மீட்புப் பற்றிய நல்லெதிர்பார்ப்பு, (100) HOPE OF SALVATION. செப்பனியா 3:14-20, திரு.பாடல்: 43, 2 பேதுரு:3:8-13.மத்தேயு 1:18-25. Advent Third Sunday.(மகிழ்ச்சியின் ஞாயிறு)

முன்னுரை:
கிறித்துவின் அன்பர்களே! உங்க அனைவருக்கும் இயேசுகிறித் துவின் உன்னத நாமத்தில் வாழ்த்துகள். இது எனது 100 வது
பதிவுசெய்யப்பட்டபிரசங்கமாகும். அனைத்துபிரசங்ககளும்தென்னிந்தியதிருச்சபைசென்னை பேராய த்தின் அல்மெனாக் ( Almanac)ஐ அடிப்படையாக கொண்டது. கடந்த 35 ஆண்டில் ஆலய பிரசங்கத்திற் காக தயார் செய்யப்பட்ட பிரசங் கங்கள், பதிவு செய்யப்படாமலே மறைந்தே போய்விட்டன, இதை
தவிர்ககவே, தற்சமயம் பதிவு செய்து, பல நண்பர்களுக்கும், WhatsApp and Facebook groups உள்ள நபர்களுக்கும், பல நாடுகளுக்கும் அனுப்பி வைக் கின்றேன். எனக்கு கல்வி, வேத அறிவு, பணி, பயிற்சி கொடுத்தது
CSI, Madras Diocese. இதன் நன்றி
கடனாக ஆண்டவரின் நற்செய்தி யை தயார்படுத்தும் பணியில்
ஈடுபட்டு என் முன்னாள் மாணவர் களுக்கும், சபை ஊழியர்களுக் கும், நண்பர்களுக்கும், குழுவினர்
களுக்கும், offshore churches, பல நாடுகளுக்கும் அனுப்பி வருகி றேன், இப்பணி தொடர தயவு செய்து செபியுங்கள், தங்களின் மேலான கருத்துக்களை என் வளைதளத்தில் பதிவிடுங்கள், ஆண்டவர் தாமே உங்களை அருள் மழைபொழிந்துஆசிர்வதிப்பாராக,ஆமேன், 
மீட்புப்பற்றியநல்லெதிர்பார்ப்பு
என்ற  தலைப்பு கிறித்து வருகை
யின் மூன்றாவது ஞாயிற்றின் 
தலைப்பாகும். உலகிலேயே மிக
மகிழ்வுடனும், மகிழ்ச்சியுடனும்
220 கோடி (2.20 பில்லியன்)  (2,200 மில்லியன் )கிறித்தவ மக்கள் ஆண்டவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவிகிதமாகும். உலகின் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளனர். உலகில் 157 நாடுகளில் கிறிஸ்த வர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.(21 Dec 2012) இதனால்தான் நம் ஆண்டவர் அன்றும், இன்றும், என்றும் " உலக இரட்சகர்". நம்மை
மீட்க அவர் வந்தார், அவர் வருகை
யை ஒவ்வொரு ஆண்டும் மகிழ் வுடன் எதிர் பார்கிறோம், 
ஆண்டவர் " நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர் களும் (மற்ற மக்கள்) கடைப்பிடிக் கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். (மத்தேயு நற்செய்தி 28:20) அவர் என்றும் நம்மோடு இம்மானுவேலராய் இருப்பதால், நாம் மீட்கப்பட்டவர்கள்,  "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் ". - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - (1 திமொத்தேயு 1:15) எனவே, நாம் பாவிகளாய் இருப் பதினால், நம்மை மீட்க வருவது அவசியமாகிறது, அவர் வர காத் திருக்கிறோம், இயேசு பிறந்தார் என்பதை தூய பவுல் அடிகளார்
" இயேசு வந்தார் " என கூறுவது,
ஆண்டவர் நம் அழைப்பை ஏற்று
வருகிறவர், பல முறை நம்மிடம்
வருவார், ஆனால் பிறந்தார் என்பது ஒரே முறைதான். என்பதையும் புரிந்துகொள்ள
வேண்டும், ஆண்டவரின் வருகை
மீட்பின் நம்பிக்கையை உறுதி
படுத்துகிறது, வந்தார் என்ற
ஆண்டவர் திருவெளிப்பாட்டில்;  "இவற்றுக்குச் சான்று பகர்பவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார்.ஆமென்.ஆண்டவராகிய இயேசுவே, வாரும். 
