நம் வழிக்கு ஒளியாகும் இறைத் திருமொழி.(99) Birth of John the Baptist. ஏசாயா: 55: 6-13, திரு,பா. 119:105-112, கலாத்தியர்,1:11-17, லூக்கா: 1:67-80. Advent Sunday 10.12.2023.
முன்னுரை:
கிறித்துவின் அன்பர்களே! உங்க
அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்து கள். இவ்வாரத்தின் இயேசுவின்
வருகையை தழுவிய தலைப்பு
"நம் வழிக்கு ஒளியாகும் இறைத் திருமொழி" உலகிலேயே தாய் வழி உறவு தான் மிகவும் வலிமை வாய்ந்த
உறவு, அன்பின் அடிப்படையாக
கொண்ட நல் உறவு. ஆண்டவரின்
பெரியம்மாதான் திருமுழுக்கு யோவானின் தாய், ஆண்டவரின்
முதல் நண்பரும், இளம் வயது
விளையாட்டு நண்பரே இவர் தான், அன்புள்ள அண்ணன். அன்பான வழிகாட்டி. ஆண்டவரை
கட்டி அனைத்து தூக்கிவிளையாடி இருப்பார்.புனித திருமுழுக்கு யோவான் (John the Baptist) காலம், கி.மு. 6 - கி.பி. 28) என்பவர் கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும், கிறித் துவ சமயத்தில் முக்கிய நபரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர்,( லூக்கா 1:36) யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.எனவே மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவ ரைப் பிரித்து அடையாளப்படுத் தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. வேதத் தில் மொத்தம் 10 யோவான்கள், அவற்றில் புதிய ஏற்பாட்டில் 5 பேர். எனவே, இவரை வேறுபடு த்தி காட்டவே திருமுழுக்கு யோவா
ன் என குறிப்பிடப்படுகிறார்.
இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின் றனர். தோல் கச்சையை இடை யில் கட்டியிருந்தார்; வெட்டுக் கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.(மாற்கு 1:4-6)பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார்.( லூக்கா 1:76,77).
இவருடைய சீடர்களில் ஒருவர் தான், சீமோன் பேதுருவின் சகோதரர் அந்திரேயா, ஆண்ட வரின் முதல் சீடனாவார்.
இவர் கடவுளால் அனுப்பட்டவர்.
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந் தார்; அவர் பெயர் யோவான்.
(யோவான் நற்செய்தி 1:6)
.இயேசுவை முன்னறிவித்தல்:
பரிசேயரும் சதுசேயர்களும் கிறிஸ்துவின் காலத்தில் யூத மதத்திற்குள் இரு பெரும் மதப் பிரிவுகளாக இருந்தனர். பண் டைய இஸ்ரவேலின் 70 உறுப்பி னர்களைக் கொண்ட உச்ச நீதி மன்றமான சனகெரிப் சங்கம், சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் இருவரையும் உள்ளடக்கியதாக இருந்தது.பரிசேயர்கள் உயிர்த் தெழுதலில் நம்பிக்கை வைத் தார்கள், ஆனால், இறந்தவர்களி ன் உயிர்த்தெழுதல் குறித்த நம் பிக்கையை சது சேயர்கள் நிராகரி த்தனர் (மத்தேயு 22:23; மாற்கு 12: 18-27) இத்தகைய பரிசேயர், சது சேயருள் பலர் தம்மிடம் திருமு ழுக்குப் பெற வருவதைக் கண்டு யோவான் அவர்களை நோக்கி, "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற் கேற்ற செயல்களால் காட்டுங் கள். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னை விட வலிமை மிக்கவர். அவரு டைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில் லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திரு முழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமை யைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.( மத்தேயு 3:7,8., 11,12)
ஆண்டவரின் அறிவிப்பு:
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில் லை" (லூக்கா 7:28) என்று இயேசுவே இவரை புகழ்கிறார்,
திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம்மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழி யைச் செம்மைப்படுத்த அவர் முன் னே செல்வாய்"(லூக்கா 1:76, 77) என்று இறைவாக்கு உரைத் தார்.
