ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாயிருங்கள்(97) PREPARING FOR THE COMING OF THE LORD.ஓசியா 10:12-15; கொலோசெயர் 4:1-6; லூக்கா 12:35-40.
முன்னுரை:
கிருஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நாம் தியானம் இருக்கின்ற தலைப்பு ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாய் இருங் கள். உலகிலேயே யாருக்கும் தெரியாத விடயமாய் இருப்பது
ஆண்டவரின் வருகை. ஆண்டவரின் வருகையை தீர்மானிக்கின்ற பொறு ப்பை பிதாவிடம் கொடுத்து விட்டார் குமாரன். பிதாவை தவிர வேறு யாரு க்குமே தெரியாது (மத்தேயு24:36-) ஆனால் ஆண்டவர் வருகிறார் என்பது நிகழ்காலத்தில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது(Present tense) ஒரு உண்மையான உறுதியான பதிவா கும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது இயேசு கிறிஸ்து, மீண்டும் வி்ண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் திரும்பி வருவார் என எதிர் பார்க்கப்படும் நம்பிக்கை யைக் குறிக்கும். இது மனிதர் எதிர் பாரா காலத்தில் நடக்கும் என நம்பப்படுவதால் இதனை இரகசிய வருகை என்றும் அழைப்பர்.
"வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களி டமிருந்து விண்ணேற்ற மடைந்த தைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.
(—தி.ப Acts. 1:9-11)
அவர் வருகை எப்படி இருக்கும்?1.உலகம் முழுமைக்கும் ஒரே பொழுதில்இதுநிகழும். "ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற் குவரை ஒளிர்வது போல மானிட மக னின் வருகையும் இருக்கும்.("மத்தேயு 24:27.)
2. எல்லோரும் காணும்படியாக இருக்கும்.[ "பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்க ளின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்." (மத்தேயு 24:30)
3. எல்லோரும் கேட்கும் படி இருக்கும்."அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலி ருந்து மறு கோடிவரை நான்கு திசை களிலிருந்தும்தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்." (மத்தேயு 24:31)
4.இறந்த நீதிமான்கள் உயிர்த் தெழுவர். "கட்டளை பிறக்க, தலை மை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இற ந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்." (1 தெசலோனிக்கர் 4:16)
5.ஒரே பொழுதில் இறந்து உயிர்த் தோரும், உயிரோடு இருப்போரும், கிறித்துவைச் சந்திக்க நடு வானில் எடுக்கப்படுவர்.
"பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர் கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்." (1 தெசலோனிக்கர் 4:17) ஆக ஆண்டவர் வருகை வேதத் தின் அடிப்படையில் உறுதியாகிறது.
ஆனால் ஆயத்தமாயிருங்கள் என்ற வார்த்தை "An imperative sentence. இவ்வார்த்தை நம்மை அறிவுறத்துகிறது, Get ready.என.
நோவாவின் நாளிலும் லோத்துவின் நாளிலும் நடந்தது போலவே, “மனுஷகுமாரன் வருங்காலத்திலும்ற நான் திருடனைப் போல வருகிறேன். தாங்கள் ஆடை இன்றி நடப்பதையும் பிறந்த மேனியாய் இருப்பதையும் பிறர் பார்த்திடாதவாறு தங்களின் ஆடைகளை ஆயத்தமாக வைத்திருப் போரும் விழிப்பாய் இருப்போரும் பேறுபெற்றோர்."
(திருவெளிப்பாடு 16:15) என நம்மை
ஆயத்தமாக இருக்க வேண்டுகிறார்.
1.ஆண்டவர் வருகிறார், நீதியை விதையுங்கள்: The Lord is coming, sow the Righteousness. ஓசியா 10:12-15. ஓசியா தீர்க்கர் கிமு 8ம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவர் பீரியின் மகன். ஹோசியா என்றால் பெரும்பாலும் "அழிவின் தீர்க்க தரிசி" என்று பொருள்.இவர்
ஊழியத்தின் காலம் சுமார் அறுபது ஆண்டுகள். இவர் மறு சீரமைப்பை
உறுதியளிக்கிறார். வடக்கு அரசில் உள்ள 10 இன குழுக்களுக்கு (tribes) தீர்க்கதரிசனம் உரைக்கிறார். ஆண்டவர் மாறாதவராக இருப் பதால், யாக்கோபின் சந்ததியினர் அவரைப் போலவே கடவுளைத் தேடினால், யாக்கோபுக்கு அவர் செய்த அதே அனுகூலத்தை யாக்கோபின் சந்ததியினருக்கும் காட்டுவார் என உறுதியாக உரைக்கி றார்.நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள் என்கிறார். நல்லதை விதையுங்கள்; கடவுளுக்கு
கீழ்படியுங்கள், என்றும் பாவம் செய்யாதீர், மனம் திரும்புங்கள் என வேண்டுகிறார், இஸ்ரவேலரோ இதை கேட்கவில்லை.இதனால் அசீரியர்கள் அவர்களை அழித்து
அடிமையாக கொண்டு சென்ற னர்.கடவுளை தேடாதவர்கள் அழிவை காண்பார்கள். எனவே;
"கர்த்தரைக் கண்டடைய தக்க சமையத்தில் அவரை தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்". (ஏசாயா : 55:6) உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள் என்கிறார். தரிசு
நிலம் என்பது நம் இதயத்தை குறிக்கிறது.தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்பவர்களாயிருக்கிறார்கள் அவர்கள்விசுவாசித்து(நம்பி உட்கொண்டு) காக்கப்படாதபடிக்குப் அலகையானவன் வந்து, அவ்வசனத் தை அவர்கள் இதயத்திலிருந்து அகற்றிவிடுகிறான்(.மத்தேயு 13:19)
எனவே, நம் இதயம் இறைவன்வாசம் செய்யும்இடமாகஇருக்கட்டும்.
ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது. (ஓசேயா 10:12) பெத்தேலே உடனே மனம்
திரும்பு; இல்லையேல் இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.
(ஓசேயா 10:15) எனவே; ஆண்டவர் வருகிறார் நீதியை தேடுங்கள் என்கிறார்.
2.கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்த்தவராக வாழ முடியாது.
You can't live as Christians without Christ.கொலெசியன்ஸ் 4:1-6.
கிறிஸ்து கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் மற்றும் தீமொத் தேயும் ஒன்று சேர்ந்து எழுதிய திருமடல்தான் கொலெசியர் நிருபம்.
கொலேசெ பட்டணத்தில் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பவுலுடை ய ஊழியத்தின் மூலமாய் இந்தச் சபை ஸ்தாபிக்கப்படவில்லை. எப்பாப்பிராவினுடைய ஊழியத் தின் மூலமாய் இங்கு சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது (கொலோ 1:7) இதன் முக்கிய நோக்கமே: தொடர்ந்து இறைவனிடம் வேண்டு ங்கள். விழிப்போடும் நன்றி உணர் வோடும் அதில் ஈடுபடுங்கள் என ஜெபத்திற்கு முக்கியம் தருகிறார்.
கொலோசெயர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருக்கிறார்கள். பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது அவர் ரோமாபுரியிலுள்ள சிறைச்சாலை யில் கட்டப்பட்டிருக்கிறார். Paul was in Roman's jail. பவுல் இதுவரையிலும் கொலேசெ பட்டணத்திற்குப் போன தில்லை.இங்கு யூதமார்க்கத்தைச் சேர்ந்த கள்ளப்போதகர்கள் சத்தி யத்தைப் புரட்டுகிறார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்துவின் கிருபையை மறுதலிக் கிறார்கள். இவர்களைக் குறித்து கொலோசெயர்கள் எச்சரிப்போடிரு க்கவேண்டும் என்னும் நோக்கத் தோடு பவுல் இந்த நிருபத்தை அவர் களுக்கு எழுதுகிறார். ஜெபிக்க வேண்டுமென்றும் பரிசுத்தமாயி ருக்க வேண்டுமென்றும் ஏழு அம்ச வேண்டுகோள் வைக்கிறார் (4:2-6)
தலைவர்களே, உங்கள் அடிமை களை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற் கொள் ளுங்கள். நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு அவரி டம் எங்களுக்காகவும் வேண்டுங்கள். அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நாங்கள் எடுத்து ரைக்க முடியும். இம்மறைபொருளின் பொருட்டே நான் சிறைப்பட்டிருக் கிறேன் என்கிறார்.நான் பேசவேண் டிய முறையில் இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
கெட்சுமனே தோட்டத்தில் தான் காட்டிக் கொடுக்கப்படும் அன்றேய ராத்திரியில் சீடர்களுக்கு கூறிய வார்த்தை "விழித்திருந்து ஜெபியுங் கள் என்றார்" பவுல் அடிகளார் கொலெசியர்க்கு எந்த சூழ்நிலை யிலும் நீங்கள் ஜெபம் பண்ணுங்கள் என்று வலியுறுத்துகிறார். ஜெபம் ஒன்றே சாத்தானை வீழ்த்தும் ஆயுதம். Prayer is a weapon against Satan. ஜெபிக்காமல் கிறிஸ்தவனாக இருக்க முடியாது. கிறித்தவர்கள்
திருச்சபையைச் சேராதவவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள். காலத்தை நன்குபயன்படுத்துங்கள்.