(திருவெளிப்பாடு 22:20) மீட்பு பெற
நம் உள்ளத்தில் மகிழ்வின் வெளிப்பாடும், எதிர்பார்ப்பும் அவசியம்.
1.மீட்பின் மகிழ்ச்சி கீதம்: Joyful Hymn of Redemption: செப்பனியா 3:14-20, 
அன்பின் இறை மக்களே!  செப்பனியா தீர்க்கர் ஆமோனின் மகன்.  இவர் அரசர் எசேக்கியா வின் கொள்ளுப் பேரனும் (the great- great grand son) அமரியாவின் பேரனும்கெதலியாவின்மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார். 
(செப்பனியா 1:1) இவரின் காலம் கி.மு. 621. யூதாவின் அரசனாய் யோசியா (Josiah), இருந்தபொழுது இவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். செப்பனியா என்றால் "கடவுள் காக்கிறார்" என்று பொருள்படும்.
இஸ்ரவேலர் கடவுளை மறந்து மற்ற தெய்வங்களை வழிபட்ட காரணத்தினால் வரப்போகும் தண்டனையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க தீர்க்கர் அவர்கள் மீட்பின் நற்செய்தியாக சீயோன் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியின் கீதமாக தீர்க்க தரிசனம் கூறப்ப டுகிறது." மகளே சீயோன்! மகிழ்ச் சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ் ந்து அக்களி. (செப்பனியா 3:14)
அன்பானவர்களே!வேதாகமத்தில் “சீயோன்” என்ற வார்த்தையின் முதல் குறிப்பு 2 சாமுவேல் 5:7:ல் “ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.” ஆகை யால், சீயோன் முதலில் எருசலேம் நகரில் உள்ள பண்டைய எபூசியர் களின் கோட்டையின் பெயர். சீயோன் என்னும் பெயர் கோட்டை க்கு மட்டுமல்ல, கோட்டை நின்ற நகரத்திற்கும் அப்படியே வந்தது. தாவீது “சீயோனின் கோட்டையை” கைப்பற்றிய பிறகு, சீயோன் “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது (1 இராஜாக்கள் 8:1; 1 நாளாகமம் 11:5; 2 நாளாகமம் 5:2). இதுவே சீயோனின் வரலாறு,
தீர்க்கர் அவர்கள் சீயோன் மக்களுக்கு இரண்டு உத்தரவா தங்களை கொடுக்கிறார் ஒன்று கடவுள் நம்மோடு இருக்கிறார் என்றும் இரண்டாவதாக கடவுள் நம் நடுவில் வாசம் செய்கிறார் என்றும் கூறுகிறார். திரு தூதர் யோவானுக்கு வெளிப்படுத்திய ஆண்டவர், "பின்பு விண்ணகத்தி லிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார் கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். என்கிறார்.
(திருவெளிப்பாடு 21:3)
ஆண்டவரின் மற்றொரு நாமம் இம்மானுவேலர். கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார். எனவே
ஆண்டவர் நம் தண்டனைத் தீர்ப் பைத் தள்ளிவிட்டார்; நம் பகைவர் களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்ட வர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்ச மாட்டாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.  அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.  என எதிர் கால மகிழ்ச்சியின் நம்பிக்கையை இஸ்ரேல் மக்களுக்கு கொடுக்கி றார் (செப்பனியா 3:18) இறுதியாக அவர் கூறும் நம்பிக் கையின் வார்த்தை இஸ்ரவேலே அக்காலத்தில்உங்களைஒன்றாய்க் கூட்டிச் சேர்த்து( It happened in 1948) உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்; ஆம், உங்கள் கண் முன்பாகவே உங்களை முன் னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறு மாறு செய்வேன்" என்கிறார் ஆண்டவர். (செப்பனியா 3:20). (At present the Israel is a mighty powerful Nation among all the Islamic Nations, but its aggressive attack on Palastine never be justified)இதுவே,தீர்க்கரின் மீட்பின் நம்பிக்கை வார்த்தை.This is the message of hope and salvation.