மெசியா வருவதற்கு முன் இறை வாக்கினர் எலியா மீண்டும் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்த காலத் தில், அந்த நம்பிக்கையைச் சுட்டிக் காட்டி, சீடர்கள் இயேசுவிடம் வின வியபோது, “எலியா ஏற்கனவே வந்துவிட்டார்” என்று திருமுழுக்கு யோவானைப் பற்றிக் குறிப்பிடு கிறார் இயேசு. இறைவன்மீது கொண்ட ஆர்வத்தால் நெருப் பெனப் பற்றியெரிந்த இறைவாக் கினர் எலியா போலவே, திருமுழு க்கு யோவானும் தீயெனப் பற்றி எரிந்தார்.
திருமுழுக்கு யோவானை குறித்து இறைவாக்கினர்கள்;
பாலைநிலத்தில் ஆண்டவருக் காக வழியை ஆயத்தமாக்குங் கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக் காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்" (ஏசாயா 40:3) என்று இறைவாக்கினர் எசாயா யோவானின் பணியைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
இறைவாக்கினர் மலாக்கி "இதோ! நான் என் தூதனை அனுப் புகிறேன். அவர் எனக்கு முன் வழி யை ஆயத்தம் செய்வார்"(மலாக்கி 3:1) என்று யோவானைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார்.
இறைமகன் இயேசுவைச் சுட்டிக் காட்டவே, பாலைநிலத்தில் ஒலிக் கும் குரலாக யோவான் வந்தார்.(யோவான்1:23) திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, "பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று பறைசாற்றி வந்தார். மக்கள் பெருவாரியாக வந்து திருமுழுக்குப்பெற்றனர். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
தலையே போனாலும் தாழ் வில்லை, என் நேர்மையும், துணி வும் போகாது என்று சொல்லாமல் சொன்ன இறைவாக்கினர்,
யோவான் நேர்மையும் தூய்மை யும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதுவே, யோவானின் உயிருக்கு முடிவானது.
1.ஆண்டவரைத் தேடுங்கள், Seek the Lord while he may be found; ஏசாயா 55:6-13.
கிறித்துவின் அன்பர்களே!.
ஆண்டவரைக் காண்பதற்கு வாய் ப்புள்ளபோதே அவரைத் தேடுங் கள்: அவர் அண்மையில் இருக் கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். இல்லையெனில் அவர் அப்புரம் போவதுபோல் காணப்படுவார், அதற்குள்ளாக கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர் ந்திருப்பவர்களே, எல்லாரும் என் னிடம் வாருங்கள், நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல்தருவேன்.
(மத்தேயு நற்செய்தி 11:28)
அவர் அவர்களுக்கு இரக்கம் காட் டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்ப தில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழி முறைகள் அல்ல,என்கிறார்ஆண்டவர்.மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழி முறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண் ணங்களை விட என் எண்ணங்க ளும் மிக உயர்ந்திருக்கின்றன. என தீர்க்கர் ஆண்டவரை தேட அழைககிறார்.
மழையும் பனியும் வானத்திலி ருந்து இறங்கி அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதை யையும் உண்பவனுக்கு உணவை யும் கொடுக்காமல், அங்குத் திரும் பிச் செல்வதில்லை. அவ்வாறே, ஆண்டவரின் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என்விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை என உறுதியாக கூறுகிறார்.ஆண்டவரைக் காண் பதற்குவாய்ப்புள்ளபோதேஅவரைத் தேடுங்கள்: மகிழ்ச்சியுடன் நீங்க ள் புறப்பட்டுச் செல்வீர்கள்; அமை தியுடன் நடத்திச் செல்லப்படுவீர் கள்; இந்நிலையில் ஆமோஸ் தீர்க் கர்"ஆண்டவரைத் தேடுங்கள்; நீங் கள்வாழ்வீர்கள்;எனகூறுகிறார்.
