ஆண்டவர் அருகில் உள்ளார்! அகமகிழ்க!. (102) REJOICE, THE LORD IS NEAR. செக்கரியா 2:6-13, திருப் பாடல் 50:1-15 1 தெச லோனிக்கியர் 5:12-24, யோவான் 16:16-24. . 4 காம் திருவருகை ஞாயிறு.
முன்னுரை:
கிறித்தவின் அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
"ஆண்டவர் அருகில் உள்ளார்! அகமகிழ்க" என்ற தலைப்பில்
தியானிக்க இருக்கிறோம். "நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” இது சிவ வாக்கிய சித்தரின் கூற்று. நாதனாகிய கடவுள் உள்ளத்தில்
வாசம் செய்கிறார். கடந்தும் உள்ளும் இருபவர் கடவுள். உள்ள த்தில் வாசம் செய்யும் கடவுளுக்கு ஏற்றவாறு " தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு நற்செய்தி 5:8) என்பதே ஆண்டவருடைய நல் வார்த்தை.ஆண்டவரின் மறு பெயரே இம்மானுவேல்" கடவுள் நம்மோடுஇருக்கிறார். தூய்மை உள்ளமேகடவுள் வாழும் இல்லம். கிறித்துபிறப்பை கொண்டாடும் நாம், நம் உள்ளத்தை தூய் மையாக வைப்போம். ஆண்டவர் நம் அருகில்(Near)இருக்கிறார். எனவே, உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வோம். 2000ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இயேசு கிறிஸ்து இன்றும் நம் அருகில் இருக்கிறார் அகமகிழ்வோம். தூய பவுல் அடிகளார் பிலிப்பியர்களுக்கு எழுதும் போது, " ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும்கூறுகிறேன்,மகிழுங்கள்.
கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். (பிலிப்பியர் 4:4,5). தூய ஆவியின்
வழியாகவே ஆண்டவர் நம்
அருகில் இருக்கிறார். நம்மை என்றும் கைவிடாத கர்த்தர், நம் மோடு இருக்கிறார், நம் அருகில் இருக்கிறார், நம் உள்ளத்தில் இருக்கிறார். எனவே நாம் மகிழ்ச் சியுடன் ஆண்டவரின் பிறப்பின் பண்டிகையை கொண்டாடுவோம்.
1.ஆண்டவர் வருகிறார் அகமகிழ்:The Lord comes. Rejoice. செக்கரியா 2:6-13. கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! செக்கரியா என்றாள்"கடவுள்நினைவுகூர்ந்தார்" என்றபொருளாகும். இவர் காலம் கி.மு. 520 முதல் 510 இருக்
கலாம் என்கின்றனர். இவர் காலத்தில், எருசலேம் மக்கள் பாபிலோன் நாட்டில் அடிமையாக இருந்தனர். அவர்களை அவ்விடத் தில் இருந்து விடுதலை பெற்று திரும்புவதற்காக சீயோன் குமார த்தையே மகிழ்ந்து களி கூறு என
தீர்க்கர் நம்பிக்கையை தருகிறார்.
நீங்கள் பாவ நகரமாகிய பாபிலோ னிடமிருந்து விடுதலை பெறவே
கடவுள் விரும்புகிறார்.
" மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுத ப்பட்டிருந்தது; "பாபிலோன் மாந கர் விலைமகளிருக்கும் மண் ணுலகின் அருவருப்புகள் அனை த்துக்குமே தாய்" என்பதே அதன் பொருள். (திருவெளிப்பாடு 17:5)
இஸ்ரவேலரை எதிர்க்கும் நாடு கள் ஆண்டவரின் நியாய தீர்பிற்கு
தப்புவதில்லை, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணி யைத் தொடுகிறான்' என்கிறார்."
(செக்கரியா 2:8) என புதிய நம்பிக்கையை இஸ்ரவேலிற்கு கொடுக்கிறார் எனவே,
"மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான்வருகிறேன்; வந்துஉன்நடுவில்குடிகொள்வேன்" என்கிறார் ஆண்டவர்.