2 ஆண்டவர் காலங்களை கடந்தவர். The Lord is timeless.
2 பேதுரு:3:8-13.கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!நமதுஅன்பின் ஆண்டவர் காலங்களைக் கடந்த வர், ஏனென்றால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். ஏன் ஆண்டவர் காலங்களைக் கடந்த வர் என்றால்; இந்த உலகம், அதன் வானம், பூமி அனைத்தும் ஆண்ட வரின் வார்த்தையினால் படைக் கப்பட்டது, இவைகள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும். ஆனால் ஆண்டவருடைய வார்த்தைகளோ அழியாது, ஒழியாது நிலைத்து நிற்கும்.எனவே"அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்து விட வேண்டாம். ஆண்டவரின் பார்வை யில் ஒரு நாள் ஆயிரம்ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள்போலவும்இருக்கின்றன. 
(2 பேதுரு 3:8). ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். அவர் வாக்கு மாறாதவர். வேதம் கூறுகிறது " பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்; மனத்தை மாற் றிக்கொள்ளஒருமனிதப்பிறவியும் அல்லர். அவர் சொல்லியதைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததைநிறைவேற்றிமலிருப்பாரா?(எண்ணிக்கை 23:19) ஆனால், அவர் அவ்வாறு காலந் தாழ்த்துவதில்லை. மாறாக, உங்க ளுக்காகப்பொறுமையோடிக்கிறார்.யாரும்அழிந்துபோகாமல்,எல்லாரும்மனம்மாறவேண்டுமெனவிரும்புகிறார். மனமாற்றம் இல்லாமல் மீட்பு இல்லை. ஆண்டவரின் மறு பெயர்"மீட்பர்"நம்மைமீட்பதேஅவரின்முக்கியநோக்கமாகும்,ஆண்டவரின் பொறுமையே "மீட்பு" எனப் படும், எனவே, நாம் தூய, இறைப் பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! 
ஆண்டவர் அருளும் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் காண நாம்
காத்திருப்போம். 
3.மீட்புப் பற்றிய நல்லெதிர் பார்ப்பு,   HOPE OF SALVATION. 
மத்தேயு 1:18-25. 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மீட்பு பற்றிய நல்லெதிர் பார்ப்பு நம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும். ஆண்டவரே நம் மீட்பார். அந்த மீட்பராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் தோன்று வதற்கு வழி தந்தவர்கள் தூயவர் யோசேப்பும்  புனிதர்  மரியன்னை யும்  ஆவார். இவர்கள் இருவரும் கடவுளின் திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் ( Chosen people). இத்திட்டம் இயற்கைக்கு மாறானது, மிகவும் பிரச்சினைக் குறியது,  சமூகத்தில் தடை செய்ய ப்பட்டது. ஆனாலும், ஆண்டவர்  இவ்வுலகை மீட்க, மானிடமக்களை இரட்சிக்க, ஒரு அற்புத திட்டமாக செயல்படுத்து கிறார். இது முற்பிதாக்களுக்கு
எண்ணாகமம் 24: 17ல். " நான் அவரைக் காண் பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்;ஆனால் அண்மையில ன்று; யாக்கோபிலிருந்து விண் மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலி லிருந்து செங்கோல் ஒன்று எழும் பும்! என்ற(எண்ணிக்கை 24:17) வாக்குதத்தம் கொடுக்கப்பட்ட தினால்; யூதா வம்சத்தில் தாவீ தின் மகனும் ஆபிரகாமின் மகனு மான இயேசு கிறிஸ்து (மத்தேயு நற்செய்தி 1:2) என மத்தேயு நற் செய்தியாளர் குறிப்பிடுகிறார். தாவீதின் குமாரனாகிய யோசேப், (Foster-father of Jesus Christ) நேர்மையாளர், நீதிமான், இரக்க குணம்கொண்டவர்,குலதொழிலான தச்சு வேலையை சிறப்பாக செய்ததினால், இவருக்கு " தொழி லாளர்களின் பாது காவலர்" என அழைக் கப்படுகிறார், (According to Catholic History,  St.Joseph's Memorial Day falls on May,1.Labors' Day) இவர் நாசரேத் என்ற சிரிய கிராமத்தில் வசித்ததால் அனைத்துவிதமான 
தச்சு வேலைகளை செய்திருக்க
வேண்டும், கடவுள் இரண்டுவித மான வழிமுறையை மரியாளிட மும், யோசேப்பிடமும் உலக இரட்
சகரின் பிறப்பிற்காக கையாளு கிறார், ஒன்று  இறைதூதர் நேரி டையாக மரியாளை சந்திக்கிறார்.
