புத்தாண்டு- உடன்படிக்கை நற்செய்தி 2024 (105)எண்ணிக்கை 6:22-27. கலாத்தியர் 4:4-7. லூக்கா 2:16-21

1.இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்..." (எண்ணாகமம்24:1.)
 இஸ்ரவேல் என்று சொன்னாலே தேவன் விரும்புகிற அல்லது தெரிந்துக்கொண்ட,நேசிக்கிற, மாற்றமடைந்த ஒரு மனிதன். மாற்றத்தைப் பெறும்போது தான், தேவனுடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்றுக் கொள்வதற்கு நம்மைத் தகுதிபடுத்துகிறார்.ஆண்டவர்
ஆபிராகமோடு உடன்படிக்கை
செய்து அவரின் சந்ததியை ஆசி
ர்வதித்துதெரிந்துகொண்டார்,
ஆண்டவரின் 7 உடன்படிக்கை
ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசே, தாவீது, ஆண்டவரின் புதிய உடன்படிக்கை, மற்றும்
நித்திய உடன்படிக்கை அனைத்தும் கடவுளின் மீட்பு
திட்டத்தை The plan of Redemption வெளிப்படுத்தியது.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
இந்த 2023, முடிந்து புத்தாண்டு 2024 பிறந்துவிட்டது,ஆசாரியர்கள் எவ்வாறு மக்களுக்கு ஆசி கூற வேண்டுமென்று ஆண்டவர் மோசேயிடம் கூறியது; நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" 
(எண்ணிக்கை 6:24 -26) என ஆசாரியர்கள் ஆசி வழங்க உடன்படிக்கை செய்கிறார்.   இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்..." (எண்ணாகமம்24:1). இஸ்ரவேல் என்று சொன்னாலே தேவன் விரும்புகிற அல்லது தெரிந்துக் கொண்ட,நேசிக்கிற,மாற்றமடைந்த ஒரு மனிதன். மாற்றத்தைப் பெறும்போது தான், தேவனுடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்றுக்கொள்வதற்கு நம்மைத் தகுதிபடுத்துகிறார். நாம் புதிய
இஸ்ரவேலர், நமக்கு ஆசி வழங்கி காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழி வாராக!ஆண்டவர் தம் திருமுக த்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ர யேல் மக்களிடையே நிலை நாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.என ஆண்டவர்
உரைக்கிறார். வரும் புத்தாண்டில் நாம் நமது தீமை செய்வர்களுக்கு நன்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
தனக்குத் தீமை செய்த தனது சகோதரருக்கு யோசேப்பு நன்மை செய்தபோது அவர்கள் தாங்கள் செய்தத் தவறை உணர்ந்து கொண்டார்களல்லவா. அவர்கள் யோசேப்புக்குச் செய்ய நினைத்த தீங்கையும் தேவன் யோசேப்புக்கு நன்மையாகவே மாற்றினார்
என்பதை காண்கிறோம். எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கடந்த ஆண்டு நடந்த கவலைகள் துக்கங்கள் துயரங்கள் தோல்விகள் எதையும் நினைக்க வேண்டாம் ஆண்டவர் நமக்கு வாக்கு கொடுக்கிறார்
முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறு களையும் உண்டாக்குவேன்.
என்கிறார்(ஏசாயா43:18,19)
எவைகள்எல்லாம்முடிந்துபோனது என்றுநீங்கள்நினைத்துக்கொண்டு இருந்தீர்களோ, அவைகள் இனிமேல்தான் துவங்கப் போகி றது.இனி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எந்த விதத்திலும் தகுதி இல்லாத வர்களாய் எல்லாம் முடிந்து போன நிலைக்கு வந்துவிட்டஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந் தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போயிற்று.’’ (ஆதி 18:11).
ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் குழந்தையில்லை, அவர்கள் வயது சென்ற முதியவர்களாய், அது மட்டுமல்ல அப்படிப்பட்ட நேரத்தில்தான் தேவன் “ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்’’ (ஆதி 18:10). என்று அவர்களுக்கு வாக்கு பண்ணுகிறார். ஆசிர் வழங்கு கிறார்.பிரியமானவர்களே, இன்றைக்கும் கர்த்தர் வாக்கு மாறாதவராக, தம்மை விசுவாசிக்கிற மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.
2. புத்தாண்டே வருக! புது வாழ்வு தருக!. Let, new year come and give a new life. லூக்கா 2:16-21.

கிறித்துவின் இறைமக்களே!
புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டை மகிழ்வுடன் வரவேற் போம். இயேசுபாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள்,இயேசுவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி இயேசு கிறித்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்த சேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலே முக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது.இது மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள்.8ம் நாள் இதை டிசம்பர் 25
முதல் 8ம் நாள் ஜனவரி-1 கணககிடப்பட்டு, புத்தாண்டு உலக முழுவதும் கொண்டாடப்
படுகிறது.கர்த்தர் உங்களுக்கு புதிதாக துவக்கப்போகிறார். இனி நடக்கவே நடக்காது என்று நீங்கள் முடிவு கட்டி, முற்றுப்புள்ளி வைத்தவைகளுக்கு, கர்த்தர் புதிய அத்தியாயத்தை எழுதப் போகி றார்.எந்த பிரச்சனையாக இருந் தாலும் சரி எல்லா வாசல்களும் மூடப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திரு க்கிறேன்’’ (வெளி 3:8) என்று சொன்னவர், உங்களுக்கு புதிய வாசலைத் திறக்கிறார். இதுதான்
புத்தாண்டு." உன் களஞ்சியங் களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையி டுவார்.உன்கடவுளாகியஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய். 
(இணைச் சட்டம் 28:8- உபாகமம்)
"இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். 
(எசாயா 43:19) ஆண்டவர் உன்னை காக்கிறவர்.
 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம். 
(எசாயா 60:20) இப்புத்தாண்டில் ஆண்டவருக்கு நாம் பிரியமா நடந்தால் நம்முடைய துக்க நாட்கள் முடிந்து போகும், உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.( சங்கீதம் 91:11) கர்த்தர் நம்மை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையி டுகிறவர்.எந்தவாதையும்உன்னை அணுகாதப்படி காக்கிறவர், நீ மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, ஆபத்திலே அவரே உன்னோடி ருந்து உன்னை தப்புவித்து பாதுகாத்து வழி நடத்துவார், ஆண்டவரை நம்பி நீங்கள் அவரின்  நம்பிக்கை பாதையில் இப்புத்தாண்டை வரவேற்றுங்கள்.
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிற மனுஷன் எவனும் அவன் பாக்கியவான் அவனுக்கு புது வாழ்வு அளிக்கின்றார் அவன் வாழ்வில் ஏற்றத்தையும் அவனை வாலாக் காமல் தலையாக்குவார். மத்தேயு 5:44ன்படி, சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள்,
கடவுள் தாமே இப் புத்தாண்டில் அவரின் ஆசிர்வாதங்களோடு நம்மை காத்து வழிநடத்துவராக! ஆமேன்,

 Prof. Dr. David Arul Paramanandam, 
Sermon Writer. 
www.davidarulblogspot.com 
www.davidarulsermoncentre.com 

   Message delivered at CSI John's Church, Singaperumalkoil.


 "அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார். "
இணைச் சட்டம் 28:1
















இயேசு கிறிஸ்துவின் பிறப்பைச் சித்தரிக்கும் ஓவியம்





Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.