இறைவீட்டில் இளைப்பாறுகிற பற்றுறுதியாளர்களை நினைவு கூறுதல்.(92)COMMEMORATION OF THE FAITHFUL DEPARTED.ஏசாயா 25: 6-9. திருப்பாடல் 118; 14-15; 17-21. 2.கொரி 5: 1-10; எபிரேயர் 12: 1-2; யோவான் 11:21-27. (2-11-2023)


முன்னுரை :
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். 
"இறைவீட்டில் இளைப்பாறுகிற பற்றுறுதியாளர்களை நினைவு கூறுதல்"  என்ற தலைப்பை தியானிக்க இருக்கின்றோம். நவம்பர் 2, உலகெ ங்கும் வாழும் கிறித்துவ மக்கள் இன் றைய தினத்தை சகல ஆத்துமாக்கள் தினம் (All Saints Day) or (All Souls Day) அல்லது கல்லறைத் திருநாள் என கொண்டாடி வருகின்றனர். நம்முடைய அன்பு உறவுகள் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஜெபத்திலும் வேண்டுதலிலும் அவர்களை நினைவு படுத்துகின்றோம்.
கல்லறைக்கு சென்று கல்லறையை சுத்தப்படுத்தி, அழகு படுத்தி பூக்களா லும்,மெழுகுவர்த்தி,ஊதுவர்த்திகளாலும் அலங்கரிக்கின்றோம்,  சிலர் அவர் களை நினைத்து ஏழைகளுக்கு உணவு வழங்குவார்கள். கல்லரைக்கு சென்று ஜெபிப்பது இறந்தப் பிறகு ஆத்மாவைப் சுத்திகரித்து (purgatory) புனிதப்படுத்தும் செயல், இடம் என கத்தோலிக் திருச் சபையினரின் நம்பிக்கை. .ஆன்மாவின் பாவங்களை சுத்திகரித்து விண்ணரசு வாழ்விற்கு தகுதிபடுத்துவது இந் நாளின் முக்கியத்துவம் ஆகும்.
 திருதூதர் யோவான் 6 ம் அதிகாரத்தில்; 
"தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனை வரும் வந்து சேருவர். என்னிடம் வருபவ ரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். 
ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பி யவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். "அவர் என்னிடம் ஒப்படைக் கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த் தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.(யோவான் நற்செய்தி 6:37-39)எவ்வளவு அருமையான வாக்குத்தத்தை அவரு டைய பிள்ளைகளாகிய நமக்கும் நம் முன்னோர்களுக்கும் ஆண்டவர் கொடுத் திருக்கிறார். அனைவரும் அவரின் இறுதி நாளில் உயிர்த்தெழ செய்ய வேண்டும் என்பதே ஆண்டவரின் சித்தம்.  எனவேதான்மரித்தவர்களையும் தூய்மைப்படுத்தி, தகுதிப் படுத்தி விண்ணரசுக்கு அனுப்புகின்ற கல்லறை திருநாள். ஆண்டவர் மார்த்தாளிடம் கூறும்போது; , "இறுதி நாள் உயிர்த் தெழுதலின் போது அவனும் உயிர்த் தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உயிர்த் தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். ' 
(யோவான் நற்செய்தி 11:24-26) இவ்வாறு கல்லறை திருநாளை உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு கொண்டாடுவதினால் நாம் இறந்த ஆன்மாக்களை உயிர்த்தெழ தயார் செய்கிறோம் என்ற நம்பிக்கையை ஆண்டவர் தறுகிறார். ஆண்டவர் கல்லறையில் லாசருவை உயிரோடு எழுகின்ற பொழுது ஜெபிக்கிறார் ஜெபித்து உயிர் பெற செய்கிறார். எனவே பிரியமானவர்களே கல்லரை திருநாளில் நம்முடைய ஜெபங்கள் இறந்த ஆன்மாக்களை உயிர் பெற செய்யும் என்ற நம்பிக்கையில் அனுச ரிப்பது தான் சகல ஆன்மாக்களின் திருநாள்.
1.இறந்த ஆன்மாக்களை இரட்சிப்பதே சகல ஆன்மாக்களின் திருநாள்: All Saints Day is to save the dead Souls. ஏசாயா: 25:6-9.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! கல்லரை திருநாள் நமக்கு இறந்த ஆன் மாக்களை இரட்சிப்பதே என ஏசாயா தீர்க்கர் இங்கு வலியுறுத்துகிறார். ஆண்டவர் சாவை ஒழித்து அனைத்து முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார். தம் மக்களுக்கு ஏற்பட்ட இந்த நிந்தையை இம்மண்ணு லகில் இருந்து முற்றிலுமாக அகற்றி விடுவார், ஏனெனில் இது ஆண்டவரின் வார்த்தை என தீர்க்கர் உரைத்தார். இக்காலகட்டத்தில் இஸ்ரேல் மக்கள் நாடு கடந்து அடிமையாய் வாழ்ந்திருந் தனர் அங்கு அவர்களுக்கு சரியான உணவும் ஆதரவும் இல்லாமல் வாடி இருந்தனர். மீட்பிற்கு பிறகு ஏருசலேம்  மலையாகிய பட்டணத்தில் அவர்களு க்கு மகிழ்ச்சியின் உணவும், திராட்சை ரசமும் மிகுதியாய் உண்டு களித்தனர்.
