கிறித்துவின் வருகைக்காக அர்ப்பணிப்புடன் எதிர்பார்த்திருத் தல் ,(98)JOYFUL EXPECTATION OF CHRIST'S COMING.எரேமியா 33:10-16, திரு.பா,68:11-20. 1 தெச : 3: 6-13, லூக்கா :1:39-45. (03:12:2023)

முன்னுரை:
கிறித்துவின் அன்பு ஆண்டவரின் அன்பர்களே! உங்க அனைவருக் கும் இயேசு கிறித்துவின் இனிய
நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் சிந்திக்கின்ற தலைப்பு  "கிறித்துவின் வருகைக்காக அர்ப்பணிப்புடன் எதிர்பார்த் திருத்தல்" . ஆண்டவர் இவ்வுல கிற்கு வந்து 2000 ஆண்டுகள் கடந்து விட்டன. கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயார் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக் காலம் பழைய கிறித்தவ வழக் கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கம் ஆகும். கிறித்தவர்களுக்குத் திருவரு கைக் காலம் என்பது, வரலாற்றில் மனிதராகப் பிறந்த கடவுளின் மகனாகிய இயேசுவின் முதல் வருகையை சிறப்பிக்கவும், உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரவிருக்கின்ற இரண்டாம் வரு கையை எதிர்நோக்கவும் தம்மை  தயார்படுத்தி , தகுதிபடுத்தும் காலமாக அமைந்துள்ளது. திருவருகை காலத்தில் ஆண்ட வரின் வருகையை எதிர்பார்க்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இயேசுவின் வருகை யில் மகிழ்ச்சியையும், அவர் உலகிற்கு கொண்டு வந்த அமை. தியையும் பெறுகின்றனர். எனவே, இது சமாதான பிரபுவின் அமைதியின் காலம் ஆகும். இயேசு கிறிஸ்து என்ற நாமம் இவ்வுலகில் வல்லமையாய் விதைக்கப்பட்டு விட்டது.  இயேசு என்ற நாமத்தை அறியாத மக்கள் இல்லை அந்த அளவிற்கு அவர் இந்த உலகத்தில் வந்த நோக்கம் நிறை வேறி இருக்கிறது. இது பெரும்பாலும் காலனி ஆதிக்கத் தினால் ஏற்பட்டது.ஆனால் அவற் றை முற்றிலமாக நிறைவேற்ற இயலாமல் அவரின் கொள்கை களை நடைமுறை படுத்தாமல் இருக்கின்றோம். ஆண்டவரின் வருகையை மகிழ்வுடன் எதிர் பார்ப்பது  ஒவ்வொறு கிறித்த வனின் தலையாய கடமை.
1 கி.மு 626 கி.பி 2023 அன்றும் இன்றும் எரேமியா. 33:10-16. Jeremiah now and then B.C 626 and AD 2023. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! எரேமியா வின்  காலத்திற்கும்,  தற்காலத் திற்கும்   இடையே ஆன பாலஸ்தீன மற்றும் இஸ்ர வேல் நாடுகளின் ஒப்பிடையாக நாம் பார்க்கலாம். அவருடைய தீர்க்க தரிசனம் இக்கால கட்டத் திலும் சரியாகப் பொருந்துகிறது.
எரேமியா அனதோத் கிராமத் தில் பென்யமின் நாட்டிலிருந்த பாதிரியார் இல்க்கியாவின் மகன். இவரை அழும் தீர்க்கதரிசி" என்று குறிப்பிடுவர்.  இவரின் காலம் கிமு 626. எரேமியா
