கடவுளின் ஆளுகைக்காக இடர்வரவினை (RISK ) ஏற்றல்.(89) TAKING RISK FOR THE REIGN OF GOD. எஸ்தர் 8:1-17; திரு.பாட.12; பிலிப்பியர் 2:25-30; மத்தேயு 10: 37-42.

முன்னுரை: 

கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
"கடவுளின் ஆளுகைக்காக இடர்வர வினை (RISK ) ஏற்றல்'. என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். முதலாவதாக கடவுளின் ஆளுமை, ஆளுகை என்றால் என்ன? ஆளுமை என்பது ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந் துள்ளார்; ஆண்டவர் வல்லமை யைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. ( திரு.பாட. சங்கீதம் 93:1) என்பதே. கடவுள் இவ்வுலகை ஆட்சி செய்கிறார் என்று சங்கீதக்காரன் கூறுகிறான் ஏனெனில் ஆண்டவர் இவ்வுலகை எப்போதும் ஆட்சி செய்கிிறார். "ஆண்டவர்  யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்."  (லூக்கா நற்செய்தி 1:33) என இவ்வுலகை ஆட்சி படுத்த விரும்புகிறார்.
எனவேதான் ஆண்டவர் கற்றுக் கொடுத்த 
இறை வேண்டலில் "உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறு வதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! (மத்தேயு நற்செய்தி 6:10) 
என் இவ்வுலகில் தன் விண்ணரசு வர 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடித்தளம் இட்டுள்ளார். The foundation of the Kingdom of God is laid down by our lord Jesus Christ,  before 2000 years ago. எனவேதான் விண்ணரசு குறித்து நற்செய்தியில் 70 முறைக்கு மேலாக குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வுலகில் விண்ணரசை கொண்டு வருவது நம் ஒவ்வொருவருடைய கடமை. ஆண்டவரால் ஆரம்பிக்கப்பட்ட விண்ணரசு; நம் மூலம் தான் இவ்வுலகில் நிறைவேறவேண்டும். "We are the partakers of bringing the Kingdom of God" எனவே தான் ஒவ்வொரு முறை இறைவேண்டிலும் அவர் அரசு வருவதாக எனது வேண்டுகிறோம்.உலகில் 157.        (197 நாடுகள்) நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். ஆனால் இறையரசு வாடிகனை தவிர வேறு இடங்களில் அமையவில்லை. Vatican is the only State in the World ruled by Pope, who is the representative of God.எனவே இவ்வுலகை கடவுள் படைத்தார்.எனவே!;
"மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். (திருப்பாடல்கள்(சங்கீத) 24:1) இவ்வுலகை விண்ணரசாக மாற்றுவது நம்முடைய கடமையும் உரிமையும் ஆகும்.
ஆண்டவர் பிலாத்து விடம் கூறும்போது; 
"இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறினார். 
மத்தேயு நற்செய்தி 27:11) ஆண்டவர் தன்னை இவ்வுலகின் அரசராக காட்டவில்லை. அவர் விண்ணரசின் தந்தை. இவ்வுலகில் அவர் அரசு வரவேண்டும். அந்த இறையரசை இவ்வுலகில் கொண்டு வர அதிக இடர்பாடுகள் உண்டு.அந்த இடர்பாடுகளை (Risk) ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் மிக அவசியம். இடர் மேலாண்மை (Risk Management) செயல்பாட்டில் அபாயங்கள் மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு மற்றும் இந்த ஆபத்துகளின் விளைவாக எழும் அபாயங் கள், பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் மற்றும் புதிய ஆபத்துக் களைத் தடுக்க தேவையான நிறுவன அமைப்பை நிறுவுதல் ஆகியவை அடங்கும். இதன் அடிப்படையில் நம் நிறுவனங்கள் இறை யாட்சியை இவ்வுலகில் கொண்டு வர சூழ்நிலைக் கேற்றவாறு நாம் மக்களை அனுகும் வழிமுறைகளை கண்டு செயல் படுவது மிக அவசியம். ஆண்டவர் கூறிய  வாறு;  "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவேபாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். (மத்தேயு நற்செய்தி 10:16) இதுவே நமக்கு சிறந்த அணுகுமுறை.

