படைப்பின் நன்மை தன்மை (109)THE GOODNESS OF CREATION. தொடக்க. நூல்(Genesis)1.24-31, திரு.பாட 104:1-13.எபேசி 1:3-14. மத்தேயு 6: 9-13. (28/1/2024)
முன்னுரை:
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
"படைப்பின் நன்மை தன்மை" என்ற தலைப்பில் தியானிப்போம்.
"கடவுள் புற்பூண்டுகளையும், விதையைப் பிறப்பிக்கும் செடி களையும், கனிதரும் மரங்களை யும், அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
(தொடக்கநூல் 1:12)
கடவுள் நல்லவர். அவரின் பண்பு கள் எப்பொழுதும் நல்லவை. அவரின் குணாதிசயங்கள் மிக
நல்லவை.சங்கீதகாரன் கூறுவது
போல், "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு. (திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 136:1) ஆண்டவர் என்றும் நல்லவர் எனவே அவரின் படைப்பனைத்தும் அவர் நல்ல தாக கண்டார். நன்மையானதை
படைப்பதே அவரின் அநாதி
திட்டம். கடவுள் நல்லவரா இருப்பது போலவே அவரின் பிரதான படைப்பான மனிதனும் நல்லவனாக இருக்க வேண்டும் ஆண்டவரின் படைப்பை காக்கின்ற மக்களாய் இருக்க வேண்டும் படப்பை காப்பதே மனிதனின் தலையாய பொறுப்பு இதை மீறுகின்ற போது வருகிறது மிகப் பெரிய இயற்கையின் அநீ திகள் சோதனைகள் புயல் மழை வெள்ளம் பாதிப்புகள்.மனிதன் படைக்கப்பட்ட பிறகு இறைவன் தன்னுடைய எண்ணத்தை மாற் றிக்கொண்டதை திருமறையில் நம்மால் காண இயலும். படைக் கப்பட்ட அனைத்தும் மனிதனுக்கு உகந்ததாகவும் அவன் நிம்மதி யாக வாழவும் தகுதியாக உள்ளதா என்பதை கடவுள் உறுதிப்படுத் தினார் என்பதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்வை நாம் காண இயலும். "பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்." (தொடக்கநூல் 2:18) தான் உருவா க்கிய ஒரு குறிப்பிட்ட செயல் நன் றாக இல்லை என்பதை இறைவன் பின்னர் கண்டறிகிறார்.ஒரு ஆண் தனியாக இருப்பது "நன்றாக இல்லை" என்று காண்கிறார். அவனுக்கு துணை இருப்பதுதான் நல்லது என்று தன்னுடைய முதல் முடிவை மாற்றி அவனுக்கு ஒரு பெண் துணையை படைக்கிறார். படைக்கப்பட்ட அனைத்தும் நன் றாக இருக்கிறது என்பதை கடவுள் உறுதி செய்கிறார் என்பதே கற்பனைக்கு எட்டாத ஒரு செய லாக உள்ளது. ஒன்றே நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் படைப்பு அனைத்தும் உயிர் வாழ ஒன்றை ஒன்றும் சார்ந்து வாழ வேண்டும் என்பது ஆண்டவரின்
கட்டளையாகும். Inter dependency is
God's divine rule. ஆண்டவர் படைத் த அனைத்தும் நன்மையானதை செய்கிறது. மனிதனின் வீழ்ச்சி கடவுளின் படைப்பின் தோல்வி. இதை சீர் செய்ய இயேசு கிறித்து அனுப்ப்படுகிறார். எனவே இறைவன் படைத்ததெல்லாம் மனிதனுக்கே. அவைகளில் எதுவும் சரியில்லை என்று கூறிக் கொண்டு புதிதாக உருவாக்கும் பொழுது நாம் தவறு செய்கி றோம்.ஏனெனில் நம்முடைய அறிவு என்பது எல்லைக் குட்பட் டது.ஆனால் கடவுளுடைய அறி வோ எல்லையிலாதது.அவரே அனைத்தையும் படைத்து காத்து
வருகிறார்.ஏசாயா தீர்க்கர்
"உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுளகடவுள்;அவரேவிண்ணுலகின்எல்லைகளைப்படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப் படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. (எசாயா 40:28) படைப்பில் அவர் சோர்ந்து
போவதில்லை. படைத்து நம்மை
காத்துவருகிறார். சங்கீதக்காரன்
கூறுவதுபோல்; "இதோ! இஸ்ரயே லைக் காக்கின்றவர் கண்ணயர் வதுமில்லை; உறங்குவதும் இல்லை".திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 121:4) எனவே ஆண்டவரின் படைப்பில் நன்மைத் தன்மையே இருக்கிறது. மனிதனின் சுய லாப த்திற்காக கடவுளின் படைப்பை அழித்து வருகிறான். அழிவை தடுப்பது படைப்பை பாதுகாப்பது நம்முடைய கடமை அல்லவா? நாமும் ஆண்டவருடைய படைப்பை நல்லது என காண் போம். அவைகளுக்குநல்லதையே செய்வோம்.
