சீடத்துவமே சான்று பகருதுவாகும்.DISCIPLESHIP AS WITNESS. (88)தொட.நூல்.41:37-43(Genesis):திரு.பாட.111; பிலிப்பியர்: 3:1-16; யோவான் 3:22-30.
முன்னுரை: கிறிஸ்துவின் அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். சீடத்துவமே சான்று பகருதலாகும் என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.
சீடத்துவம் என்பது ஒருவர் தான் தலைவராக ஏற்றுக்கொண்டவரின் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றி செயல்படுவபரே சீடராவர். இயேசுவிற்கு சீடராக விரும்புவோர்;
பின்பு இயேசு அனைவரையும் நோக்கி, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றற்றம்" ( லூக்கா 9:23) என்கிறார். இரண்டு காரியங்களை முன் வைக்கிறார் ஒன்று தன்னலம் துறந்து அனுதினமும் சிலுவையை சுமக்கின்ற அடியவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான சீடர்கள். இயேசுவின் சீடர்கள் தன் குடும்பங்களை மறந்தனர். ஆண்டவரோடு களப்பணி ஆற்றினர். ஆண்டவரின் இறை செய்தியை உலகெங்கும் கொண்டு சென்றனர். அவர் வார்த்தையை அனுதினமும் விதைத்தனர். அதுவே அவர்கள் பணியாய் இருந்தது. தன் இன்னுயிரை அவருடைய இறை பணிக் காகவும், இறையரசுக்காகவும் ஈவாக கொடுத்தனர்.
தன்மறுப்பு (self Denial)என்பது, உண்மையான மனமாற்றம் எனவும், சிலுவையைத் ஏற்பது, ஒவ்வொரு நாளைய கொடுந்துன்பங்களை, பொறுமையோடு தாங்கிக்கொள்ளுதல் மட்டுமல்ல மாறாக, அவற்றை நம்பிக்கையோடும், கடமையுணர் வோடும் ஏற்றுக்கொள்வதுமாகும்.
இயேசு தமது சீடர்களை தானே தேடித் தேடி தெரிவுசெய்தார். இவர்களுக்கு முதலில் இறையாட்சிப்பற்றி போதித்தார். சீடர்கள் முதலில் தலைவரின் கொள்கைகளை தெளிவாக கற்றுக்கொண்டு அதில் உறுதியாக இருக்கவேண்டும். இவர் களை இறையாட்சியின் தூதுவர்களாக, எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வைத்தார். இயேசுவிற்கு 12 சீடர்களும் மற்றும் தெரிந்துகொண்ட 72 சீடர்கள் மட்டுமே சீடர்கள் அல்ல; இவ்வுலகில் இயேசு ஒருவரே தம் பாவங்களை மன்னிக்கும் இரட்சகர் என்று நம்புகிற ஒவ்வொருவரும் அவருடைய சீடர்கள் தான். சான்று பகர்வது என்பது இயேசுவின் அன்பை பிற மக்களுக்கு வெளிப்படுத்தி வாழ்வதே சான்று பகர்வது ஆகும். நம் வாழ்வில் இயேசுவை பிரதிபலிக்க வேண்டும் என்பது நற்செய்தி பணியாற்றுவது. இதுதான் சாட்சி பகர்தல். இன்றளவும் இறை பணியாற்றும் அனைவருமே ஆண்டவரின் சீடர்களே.
1. இறையாவி பெற்றோரே இறைவனின் சீடர்கள்; Discipleship is the possession of the Holy Spirit. Genesis:41: 37-43.
கிறிஸ்துவின் அன்பு நண்பர்களே! இறையாவி துனை இல்லாமல் ஆண்டவ ரின் சீடராக முடியாது. யோசேப்பு ஆண்டவரின் சாட்சியாய் செயல்பட்டதால் எகிப்திலே உயர்த்தப்பட்டார்.அவனை
பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, “இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ?” என்றான்.பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, “இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர். யோசப்பின் செயல் ஆற்றலை பார்த்து பாரோன் சாட்சி பகர்கிறார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமான சாட்சி ஆக இருக்கிறது. இதுதான் சாட்சிப் பகர்தலின் வெளிப்பாடாகும். நம் வாழ்வு மற்றவர்களுக்கு சாட்சியாக உணர வேண்டும். யோசேப்பு இறையாவி உள்ளவராக இருந்ததை பாரோன் அறிக்கை இடுகிறார். இதன் மூலம் யோசப்பின் கடவுளை பாரோன் மகிமைப்படுத்துகிறார். தூய ஆவியின் செயல்பாடு இல்லாமல் இது முடியாது.