(செக்கரியா 2:10) ஆண்டவர் வருகிறார், வேற்றினத்தாரும் அவரை ஏற்றுக்கொள்வர். ஆண்டவர் தன் வருகைக்கு புனித நகரமாகிய எருசலேமை தேர்ந் தெடுப்பார், ஆண்டவர் பிறக்கி ன்ற இடத்தை குறிப்பாக உணர்த் துகிறார் தீர்க்கர். அன்பின் இறை மக்களே ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ஆண்டவருக்கு முன்பும் ஆண்டவருக்கு பின்பும் சமாதான நகரமாகிய எருசலேம் என்றுமே சமாதானமாக இல்லை ஏனெனில் ஆண்டுவராகிய ஏசுவின் தீர்க்க தரிசன வார்த்தை; ஆண்டவரின் சிலுவை பயணத்தில், எருசலேம் பெண்களைப் பார்த்து, "இயேசு "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்.
(லூக்கா நற்செய்தி 23:28) இவ்வார்த்தை இந்நாள் வரையி லும் பொருத்தமாக இருக்கிறது.
இருப்பினும், ஆண்டவரின் பிறப்பு உலக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாகும், "வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
(லூக்கா நற்செய்தி 2:10) எனவே ஆண்டவர் வருகிறார், நமக்காக பிறக்கிறார், மகிழ்ந்து களி கூருவோம், மகிழ்வோடு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவோம் .
2 ஆண்டவர் வருகிறார், இறை வாக்கில் நிலைத்திருங்கள்:
Be Firm in God's words. 1 தெச லோனிக்கியர் 5:12-24
கிறிஸ்துவுக்குபிரியமானவர்களேபவுல் அடிக்கிறார் கி,பி 51 ம் ஆண்டில், எழுதிய முதல்நிருபம்.
மாசிதோனியவில் உள்ள ஒரு துறைமுக நகரம் தான் தெச லோனிக்கா. அங்கு அதிகமான யூதர்கள் இருந்தார்கள் அவர் களுக்கு கிறித்துவின் அறிவுரை யாகஇந்தபகுதிவிளங்கப்படுகிறது. நாம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகின்ற நாம் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு விரும்புகிறேன். கிறிஸ்தவ நெறியில், அறிவில் வாழ்ந்திடவும் மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பில் முன்மாதிரியாக திகழுவுமே இந்த அறிவுரைகள். பவுல் அடிகளார் அங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு;
உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்துநடக்கும்படி கேட்டுகிறார் நாம் பிறரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஆங்கிலத்தில் கூறுவார்கள் Give respect and take respect.. நாம் மற்றவரை மதிக்கின்ற போது தான் நாம் மதிக்கப்படுவோம். அன்போடு நாம் மற்றவரை கருதும் பொழுது நமக்கு அமைதி நிலவும்,சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்;மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; மிக முக்கியமாக கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரோடும் பொறுமை யாயிருங்கள். எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த் துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள். வேதம் கூறுகிறது, " நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்"
(எசாயா 1:17)
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். ஆண்டவர் அருகில் இருக்கிறார்.இடைவிடாது இறைவனிடம் கேளுங்கள், அது
உங்களுக்கு கொடுக்கப்படும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்க ளாக இருங்கள். இறை வாக்கை உள்ளத்தில் வைத்து செயல் படுத்துங்கள், புறக்கணிக்க வேண்டாம். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள். தூய ஆவியின் செயல்பாட்டையும், வரங்களையும் தடுக்க வேண்டாம்.தீமைகளையும் விட்டு விலகுங்கள். இது உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது.அமைதி அருளும் கடவுள் தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக! இதுவே
என்னுடைய கிறிஸ்மஸ் செய்தி.
3.ஆண்டவர் வருகிறார், ஆனந்தம் அடைவீர்.The Lord is coming, Let us Rejoice. யோவான் 16:16-24.
