படைப்பின் நன்மை தன்மை (109)THE GOODNESS OF CREATION. தொடக்க. நூல்(Genesis)1.24-31, திரு.பாட 104:1-13.எபேசி 1:3-14. மத்தேயு 6: 9-13. (28/1/2024)
முன்னுரை: கிறித்துவின் அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். " படைப்பின் நன்மை தன்மை " என்ற தலைப்பில் தியானிப்போம். "கடவுள் புற்பூண்டுகளையும், விதையைப் பிறப்பிக்கும் செடி களையும், கனிதரும் மரங்களை யும், அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். (தொடக்கநூல் 1:12) கடவுள் நல்லவர். அவரின் பண்பு கள் எப்பொழுதும் நல்லவை. அவரின் குணாதிசயங்கள் மிக நல்லவை.சங்கீதகாரன் கூறுவது போல், "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு. (திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 136:1) ஆண்டவர் என்றும் நல்லவர் எனவே அவரின் படைப்பனைத்தும் அவர் நல்ல தாக கண்டார். நன்மையானதை படைப்பதே அவரின் அநாதி திட்டம். கடவுள் நல்லவரா இருப்பது போலவே அவரின் பிரதான படைப்பான மனிதனும் நல்லவனாக இருக்க வேண்டும் ஆண்டவரின் படைப்பை காக்கின்ற மக்களாய் இருக்க வேண்டும் படப்பை காப்பதே மனிதனின் தலையாய பொறுப்பு இதை மீறுகின்ற போது வருகிறது மிகப் பெரிய இயற்கையின் அநீ திகள் சோதனைகள் புயல் மழை வெள்ளம் பாதிப்புகள்.ம...