இந்த விருந்தை ஏற்பாடு செய்தவர் ஆண்டவர். கடவுளின் விடுதலை அனைவருக்கும் ஆனது .இஸ்ரவேல் மக்களை ஒவ்வொரு அடிமமைதனத் திலிருந்து விடுவித்தார். அவ்வாறே மரண இருளின் பள்ளத்தாக்கில் இருப்பவரையும் விடுவிப்பவர் ஆண்டவர். சாவை ஒழிப்பதே அவரின் தீர்வான முடிவு ஏனெனில் மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று கேட்டவர் மரணத்தை வெற்றி கொண்டவர் எனவேதான் நாம் என்றும் உயிர்த்த கிறிஸ்துவையே வணங்குகிறோம் எனவேதான் சகல ஆன்மாக்களும் உயிர் பெற செயல் படுத்தும் திருநாளே கல்லறை திருநாள்.
மனிதனின் கடைசி விரோதி மரணம். ஆண்டவரே விசுவாசிப்பவர்கள் மரித்தாலும் பிழைப்பார்கள். நீதிமான் களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.கிறிஸ்தவனின் சாவு, அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.
2. நித்திய வீட்டிலே நிலையான வாழ்வு:A Stable Life in the Eternal Home: 2.கொரிந்தியர் 5:1-10.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! பவுல் அடிகளார் கூடாரம் செய்வதில் மிக சிறப்பான வேலையால். கூடாரம் செய்வது அவருடைய தொழில். அதன் மூலமாக வரும் வருமானத்தை கொண்டு ஆண்ட வருடைய ஊழியத் தையும் செய்தார். அவருக்கு தெரியும் உலகில் கட்டப்படுகின்ற இல்லங்கள் நிரந்தரமானவைகள் அல்ல ; அவைகள் அடிக்கடி பழுதுபடும். சீரமைக்கப்பட வேண்டும். நம்முடைய உடலும் வீடும் ஒன்றாக இருக்கிறது. என கொரிந்திய ருக்கு  விளக்குகிறார். மரித்தவர்களுக்கான ஆண்டவரின் தீர்க்கமான இருப்பிடம் இளைப்பாறுதல் இடமாக உருவாக்கி இருப்பது அவருடைய நித்திய வீடு. அழிவில்லாத நிலையான வீடு. மனிதன்  பூமியில் கட்டுகின்ற வீடுகள் நிலையற்றவை. ஆனால் ஆண்டவரின் நித்திய வீடோ கற்பாறையில் மேல் கட்டப்பட்டது. திருவெளிப்பாட்டில் நித்ய வீட்டில் இருப்போர் "நித்திய வீட்டிற்கு சென்ற பின்னர் தேவனுடைய பிள்ளைகளுக்கு, "இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயி லாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியா னவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண் டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்". (வெளி 7:16,17).
"நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்". (பிலிப்பியர் 3:20)
இது கைகளால் உருவாக்கப்படாத வீடு, பரலோகத்தில் நித்தியமானது": உயிர்த்தெழுதலுக்குப் பிறகு "மகிமைப் படுத்தப்பட்ட உடல்" அல்லது வரவிருக் கும் உலகில் "புனித வீடு" என்று பொருள் கொள்ளலாம். நித்திய வீட்டிலே நிலையான வாழ்வு பெற மரித்தவர் களின் ஆன்மாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலியே சகல ஆன்மாக்களின் தினமாகும். வேதம் கூறுகிறது இது
"நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையி லேயே வாழ்கிறோம்.(2 கொரிந்தியர்5:7)
நாம் ஆண்டவர் மீது வைத்த நம்பிக்கை யின் அடிப்படையில் வாழ்கின்றோம். ஆண்டவர் நம்மை இம்மையிலும் மறுமையிலும் கைவிடுவதில்லை. நிலையான வாழ்விற்கு நம்மை எடுத்துச் செல்கிறார். "நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். "(2 கொரிந்தியர் 5:8)
ஆண்டவரின் நித்திய வீட்டிற்கு ஏற்றவாறு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள இந்த உலக வாழ்க்கை நம்மை தேர்வு செய்கிறது, பவுல் அடிகளார் 
"எனவே நாம் இவ்வுடலில் குடியிருந் தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம். (2 கொரிந்தியர் 5:9) என்கிறார்.
3. இயேசுவின் பற்றுறுதியாளர்கள் 
இறைவீட்டில் இளைப்பாறுகின்றனர்:
The faithful departed are resting in God's House. யோவான் 11:21-27:
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே இயேசுவின் பற்றுறுதியாளர்கள் இறைவீட்டில் இளைப்பாறுகின்றனர் என்ற நம்பிக்கையின் அடித்தளம் தான் கிறிஸ்துவத்தின் அடிப்படை. சான் றாகும்.யோவான் நற்செய்தியில் இயேசு மார்த்தாளிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 
(யோவான் நற்செய்தி 11:25) இந்த வார்த்தைதான் நமக்கும்; நம்மைவிட்டு கடந்த அனைத்து இயேசுவின் பற்றுறுதி யாளர்கள் அனைவருக்கும் ஆண்டவர்
அருளும் உறுதி வார்த்தை.
பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. அங்கு லாசரூ இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன.
இந்தச் செய்தி சீஷர்களைத் துக்கப் படுத்தியது. ஆனால் இயேசு அவர் களைத் தேற்றி தான் “சந்தோஷப் படுவதாகச்” சொன்னார். மரணத்தைக் குறித்து இறைமைந்தனுடைய செயல் பாடு இதுதான். அவர் வெற்றியையும் உயிர்த்தெழுதலையும் காண்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர் களுக்கு தன்னுடைய உயிரையே பகிர்ந்து கொடுப்பதால், மரணம் என்பது அவர்களுக்கு துக்கப்பட வேண்டிய ஒன்றாக இல்லாமல் மகிழ்ச்சிக்கு ஏதுவான ஒன்றாக இருக்கிறது. அவர் வாழ்வாயிருக்கிறார், அவரை விசுவாசிக்கிற எவரும் அவருடைய வாழ்வில் பங்கடைகிறார்கள்.
சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்தருந்தனர். சாலமோன் தன் பிரசங்கியில் "விருந்து நடக்கும் வீட்டிற் குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனை வருக்கும் இதுவே முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர் ந்துகொள்வர். (சபை உரையாளர்  (சங்கத் திருவுரை ஆகமம்) 7:2)
துக்க வீட்டிற்கும் கல்லறைக்கும் செல்வதினால் நமக்கு ஒரு பாடத்தை அந்த இடங்கள் உணர்த்தும்.இங்கு 
. இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். இயேசுவை அவள் சந்தித்தபோது, இயேசுவின் காலம் கடந்த வல்லமையைக் குறித்து தன்னு டைய விசுவாசத்தை அறிக்கையிட்டாள். தன்னுடைய துயரத்தை அவரிடம் வெளியிட்டார்.மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந் திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். 
உடனே மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கும் தெரியும் என்றாள். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். இந்த வாக்குறுதி அனைத்து மக்களுக்கும் புதிய நம்பிக் கையை கொடுக்கிறது மரித்தவர்கள் இறை வீட்டில் இளைப் பாறுகிறார்கள். ஆண்டவரின் மேல் பற்றுறுதி உடை யோர் மரித்தாலும் பிழைப்பார்கள். அனைவரும் இரண்டாம் வருகையிலே  எழுந்திருப்பார்கள். உயிர்த்தெழுவர் என்ற நம்பிக்கை தான் நமக்கு விளங்குகின்ற பாடமாக இருக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு இனி மரணம் இல்லை அவ்வாறே மரித்தவர்கள் உயிர்த்த பிறகு ஆண்டவரோடு கூட ஆயிரம் வருட அர சாட்சியில் பங்கு பெறுவர்.

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே நம்மை விட்டு பிரிந்து போன உறவு களை நினைவு படுத்துகின்ற இந்த சகல ஆத்துமாக்களின் தினம் அல்லது கல்லறை தினம் அனுசரிக்கின்ற நாம். ஆத்துமாக்கள் அழிவதில்லை நாம் கல்லரையில் சென்று ஜெபிப்பதை மரித்த ஆத்மாக்கள் கேட்கின்றன என்ற நம்பிக்கை லாசருக்காக ஆண்டவர் இயேசு ஜெபித்தபோது இதை நாம் உணர்கிறோம். எனவே தவறாமல் நம்மை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்காக கல்லறைக்குச் சென்று அவர்களை நினைவுபடுத்தி மனதில் வைத்து விண்ணப்பங்களை ஏறெடுப்போம். கடவுள் அனைத்து ஆன்மாக்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 


Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www. davidarulblogspot.com.
www.david Arul Sermon centre.com






All Souls' Day
All Souls' Day by William


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.