குடும்பம் கடவுளின் அருட்கொடை. (104) Family as a Gift of God. யோசுவா:24:14-22, திரு.பா.128; எபேசியர் 3:14-21, மாற்கு 3:31-35. குடும்ப ஞாயிறு 31:12:2023.
முன்னுரை;
"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்"
கிறித்துவின்அன்புகுடும்பங்களே!
நல்ல குடும்பம் கடவுள் வாழும்
இல்லம். குடும்ப வாழ்க்கை கடவுள் தந்த பரிசு. குடும்பம் ஒரு
கோவில். இதில் அன்னையும், பிதாவும் (Father) முன்னேறி தெய் வமாக கருதப்படுகிறார்கள்.
இதைபிள்ளைகள்புரிந்துக்கொள்ள வேண்டும். ஆண்டவர் படைத்த
முதல் குடும்பமே கீழ்படியாமை, ஆசை, தவரான ஆலோசனை
கேட்டதனால் வீழ்ச்சியடைந்து
கொலைகார பிள்ளையை பெற் றார்கள். இது ஒவ்வொறு குடும்ப
த்திற்கும் பாடம், ஒவ்வொறு
குடும்பமும் மொத்தமாக ஆண்ட வரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்குடும்பத்தலைவி குடும்பத்தலைவருக்குகீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் இவைகள் இல்லை என்றால் குடும்பம் எளிதில் சாத்தான் கையில் ஆட்கொள்ள ப்படும்.
குடும்பம் என்ற கோட்பாடு ஆதி மனிதன் காடுகளில் சுற்றித் திரிந் த பொழுது விலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்ப தையும் கண்டு தான் குடும்ப வாழ் க்கையே அமைத்துக்கொண்டான்.
ஆண்டவர் இஸ்ரவேலருக்கு அளி க்கும் தேசத்தில், ஒரு குடும்பம்
எவ்வாறு இருக்கவேண்டும் என்ற
கட்டளையை கருத்தாய் கொடுத் திருக்கிறார்," உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும்நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயை யும் மதித்து நட. "
(விடுதலைப் பயணம் 20:12) இது
வே நம் வாழ்வின் நடைமுறையா
இருக்க வேண்டும்,
சபை பொருப்பாளர்களின் அடிப்படை தகுதி "தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுட னும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?
(1 திமொத்தேயு 3:4,5) குடும்பம் மனித நாகரீகத்தின் கடவுளின் பரிசு.குடும்பத்தை வெற்றியாக நடத்துவது ஒரு கிறிஸ்துவனின் வெற்றியாகும். இதற்கு அடிப்படை கிறிஸ்துவின் அன்பு நம் இல்லத் தில் இருக்க வேண்டும், கிறிஸ்துவே நம் இல்லத்தின் தலைவர், இதை மனதில் வைத் தால் நம்மில் இல்லை துன்பம். இதையேதான் திருவள்ளுவரும்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது."என்கிறார்,
குடும்பம், "நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கும் இடம்," அதை முதுமையிலும் அவர்அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.
(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 22:6) என்கிறார் நீதி அரசர் சாலமோன். குழந்தைகளை
சிறு வயதிலேயே ஆலயத்தின்
நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கு
பெற ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில்
திருச்சபைக்கும், சமுதாயத்திற் கும், குடும்பத்திற்கும் ஏற்ற பிள் ளைகளாய் இருப்பார்கள் என்பது உறுதி.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா "
என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்க இலக்கிய பாடல் வரி, குடும்பங்களில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பு என்பது உணர வேண்டும். கடவுள் குடும்பங்களுக்கு கொடுத்த பரிசு "ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆராதிப்பாயாக என்பதே".இதை
மறக்கவே கூடாது. ஆலயத்திற்கு
குடும்பமாக ஒரு குறிப்பிட்ட இடத்
தில் அமருங்கள் கடவுள் மிக மகி
ழ்ச்சியடைவார்.
1. குடும்பம் கடவுளை சேவிக் கும் இடம். The family is a place of Worship.யோசுவா 24:14-22.
