களிமண் பாண்டத்தில் உள்ள செல்வம் (பொக்கிசம்) (95)TREASURES IN CLAY JARS. மீக்கா 6:1-8. திரு. பாடல்: 106:1-12. 2 கொரி.4: 7-15.மாற்கு 4:26-29.

முன்னுரை:
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ் துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இவ்வாரம் நாம் தியானிக்க இருக்கின்ற தலைப்பு "களிமண் பாண்டத்தில் உள்ள செல்வம்" "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்"(தொடக்கநூல் 1:1) ஆண்டவர் மண்ணுலகை படைக்கும் போது பல வகை மண்ணினங்களை உயிரனங்கள் வாழ்வுக்கேற்றவாறு படைத்தார். தமிழர்கள் நிலத்தை
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று பிரித்தனர், இவற்றில் வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் என பிரித்தனர்.  இந்த நிலம் தான் களிமண் இருக்கும் பகுதி. 
"கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். (Creation) (தொடக்க நூல் 1:25); ஆண்டவர் விலங்கினங் களையும் மண்ணின் மூலமாகவே அவைகளை உருவமுடைய தாகச்செய்தார். "ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவை களையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. (தொடக்கநூல் 2:19) மண் இல்லையேல் உயிர்கள் இல்லை. உலகம் இல்லை.
 கடவுள், "மானிடரை தம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். ( Making)  என்றார். தொடக்கநூல் 1:26
நிலத்தின் மண்ணால் கடவுள்மனிதனை தன் கைகளால் படைத்தார். தன் உயிர் மூச்சை அவனுக்கு கொடுத்தார். அதுவே ஆன்மாவாகும். இது அழிவில்லாதது.
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. மனிதன் மண்ணில் தோன்றியபடியால் மண்ணில் விளைகின்ற காய்கனிகள் தானியங்கள் அவனுக்கு உணவாக பயன்படுகிறது. அவனுடைய இறுதி வாழ்வும் மண்ணிற்கே திரும்புகிறது. தூய பவுல் அடிகளார்; 
 "இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்க ளில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறி வொளியே. (2 கொரிந்தியர் 4:6) என்கிறார்.
"இந்தச் அறிவொளி செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். We are the clay Jars. இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. (2 கொரி ந்தியர் 4:7) இதில் பெருமை பாராட்ட எங்களிடம் ஒன்றுமில்லை.
" நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. (1 கொரிந்தியர் 3:7) என  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவும் ஆற்றலும் வல்லமையும் கடவுளுக்கே உரியது என விளக்குகிறார். தன்னை களிமண்ணால் ஆன மட்பாண்ட செல்வ மாய் இருக்கிறோம் என கூறுகிறார்.
2.இஸ்ரயேல்  மீது ஆண்டவரின் வழக்கு: The LORD's Case Against Israel:
மீக்கா தீர்க்கர் சின்ன இறைவாக்கினர் களின் பட்டியலில் வருகிறார். கி.மு.735- களில் இறைவாக்கு உரைத்தவர். சமாதானம்.நகரமாகிய எருசலேமை   படைகளின் நகரம்" என அழைத்தார். அது நூற்றுக்கு நூறு 2700 ஆண்டுகளுக் குப் பிறகும் அவரின் தீர்க்கதரிசனம்  உண்மையாக இருக்கிறது. இஸ்ரவேல் பாலஸ்தீன சண்டை அதை உணர்த்து கிறது. தீர்க்கர்களிலே செல்வந்தரும் அரச குடும்பத்திலிருந்து வந்த ஏசாயா தீர்க்கரும் இவர் காலத்தவர்.  மீக்காவோ, ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அடக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்தின் பிரதிநிதி. எருசலேமுக்கு தென்மேற்கே அமைந்த செழுமையான சமவெளியில் உள்ள மொரேசா என்ற கிராமத்தைச் சேர்ந்த மீகா ஒரு நாட்டுப்புற தீர்க்கதரிசி. இறைமகன் இயேசுவின் பிறப்பை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரி சனமாய்க் கூறி விவிலியத்தின் மிக முக்கிய இறை வாக்கினராய் மாறியவர்.
“எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறிய தாய் இருக்கின்றாய். ஆயினும், இஸ்ர யேலை என் சார்பாக ஆளப்போகின்றவ ர் உன்னிடமிருந்தே புறப்பட்டு  என்னிடத் தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகியபூர்வத்தினுடையது. (மீக்கா 5:2) என தீர்க்க தரிசனமாக கூறியவர்.
இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக ஆண்டவர்  வழக்காடுவதாக தீர்க்கர் கூறுகிறார்.மலைகளளும், குன்றுகளும் மண்ணுலகின் நிலையான அடித்தள ங்கள் நீங்களே  ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்க ளோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ர யேலோடு அவர் வாதாடப் போகின்றார்.  ஏனேனில்; இவர்கள் சிலைவழிபாடு, வஞ்சனை, திருடுதல், பேராசை, பாலியல் தவறுகள், அடக்குமுறை, கபடம், அநியாயம், கொள்ளையடித்தல், பொய் உரைத்தல், கொலை செய்தல், நன்றி மறத்தல் போன்ற பாவங்களை செய்தனர். 
என் மக்களே, நான் உங்களுக்கு என்ன குறை செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு பதில் கூறுங்கள். அடிமைத்தனமாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை மறந்து போனிர்கள். உங்கள் குற்றத்திற்காக
என்ன பலிகளை கொண்டுவருவீர்கள்? என தன் வழக்கை மலைகளைப் பார்த்து தொடுக்கிறார். அவருடைய செய்தியின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். “பாவத்தை விட்டு விலகி கடவுளிடம் வாருங்கள்”.நேர்மையைக் கடைப்பிடித் தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத் தையும் உன் கடவுளுக்கு முன்பாக
தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர்உன்னிடம் கேட்கின்றார் எனும் அழைப்பே மீக்கா நூலின் வாயிலாக நமக்கு தருகிறார். 
களிமண் பாண்டத்தில் உள்ள செல்வம் என்ற தலைப்பு தீர்க்கருக்கு எப்படி பொருத்தம் ஆகிறது என்றால் உலக      இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாக  மிகச் சரியாக தீர்க்கமாய் முன்னுரித்தார். எருசலேமை படைகளின் நகரம் என்றார். எனவே தான் அவர் களிமண் பாண்டத்தில் உள்ள செல்வமாக கருதப் படுகிறார்.
2.களிமண் பாண்டத்தில் உள்ள செல்வம்: Treasures in Clay Jars.2.கொரிந்தியர் 4:7-15.
கிறிஸ்துவுக்குள் பிரிய மாணவர்களே! பவுளடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தில் தங்களை களிமண் பாண்டத்தில் உள்ள செல்வம் என விவரிக்கிறார். காரணம் களிமண் பாத்திரங்கள் எளிதில் உடைய கூடிய வை. அவ்வாறான எங்களை மகாகனம் உள்ள அவருடைய ஊழியத்தை செய்யும்படியாக கிருபையினாலே எங்களை தெரிந்து கொண்டார். பாவி களில் தன்னை பிரதான பாவி என
கருதினார். கிறித்தவர்களை துன்புறுத் திய குற்ற உணர்வு அவரை வாட்டியது ஆனாலும் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்ட  கருவியானார்.
 அதற்கு ஆண்டவர் அனனியாவிடம், "நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். (திருத்தூதர் பணிகள் 9:15) என பவுல் அடிகளாரை ஆண்டவர் உறுதி படுத்துகிறார்.
"இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங் களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே. 
(2 கொரிந்தியர் 4:6) கடவுளின் மாட்சி யான அறிவொளியாகிய செல்வத்தை   கடவுள்  மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். என பவுல் அடிகளார் இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்குகே உரியது என்பதை இங்கு விளக்குகிறார்.(2 கொரிந்தியர் 4:7) மற்றும் தன்னை தாழ்த்துகிறார். எனவே தகுதியற்ற எங்களை அவரின் திருப்பணிக்கு அழைத்ததால் நாங்கள் மண் பாண்டங்களின் செல்வம் என கருதுகிறோமே தவிர ஆண்டவரின் திருப்பணியில் நாங்கள் எங்களை பெருமைப்படுத்தி கொள்ளவும் உயர்த்திக் கொள்ளவும் தகுதியற்ற வர்கள். "பெருமைபாராட்ட விரும்புகிற வர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்." (2 கொரிந்தியர் 10:17) என கூறுகிறார். 
 நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச் சினார்; கடவுளே விளையச் செய்தார். 
 நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. (1 கொரிந்தியர் 3:6,7) கிறிஸ்துவ பற்றிய அறிவே எங்கள் செல்வம் நாங்கள் வெறும் மண் பாண்டங்கள். கடவுளின் கரங்களினால் செய்யப்பட்டவர்கள்  என பவுலடிகளார் வலியுறுத்துகிறார். எங்கள் செல்வமே (Treasure)ஆண்டவர் அளித்த பரிசு.
கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கி றோம். (2 கொரிந்தியர் 4:1) நாங்கள் உடைந்து போகும் மண் பாண்டங்கள் ஆண்டவரின் இரக்கம், கிருபை, வல்லமை இல்லாமல் திருப்பணியை எங்களால் செய்யவே முடியாது எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆண்டவரின் அறிவு அதுதான் மண் பாண்டத்தின் செல்வமாக இருக்கிறது. எங்களுக்கு இந்த உலக அறிவுக்கும் கடவுளை அறியும் அறிவிற்கும் உள்ள வேறுபாட்டை எங்களுக்கு கொடுத்திருக் கிறார். இந்த அறிவு எங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட நல்ல பொக்கிஷமாகும்..
3. இறையரசே  ஒப்பற்ற செல்வம்;
 The Kingdom of God is the inseparable Treasure. மாற்கு 4: 26:39
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இறையரசே ஒப்பற்ற செல்வம் ஏனேனில் இறையரசு ஒரு விதைக்கு ஒப்பாக இருக்கிறது. இறையரசு ஆரவரம் அற்றது. விதைக்கிரவனுக்கே தெரியாது அது எப்படி முளைக்கிறது வளர்கிறது கனி தருகிறது என.
மனுஷன் நிலத்தில் விதையை விதைக் கிறான். விதைத்த பின்பு விதையை பார்க்கமுடியாது. அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அது மண்ணுக்குள் காணாமல் போனதுபோல மறைந்து கொள்ளும். விதை மண்ணுக்குள் இருந்தாலும் அது மரித்துப் போக வில்லை. ஜீவனோடிருக்கிறது. தான் வளருவதற்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் விதை அந்த மண்ணு க்குள்ளே பெற்றுக்கொண்டு வளர் கிறது. மண் மிக முக்கியமானது. மண்ணில் நல்ல மண் கெட்ட மண் என இருக்கிறது. மனிதர்கள் கூட நல்லவ ர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடத்தில் விதையாக வசனங்கள் உள்ளத்தில் விதைக்கின்ற போது நல்ல மனுஷன் நல்ல விதையாக மாறுகி றான்.நல்ல கனி தருகிறான்.
விதைக்கப்பட்ட விதைகளெல்லாம் வளரும்போது நிலத்தை பார்ப்பதற்கே பசுமையாக இருக்கும். இது எப்படி வளருகிறது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். விதைக்கப்பட்ட விதை அமை தியாக செயல்படும். ஒரு நற்செய்தி யாளர் தன்னுடைய சுயபலத்தினால் எந்த ஒரு மனிதனையும் ஆன்மீகத்தில் மாற்ற முடியாது.  ஆண்டவர் கிரியை செய்தாலொழிய ஒருவனை தன் பால் ஏற்றுக் கொள்ள முடியும். இறுதியாகிய வசனம் அவன் உள்ளத்தில் சிறுக சிறுக கிரியை செய்கிறது. அது வளர்ந்து அவனை இறையரசிற்கு தகுதிப்படுத் துகிறது.விதைக்கப்பட்ட வசனமானது மனித னுடைய உள்ளத்தில் எப்படி கிரியை செய்கிறது என்பதை அவனுடைய விசுவாசமே உறுதி செய்கிறது என்பதை காலம்தான் நிர்ணயிக்கிறது. இறையரசுவளர்ந்துக் கொண்டே இருக்கும்; உலகத்தின் இறுதி வரை. துன்பங்கள், இடையூறுகள், அடக்குமுறைகள் வந்தாலும் இறையரசு இவ்வுலகில்  வந்தே ஆகும். அது விதையாக ஆரம்பித்து வளர்ந்து மரமாகி கனித்தருகின்ற வேளையில் அறுவடைக்கு தயாராகின்ற சூழ்நிலை யில் எப்படி மாறுகிறதோ அப்படியே இறையரசும் வளர்ந்து இவ்வுலகை நிரப்பும். உன் அரசு இவ்வுலகில் வருவ தாக என்ற வார்த்தை உண்மையில் நிறைவேறும் விதைக்கின்றவர்கள் அதிகமாவார்கள். அறுவடையும் அதிகமாகும். ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார். 
(தொடக்கநூல் 26:12). ஆண்டவரே ஈசாக்கு போல நாங்கள் இவ்வுலகில் உம்முடைய வசனம் ஆகிய விதைகளை விதைக்க எங்களுக்கு உதவி புரியும் உம்முடைய அரசு இவ்வுலகில் விரைவில் வர எங்களால் மட்டுமே முடிய வழிகாட்டும் ஆமென்.

Prof. Dr. David ArulParamanandam. Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www. david Arul blogspot.com









 


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.