1. இனத்தை காத்த இனியவள் எஸ்தர். Esther as the saviour of Jews. எஸ்தர் 8:1-17
கிறித்துவின் அன்பர்களே! எஸ்தர் சரித்திரம் இந்தியாவை தொடர்பு படுத்தியுள்ள புத்தகம். இதன் அரசன் அகஸ்வேர் காலம் கி.மு 483-473.இது (தற்போது ஈரான் நாடு) இவன்
இந்தியா முதல் எத்தொப்பியா வரை விரிந்து பரந்த 127 மாநிலங்கள் அடங்கிய மாபெரும் வலிமையான சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். இந்த நிகழ்வு 
பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையாகிய சூசான்  தலைநகரில்  நடை பெற்றவை. . யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது. ஒருநாள் அரசன் தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை எல்லோருக்கும் பறை சாற்ற மாபெரும் விருந்தொன்றை அளிக்கிறான்.அரசி வஸ்தியும் உயர்குடிப் பெண்டிருக்கு விருந்தளிக்கிறார். ஏழு நாள்கள் தொடர்ந்த விருந்தின் இறுதி நாளில் அரசர் அதிகமாகக் குடித்துவிட்டு, தம் அரசியை விருந்தினர்முன் வரச்சொல்லி அவரது அழகைக் காட்டுவதற்குக் கேட்கிறார். ஆனால் அரசியோ அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து, வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார். இது அரசியின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால். இது அரசிக்கு மட்டுமல்ல; பெண்கள் என்ன போகப் பொருட்களா? பலர் மத்தியில் ஆடுவதற்கு? நான் அந்த அரசியை பெரிதும் பாராட்டுகிறேன். இதனால் அரசன் கடும் கோபமடைகிறார். தம் ஆணையை மீறிய வஸ்தி அரசியை என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். அரசியைத் தண்டிக்காமல் விட்டால் அரசு முழுவதிலுமுள்ள மனைவியர் தம் கணவர் சொல் கேட்டு நடக்க மறுப்பார்கள் என்றும், அதனால் அரசிக்குத் தண்டனை கொடுத்தால் நாடு முழுவதற்கும் அது ஒரு பாடமாக இருக்கும் என்றும் ஆலோசனை கூறுகிறார்கள். அரசி இனிமேல் தம் கண்முன் வரலாகாது என்று அரசர் அவரை ஒதுக்கிவிடுகிறார்.
ஒரு புதிய அரசியைத் தேடும் படலம் தொடங்குகிறது. நாடெங்கிலுமிருந்து அழகிய இளம் பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். அப்போது சூசா நகரைச் சார்ந்த யூத குலத்தவரான மொர்தக்காய் என்பவரின் வளர்ப்பு மகளாகிய எஸ்தர் என்னும் அழகிய பெண்ணும் வருகிறார். மொர்தக்காயும் எஸ்தரும் யூதர்கள் என்பது அரசனுக்கோ பிறருக்கோ தெரியாது.
அழகு மிகுந்த எஸ்தரை அரசன் தன் நாட்டுக்கு அரசியாக முடிசூட்டுகிறார். ஒருசிலர் அரசனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த மொர்தக்காய் அதை எஸ்தர் வழியாக அரசனுக்குத் தெரிவித்து அரசனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார். அரசனும் மொர்தக்காயைப் பாராட்டுகிறார்.