ஏன் கடவுள் நன்மை தீமை அறிய தக்க மரத்தை தோட்டத்தின் மையத்தில் படைத்தார்? Why God had planted the tree of knowledge of good and evil? கடவுள் "கீழ்படிதல்' என்ற கட்டளையை மனிதனுக்கு
பாடமாக வைக்கிறார். இதில்
மனிதன் தோல்வியுற்று முதல்
பாவத்தை செய்கிறான். Disobedience is the First sin in the World.மனிதன் ஒரு மரத்திற்கு ஒப்பாக இருக்கிறான்.நல்ல மரம்
நற்கனியை தரும். நற்கனி தராத
மரங்களை வெட்டி தீயிலே போடுவார்கள். அதனதன் கனியின் மூலம் அவைகளை அறிந்துக்கொள்ளாலாம்.
"ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்றாள்.
(தொடக்கநூல் 3:3) நாம் ஆண்ட வருக்கும் மற்ற எல்லா மக்களுக்கும் நற்கனி தரும் மரங்களாய் வாழ்வோம்.
1.படைப்பை காப்பது மனித னின் கடமை. The Prime Duty of Mankind is to Protect the Creation. தொடக்க. நூல்(Genesis)1.24-31,
கிறித்துவின், அன்பு இறை மக்களே!. பூமியின் வயது என்ன? அதாவது, இந்த பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிறது? என்றால்"சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு இந்த பூமி தோன்றியிருக்கவேண்டும்" என்று அறிவியல்அறிஞர்கள் சொல் கிறார்கள்.(Wikimedia source). ஆண்டவர் படைத்த உலகில் டைனோசர்கள். ( தொன்மா) 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின ,( 243 மற்றும் 233.23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்கு களையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
(தொடக்கநூல் 1:24,25) ஆனால் சூழ்நிலை காரணமாகவும், இயற் கை மாறுபாட்டின் நிமித்தமாகவும் டைனோசர் போன்ற விலங்கின ங்கள் மற்றும் பிற உயிரினங்கள் அழிந்து போயின. நோவாவின்
காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அழிந்து போயின.(Extinct) ஆனால் ஆண்டவர் புதிய புதிய உயிரினங்களை படைத்துக் கொண்டு வருகிறார். படைப்பு என்பது ஒரு தொடர் நிகழ்வு. அதை காத்து வருவதே மனிதனு டைய கடமையாகும். படைப்பை காக்கும் தவறம் மனிதர்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார். அவர் படைப்பு அனைத்தும் நன்மையானது, நல்லது என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விலங்குகளை வார்த்தையினால் படைத்த ஆண்டவர், மனிதனை மட்டும் தன் சாயலில் படைத்தார். ஆனால் அவர் வார்த்தையில் படைத்த விலங்குகள், பறவைகள் தாவரங்கள், விண் மண்டலமும், அனைத்து உயிரினங்களும் ஆண்டவருடைய மகிமையை பாராட்டுகின்றன. ஆனால் கடவுள் படைத்த மனிதன் மட்டும் ஆண்ட வரை மறந்து விடுகிறான். இயற் கையை அழித்து விடுகிறான்.
"அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.(தொடக்கநூல் 1:26) ஆண்டவர் முதல் நிர்வாக பொறுப்பை "First Administrative Responsibility" மனிதனுக்கு தறு கிறார். மனிதன் தன் தவறான
நிர்வாக பொறுப்பில் படைப்பை
காக்க தவரினான். ஆண்டவர்
மற்றொரு பொருப்பையும் தருகிறார். ."கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்து ங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
(தொடக்கநூல் 1:28) "ஆளுங்கள்" என்ற வார்த்தை (Rule over) அதை
பாதுகாக்கவும் குறிக்கிறது. ஆண்டவர் எவ்விடத்திலும் இயற் கை வளங்களை (Natural Resour ces) சந்தை படுத்த (Marketing) கூற வில்லை. சந்தைப்படுத்துதலே சுரண்டலுக்கு (exploitation) வழிவகுக்கும்.Natural Resources are
Depleting in nature, its our divinely duty to protect them.