கிறித்துவின்அன்புள்ளம்கொண்ட இறைமக்களே! ஆண்டவர் இஸ்ர
வேலரை எகிப்திய அடிமைத்தனத் திலிருந்து விடுவித்ததை முற்றி லும் மறந்துவிட்டனர், அதனால் யோசுவா அவர்களைப் பார்த்து, பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம் பண்ணுகிற தேசத்துக் குடிகளா கிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? கடவுள் கொடு த்த முதல் கட்டளையான " நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டி னின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (Exodus 20:2,3.)
(விடுதலைப் பயணம் 20:2,3) என்பதை மீறிவிட்டனர். எனவே,
மிக கோபத்துடன் அவர்களை
கேட்கிறார்.யோசுவா இஸ்ரவேல ருக்குச் சவாலிடுகிறார். “யாரை நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையு மாய்ச் சேவித்து, உங்கள் பிதாக் கள் யோர்தான் நதிக்கு அப்புறத் திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்த ரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவி ப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; ஆனால் "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்றார். இந்த வார்த்தை கி.மு
1,300 ல் யோசுவாவின் காலத்தில்
அவரால் பின்பற்றப்பட்ட வார்த் தை. இயேசுவின் காலத்தோடு இன்றைய காலத்தில் 3,300 ஆண்டுகள் ஆகின்றன. இந்த
வார்த்தை ஒவ்வொரு குடும்பங்க
ளிலும் ஒலிக்கப்பட வேண்டிய
உண்ணத வார்த்தை. இந்த வார்த்தை உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த வார்த்தையை தன் குடும் பத்தில் பின்பற்றாத மக்கள் நிச்சயமாக துன்பம், துயரம் அடைவர், பிரிவினைகள் ஏற்படும், கஷ்டங்கள் ஏற்படும், சோதனை கள் ஏற்படும் என்பது உண்மை. குடும்ப நீதிமன்றங்களில் வரும்
வழக்குகளில் 25 வழக்கில் 9 வழக்
குகள் கிறித்தவ விவாகரத்து
வழக்குகள், இது வரதட்சினை,
வன்முறை, Ego என்ற "நான் என்ற"
அகங்காரம், ஒழுக்க கேடும் முக்கிய காரணங்கள், கடவுளின்
பரிசான குடும்பத்தையும், ஆலயத்
தில் திருமணமான அன்று
சபைக்கு முன்பாக கொடுக்கப் பட்ட உறுதிமொழிகள் காற்றில்
பறப்பதையும் கடவுள் வருத்தத்து
டன் அமைதியாக பார்கிறார். கடவுளின் அன்பை மறக்கின்ற பொழுது, மன்னிப்பு சிந்தனை இல்லாத போதும், பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாத போதும். குடும்பம் சிதைந்து போகிறது. இதை மாற்ற ஒரே வழி
குடும்ப ஜெபம், குடும்பமாக ஆலயம் செல்வது, குடும்பமாக
அமர்ந்து உண்பது, ஒன்றாக நிகழ்வுகளுக்குச் செல்லுவதும், மிக அவசியமாகும். நம்மைக் குடும்பமாய் இணைத்தவரை நாம் குடும்பமாக ஆராதிப்போம்,
2. குடும்பம் ஒரு கோவில். Family is a Temple. திருப்பாடல்128.
கிறிஸ்த்துவின் அன்பர்களே!
குடும்பம் ஒரு கோவில் என்றால் அதில் அன்னையும் பிதாவும் தெய்வமாக கருதுவது தமிழர்கள் பண்பாடாகும், சங்கீதக்காரன் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி யில் நடக்கும் குடும்பத்தலைவரே பேறுபெற்றோர் என்கிறார். அவர் ஆண்டவரின் வார்த்தைக்கு அஞ்சி நடக்கும் பொழுதும், ஆண்டவருடைய வார்த்தையின் படி தன் வாழ்க்கையை அமைத் துக் கொள்கின்ற பொழுது அவருடைய மனைவி கனித்தறும் திராட்சை கொடியே போல் இருப் பார், அவருடைய பிள்ளைகள் ஒளியும் மரக்கன்றுகளை போல் இருப்பார்கள் என்ற ஆசீர்வாதம் கடவுள் தருகிறார். குடும்பம் ஒரு கோவில் அது சமூகத்தின் ஒரு விளக்கு. நம் வாழ்வை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும். நல் உதாரணமாக சொல்ல வேண்டும். இதன் மூலம் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறோம்.