காவல்கூடத்தில்  இன்னும் அடை பட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவரு க்கு அருளப்பட்டது: உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் மக்களின் பாவங்களையும் வரவி ருக்கும் தண்டனையையும் வெளி ப்படுத்த எரேமியா நியமிக்கப்பட்ட தாகக்கூறப்படுகிறது. வடக்கிலி ருந்து படையெடுப்பாளர்களால் ஜெருசலேமின் வரவிருக்கும் அழிவை  அறிவிக்க  கடவுளால்   
தேர்வு செய்யப்பட்டவர் எரேமியா. பாகாலின் சிலைகளை வணங்கு வதன் மூலமும் , பாகாலுக்கு காணிக்கையாக தங்கள் குழந்தை களை எரிப்பதன் மூலமும்  கடவு ளை  கைவிட்டதே இதற்குக் காரணம்.இஸ்ரவேலர் தற்போது நடக்கும் போரில் 5000 மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகளை கொன்றுவிட்டனர்.  தீர்க்கரின் காலத்தில் தேசம் கடவுளின் சட்டங்களிலிருந்து வெகுதூரம் விலகியதால், அவர்கள் உடன் படிக்கையை மீறினார்கள், இதனா ல் கடவுள் தனது ஆசீர்வாதங் களை திரும்பப் பெற்றார். இஸ்ர வேலர் சர்வதேச சட்டங்களையும், ஐ.நா, யுனிசெப், மனித உரிமை கள் ஆணையம் எவற்றையும் மதிப்பதில்லை (2023 )என்பதும், மனித உரிமைகளை மீறுவது, யூதா தேசம் பஞ்சம், வெளிநாட்டு போர், கொள்ளை மற்றும் அந்நியர்களின் தேசத்தில் சிறை பிடிக்கப்படுவர்   என்று எச்சரி த்தார்.(623) கடவுளால் எரேமியா வழிநடத்தப் பட்டார். சுமார் 240 இஸ்ரவேலர் பாலஸ்தீன ஹமாஸ் படையினரால் சிறைபிடிக்கப் பட்டனர்.(2023) ஆண்டவர் இவ் வாறு கூறுகிறார்: ‘ஆளரவமற்ற பாழ்நிலம்’ என நீங்கள் அழைக் கும் இவ்விடத்தில் — மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும். (623). தற்சமயம் நடக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தத்தில் வீடுகள், மருத்துவமனைகள், முகாம்கள் தரைமட்ட மாக்கப்பட்டன. கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பாலை நிலமாக காட்சியளிக்கின்றன.(2023). தண்ணீர், உணவு, எரி பொருள், மருத்துவ உதவி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் ஆண்டவர் ஒரு நம்பிக்கையான வாக்குத் தத்தை தீர்க்கர்மூலமாக இஸ்ரேல் மக்களுக்கு கொடுக்கிறார்,
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; மனிதனோ, விலங் கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடை யர் தம் மந்தைகளை இளைப்பாற் றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும். இதோ, நாள்கள் வரு கின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாரு க்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய் வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். என சமாதான பிரபுவாக ஏசுவின் வருகையை முன்னறிவிக்கின் றார், அந்நாள்களில் யூதா விடுத லை பெறும்; எருசலேம் பாதுகாப் புடன் வாழும். என்ற தீர்க்க தரிச னம் எப்போது நிறைவேறும்? என்ற கேள்விக்கு இஸ்ரவேலரும் பாலஸ்தீனர்களும் அன்பின் ஆண்டவரை உள்ளளவும் ஏற்கின்ற நாட்களில்தான் இந்த தீர்க்கதரிசனம் நிறை வேறும்.

