பற்றுறுதியில் வளர்தல். NURTURING IN FAITH. (93).;நீதிமொழி 23:15-26; திருப்பாடல்கள் 127; எபேசியர் 6:10-18; மத்தேயு 18:1-6. உலக ஞாயிறு பள்ளி நாள். 05-11-2023.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். பற்றுறுதியில் வளர்த்தல் என்ற தலைப்பை நாம் தியானிக்க இருக்கின்றோம். இது சிறு பிள்ளைகளு க்கான உலக ஞாயிறு பள்ளி தினம் உலக முழுவதும் நவம்பர் மாதம் முதல்
வாரத்தில் கொண்டாடப்படுகிறது. ஞாயிறு பள்ளிகள் நடத்துகின்ற ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளை வளர்க்கின்றவர்களுக் கும் இந்த வார்த்தைகள் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உலகிலேயே ஞாயிறு பள்ளிகள் இங்கிலாந்து நாட்டில் 1851 ஆம் ஆண்டு வில்லியம் கிங் என்பவரால் டர்ஸ்லே (Dursley), Gloucestershire. என்ற ஊரில் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக் காக ஆரம்பிக்கப்பட்டது. அது தொழில் புரட்சி காலம் 18 ஆம் நூற்றாண்டில் குழந்தை தொழில் அதிகமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை. இதற்காகவே ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களுக்கு கல்வி வழங்க இப்பள்ளியில் முதலில் தொடங்கப்பட்டது. இதன்பிறகு 1781ம் ஆண்டு,குளொவ்செஸ்டர் பத்திரிகை
யின் ஆசிரியர் ராபர்ட் ரெய்க்ஸ் சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளியை ஆரம்பித்தார். இதனை தன்னுடைய பத்திரிகையில் அறிவிப்பாக வெளி யிட்டார். இதை கண்ட கிறிஸ்தவ ஆயர்கள் இப்பள்ளிக்கு ஆதரவு கொடுத்தனர். பிள்ளைகளை சேர்த்து
சிறு பிள்ளைகள் படிக்கவும், எழுதவும், வேதப்பாடங்கள் (Bible teaching) கற்கவும்
செய்தனர்.
இந்தியாவில் முதன் முதலில் 1809 ஆண்டு கேரளத்தில் உள்ள எர்ணாகு ளத்தில், மளங்ங்கார திருச்சபையினர்
சிறுவர்களுக்கான ஞாயிறுபள்ளிகளை
துவக்கி மத அறிவு, ஜெபம் செய்யும்
முறை, அருட்சாதனங்களை (Sacraments)
பற்றிய கல்வியை கொடுத்தனர். 1876ம்
ஆண்டு இந்திய ஞாயிறு பள்ளிகள் சங்கம் துவக்கப்பட்டது. ஞாயிறு பள்ளிகளின் நோக்கம் குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகள் வேத அறிவு, நீதிக்கதைகள், கற்றுக் கொடுக்கப்பட்டன. "Catch them young and watch them grow" என்பர். குழந்தைகளாய் இருக்கின்றபோதே அவர்களுக்கு ஒழுக்க கல்வியையும் வேதக் கல்வி யையும் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இளமைப் பருவம் தான் உருவாக்கும் ஆண்டுகள் (Formative Years)என்பர். இக்காலத்தில் அவர்கள் கற்றுக் கொள்வது எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும். ஒளவையாரின் ஆத்தச்சூடியில் இளமையில் கல் என கூறுகிறார். இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் தவறாமல் கற்றுக்கொள் என்பது மிக முக்கியம்.வேதம் அதைத்தான் கூறுகிறது " நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்." (நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 22:6)
பிள்ளையைப் பழக்குவது ( train up) இது யாருடைய பொறுப்பு? பெற்றோர்களுடைய முழு பொறுப் பாகும். பெற்றோர்களே முதல் ஆசிரியர் ஒரு தந்தை 1000 ஆசிரியர்களுக்கு சமம் என்பர். எனவே குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பாகும். அவர்கள் அறிவிலும் ஆற்றலிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளர்வது பெற்றோர்களின் கடமை. ஆண்டுவராகிய இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே "இயேசு ஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும், மிகுந்து கடவுளுக் கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக்கா நற்செய்தி 2:52) எனவே பிள்ளைகளை ஆண்டவரின் பற்றுறுதியில் வளர்ப்பது பெற்றோர்களின் முதன்மை கடமை. ஞாயிறு பள்ளிகள் பற்றுறுதியை வேதக் கல்வியின்மூலம் உறுதிப்படுத்துவது அவர்களின் அடுத்த கடமை. திருச் சபையின் எதிர்கால நல்ல தலைவர் களை உருவாக்குவதும், ஞாயிறு பள்ளிகளின் கடமையாகும் ஆண்ட வரின் திருப்பனியை உலகெங்கும் எடுத்துச் செல்ல அடிப்படை பற்று உறுதியை பிள்ளைகளுக்கு கொடுப்பதும் ஞாயிறு பள்ளிகளின் கடமையாகும். வேத அறிவு, தெளிவான சிந்தனை, பிரசங்கிக்கின்ற வல்லமை, பாடுகின்ற தன்மைகள்,அனுதின தியானம் இவைகள் எல்லாம் கற்றுக் கொள்கின்ற இடம் தான் ஞாயிறு பள்ளிகள். இவர்கள் கற்றுக் கொடுக்கின்ற ஆண்டவர் மீதுள்ள பற்று உறுதி அவர்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருக்க செய்வதே பள்ளிகளின் வெற்றியாகும்.