ஆண்டவர் எல்லா உயிரினங்க ளுக்கும், கொடுத்த கட்டளை "பலுகிப் பெருகுங்கள்" "பூமியை நிரப்புங்கள்" என்ற கட்டளை ஆகும். இதன்மூலம் படைப்பு தொடர்கிறது. There is no end for creation. " அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்க ளுக்கு உணவாகட்டும்.
(தொடக்கநூல் 1:29) ஆண்டவர்
அனைத்து உயிரினங்களுக்கும்
உணவளிக்கும் மாண்பை படை ப்பில் கற்று தருகிறார். நாமும் அனைத்து உயிரினங்களையும்
பாதுகாக்கவும், உணவளிக்கவும்
கடமை பெற்றுள்ளோம். இறுதியாக, கடவுள் தாம் உருவா க்கிய அனைத்தையும் நோக்கி னார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. (தொடக்கநூல் 1:31)
கடவுளின் படைப்பு மிக நன்றாய்
இருந்தது, எனவே, இப்படைப்பை
பாதுகாப்பது நம்முடைய கடமை.
2. கிறித்துவே படைப்பின் தலைவர். Christ is the Leader of Creation. எபேசியர் 1:3-14.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
தூய பவுல் அடிகளார் எபேசு திருச்
சபைக்கு எழுதும் திருமுகத்தில்
அவர் வலியுறுத்தி கூறிய கருத்து;
"கடவுளின் திட்டம் என்பது மனித
குலத்தையும், மற்றும் அனைத்து
படைப்பனைத்தையும் கிறித்து வின் தலைமையில் கடவுளுடன்
ஒப்புரவாக்குதலாகும்". Reconcile the whole creation with Jesus Christ is the Pre-plan of God".ஏனேனில்
ஆண்டவரே, பாவ கறை பட்ட உலகை ஒழித்து, புதிய உலகை
படைக்கிறார்.
"இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக் கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. (எசாயா 65:17)"
என தீர்க்கர் கூறுகிறார். இதையே
திருத்தூதர் யோவான் தன் திரு
வெளிப்பாட்டில்; "பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண் ணகமும் மண்ணகமும் மறைந்து விட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. (திருவெளிப்பாடு 21:1)
என புதிய படைப்பான உலகில்
வாழ;" நாம் தூயோராகவும், மாசற்றோ ராகவும் தம் திருமுன் விளங்கும் படி, உலகம் தோன்று வதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடு த்தார். (எபேசியர் 1:4) என
பவுல் அடிகளார் கிறித்துவே
புதிய படைப்பின் உலக தலைவர்.
கிறித்துவின் அருளினால்,
" கால நிறைவில் விண்ணிலுள் ளவை, மண்ணிலுள்ளவை அனை த்தையுமே கிறிஸ்துவின்; தலை மையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.
(எபேசியர் 1:10) எனவே, நாம்
கிறித்துவின் தலைமையில் ஒன்று சேரஅழைக்கப்படுகிறோம். இதில் திருச்சபை பெறும் பங்கா ற்ற வேண்டும்.The Church is to be the heart of all humanity.
3.படைப்பின் நன்மை தன்மை.
The Goodness of Creation. மத்தேயு
6: 9-13.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
படைப்பின் நன்மை தன்மை ஆண்டவரின் அரசு இவ்வுலகில்
அமைவது தான் படைப்பின் நிறைவாகவும். ஆண்டவரின் திருவுளம் (divine will) விண்ணு லகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!
(மத்தேயு நற்செய்தி 6:10) இதுவே,
ஆண்டவரின் திருவுளத்தை இவ்வுலகில் நிறைவேற்றவே இயேசு கிறித்து தோன்றினார்.
"இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.
(யோவான் நற்செய்தி 4:34) என்கிறார். படைப்பு நன்மை தன்மை. ஆண்டவரின் வருகை
இவ்வுலகிற்கு இரட்சிப்பு என்ற
மீட்பை கொடுக்கிறது. இதன் மூலம் படைப்பின் வீழ்ச்சியை
இயேசு கிறித்துவின் மூலம் சீர்
படுத்தப்ப படுகிறது. ஆண்டவரே
உம் உன்னத படைப்பை நாங்கள்
பாழ்படுத்தியமைக்காக எங்களை
மன்னியும். நீர் நல்லது என்று
கண்ட படைப்பை நாங்களும்
நல்லது என காண எங்கள்
கண்களை திறந்தருளும். உம்
அரசு இவ்வுலகில் வர, எங்களை
பயன்படுத்தும். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.
"கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. Genesis.
(தொடக்கநூல் 1:31)
.
The sermon is to be delivered at CSI.St
Peter's Church, Mission Compound, Chengalpet on 28:01:2024.
Comments
Post a Comment