2 ஆண்டவர் வருகிறார் தூய்மையாய் இருங்கள்.Lord comes, be holy.1 தெசலோனிக்கர் 3:6-13. கிறிஸ்துவுக்குள்  பிரிய மானவர்களே! தெசலோனிக்கே பட்டணம் பழங்காலத்தில் மக்கெ தோனியா தேசத்தில் பிரசித்தி பெற்று  விளங்கிற்று. திருதூதர் பவுலுக்கு ஆண்டவரால் மக்கெ தோனியாவிற்கு சென்று நற் செய்திபணி செய்யுமாறு விசேஷித்த அழைப்பு உண்டா யிற்று (அப் 16:9,10).  அதன்படி பவுலின் ஊழியம் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. ஆனால் அங்குள்ள அத்தேனே பட்டணத்தின் ஒவ்வொரு தெரு விலும் விக்கிரங்கள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டன. விக் கிரகக் கடவுள்களின் கோயில்கள் ஒவ்வொரு முக்கியப்பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன.“அத்தேனியர்கள் தங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி விக்கிரகக் கடவுள்களை வணங்கினார்கள்”  . உலகத்திலேயே மிகவும் அதிக மான கற்றறிந்த வல்லுனர்களை யும், நாகரிகமுள்ளவர்களையும், தத்துவஞானிகளையும், கலை மற்றும் அறிவியலில் சிறந்தவர் களையும் அத்தேனே பட்டணம் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் சமயரீதியாக பாத்தால் அதன் நிலை என்ன? சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவஞானி களின் பட்டணம். இந்நிலையில், தெசலோனிக்கிய மக்களைப் பற்றி பவுல் அடிகளார்;" நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டு விட்டு, உண்மையான, வாழு ம் கடவுளுக்கு ஊழியம் புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். (1 தெசலோனிக்கர் 1:9) என பாராட்டுகிறார்."தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பேதள்ளிவிடமாட்டேன். (யோவான் நற்செய்தி 6:37) என ஆண்டவர் அழைக்கிறார். தெசலோனிக்கியாவிலிருந்து  திரும்பிய  திமொத்தேயு உங்களிடமிருந்து  உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்திசொன்னார். நாங்கள் உங்களைக் காண ஏங்கு வதுபோல நீங்களும் எங்களைக் காண விழைவதாகவும், எப்பொழு தும் எங்களை அன்போடு நினைவு கூறுவதாகவும் அறிவித்தார். ஒரு திருச்சபை மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இம் மக்களே உதாரணமாக இருக்கி றார்கள், இவர்களின் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் இவர்க ளது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம் என பவுல் அடிக ளார் பாராட்டுகிறார்.(1தெசலோ னிக்கர் 3:6,7) இறுதியில், அவர்நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுஉறுதி ப்படுத்துவாராக என நம்மை தூய்மையாக இருக்க அழைக்கி ன்றார், "தூய்மையான உள்ளத் தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு நற்செய்தி 5:8) என்கிறார் ஆண்டவர்.  கிறித்துவின் வருகை க்காக அர்ப்பணிப்புடன் எதிர் பார்த்திருக்கும் நாம் தூய உள்ளத் தோடு இருப்போம்.