(ஆமோஸ் 5:6)
2.கடவுள் அருள்வதே இறை திருமொழி. Goodnews is the gift of God.கலாத்தியர்,1:11-17.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தூய பவுலடிகளாருக்கு கிடைத்த நற்செய்தி இயேசு கிறிஸ்து அருளிய தூய வெளிப் பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது என கலாத்தியருக்கு
எழுதுகிறார்.
திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.
(யோவான் நற்செய்தி 1:17) ஆனால் இறை திருமொழி பவுல்
அடிகளாருக்கு இயேசு கிறித்து மூலமாய் வெளிப்பட்டன.
அப்போஸ்தலர் பவுலும், அவரு டனே கூடயிருக்கிற சகோதர ரெல்லாரும் இந்த நிருபத்தை எழுதுகிறார்கள்.அப்போஸ்ஸ்தலர் பவுல் தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை இந்த நிருபத்தில் பொதுவாகச் சொல்லுகிறார்.
பவுல் அடிகளார் இந்த நிருபத்தை கலாத்தியார்களுக்கு எழுதும் போது, அவர்களுடையசபைகளில் உபதேசக் குழப்பமுண்டாயிற்று. விசுவாசிகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பியிருக் கிறார்கள். கள்ளப்போதகர்கள் அவர்கள் மத்தியிலே பிரவேசித்து, அவர்களுக்குவேறொருநற்செய்தி பிரசங்கித்து மக்களை குழப்புகின் றனர். யூதமார்க்கத்து உபதேசங் களை விசுவாசிகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்து
கின்றனர். இந்த சூழ்நிலையில்;
பவுல் அடிகளார் யூதமயமாக்கும் கிறித்தவர்களின் தவரான போதனைகளை முறியடிக்க கி.பி
52-53ல் காலத்திய நிருபத்தை எழுதினார்.சகோதர,சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான்உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரி டமிருந்து வந்ததல்ல. எந்த மனித ரிடமிருந்தும்நான்அதைப்பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக் கவில்லை. மாறாக இயேசு கிறிஸ் து அருளிய வெளிப்பாட்டின் வாயி லாக அது எனக்குக்கிடைத்தது. நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன்.ஆனால், தாயின் வயிற்றில் இருந்தபோதே என் னைத் தமக்கென அவரின் அரு ளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தி யைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்குமுன் திருத் தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்கு உடனே போகவுமில்லை. பிறகு தான் அங்கு இருந்த பேதுருவையும், ஆண்டவரின் சகோதரான யாக் கோபுவையும் மட்டுமே பார்த்தேன்.
இவ்வாறு பவுல் திருத்தூதராக அழைப்புப் பெற்றார்,
3.வழிக்கு ஒளியாகும் இறைத் திருமொழி: The Holy Bible is a light to the way. லூக்கா: 1:67-80
கிறித்துவின் அன்புள்ள இறை
மக்களே! ஆண்டவரின் கிருபை
நிறைந்த அருள் வார்த்தையே வழிக்கு ஒளியாகும் இறைத் திரு
மொழியாகும்.
திருமுழுக்கு யோவானின் தந்தை சகரியா தன் நாவு கட்டவிழ்க்கப் பட்டவுடன் தேவன் தம் ஜனத்தை மீட்டுக்கொள்வார் என்ற ஆணை யை நிறைவேற்றினதை நினை த்துப் மூன்றாவது கீதமாக (லூக்கா 1:68-79) பாடுகிறார். .
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது, இன்று கர்த்த ராகிய கிறிஸ்து என்னும் இரட் சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக் 2:11) என்று தேவ தூதர்களால் அறிவிக்கப்பட்டது. அந்த இரட் சகராகிய இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பை குறித்து, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா தனது தீர்க்கதரிசன பாடலில் பாடி உள்ளார் (லூக்கா 1:67-79).