கிறிஸ்துவுக்குபிரியமானவர்களே ஆண்டவர் வருகிறார் அவர் வருகை நம் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது, ஆண்டவரின் பிறப்பு எல்லா மக்களுக்குமான மகிழ்ச்சியின் நற்செய்தியாகும். எனவே தான் கிறிஸ்மஸ் ஒருநாள் கொண்டாட்டம் அல்ல, உலகத்தில் ஒரு மாத கொண்டாட்டமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்ப டுகிறது, யோவான் 16ம் அதிகாரம்
இயேசு சிலுவையில் அறையப்ப டுவதற்கு முந்தைய கடைசி(The Lasr Supper) இரவில் தனது சீடர்க ளிடமிருந்து விடைபெறும் உரை யாடல். தன்சீடர்களிடம் "இன்னும் சிறிதுகாலத்தில்நீங்கள்என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக்காண்பீர்கள். என சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் அறிவிக் கிறார். மீண்டும் அவரை காண் பதே மகிழ்ச்சியாகும். உலகத்தில் துன்பங்கள் உண்டு துயரங்கள் உண்டு. ஆனால் நீங்கள் உறுதி யாக இருங்கள் உங்கள் துக்கம் துயரங்கள் சந்தோஷமாக மாறும், மகிழ்ச்சியாகும்.இயேசு என்றாலே இன்பம் பிறக்கும், அமைதி உண்டாகும். ஆண்டவர்எங்கேயோ அங்கே சந்தோஷமுண்டு. எரேமியா தீர்க்கர், "நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உன் சொற்கள் எனக்குமகிழ்ச்சிதந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. என கூறுகிறார்.
(எரேமியா 15:16) ஆண்டவரின் அருள் நிறைந்த வார்த்தைகளே உள்ளத்தில் மகிழ்ச்சி. தூய பவுல் அடிகளார் தூய ஆவியின் கனி யாக மகிழ்ச்சியை கூறுகிறார்.(கலாத்தியர் 5:22) கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை தருகிறது இந்த மகிழ்ச்சியை நாம் வார்த்தை களாக மற்றவருக்கு தெரிவிக்கி ன்றோம், Happy Christmas என்ற
வார்த்தை இறை வார்த்தை, உலகில் உள்ள அனைத்து மொழி களிலும் உச்சரிக்கப்படுகிறது. ஆண்டவர், தன் சீடர்களிடம்
" இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங் கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். (யோவான் நற் செய்தி16:24) என உறுதியளிக்கி
றார். கிறிஸ்தவர்கள் "மகிழ்ச்சி யின் திறவுகோலாய்" (Christians are the Key of Joy") இருக்க வேண் டும். எனவேதான் ஆண்ட வரின் பிறப்பை பரிசுகள் கொடுத்து மற்றவர்களை மகிழ்விக்கிறோம். அதன் மூலம் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆண்டவரின் அன்பின் நோக்கமே, விண்ணக த்தின் மகிழ்ச்சியை (The joy of Heaven) பூமியில் கொண்டு வருவது, இதை ஆண்டவரின் இறை பிள்ளைகளாகிய நாம் தான் செயலாற்ற வேண்டும்.. கிறிஸ்மஸ் பகிர்ந்து கொடுக் கின்ற பண்டிகை நம்மிடத்தில் இருப்பதில் கொடுங்கள், கொடுக்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான். கிறிஸ்மஸ் என்பது பகிர்ந்து கொடுப்பது. இதனால் தான் திருவள்ளுவரும் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்"
எனக் குறிப்பிடுகிறார். கடவுள் உங்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், பலருக்கு கொடுத்து உதவவும், உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும், தேவையான எல்லா செல்வத்தையும், அருளையும் ஆசீர்வாதத்தையும், சுகத்தையும் நலத்தையும், கொடுத்து மகிழ்ச்சி யுடன் இந்த பண்டிகையை கொண்டாட அருள் புரிவாக.
உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulblogspot.com
www.davidarulsermoncentre.com.
" இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக் கிறார். "
(லூக்கா நற்செய்தி 2:11)
Comments
Post a Comment