அழைப்புக்கு ஏற்ப தகுதியாக வாழுங்கள் (106) Live worthy of your calling.நீதி மொழிகள்: 20:1-11, சங்கீதம் 14. ரோமர் 6:12-23, மத்தேயு 7:16-23.(7-1-2024)
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாம த்தில் புத்தாண்டு வாழ்த்துக்க ளுடன், இம்மாத முதல் வாரத்தில் ஆண்டவருடையஇறைசெய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அழைப்புக்கு ஏற்ப தகுதியாக வாழுங்கள் என்ற தலைப்பில் கடவுளின் வார்த்தையை தியானிப்போம்.
பழைய ஏற்பாட்டில் கடவுள் பல இறைவாக்கினரைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அவர்கள் அறிவு, ஆற்றல், திறமை என்று பாராமல் ஆபிரகாம், மோசே, எசாயா, எரேமியா, ஆமோஸ்எனப்பாமரர்களைத்தான் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு தேர்ந்தெடுத்த யாருமே பெரிய பட்டமோ பதவியோ பெற்ற வர்கள் அல்ல, மீனவர்கள், வரி வசுலிக்கிறவர்களைதான்
அழைத்தார். அழைப்பு கடவுளின் அனாதி திட்டம். அழைப்பிற்கேட்ப
வாழ்வதே அதன் வெற்றியாகும்.
கடவுளின் அழைப்பு என்பது உன்னதமான கொடையாகும். Calling is a gift of God. கடவுள் அந்தக் கொடையை நம்முடைய திறமையை பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ கொடுப் பதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குவதாகும். கடவுளின் அழைப்பு இந்த உலகில் அவரின் இறையாட்சியை அமைப்பதே. அதற்காகவே நம்முடைய வாழ்வு அமைய வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். கடவுளின் அழைப்பு அனைவருக்கும் ஆனது.
மேலும் ஆண்டவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறு தல் தருவேன். (மத்தேயு 11:28).
ஆண்டவருக்கு நிகரான வாழ்வு வாழ்வதே அழைப்பாகும்.
நீதி அரசர் சாலமன் "எவர் களங் கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற் குப்பின் நற்பேறு பெறுவார்கள்.
(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 20:7). நம் நேர்மையான வாழ்வை வாழ்கின்ற பொழுது நாம் பிள்ளைகளும் நற்பெயர் பெறுவார்கள்.
1. தகுதியாக வாழ்வது எப்படி?
How do we live worthy? ரோமர் 6:12:23.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தகுதியாக வாழ்வது எப்படி? ஆண்டவர் எதை தகுதி என்று குறிப்பிடுகிறார். தூய பவுல்
அடிகளார், ரோம திருச்சபை யாருக்கு எச்சரிக்கையுடன் எழுது
வது என்னவெனில்; "உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.
"Do not let sin reign in your mortal body so that you obey its evil desires.”
என எச்சரிக்கிறார். கிறிஸ்தவர்கள் பாவத்தில் தொடர் ந்து வாழ்வதை ஆண்டவர் விரும்புவதில்லை, நாம் பாவம் செய்கிறோம் ஆனால் மனமார விரும்புகிறோம் என்றால் நம் பாவங்களை அவர் மன்னிக்க தயாராக இருக்கிறார். நாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நமக்கு கொடுக்கப்பட்ட இரட்சிப்பை இழந்து விடாமல் பாவத்தை விட்டு விலகிவிட வேண்டும். " இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத் திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(யோவான் நற்செய்தி 8:34) எனவே, நாம் எதற்கும் அடிமை இல்லை. ஆண்டவரால் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். எனவே நம் வாழ்வில் பாவம் தொடராமல் இருக்க விடுதலை பெறுவோம்.
"அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசு வோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள்என்பதைஎண்ணிக் கொள்ளுங்கள். (உரோமையர் 6:11) நம்மை என்னாலும்,
பாவம் நம் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நாம் இப்போது சட்டத்துக்கு( நியாய பிரமானம்) உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, ஆண்டவரின் அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். (உரோமையர் 6:14)
என பவுல் அடிகளார் நம்மை ஆண்டவரின் கிருபையின் ஆட்சிக்கு உடன் பங்காளர்களாக இருக்க அழைக்கிறார். கடவுளின் வார்த்தைப்படி வாழ்வதே தகுதி யான வாழ்க்கை. ஆண்டவர், நம்
சரீரத்தை நீதியின் ஆயுதமாக பயன்படுத்த விரும்புகிறார்.
