன் கேட்கிறார். நிச்சயம் நமது மன்றாட்டுகளுக்கு பதில் உண்டு. ஏனெனில் இறைவன் நமது உணர்வுகளை அறிகிறவர். நாம் இயேசுவில் வைக்கிற விசுவாசத்தில் இறைவனின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரு தந்தையாக இறைவன் நமக்கு புது வாழ்வு அருளுகிறார். நமது இறை விசுவாசம் தான் நமது வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது என்பதற்கு இவ்வரலாற்றுப் பதிவுகள் சான்று பகருகின்றன. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வது பெற்றோர்களாகிய நம்முடைய கடமையாகும் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவர் ஆவதும் கெட்டவராவதும் பெற்றோர்களின் வளர்ப்பிலே என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
திருச்சபையும் தன் பெரிதான கடமையாக, குழந்தைகளின் நல் எதிர்காலத்தை உறுதி செய்ய, பல புதிய உத்திகளை கையாளப்பட  வேண்டும். ஞாயிறு பள்ளிகள், விடுதிகள் பிள்ளைகளின் எதிர்கால
வளர்ச்சியைசீரமைக்கவேண்டும்.
கிறிஸ்துவ விடுதிகள், பிள்ளைக ளுக்கு உண்மையில் கிறித்துவ கல்வியை சிறப்பாக போதிக்கி ன்றன. எனக்கு கிறித்துவை அறியும்
அறிவை கொடுத்ததே  விடுதி வாழ்க்கை தான். எனவே கிறிஸ் துவுக்கு பிரியமானவர்களே!
நமது இறை பற்றுறுதியே  உலக த்தை ஜெயிக்கிற ஜெயம்.எல்லாம் வல்ல இறைவனே! நம்பிக்கையற்று மரித்துப்போன நிலையில் இருக்கும் எங்களை உயிர்ப்பித்து சாட்சியாக நிறுத்தும்.பெண்குழந்தைகளுக்கான நல் எதிர்காலத்தை உறுதி செய்தல் எங்கள் கடமை. எங்கள் கடமைகளில் உறுதியாக இருக்க எங்களுக்கு உறுதி செய்யும் ஆண்டவரே! ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam,  Sermon Writer.
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogs.com. 




*to be delivered on 19/11/2023@ st Peter's @ cpt.








Raising of Jairus' Daughter by Paolo Veronese, 1546

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.