தந்தையின் ஆசீர்வாதம் குழந்தை களுக்கு தெய்வீக ஆசீர்வாதமா கும்.ஈசாக் ஏசாவை ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆனால் அந்த ஆசீர்வாதத்தைப் தந்திரமாக பெற்றுக்கொள்ளும்படி ரெபெக்காள் யாக்கோபுக்கு அறிவுரை கூறுகிறாள்.
குடும்பங்கள் ஆசீர்வாதங்களின் இடமாக மாற வேண்டும். ஏனேனில் குடும்பம் ஒரு கோவில், இது யாக்கோபு மட்டுமல்ல, இறுதியில் ஈசாக்கு ஏசாவையும் ஊக்குவிக்கிறார். ஈசாக் ஏசாவை இவ்வாறு ஆசீர்வதிக்கிறார்,
"உன் வாசஸ்தலமானது பூமியின் ஐசுவரியத்துக்கும், மேலே வானத்தின் பனிக்கும் விலகி யிருக்கும். நீங்கள் வாளால் வாழ் வீர்கள், உங்கள் சகோதரருக்கு சேவை செய்வீர்கள். ஆனால் நீங்கள் அமைதியற்றவராக இருக்கும்போது, அவருடைய நுகத்தை உங்கள் கழுத்திலிருந்து தூக்கி எறிவீர்கள். (ஆதியாகமம், தொடக்கநூல்:“ 27: 39, 40). யாக்கோபும் ஆசீர்வதிக்கப்பட்டார். குடும்பங்கள் கடவுளின் ஆசீர் வாதங்களின் இடங்கள். பெற்றோர்களின் ஆசிர்வாதம் பிள்ளைகளுக்கு பெரும் செல்வ மாகும்.
ஒரு குடும்பத்தின் அடையாளம். ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய சித்தத்தைச் செய்பவர்களே,குடும்பம் என்பது எல்லாரும் கூடி வாழும் அமைப்பு ஆகும். அப்பா, அம்மா, மகன், மகள், தாத்தா, பாட்டி எல்லாரும் கூடி வாழ்வது குடும்பம் ஆகும்.
3.குடும்பம் கடவுளின்பரிசு. Family is a gift of God.எபேசியர் 3:14-21.கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தூய பவுல்
அடிகளார் எபேசியருக்கு விண்ணப்பமாக கிறித்துவே திருச்சபையின் தலைவர் என்பதை வலியுறுத்துகிறார். அவ்வாறே விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ் வொரு குடும்பமும் உருவாக காரணமானவர் தந்தை என்பதே வலியுறுத்துகிறார் எனவேதான் குடும்பம் கடவுளின் பரிசாகும் எனவே அவரிடம் மண்டியிடுகி றேன் என உறுதியுடன் கூறுகி றார். "ஆகவே இயேசுவின் பெயரு க்கு விண்ணவர், மண்ணவர், கீழு லகோர் அனைவரும் மண்டியிடு வர்; (பிலிப்பியர் 2:10) இதனால் குடும்பத் தலைவர் தன் குடும்ப த்தில் மண்டியிட்டு விண்ணப்ப த்தை ஏறெடுக்கின்ற போது ஆண் டவரின் நாமம் மகிமைப்படுகிறது. அந்த குடும்பம் தூய ஆவியானாவ ரால் வழிநடத்தப்படுகிறது, ஆசீர் வதிக்கப்படுகிறது.ஆண்டவர் மீது
வைத்துள்ள நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து நம் இல்லங் களிலும், உள்ளங்களில் குடி கொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித் தளமுமாய் அமைவதாக! என
பவுல் அடிகளார் முழங்காலில் நின்று விண்ணப்பத்தின் மகிமை யை குடும்பமாக இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! என குடும்பங்கள்
திருச்சபையின் அங்கங்களாக
செயல்பட அழைக்கின்றார்.
4.குடும்பம் கடவுளின் அருட் கொடை. Family as a Gift of God.