முன்பு, பாவத்திற்கு அடிமையாய்
இருந்த நாம் ஆண்டவரின் விலை
யெறப்பட்ட இரத்தத்தினால் விடுதலையாக்கப்பட்டோம், இந்த
தகுதி ஆண்டவர் கொடையாக
நமக்கு தருகிறார். பாவம் நம்மை
ஆண்டவரிடமிருந்து பிரிப்பதால்,
நம் போராட்டம் எப்பொழுதும்
பாவத்தை எதிர்த்தே இருக்க
வேண்டும். நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று கடவுளின் இறையாட்சியை உலகில் கொண்டு வருகின்ற வாழ்க் கையை வாழ்வதே நம் தகுதி ஆகும். இதன் மூலமே நிலையான
தூய வாழ்வு பெறமுடியும், தூய வாழ்வுக்கு எதிரானது பாவம், இதன் கூலி மரணம்,மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள் கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு. இத் தகுதியை
கடவுள் நமக்கு தருகிறார்.
2.அழைப்புக்கு ஏற்ப தகுதியாக வாழுங்கள் Live worthy of your calling (மத்தேயு 7:16-23)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்மை அழைத்த ஆண்டவர் உண்மையுள்ளவர்,ஏற்றகாலத்தில் நமக்கு என்ன செய்யவேண்டுமோ அதை தகுதியாகநமக்குசெய்வார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது அழைப்புக்கு ஏற்ப தகுதியாக நாம் வாழ வேண்டும் என்பதே. இது தான் கிறிஸ்துவத்தின் அடிப்படை வாழ்வியல் கருத்தாகும். கிறிஸ்து உடையவர்கள் நம் வாழ்வும் கிறிஸ்துவுக்கு உடையதாக இருக்க வேண்டும். ஆண்டவர் தன் மலை பிரசங்கத்தில் கிறிஸ்தவர் கள் எப்படி வாழ வேண்டும் என்பதை கனி தரும் வாழ்விற்கு
ஒப்பிடுகிறார். நம் வாழ்வின்
அடிப்படை அம்சமே, கிறித்துவை
பிரதிபளிப்பது. இதுவே நற் கனி
யாகும். கெட்ட கனி என்பது கீழ்
படியாமை, ஆநீதியை குறிக்கும்.
திருமுழுக்கு யோவான் அவர்கள்
"பாவமன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்றும் மனம் மாறியவர்கள் என்பதை அதற் கேற்ற செயல் களால் காட்டுங்கள். (லூக்கா நற்செய்தி 3:8) என மன மாறி
கனி தரும் வாழ்வை வாழ வேண் டுகிறார். மனம் மாறுவதே கனி
தருவதாகும். என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசு க்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தை யின் திருவுளத்தின்படி செயல் படுபவரே செல்வர்.
(மத்தேயு நற்செய்தி 7:21) நம்
வாழ்வு விண்ணரசை மையமாக
வைத்து வாழவேண்டும். இது
ஆண்டவரின் விருப்பமும், அருள்
வாக்காகும், திருமுழுக்கு யோவானோ நம் வாழ்வு பகிர்ந்து
கொடுப்பதிலே, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாத வரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும்அவ்வாறே செய்யட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 3:11), அவ்வாறு செய்ய
வது கிறித்தவ அன்பை வெளிப் படுத்துவதாகும்.
நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரேமகனைஉலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீதுவைத்தஅன்புவெளிப்பட்டது. (1 யோவான் 4:9). நம்வாழ்க்கை
அன்பின் அடிப்படையினாலானது
நம் வாழ்வின் தகுதி இவர்களை விட சிறந்து விளங்க வேண்டும்.
" மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
(மத்தேயு நற்செய்தி 5:20) இதை சிந்திக்க வேண்டும். நாம் நம் குடும்பம் நம் பிள்ளைகள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம் " ஒருவர் கிறிஸ்து வோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்ட வராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! (2 கொரிந்தியர் 5:17)
. நாம் கிறிஸ்துவோடு இனைந்திருக்கிறோம் கிறிஸ்து கடவுளோடு இணைந்திருக்கிறார் எனவே நம்மை கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? இந்த உலகத்தின் அதிபதியால் முடியாது? நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களாய் கிறிஸ்துவின் அன்பின் அச்சு அடையாளங்களை நம் வாழ்வில் அணிந்திருப்பதால் கிறிஸ்து வின் அழைப்பிற்கு ஏற்ப தகுதியாய் வாழ்வோம். கடவுள் அவ்வாறு செய்ய நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.
Prof. DR. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com,
www.davidarulblogspot.com.
" இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். "
(மத்தேயு நற்செய்தி 5:16)
Comments
Post a Comment