1. ஆண்டவரிடம் அச்சமே வளமான எதிர்காலம்: The fear of the Lord is the bright future:நீதி மொழிகள்: 23:15-26.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே சிறு பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் கிடைக்க அவர்கள் ஆண்டவருடைய திரு வசனங்களில் பற்று உறுதி கொள்ள அவர்களை ஆண்டவரிடம் முதலில் அச்சம் கொள்ள கற்றுத்தருவதே அவர்களுக்கு வளமான எதிர்காலம்.
வேதம் கூறுகிறது "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" (நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 1:7). நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறுகளுக்கும் தண்டனை உண்டு என்ற சிந்தனையை இளமையிலேயே பிள்ளைகளுக்கு உள்ளத்தில் விதைக்க வேண்டும். கடவுளுடைய பயமே மனிதர்களிடம் அச்சம் கொள்ள செய்யும்; அவ்வாறு அவர்கள் அச்சம் கொள்கின்ற போது நல்லறிவு பெறுவர். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளாமல் அறிவு வளராது, அன்பு வளராது, பற்றுறுதி உண்டாகாது. கீழ்ப்படிதல் இருக்காது . சிறுபிள்ளைகள் ஆண்டவருக்கும் பெற்றோருக்கும் ஏனைய பெரியோர்களுக்கும் கீழ்படி வதே அடிப்படை அறிவாகும். இத்தகைய ஒழுக்க கல்வியை வேதத்தின் அடிப்படையாகக் கொண்டு போதிப்பதே ஞாயிறு பள்ளி ஆசிரியர்களின் சிறப்பான கடமையாகும். ஆண்டவர்
கூறும் நல் வார்த்தையில் "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை (The yoke) உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு நற்செய்தி 11:29)
இயேசுவின் நுகம் எளிய, சுகமான சுமை
என்பதனை பற்றித் பிள்ளைகள் இளமையிலேயே தெரிந்து கொள்வது நல்லது. இயேசு தருகின்ற இளைப்பாறு தால் துன்பமே இல்லாத வாழ்வு என்று தவறாக நினைத்து விடக்கூடாது. இன் றைக்குப் பலர் இயேசுவைப் பின் பற்றி, அவர் வழியில் நடந்தால் துன்பமே இருக்காது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அன்பு ஞாயிறு பள்ளி ஆசிரியர்களே, பெற் றோர்களே பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே தாங்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஆண்டவர் தண்டனை தருவார் என்ற அறிவை உணர்த்துவது நம்முடைய கடமையாகும் ஏனென்றால் ஆண்டவருக்கு பயப்படுவதே அறிவின் ஆரம்பம்."அப்பொழுது பிள்ளைகளின் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது. (நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 23:18) என்ற பற்றறுதியை வளர்பது. ( inculcate) மிக அவசியம்.
2.ஆண்டவருடன் இணைந்து செயல்பட கற்றுத்தாருங்கள். Teach them to work together with God: எபேசியர் 6:10-18;
கிறித்துவின் அன்பு ஞாயிறு பள்ளி ஆசிரியர்களே! பெற்றோர்களே!