இரண்டாவதாக இறை தூதர்
யோசேப்பை கனவினால் சந்திக்
கிறார். மரியாள் அவர்கள் இளம்
பெண், இயற்கைக்கு மாறாக
மாபெறும் காரியத்தை இவர்வழி
யாக, திருமண உறவை மீறி,தூய ஆவியின்வழியாககுழந்தைபிறப்பை செயல்படுத்த முனைகிறார். எனவே, பிரதானஇறைதூதர் காபிரியேல் நேரிடையாக மரியா
ளை சந்தித்து கடவுளின்மாபெறும் திட்டத்தை விளக்குகிறார்.இது மிக அவசியமானது.மரியாளின்
அச்சத்தைபோக்குவதுஆண்டவரின் செயலாகும். ஏனேனில், திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண் கருவுற்றால் அவர்கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது மோசேயின் சட்டம். (இனணச்சட்டம்) உபாகமம் 22:23, 24) கூறுகிறது. ஆனால் தூய யோசேப்பிடம் இறை தூதர் கனவில்தோன்றுகிறார்.கனவின்காட்சிகள் திரைப்படம் போல், (picturising) விளக்கப்படுகின்றன, இது மனதில்தெளிவாகபதிகிறது. எனவே, கடவுளின் திட்டத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். இருவரும் கூடி வாழும் முன் மரியா தூயாவியால்  கருவுற்றிருந்ததுதெரியவந்தவுடன்.யோசேப்பு அவர் மரியாவை இகழ்ச்சிக்குஉள்ளாக்கவிரும்பாமல்மறைவாகவிலக்கிவிடத்திட்டமிட்டார்.'இச் சூழலில் இறைதூதர் கனவின்மூலம்'யோசேப்புக்குவிளக்கினார்.யோசேப்புதூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே மூன்று கட்டளைகளை அவர் பணிவுடன் நிறைவேற்றுகிறார்.
 1. தம் மனைவியாக மரியாளை ஏற்றுக்கொண்டார்' 
2.  மரியா தம் மகனைப் பெற்றெடு க்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை.
3. யோசேப்பு அம்மகனுக்கு  இயேசு என்று பெயரிட்டார். 
(மத்தேயு நற்செய்தி 1:25).இது
உலக இரட்சகர் இயேசு கிறித்து வின் உலக வருகைக்குஇவர்கள் இனைந்து செயல்பட்டதால், உலகின் தூயவர்களாய் கருதப்
படுகின்றனர். ஆண்டவரின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்போம். ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாவோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Prof. Dr David Arul Paramanandam, 
Sermon Writer.
www.david Arul blogs.com
www.david Arul Sermon centre.com.



  




     இறை தூதர் யோசேப்பின்           கனவில் தோன்றுதல்:
Matthew 1:18-25

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.