2.இயேசுவை வெளிப்படுத்துவதே சீடத்துவம்: The Revelation of Christ is the Discipleship: பிலிப்பியர் 3:1-16
கிறிஸ்துவின் பிரியமானவர்களே! சீடர்கள் இயேசு கிறிஸ்துவை தன்னுடைய பணி களில் வெளிப்படுத்துவதே சிடத்துவமாகும். பவுல் அடிகளார் இதை பிலிப்பியர் நிருபத்தில் வலியுறுத்துகிறார். பவுல் அடிகளார் இந்நிருபத்தை ரோமாபுரியில் தான் வீட்டுக் காவலில் இருக்கின்ற பொழுது இதை எழுதுகின்றார். இவர் சீடர்கள் பல துன்பங்கள் இறை பணியில் வந்தாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என இந்நிருபத்தில் ஐந்தாவது முறையாக வலியுறுத்துகிறார். உள்ளத்தில் அமைதி, மகிழ்ச்சி இல்லாமல் இறை பணி ஆற்ற முடியாது.
"கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?*
நம்பிக்கை அற்றவர்களுக்கு உள்ளான அன்புடன் இறை பணி ஆற்றுவதே நம் கடமை என்கிறார்.
ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். இருதயத்தில் விருத்தசேதனம் செய்தவர்களே ஆண்டவரின் சீடர்கள். இவ்வுலகில் எனக்கு பெருமையானவைகள் எவைகளோ அவைகளை கிறிஸ்துவுக்குள் வீண் என்று விட்டுவிட்டேன். கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே என் பிரதான பணி என பவுலடிகிறார் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவின் சீடன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்தே பெருமைப்பாராட்ட வேண்டும்.
அவர் உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.என சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். உயர்விலும் தாழ்விலும் எப்பொழுதும் எங்கும் இயேசுவை வெளிப்படுத்துவதே சீடத்துவத்தின் முழுமையாகும்.
3. சாட்சி பகர்வதே சீடத்துவம்; Discipleship is as Witness: யோவான் 3:22-30
கிறிஸ்துவின் அன்பர்களே! சீடத்துவம் என்பது எளிதானதல்ல.ஏனேனில் இது செயல்பாட்டில் அடங்கியிருக்கிறது.
இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக் குச் சென்றனர். அங்கே அவரின் சீடர்கள் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்கள்.
யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவானின் சீடர்கள் இயேசுவின் சீடர்களிடம் அதிக மக்கள் வந்து திருமுழுக்குப் பெற்றதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். யோவான் தன் சீடர்களிடம் என்னுடைய முழு பணியே வரப் போகின்ற மெசியாவுக்காக வழியை ஆயத்தப்படுத்துவதே என கூறுகிறார். இவர் மனம் மாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு என்பது பிதா, குமாரன், தூய ஆவியின் அடிப்படையில் ஆனது.
திருமுழுக்கு பெறாமல் இயேசுவிற்கு யாரும் சீடனாக முடியாது. திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டு குட்டி என முன் மொழியவே தோன்றினார். அவர் இயேசுவை மேசியா என சாட்சி பகர்ந்தார். இயேசு கிறிஸ்து மனமாற்றத்திற்கான திருமுழுக்குப் பெற வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எல்லா நியாயங்களும் நீதியும் நிறைவேறவே யோவானிடம் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்றதினால் தான் விண்ணிலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன் இவரிள் நான் பிரியமா இருக்கிறேன் என்ற வார்த்தை சாட்சியாய் வெளியானது. திருமுழுக்கு ஆண்டவரோடு இனைக்கின்ற ஐக்கியத்தின் உடன்படிக்கை. திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்கு திருமுழுக்கு கொடுக்க மிகவும் தயங்கினார். ஆனால் ஆண்டவர் இது நீதியை நிலை நாட்டுகின்ற செயல் என்பதை உணர்த்தி திருமுழுக்கு பெற்றார். இதன் மூலம் திருமுழுக்கு என்பது ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கு அடிப்படையான செயலாகும். இது தூய்மை செயல். திருமுழுக்கினால் தூய ஆவியானவர் புறாவைப் போல் ஆண்டவர் மீது இறங்கினார். வானம் திறக்கப்பட்டது. பிதாவின் சத்தம் வெளிப்பட்டது.இவர் என் நேசகுமாரன் என்ற வார்த்தை சாட்சியாக கொடுக்கப்பட்டது திருமுழுக்கு பெறுவதில் தூய ஆவியின் உறவு ஏற்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று உறுதியாய் பேதுரு கூறினார்.
உயிர்த்த கிறிஸ்து ;" நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத்தேயு 28:19) என்றார்.
ஒருவனை சீடராக்குவது கடவுளின் கட்டளை. சீடனாய் இருப்பது கடவுளின் பணி செய்வதே!. சாட்சி பகர்வதே நம் கடமை. அன்பின் ஆண்டவரே உமக்கு பிரியமான சாட்சியாய் வாழ எங்களை நடத்தும். ஆமென்.
Prof. Dr David Arul Paramanandam. Sermon Writer.
www.davidarulblogspot.com.
www.davidarulsermoncentre.

Comments
Post a Comment