வேதம் கூறுகிறது; "பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 127:3) என பிள்ளைகள் ஆண்டவர் அளிக்கும் பரிசாகும். அவர்கள் குயவன் கையில் உள்ள களிமண் போன்றவர்கள். அவர்களை ஆண்டவரின் பிள்ளை களாக உருவாக்குகின்றவர்கள் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்க ளுமே மிக முக்கிய காரணம்.You can Make a child or Mar a child. அவர்களுக்கு சிறுவயதிலேயே ஆண்ட வர் மீது அசைக்க முடியாத பற்றுறுதியை வளர்க்க வைப்பது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைகளை ஆண்டவ ரோடு இணைந்து, அவர் தரும் வலிமை யாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறச் செய்வது நம் கடமை அல்லவா என பவுல் அடிகளார் எபேசியர் திருச்சபை க்கு உணர்த்துகிறார். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமையும் ஆற்றலையும் பிள்ளைகள் பெரும்படி செய்ய வேண்டும் . இவ்வுலகில் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இவ்வுலகத்தின் அதிபதியான பிசாசோடும், வான்வெளியில் உள்ள தீய ஆவிகளோடும் நாம் போராட வேண்டி இருக்கிறது. சோதனைகள் துன்பங்கள் வேதனைகள் பொல்லாத நாட்கள் வருகின்ற பொழுது அனைத்திலும் வெற்றி பெற்று நிலை நிற்கின்ற வல்லமையைப் பெறும்படியாக கடவுள் அருளும் எல்லா படைக்கலன்களையும் (the armour of God) ( There are SIX armours St Paul referes here) பிள்ளைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே என் நிலையிலும் உயர்விலும் தாழ்விலும் நம் பிள்ளைகள் உண்மையை இழக்கசியாக( the belt of truth) கட்டிக் கொண்டு நீதி நேர்மையை மார்பு கவசமாக (the breastplate) அணிந்து கொள்கின்ற பிள்ளைகளாக நாம் உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் பிள்ளைகள்
அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை அவர்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ள ஆழ்ந்த அறிவை நாம் அடித்தளமாக தரவேண்டும்.
மனிதர்களின் பலமே நம்பிக்கை பிள்ளைகள் என் நிலையிலும் எவ்விடத்திலும் நம்பிக்கை என்னும் கேடயத்தை (Shield of faith) உறுதியாய் பிடித்துக் கொள்ள நம்முடைய அறிவுரைகள் அவர்களுக்கு ஏணிப்படிடளாய் இருக்க வேண்டும்.
அன்பு ஆசிரியர் பெருமக்களே, பெற்றோர்களே பிள்ளைகளுக்கு கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாக எடுத்துக் கொள்ளவும், எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புவும்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யவும். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடவும் உங்கள் கல்வியும் பயிற்சியும் பிள்ளைகளுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
3. வின்னரசில் பெரியவர் யார்? Who is the Greatest in the Kingdom of God? மத்தேயு 18:1-6.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே விண்ணரசில் பெரியவர் யார் என்ற வாக்குவாதம் சீடர்களுக்கு ஏற்பட்டது. இதே போல நம் திருச்சபையிலும் நான் தான் பெரியவன் எனக்கு தான் பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என நாம் கேட்கிறோம் முதன்மையான இடங்களை தேடுகிறோம். திருச்சபைக்கு பொறுப்பாளராக இருக்க விரும்புபவர்கள் முதலில் நற்செய்திபணி ஆற்ற வேண்டும், அவர்களுக்கெல்லாம் ஆண்டவர் கூறுகின்ற வார்த்தை பணிவாய் இருப்பது பணிவு,தாழ்மை ஒன்றே உயர்த்தும் என்பதை தன் சீடர்களுக்கு குழந்தைகள் மூலமாக சான்றாக எடுத்துரைக்கிறார்.தன்னுடைய சீடர்கள் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இரண்டுவிதமான பதில்களைச் சொல் கின்றார். முதலாவதாக, ஒருவர் விண் ணரசில் நுழைவதற்கு அவர் சிறுபிள் ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும். விண்ணரசில் எல்லாராலும் நுழைந்துவிட முடியாது; கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோரால் மட்டுமே முடியும். அப்படிக் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர் தாழ்ச்சியோடு வாழ்ந்தார் எனில், அவரால் விண்ண ரசில் மிக எளிதாக நுழைந்துவிட முடியும்; விண்ணரசில் நுழைவதற்கு தாழ்ச்சி மிகவும் அவசியமானது Humility is a virtue of all good virtues.என்று இயேசுகிறிஸ்து போதித்தார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
விண்ணரசில் யார் சிறியவன் யார் பெரியவன் என்பதற்கு ஆண்டவர் காட்டும் வழி இதோ; "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.எனவே, இக் கட்டளை களில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். (மத்தேயு நற்செய்தி 5:18,19) எனவே ஆண்டவர் விண்ணரசுக்கு தகுதியானவர்கள் குழந்தையைப் போன்று தூய உள்ளம் உடையவராய் இருத்தல் வேண்டும் இரண்டாவது நியாய சட்டங்களை கற்பிக்கின்ற வர்களாகவும், கடைப் பிடிக்கின்றவர் களாகவும் இருக்க வேண்டும். இவர்களே விண்ணரசுக்கு தகுதியானவர்கள்.
நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைக ளைப்போல் ஆகாவிட்டால் விண்ண ரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். Repentance plays an important role in to enter into the Kingdom of God. (மத்தேயு 18:3) ஆண்டவர் குழந்தைகள் நேசிக்கின்றவர். எனவே ஆண்டவரிடம் செல்வதற்கு அவரை தடை செய்யாதீர்கள். அவர்களுக்கு தடையாய் இருக்கின்ற காரியங்களை தகர்த்தெடுங்கள் என்ற வேண்டு கோளை கடவுள் நமக்கு தருகிறார்.
"இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:14) ஆண்டவர் அன்பு இரக்கம் கனிவு நிறைந்தவர். பிள்ளைகள் அவரிடம் சேர்கின்ற பொழுது இக்குணங்களை பெறுகின் றனர். பூவோடு சேர்ந்த நாறும் மனக்கும்.
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பின வரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 9:36,37) அதுமட்டுமல்ல; "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரை யாவது பாவத்தில் விழச் செய்வோரு டைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களு க்கு நல்லது. (மாற்கு நற்செய்தி 9:42)
சிறு பிள்ளைகள் ஆண்டவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதில் முதன்மையானவர்கள். ஆண்டவரை நேசிப்பதிலும் அவர்களே நம்பிக்யானவர்கள், ஆண்டவரிடம் பற்றுறுதி உடையவர்கள் அத்தகைய குழந்தைகளுக்கு ஆண்டவரிடம் சேராமல் தடை செய்கின்றவர்கள் தடையாய் இருப்போர் ஆண்டவரால் தண்டிக்கப்படுவர்.
சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
(மாற்கு நற்செய்தி 10:13,14) குழந்தைகளைப் போன்றோருக்கே இறையாட்சி உண்டு. குழந்தைகளை பெரியோர் இடத்தில் கொண்டு சென்று ஆசிர் பெறுவது ஒரு வழக்கம் பெரியோர்கள் தொட்டு ஆசீர்வதிப்பது பிள்ளைகளுக்கு கிடைக்கும் மகா பெரிய ஆசிர்வாதமாகும்.
குழந்தைகளைப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் தொடக் கத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. யாக்கோபு, யோசேப்பின் இரு புதல்வர்களான மனாசேயையும் எப்ராயிமையும் ஆசீர்வதித்ததாக விவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது. (தொட. நூல். ஆதியாகமம் 48:9) இத் தகைய குழந்தைகளை பற்றுறுதியில் வளர்ப்பது நம் கடமையல்லவா? ஆண்ட வரே நாங்கள் எங்கள் பிள்ளைகளை உம்முடைய பற்றுறுதியில் வளர்க்க எங்களுக்கு அறிவை, ஆற்றலை தாரும். நாங்கள் பொறுப்புள்ள பெற்றோர் களாய், ஆசிரியர்களாய் இருக்க எங்களுக்கு உமது ஞானத்தை கற்றுத்தரும் ஆமென்
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www.david Arul Sermon centre.
www.david Arul blogspot.com
Pl. Write your comments for omissions and additions. Thank you.
Christ Blessing the Children
Christ Blessing the Children | |
---|---|
![]() Let the little children come to me | |
Artist | Lucas Cranach the Elder |
Let the little children come to me
Artist
Lucas Cranach the Elder
Comments
Post a Comment