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டா வதாக. அவர் நம்முடைய பிதாக் களுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ன இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக் கையை நினைத்தருளி; உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு: உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாக பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்ட ளையிடுவேன் என்று, அவர் நம் முடைய பிதாவாகிய ஆபிரகாமு க்கு இட்ட ஆணையை நிறைவேற் றுவதற்கும்; ஆதி முதற்கொண்டி ருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்க தரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக் கும்படிக்கு, தம்முடைய தாசனா கிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத் தினார்.குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதர வும்,நம்முடையகால்களைஅமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக் கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது. " என கீதமாக கடவுளை சக்கரியா
மகிமைப்படுத்தினார்.
குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார். இயேசுவே இரட்சண்ய
கொம்ப்வார்,
பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.இரட்சிப்பு கர்த்தருடைய செயல். (லூக் 1:74, 79).இரட்சிப்பு நம்முடைய கிரியையினால் உண்டாவதில்லை, அது கர்த்த ருடையது. நம்முடைய நிலையை அறிந்து “அவரே நம்மை சந்தித் தார்” என்பதை இந்த பகுதி நமக்கு சுட்டி காண்பிக்கிறது.இரட்சிப்பு தாவீதின் வம்சத்தின் மூலம் வரு கிறது. (லூக் 1:75).தாவீதின் வம் சத்திலே ஏற்படுத்தப்பட்ட “இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகும்”. காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் சந்ததியிலே பிறந்தார் (ரோம 1:5, லூக் 3:23-32).இரட்சிப்பு என்பது பாவம ன்னிப்பாகிய மீட்பு. (லூக் 1:77).
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (1 தி.மோ 1:15). அவருடைய இரத்தத் தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு(கொலோ1:14,எபே1:7).நமக்கு கிடைக்கிறது.இரட்சிப்பு தேவனு டைய இரக்கத்தினால் கிடைக் கிறது. (லூக் 1:77, 69).
நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்(எபே2:4,5).நம்மையும் இரக்கமாய் இருங்கள் என்கிறார். "இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர் கள் இரக்கம் பெறுவர்.
(மத்தேயு நற்செய்தி 5:7) என்றார்.
இரட்சிப்பினால் சத்துருவின் கையிலிருந்து விடுதலை கிடைக் கிறது. (லூக் 1:74, 71).
இரட்சிப்பிற்கு முந்திய நிலை அந்தகாரமும், மரண இருளும். (லூக் 1:78).ஆனால் கர்த்தரின் வழிக்கு ஒளியாகும் இறைத் திருமொழி இரட்சிப்பை அளிக்கி றது,அதன்விளைவாக வெளிச்ச
மும், சமாதானமும். (லூக் 1:78, 79).
கிடைக்கிறது. திருத்தூதர்கள் மூலமாக இரட்சிக்கப்பட்ட மக்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண் ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண் டேயிருந்தார்.
(திருத்தூதர் பணிகள் 2:47) இரட்சிக்கப்படுகின்ற மக்களுக்கு ஆண்டவரிடத்தில் இடம் உண்டு.
நாம் வழிக்கு ஒளியாகும் இரட் சண்ய படைவீரர்கள். கிறிஸ்து வின் இரட்சிப்பை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வீராதி வீரர்கள் நாம் ஆண்டவரின் ரட்சண்யா படை வீரர்கள் அவரின் திருவச னத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நற்பணியாளர்கள் நாம் ஆண்டவரின் வழிக்கு வெளியா கும் திருவாசகத்தை உலகெங்கும் விதைக்கின்ற கடமையைப் பெற்றுள்ளோம். ஆண்டவர் வருகிறார் அவருக்கு வழியை ஆயத்தப்படுத்திய திருமுழுக்கு யோவானின் வழியிலேயே நாம் ஆண்டவரின் இறை செய்தியை இவ்வுலகில் விதைப்பதே அவரின் பிறப்பின் பண்டிகையை கொண் டாடுகின்ற நமக்கு அர்த்தமாகும். அன்பின் ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து காப்பாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulblogspot.com
www davidarulsermoncentre.com.
Comments
Post a Comment