3. கிறித்து வருகிறார் வாழ்த் துங்கள். Jesus comes, greet. லூக்கா :1:39-45.கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்த வர்களின் அடிப்படை பழக்கங் களில் ஒன்று, ஒருவரை ஒருவர் வாழ்த்துதள் ஆகும்.வாழ்த்துக்கள் வலிமையானவைகள். அன்பை உறுதிப்படுத்தும், ஆண்டவரை வெளிப்படுத்தும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது தனது உறவினராகிய எலிசபத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியா அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்திருந்தார். எலிசபெத்தும் சகரியாவும் பரிசுத்த ஜனங்களா யினர் : "இருவரும் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கப்பட்டு, கர்த்தருடைய கற்பனைகளை யெல்லாம் கைக்கொண்டார்கள்; (லூக்கா 1.6) சகரியா ஆசாரியனா யிருந்தான் என்று பார்க்கிறோம். வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" எனறு வாழ்த்து கிறார்  இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதனால் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியா செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த் தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ் ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந் ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ' என மரியாவை வாழ்த்தினார். 

லூக்கா ஆண்டவருடைய உறவினர்களைப் பற்றி முதல் அதிகாரத்தில் 5ஆம் வசனத்தில் அறிமுகப்படுத்துகிறார். “யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து”. சகரியாவின் வாழ்க்கையிலே, அவன் எதிர் பார்த்திராத ஒரு வேளையிலே, தேவன் குறுக்கிட்டார். பெரும் திட்டங்களை சாதிப்பதற்காக தேவன் இந்த நாட்களிலும் சாதா ரண மனிதர்களின் வாழ்க்கை யிலே அவர் பங்கு பெருகிறார் .சகரியா தேவனுடைய கற்பனை களின்படி வாழ்ந்தான். தேவனு க்கு முன்பாக குற்றமற்றவர்களாய் அவனும், அவன் மனைவியும் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய், வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே அவர்களுடைய வாழ்க்கையிலே ஒரு பெரும் குறைவு இருந்தது. லூக்கா 1:7 இல் அதைப் பார்க் கிறோம். “எலிசபெத்து மலடியா யிருந்தபடியினால், அவர்களுக் குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களா யும் இருந்தார்கள்”. பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை இனி அவர்களுக்குக் கிடையாது. ஏன் என்றால் அந்த வயதைத் தாண்டி விட்டார்கள் அந்த நாட்களிலே இஸ்ரவேல் மக்கள் நடுவிலே ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை யென்றால் கடவுளின் சாபம் அல்லது அவர்கள் கடவுளை துக்கப்படுத்திவிட்டார்கள் என்றெ ல்லாம் பலவிதமாக அவர்களைத் தூற்றுவார்கள். பழித்துப் பேசு வார்கள். ஒருவேளை எலிசபெத் தைப் பற்றியும், சகரியாவைப் பற்றியும் மற்றவர்கள் இவ்வித மான வசைச் சொற்களையெல் லாம் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் நீதி மான்களாய் நடந் தார்கள் என்று தேவன் கூறுகி றார்.அவன் தன் ஆசாரிய வகுப் பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின் படி அவன் தேவா லயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்”. சுமார் 24,000 ஆசாரிய ர்கள், 24 பகுதிகளாக பிரிக்கப் பட்டு ஒவ்வொரு பகுதியும் தேவா லயத்திலே ஊழியம் செய்வது உண்டு.  அந்த சிலாக்கியம் இப் போது சகரியாவுக்குக் கிடைத் திருந்தது. தனது ஊழியத்தின் கடமையைப் பொறுப்பாய் நிறை வேற்றிக் கொண்டிருக்கும் வேளையிலே தேவன் அவனைச் சந்திக்கிறார்.

தேவதூதன் முன்னறிவித்தபடியே எலிசபெத் கருவுற்றாள். இவள் கர்ப்பமாக இருந்தபோது, இயேசு வின் எதிர்பார்ப்புமிக்க தாய் மரியாள் அவளை சந்தித்தார். வாழ்த்தினார்  எலிசபெத்தின் வயிற்றில் குழந்தை மரியாவின் வாழ்த்துதல் குரலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது. துள்ளி குதித் தது.   அந்தச் சமயத்தில் சகரியா வின் பேச்சு வலிமையடைந்தது. அவருடைய இரக்கத்திற்கும் நற்குணத்திற்கும் கடவுளை அவர் புகழ்ந்தார். சகரியா, எலிசபெத், ஆண்டவரின் தாய் மரியாள் கிறித்துவின் வருகைக்காக அர்ப் பணிப்புடன்எதிர்பார்த்திருந்தனர். கிறிஸ்துவுக்குள்பிரியமானவர் களே! ஆண்டவருடைய தூதர் காபிரியேல் அவர்கள் மரியாளை முதல் முதலில் சந்திக்கின்ற போது வாழ்த்துகிறார், வாழ்த்து தல் இறைவனின் வார்த்தை, உள் ளத்தின் வார்த்தை. நம் வாயிலி ருந்து வாழ்த்துதல் என்ற வார்த் தையை தவிர சபித்தல் என்ற வார்த்தை வரவே கூடாது, 'வான தூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். (லூக்கா நற்செய்தி 1:28) வாழ்த்துதல் விண்ணக செய்தி." வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட் டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.  "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தனர். (லூக்கா நற்செய்தி 2:12-14) வாழ்த்துங்கள் வளர்வீர்கள்.ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாவோம். வாழ்த்துவோம் அனைவரையும். கடவுள் உங்க ளுக்கு கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்க ளையும்  தருவாராக ஆமென்.

Prof. Dr. David Arul paramanandam Sermon Writer. www.davidarulblogspot.com,  www.David Arul Sermon centre. com.


எலிசபெத்



Elizabeth (left) visited by Mary in the Visitation, by hilippe de Champaigne.













Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.