எகிப்து வந்தாரை வாழ வைக்கும் நாடு.(101)
கிறித்துவின் அன்பர்களே! இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உலகிலேயே மிக
சிறந்த பண்டைய 'ஆற்று நாகரிக நாடகவும், வெண்கல வயது கால த்தில் (Bronse Age) சிறந்து விளங் கியது, கி,மு 6000 த்தில் துவங்கி
கி.மு. 3150 அளவில் இதன்
வளர்ச்சியின் பரிணாமம் தொடங்கியது. பண்டைய எகிப்து, உலகின் ஆறு நாகரிகங்களில் ஒன்றாகும். பண்டைய எகிப்து நாகரிகத்தின் வெற்றி "எகிப்தின் நன் கொடை" என சொல்லப்படு கிற நைல் ஆறு தான் நாட்டை வளமானதாக்கியது, எகிப்தியர்கள் உலகிலேயே முதன் முதலில் நீர் மேலாண்மை திட்டத் தை கொண்டுவந்தவர்கள்.பஞ்சம் என்பதே கானாத நாடு.
பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிடுகளாகும்.
தூய வேதாகமத்தின் வரலாறு எகிப்துடன் இணனந்துள்ளது, எகிப்து வந்தாரை வாழ வைக்கும் நாடு. முதன் முதலில் ஆபிராம் வாழ்ந்த ஆயி (கானான்) பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது, அந்தக் குடும்பம் எகிப்துக்குச் செல்கிறது, அங்கு பார்வோன், சாராவின் அழகால் மயங்கி, அவளைத் தன் துணைவியாக மாற்றிக் கொண்டான். ஆபிரகாம் தன்னை அவளுடைய கணவனாக அல்ல, அவளுடைய சகோதரனாக அறிமுகப்படுத்தியதால் அவள் திருமணமானாள். பார்வோன் சாராளுக்கு ஈடாக ஆபிராமுக்குப் நன்மை செய்தான்; ஆடு மாடுக ளையும் கழுதைகளையும், வேலை க்காரரையும்,வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான். (தொடக்கநூல் 12:16) ஆண்டவர், சாராள் நிமித் தமாக பார்வோனையும் அவனது குடும்ப உறுப்பினர்களையும் பிளேக் தாக்குகிறது. இதற்கு சாராதான் காரணம் என்று பார்வோன் தீர்மானிக்கிறார். சாரா ஆபிரகாமின் மனைவி, அவருடைய சகோதரி மட்டுமல்ல, அவர் அவளை அவரிடம் விடுவித் தார்,மேலும்கால்நடைகள்,அடிமைகள் எதையும் அவன்கொடுத்ததை தன்னிடம் திருப்பித் தருமாறு கேட்கவில்லை, மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க செல்வத்துடன் இடையூறு இல்லாமல் எகிப்தை விட்டுவெளியேறினர்,இரண்டாவதாக எகிப்து நாட்டு அடிமைப் பெண்ணாகிய ஆகார் தன் மகன் இஸ்மவேலு க்கு எகிப்து நாட்டின் பெண்னை மன முடித்தாள்.
மூன்றாவதாக யாக்கோபின் புதல்வர் யோசேப்பை தன் சகோதரர்களால் இஸ்மவேலரு க்கு விற்றுப் போட, அவர் எகிப்துக்கு கொண்டு செல்லப் பட்டு, தான் உத்தமனாய் இருந்த தினால் ஒரு அரசன் அளவிற்கு உயர்த்தப்பட்டான், பாலும், தேனும்
ஓடும் கானானில் ஏற்பட்டபஞ்சம், அவனின் தந்தை,சகோதரர்கள் என , யோசேப்பு, எழுபது நபர்க ளைக் கொண்ட தன் குடும்பத்தி னர் அனைவரையும் எகிப்தில் கோசென் தேசத்தில் வந்து வசிக் கும்படி அழைக்கிறார். யாவரும் எகிப்தில் குடியேறினர். பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு எகிப்து தஞ்சம் கொடுத்தது. அவர்கள் வம்சமும் எகிப்திலே பலுகி பெறு கினர், ஆறு லட்சம் அளவிற்கு மக்கள் தொகை. 430 ஆண்டுகால அடிமைவாழ்க்கை மோசே மூலம் ஆண்டவரின் அற்புதமான வழி நடத்துதால் விடுதலை அடைந் தனர்.
பின்பு,வேதத்தில், கிமு 597 இல் யூதா இராச்சியம் அழிக்கப்பட்ட பின்னர், பல யூதர்கள் எகிப்தில் தஞ்சம் புகுந்தனர். யூதஆளுநரின் படுகொலை, கெதலியா கொள்ள ப்பட்டான். (2 ராஜாக்கள் 25: 24-26) எகிப்தில், அவர்கள் Migdol, Tahpan hes,.Noph,மற்றும்Pathros(Jeremiah44:1 ).இல்குடியேறினர். இவர்களு க்கு ஏரேமியாவின்வாக்கு உரைக் கப்பட்டது.
தாவீதின் குமாரனாகிய சாலமோன் எகிப்தின் பார்வோன் மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டார். அதற்கு திருமண பரிசாக கெசார் என்ற எகிப்து நாட்டை சாலமோனுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது.(1 அரசர் 3:1)
இதன் பிறகு சாலமோன் எரொபியாமைக் கொல்ல வழி தேடினார். ஆனால், அவன் எகிப்திற்குத் தப்பி ஓடி அங்கு எகிப்திய மன்னன் சீசாக்கிடம் தஞ்சம் புகுந்து, சாலமோன் இறக்கும் வரை அங்கேயே தங்கி யிருந்தான்.
(1 அரசர்கள் 11:40)
சாலமோனின் மகனாகிய ரெகபியாம் முதலாம் யூதா அரசன், இவனை எகிப்த்தின் அரசன் கீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, ஆண்டவரது இல்லத்தின் கருவலங்கள், அரண் மனைச் செல்வங்கள் அனைத்தை யும் சூறையாடினான். மேலும், சாலமோன் செய்திருந்த பொற் கேடயங்களையும் எடுத்துச் சென்றான். (2 குறிப்பேடு 12:9)
புதிய ஏற்பாட்டில் மத்தேயு நற்செய்த நூலில் கூறப்பட்ட படி ஏரோது அரசனுக்கு பயந்து ஆண்டவரின் தாயாக மரியாளும் யோசேப்பும் குழந்தை இயேசுவோடு பெத்லேகமை விட்டு 690. 64 கி,மீ நடந்து எகிப்துக்கு சென்று ஏரோது மரணம் வரை அங்கு வசிக்கின்றனர். ஆபிரகாமால்
தொடங்கப்பட்ட எகிப்து பயணம்
ஆண்டவராகியஇயேசுகிறித்து
வில் முடிவடைகிறது.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulblogspot.com
www.david arul sermon centre.com
Comments
Post a Comment