(கொலோசையர்4:5)என்கிறார்.மற்றும் நம் பேச்சு எப்பொழுதும் இனிய தாயும் சுவையுடையதாயும் இருப் பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந் திருக்கவேண்டும் என திருச்சபை
க்கு அறிவுருத்துகிறார். ஆண்டவர்
வருகிறார் என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் இவைகளை முன்
வைக்கிறார்.கிறிஸ்து இல்லாமல்
திருச்சபை இல்லை. கிறிஸ்தவன்
இல்லை.
3. ஆண்டவர் வருகிறார், ஆயத்த மாக இருங்கள்: Preparing for the coming of the Lord. லூக்கா 12:35-40.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! ஆண்டவர் வருகிறார், அவருடைய வருகைக்கு முன்பாக நம்மை நாமே ஆயத்தமாவோம். நமக்கு பயம் இருக்க வேண்டும். "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
(திருவெளிப்பாடு 22:12) என திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
ஆண்டவர் வருகிறார் பாவங்க ளுக்கு தண்டனை அளிப்பார் என்ற சிந்தனை நம் உள்ளத்தில் இருக்க வேண்டும், மனம் திரும்ப வேண்டும் மனம் திருந்துதல் இல்லாமல் விண்ணரசில் பிரவேசிக்கவே முடியாது.
இயேசு லூக்கா நற்செய்தியில் இந்த உவமையை யூதேயாவில் மக்களிடத் திலும், ஒலிவமலையில் சீடரிடத்தி. லும் இயேசு கூறுகிறார். முதல் பகுதி இயேசுவின் நற்செய்தியை கேட்ட மக்கள் அனைவருக்கும் கூறப்படுகிறது. ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று பேதுரு இயேசுவிடம் கேட்டார். மக்களைவிட, தம் சீடர்கள் மிகுதியான பொறுப்பு உடையவர்கள் என்று இயேசு அறிவித்தார். இந்த உவமை கிறித்தவர்களாகிய நமக்கு எச்சரிக்கையாக முதலாவதாகவும், மற்றவர்களுக்கு அறிவிப்பாகவும் கூறுகிறார். காதுள்ளவன் கேட்க கடவன். இயேசுவின் நோக்கத்தை அறிந்துள்ளதால், சீடர்கள் மிகுதி யாகக் கொடுக்கப்பட்டவர்கள் எனவே அவர்களிடமா மிகுதியாகக் கேட்கப்படும் என்பது, இயேசுவின் சீடருக்குக் கூறப்படுகிறது.
திருமண விருந்து இயேசுவின் இரண்டாம் வருகையை குறிக்கிறது.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவராக இயேசுவை குறிக்கிறது. கிறித்தவர்கள் பணி யாளருக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்.
விளக்குகள்- நம்மில் எரிந்துகொண் டிருக்கும் தூய ஆவியின் நற்செயல் கள் வெளிச்சமாக தொடரவேண்டும்.
ஏனேனில் ஆண்டவர் "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறை வாயிருக்க முடியாது. என்கிறார்.
(மத்தேயு நற்செய்தி 5:14)
திருடன் - என்பவர் குடிவெறி, களி யாட்டம், உலகத்தின் கவலையினால் பாதிக்கப்பட்டவர்கள், விழித்திருக்கும் வீட்டுக்காரர் - தூய ஆவியால் ஒளிர்பவர்தம்தலைவரின் விருப்பத்தை அறிந்து செயல்படும் பணியாளர்,
செயல்படாத பணியாளர் -என்பவர்; நம்பிக்கை துரோகியான சீடர்
தலைவரின் விருப்பத்தை அறியாத, செயல்படாத பணியாளர் அறியாமல் தவறு செய்யும் மக்களை குறிக்கும்.
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள் ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள். மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்காக விழித்திருந்து படிப்பது போல, நாமும் ஆண்டவரு டைய வருகைக்காக விழித்திருக் கின்ற மக்களை போல் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும், அதற்கு முதல் வழி மனம் திரும்புதல், மனமாற்றம் அடையாமல் விண்ணர சிற்கு செல்வது எளிதன்று.அன்பு சகோதர்களே! " நீங்கள் கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.
(திருவெளிப்பாடு 3:3) என்பதை மனதில் கொள்வோம். விழிப்பாய்
இருப்போம். "இதோ! நான் விரைவில் வருகிறேன்" என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
(திருவெளிப்பாடு 22:7)
என்கிறார்.
ஆண்டவர் எச்சரிக்கிறார்;
"இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.
"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
(திருவெளிப்பாடு 22:11,12)
"இவற்றுக்குச் சான்று பகர்பவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
(திருவெளிப்பாடு 22:20)
ஆண்டவரே வாரும், நாங்கள் உம்முடன் இருக்க ஆயத்தமாக
இருக்கிறோம். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer.
www.david Arul Sermon centre. Com
www.david Arul blogspot.com
Comments
Post a Comment