ஆனால் அரசவையில் உயர்பதவி வகித்த ஆமான் என்பவன் மொர்தக்காய் தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று சினம் கொண்டு அவரைக் கொல்ல வழிதேடு கிறான். அவர் ஒரு யூதர் என்றறிந்து, நாட்டி ல் உள்ள எல்ல யூதர்களையும் அடியோடு ஒழித்திட மன்னன் ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அவரிடம் ஆமான் கேட்கிறான். ஆமான் கெடுவான். கேடு நினைப்பான்.அரசனும் கொடுங்கோல் மன்னன். உடனே ஒப்புதல் தரவே, ஆமான் நாட்டிலுள்ள யூதர்களைக் கொல்லவும் அவர்களுடைய சொத்துக்களைச் சூறையாடவும் ஆணை பிறப்பிக்கிறான். இதை அறிந்த மொர்தக்காய் தம் இன மக்களுக்கு நேரவிருக்கின்ற கொடுமையைத் தவிர்க்கும் வண்ணம் அரசனின் மனத்தை மாற்றுவதற்காக எஸ்தர் மூலமாக முயற்சி செய்கிறார். மொர்தக்காயும் எஸ்தரும் தம்மையும் தம் இன மக்களையும் காக்கும்படி கடவுளை மன்றாடுகின்றனர்.
ஒருநாள் எஸ்தர் அரசி அகஸ்வேர் அரசனுக்கும் அரசவை அதிகாரி ஆமானுக்கும் விருந்தளிக்கிறார். ஆமான் ஒரு தூக்குமரத்தை ஏற்பாடு செய்து, அதில் மொர்தக்காயை ஏற்றிக் கொல்வதற்குத் திட்டமிடுகிறான். அரசி மறுநாளும் அரசரும் ஆமானும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆமான் பெரு மகிழ்ச்சியுற்று, தன் திட்டம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என்று மனப்பால் குடிக்கின்றான்.இதற்கிடையில் அரசர் தம் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காயைப் பெருமைப்படுத்த எண்ணுகிறார். விருந்துக்கு வந்த ஆமானிடம் அவர், "நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?" என்று ஆலோசனை கேட்கின்றார். தன்னைப் பெருமைப்படுத்த மன்னர் கேட்கிறார் என்று தப்புக் கணக்குப் போட்ட ஆமான், மிக்க மகிழ்ச்சியோடு, "மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து, அவரைக் குதிரையில் ஏற்றி எல்லாரும் பாராட்டும் விதத்தில் நகரின் தெருக்களில் வலம் வரச் செய்யலாம்" என்று ஆலோசனை கூறுகிறான். தான் பெருமைப்படுத்த விரும்பிய மனிதர் வேறு யாருமல்ல, மொர்தக்காய்தான் என்று அரசர் கூறியதும் ஆமான் அதிர்ச்சியடைகிறான்.
மொர்தக்காய் பெருமைப்படுத்தப்படுகிறார். ஆமான் தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு வீடு சென்று, தன் மனையிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறான்.
அரசி எஸ்தர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட அரசன் அகஸ்வேர் மீண்டும் ஒருமுறை அரசியிடம், "உனக்கு என்ன வேண்டும், கேள்" என்று கூற அரசி, "என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். ஆமான் எங்களைக் கொல்லத் தேடுகிறான்" என்கிறார். ஆமான் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்கிறான். அரசியின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி, தன் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான். இதைக் கண்ட அரசர், இந்த ஆமான் என் மனைவி யையே கெடுக்க எண்ணிவிட்டானா என்று கூறி, மொர்தக்காயைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்காக ஆமான் ஏற்பாடு செய்தி ருந்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தூக்கிலிடும்படி ஆணையிடுகிறார். தன்வினை தன்னை சுடும்.
அரசன் அகஸ்வேர் புதிதாக ஓர் ஆணை பிறப்பித்து "யூதர்கள் தங்கள் சமயத்திற் கேற்ப சம்பிரதாயங்களைக் கடைப்பிடி க்கலாம் என்றும், தங்கள் பகைவர்களிட மிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு'' என்றும் அறிவிக்கிறார். யூதர்களை காத்த எஸ்தர் தனக்கு கடவுள் கொடுத்த நல் வாய்ப்பை பயன்படுத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறார்.
2.திருப்பணியை தாங்குவதே திருச்சபை: The Church is to uphold the Ministry. பிலிப்பியர் 2:25-30
கிறிஸ்துவின் அன்பர்களே! திருப்பணியை சிறப்புடன் செய்யவதே கிறித்தவர்களின் முதன்மை பணி. தூய பவுலடிகிறாரின் திருப்பணியை சிறப்பாகக் செய்ததற்கு திருச்சபைகளும் தன்னலமற்ற திருத் தொண்டர்களே காரணம். இதில் முக்கிய மாணவர்கள்தீமொத்தேயும்,எப்ப்பிராதித்தும் ஆவர். பவுல் அடிகளார்  சிறைப்பட்டபோது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4:18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ் வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இருக்ட்கவேண்டும் என்பதற்காகவும் இந்நூலை எழுதுகிறார்.