மாற்கு 3:31-35.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! குடும்பம் கடவுளின் அருட்கொடை. இந்த தலைப்பில் ஆண்டவருடைய குடும்பம் எப்படிப் பட்டது என்பதை நாம் சிந்திப் போம்.ஆண்டவர் தன்னுடைய
12 வயதில் வழக்கப்படி பாஸ்கா விழாவைக் கொண்டாட குடும்பத் தினருடன் எருசலேம்சென்றனர்.
விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர்இருப்பார்என்றுஎண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுக மானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருச லேமுக்குத்திரும்பிச்சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டா ர்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே" என்றார்.
அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். இதன் பிறகு 18 ஆண்டு களுக்குப் பிறகு ஆண்டவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் இயேசுவை தேடி வருகிறார்கள். அவரைப் பார்க்க விரும்புகிறார் கள். ஏனெனில் தன் 30 வயதில் அவர் விட்டு விட்டு வெளியேறி கடவுளின் ஊழியத்தை செய்து வருகிறார். இந்நிலையில் தாயும் சகோதரர்களும் அவரை பார்க்க விரும்புவது அன்பின், பாசம்தான்.
ஆண்டவர் தன் 30 வயது வரையி லும் அவருடைய குடும்பத்திற்கு உழைத்து தன் தந்தையின் தச்சு தொழில் செய்து, காப்பாற்றி வந்தார்.அவருடைய தந்தையார் மறைந்துவிட்டார். குடும்ப பொருப் பு ஆண்டவர் மீது விழுந்தது. தன் குடும்பத்தை அவர் அன்போடும், பாசத்தோடும் வளர்த்தார். பாதுகாத்துக் கொண்டார். தன் தாயின் தேவைகளை சந்தித்தார்.
தன் தாய் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
அதற்கு ஒரே உதாரணம் 12 வயதிலேயே தேவாலயத்திற்கு
சென்று தங்கிவிட்டார்,3 நாட்கள்
இருந்தார், அவர்கள் அவரை விட்டுவிட வில்லை. தேடி வந்தார். அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். பின்பு அவர் அவர்களு டன் சென்று நாசரேத்தைஅடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந் தார்.அவருடையதாய்இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமதுஉள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும்உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனித ருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். ( லூக்கா2:49-52). கிறிஸ்துவ பிள்ளைகள் ஆண்ட வரைப் போல பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
ஆண்டவரின் தாயும், நான்கு
சகோதரர்களும், சகோதிரிகளும்
மீண்டும் ஆண்டவரை வீட்டிற்கு
அழைத்து செல்ல வந்தனர், ஏன் எ
னில் அவர் மேசியா என அவர்
சகோதரர்கள் நம்பவில்லை,
"ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை".
(யோவான் நற்செய்தி 7:5) ஆனால்
தாய் மரியாள் ஆண்டவர் தேவ
குமாரர் என்ற நம்பிக்கை உடைய வராய் இருந்தார். அதனால் தான் கானாவூர் திருமணத்தில் முதல் அற்புதத்தை செய்ய தூண்டியவர் அன்னை மரியாளே ஆகும் .
ஆண்டவரின் வார்த்தையை கேட்டு அதன்படி நடக்கிற அவர்களே ஆண்டவரின் தாயின் சகோதரர்களும் ஆவார் நாம் குடும்பமாக ஆண்டவரை ஆராதிப்போமாக குடும்பம் ஆண்டவர் தந்த பரிசு அவரும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் நம் இல்லத்தின் தலைவர் இயேசு என்ற எண்ணத்திலும் நம்பிக்கையிலும் வாழ்ந்திட வேண்டுகிறேன் "தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 3:34,35)
ஆண்டவர் நம் இல்ல கதவை தட்டுகிறார் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பங்கு பெற விரும்புகிறார். நம் இல்லத்தில் என்றும் சந்தோஷம், மகிழ்ச்சி, அமைதி நிலவிட ஆண்டவர் கிருபை செய்வாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.david Arul blogspot.com
www.david Arul Sermon centre.com.
Message to be delivered at St.Peter's
Chengalpattu on 31/12/2023. The Last
Sunday.
Comments
Post a Comment