புத்தாண்டு- உடன்படிக்கை நற்செய்தி 2024 (105)எண்ணிக்கை 6:22-27. கலாத்தியர் 4:4-7. லூக்கா 2:16-21
1.இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் ..." (எண்ணாகமம்24:1.) இஸ்ரவேல் என்று சொன்னாலே தேவன் விரும்புகிற அல்லது தெரிந்துக்கொண்ட,நேசிக்கிற, மாற்றமடைந்த ஒரு மனிதன். மாற்றத்தைப் பெறும்போது தான், தேவனுடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்றுக் கொள்வதற்கு நம்மைத் தகுதிபடுத்துகிறார்.ஆண்டவர் ஆபிராகமோடு உடன்படிக்கை செய்து அவரின் சந்ததியை ஆசி ர்வதித்துதெரிந்துகொண்டார், ஆண்டவரின் 7 உடன்படிக்கை ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது, ஆண்டவரின் புதிய உடன்படிக்கை, மற்றும் நித்திய உடன்படிக்கை அனைத்தும் கடவுளின் மீட்பு திட்டத்தை The plan of Redemption வெளிப்படுத்தியது. கிறித்துவின் அன்பு நண்பர்களே! இந்த 2023, முடிந்து புத்தாண்டு 2024 பிறந்துவிட்டது,ஆசாரியர்கள் எவ்வாறு மக்களுக்கு ஆசி கூற வேண்டுமென்று ஆண்டவர் மோசேயிடம் கூறியது; நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வ...