துன்பங்கள் மத்தியில் இறைப்பணியாற்று வது மிக பெரிய சவாலாகும். தூய ஆவியின் துணை இல்லாமல் இறை பணி ஆற்ற முடியாது.
கடவுளின் ஆளுகைக்காக இடர்வரவினை (RISK ) ஏற்றலில் முதன்மையானவவர் பவுல் அடிகளார். பிலிப்பியர்களுக்கு தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27, 30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3).
திமொத்தேயும் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30);   எப்பப்பிராதித்துவை தன் சகோதரராக வும், உடன் பணியாளராகவும், அவரின் போர் சேவகனாகவும் , அவர்களின் தூதுவராகவும் , அவரின் தேவையை நிறைவேற்றிய திருப்பணியாளராக பிலிப்பியர்களுக்கு அனுப்புகிறார். எப்ப்பிராதித்து மிக கடுமையான மரணவியாதியில் இருந்து ஆண்டவரால் விடுதலை பெற்றவர். இவரை பிலிப்பியர் மக்கள் பார்க்க விரும்பினர்  எனவே அவரை அங்கு அனுப்புகிறார். அவரை பார்ப்பதி னால் அம்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகின்றார். கடவுளின் அற்புதம் அவருக்கு  கடவுள் நிகழ்த்தியது அவர்களுக்கு சாட்சியாக விளங்குகிறது ஊழியக்காரர்களின் உபத்திரத்தை கடவுள் தாங்குகிறார். அவர்களை கைவிடுவதி ல்லை. உபத்திரத்தில் ஆண்டவரின் ஊழியத்தை  செய்வதே சிறந்தது. இவர்களின் திருப்பணியை தாங்கிய திருச்சபையினராக இருந்தனர். கிறித்தவர்களுக்கு உபத்திரவங்கள் புதி தல்ல. முதலாம் நூற்றாண்டில் உரோமை பேரரசின் மன்னராக இருந்த நீரோ  மன்னன் காலத்தில் கிறித்தவர்கள் கொள்ளப்பட்டனர். இன்னல்கள் மத்தியில்
வளர்ந்துதான் கிறித்தவம் ‌. இதை அழிக்க நினைத்தவர்கள், செயல்பட்டவர்கள் அழிந்து போயினர்.

3. இடர்பாடுகள் இனைந்ததே இறைபணி: The ministry of God is full of Risks:  மத்தேயு 10:37-42.
கிறிஸ்துவின் அன்பு நண்பர்களே! இறைவனின் திருப்பணி முள்ளில் நடப்பது.
Ministry is the bed of thorns . இக்காலத்தில் இடர்பாடுகள் இல்லாமல் திருப்பணி ஆற்றவே முடியாது. இடர்பாடுகள் நிறைந்த திருப்பணியை ஆண்டவர் அதிகமாக ஆசீர்வதிக்கின்றார். அறுபதும், நூறுமாக ஆத்துமாவை தருவார். ஆத்தும ஆதாயம் பெறாமல், திருப்பணியாளர்களாக இருக்க முடியவே முடியாது.ஆண்டவரே இடர் பாடு களை மேற்கொண்டு தன் திருப் பணியை உலகில் ஆற்றினார். இடர்பாடுகள்சிலுவை. சிலுவையை சுமக்காமல் திருப்பணி ஆற்ற  முடியாது. இவ்வுலகத்தின் மீதும், உலக பொருட்கள் மீதும் அன்பு கூறாதவரே இறைபணியாளர். நம் குடும்பத்தை நாம்
நேசிக்க வேண்டும். ஆனால் அதை காட்டிலும் ஆண்டவரையும், அவர் திருப் பணிமீது அதிக அன்பு செலுத்துவதே இறைபணியாளரின் கடமை.
இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. (ரோமர் 14:16) ஆண்டவரின் ஆளுகையை இவ்வுலகில் நிலைநாட்ட அனுதினமும் சிலுவையை சுமப்பதினால் மட்டுமே முடியும்.
திருப்பணியாளர்களை ஏற்றவர்கள் ஆண்டவரை ஏற்றவர்கள். அவர்களுக்கு நீதிமான்ங்களுக்கான பலனை அடையாமல் போவதில்லை. உலகமும் உலகத்தில் உள்ளவைகளும் எனக்கு பின்னே; சிலுவையே எனக்கு முன்னே என்ற சிந்தனை இறையாட்சியை அமைக்க முடியும். ஆண்டவரின் ஆளுகைக்கு இடர்கள் உண்டு ஆனாலும்: " என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார். 
(யோவான் நற்செய்தி 16:33) இறைபணியில் தூய ஆவியின்துனை இருப்பதால் துணிவோடு இருப்பது கடவுளின் ஆளுகையை நாம் கொண்டு வருவது அதி நிச்சயமே.
 3ம் நூற்றாண்டிலே, கிறிஸ்தவர்கள் ரோம அரங்கங்களிலே சிங்கங்களுக்கு இரையாக வீசப்பட்ட போதும், மரத்தூண்களிலே கட்டிவைக்கப்பட்டு எரிக்கப்பட்ட போதும், ஆண்டவர் அவர்களை அந்த உபத்திரவங் களிலிருந்து காப்பாற்றவில்லை. ஏனெனில் அவர்களை கோதுமை மணிகளாக கருதினார்."கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 
(யோவான் நற்செய்தி 12:24) எனவேதான் ஆதி கிறித்தவர்களின் 300 ஆண்டு உபத்திரத்தில் ஆண்டவர் அமைதி காத்தார்.
இயேசு நம்மை உபத்திரவங்களிலிருந்து காப்பாற்றுவதைவிட, தீமையினின்று காப்பாற்றுவதிலேதான் மிகவும் ஆர்வமுடையவராயிருக்கிறார். உபத்திர வங்கள்தான் நம்மை ஆவிக்குரிய வலிமையுடையவர்களாய் மாற்றமுடியும். ஆதலால் தேவன் நம்மை உபத்திரவங் களினூடே கடந்து போகப்பண்ணுகிறார்.
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே; பரத்திலிருந்து ஜெயம் வரும். பரன் உன்னைக்காக்கவல்லோர்.
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே என்ற நம்பிக்கை யுமே நம் வாழ்வு.இதற்கு உதாரனம்; சாதாராக், மேசாக், ஆபத்நேகோவின் பற்றுறுதி; "அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். 
(தானியல் 3:17)
18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும்,அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள். 
(தானியல் 3:18)
இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்  இடர்பாடுகள் இனைந்ததே திற்கும் அவருடைய பொறுமைக்கும் உடன்பங்காளனுமாயிருக்கிற" (வெளி 1:9) என்று யோவான் தன்னைப் பற்றி உரைக்கின்றார். என் அன்பின் இறை மக்களே! இடர்பாடுகள் இனைந்ததே இறைபணி.

கடவுளின் ஆளுகைக்காக இடர்களை ஏற்பது காலத்தின் கட்டாயம். It's indispensable to walk in the field of furnace. இதில் நாம் பின்னோக்க கூடாது. இடர்பாடுகளை துனிவோடு ஏற்று கடந்து செல்வதே ஆண்டவர் இவ்வுலகை ஆள 
வழி செய்யும்.
அவ்வாறு செய்ய கடவுள் கிருபை செய்வாராக!. ஆமென்



Prof. Dr. David Arul Paramanandam , Sermon Writer.
www.favidarulblogspot.com
www.favid arul sermon centre.com






Note: Risk is uncertain. So the word Risk shall be replaced with " Suffering" it's Certain. So the topic should be Bearing Suffering for the reign of God is highly suitable is my opinion. Without suffering, the reign of God on this earth is in met.













Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.