நீதி மற்றும் அமைதிக்கான ஒற்றுமை.(108) Unity for Justice and Peace. (Ecumenical Sunday) எசேக்கி யேல் 37:15-28; திரு பாடல்: 4, பிலிப் பியர்: 4: 8-20; மத்தேயு 5:21-26. (அனைத்து திருச்சபையின் ஞாயிறு.)

முன்னுரை:  
கிறித்துவின் அனைத்துலக திருச்
சபையின் உறுப்பினர்களே! நீதி மற்றும் அமைதிக்கான ஒற்றுமை. என்ற தலைப்பில்
சிந்திக்க இருக்கிறோம். இந்த
தலைப்பில் நமது ஆண்டவர்
நீதி அரசராகவும், (The King of Judge), சமாதானப் பிரபு (The Prince of Peace) அமைதியின் அரசர் என
குறிப்பிடப்படுகிறார். இயேசுவின்
காலத்தின் முன்பும், பின்பும்  பாலஸ்தீன தேசம் நீதியற்றும், அமைதி இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் அமைதியின் அரசர் தோன்றி னார். ஆண்டவர் கானா ஊரை சேர்ந்த நத்தானியேல் என்ற (நாத்தான் வேல்)  இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர் க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த் தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. “இறைவாக்கின‌ர்க‌ளும்,மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண் டோம்” என‌ பிலிப்பு ந‌த்தானி யேலை அழைத்தார். நத்தானி யேல் ஆண்டவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 
(யோவான் நற்செய்தி 1:49) அமைதியின் அரசரை " இஸ்ர வேலரின் அரசராக" பார்க்கிறார்.
இஸ்ரவேலர் கடவுளை இராணுவ 
ங்களின் தலைவராக பார்த்தனர்
" ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியா யிருங்கள்" என்றார். 
(விடுதலைப் பயணம் 14:14) உண்மையில் நமது ஆண்டவர் அமைதியின் அரசர். நம் திருச் சபை, நற்செய்தி மற்றும்  சமூக போதனைகளின் வெளிச்சத்தில் உலகில் நீதி மற்றும் அமைதியை ஊக்குவிக்க  பயணிக்க வேண் டும்.இது திருச்சபையின் சமூகக் கோட்பாட்டை ஆழமாக்குவதோடு, தனிநபர்கள் மற்றும் சமூகங்க ளால், குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடை யிலான உறவுகளைப் பொறுத் தவரை, அதை பரவலாக அறிய வும் பயன் படுத்தவும் முயற்சி க்கும். இந்த உறவுகள் நற்செய்தி யின் வழியாக சீரிய முறையில் அனுகப்பட வேண்டும். நீதியும், அமைதியும் நிலைநாட்டப் பட அன்பின் அணுகு முறையே சால சிறந்தது. அன்பு உள்ள இடத்தில் அமைதி இருக் கும். "Where there is love, there is Peace."  நீதி, அமைதி இல்லாமல் ஒற்றுமையை நிலை நாட்ட முடியாது. இது நாட்டிற்கும் வீட்டிற்கும் தனி மனிதனுக்கும் மிகப் பொருத்தமாகும். இவைக ளுக்கு அன்பேஅடிப்படை. நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலை நிறுத்து. அதனால் உன் கடவுளா கிய ஆண்டவர் உனக்குக் கொடுக் கவிருக்கும் நாட்டை உடைமை யாக்கிக் கொள்வாய்” (இணைச்சட்டம் 16: 20 ).நீதியின் தேவையை இஸ்ரேல் மக்களுக்கு மோசேயின் வார்த்தைகளின் வழியாக இறைவன் வெளிப்படுத் துகிறார்.
1 ஒற்றுமையே என் உறைவிடம் . Where there is Unity, there is my presence. எசேக்கியேல் 37: 15-28.
கிறிஸ்துவுக்கு பிரியமான உலக திருச்சபையின் உறுப்பினர்களே! ஆண்டவர் எசேக்கியேல் தீர்க்கரு க்கு உரைத்த மிக முக்கிய வார்த் தையே ஒற்றுமை, ஒன்று படுத்து தல், இணைத்தல் என்ற வாக்குத் தத்தத்தை இஸ்ரவேலருக்கு கொடுக்கிறார்.
மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக் கொள். அதில் "யூதாவுக்கும் அவ னோடு சேர்ந்திருக்கும் இஸ்ர யேல் மக்களுக்கும் உரியது" என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் "யோசேப் புக்கும் ( எப்ராயீம்) அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனை வருக்கும் உரிய எப்ராயிமின் கோல்" என்று எழுது. அவை இர ண்டும் உன் கையில் ஒரே கோலா யிருக்கும்படி, அவற்றை ஒன்றா கச் சேர். கோல் என்பது நாட்டை குறிக்கும். இரண்டு கோல் என்பது இரண்டு நாட்டையும் ஒன்றுபடு த்துவதை குறிக்கிறது. சிதருண்ட இஸ்ரவேல் நாடுகளை ஒரே இஸ்ருவேலராய் ஒன்று படுத்துவதை குறிக்கிறது. Unifying for One Nation.  ஆண்டவரின் விண் ணரசானது இவ்வுலகில் அமைய அனைத்து நாடுகளையும் ஒன்று படுத்துவதை இது குறிக்கிறது.
இதன் மூலம் இவர்கள் ஒரே கடவுளின் கீழ் அரசாட்சி பெறு வார்கள். என் உறைவிடம் அவர் கள் நடுவே இருக்கும்; நான் அவர் களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். (எசேக்கியல் 37:27) இதுதான் ஆண்டவர் ஏற்படுத்தப் படும் ஒற்றுமை. இந்த ஒற்றுமை நீதியின் அடிப்படையிலும் அமை தியின் வழியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.இது ஒரே கடவுளின் கீழ் அமைய வேண்டும்.  இதுதான் கடவுளின் அனாதி தீர்மானம். இதை ஆண்டவர் தீர்க்கர் எசேக்கி யேல் மூலம் வலியுறுத்துகிறார். இதை செயல்படுத்துவது நம்
கடமையாகும்.
2. கிறிஸ்தவர்கள் கற்று கொள் ள வேண்டியது எவைகள்? What Christians should learn and follow?
பிலிப்பியர் 4:8-20.
கிறிஸ்துவுக்குள் பிரியமானஉலக திருச்சபையின் அங்கத்தினர்களே பவுலடிகளார் உரோமச் சிறைச் சாலையில் இருக்கின்ற வேலை யிலும், திருச்சபை மக்கள் மகிழ்ச் சியாய் இருக்க வேண்டும் என்ற பாடத்தை தருகிறார். அவர் கிறிஸ்துவுக்காக துன்புறுகின்ற வேளையிலும், தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை கிறிஸ்துவுக்காக விட்டு விடவில்லை. அவர் பிலிப்பியர் திருச்சபைக்கு எழுது கின்ற போது, திருச்சபை மக்கள் எல்லா நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய எட்டு குணாதிசயங் களை வலியுறுத்துகிறார். இவைகளை பின்பற்றுகின்ற மக்களிடத்தில்தான் அமைதியின் அரசர் ஆண்டவர் இருப்பதாக கூறுகிறார்." இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். "
(பிலிப்பியர் 4:8)
1. உண்மை: Truth.
நீதியை நிலைநாட்ட உண்மை அவசியம். உண்மை இல்லாமல் சரியான நீதி வழங்க முடியாது  எனவேதான் "உண்மையே வெல்லும்" (Truth triumphs) என்பார்கள். 
2.கண்ணியமானவைகள்: Noble.
"நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நாம் முன் மாதிரியாய் இருக்கவும், நாணயத் தோடும், கண்ணியத்தோடும் கற்றுக்கொடு." (தீத்து 2:7) என்கிறார் 
3 நேர்மை: Honest.
நேர்மையே சிறந்த கொள்கை" என்பது ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழியாகும், Honesty is the best policy. நேர்மையான மனிதர்கள் கடவுளின் உன்னத படைப்பாகும்.
4 தூய்மை: Pure 
. தூய்மையான உள்ளம் கடவுள் வாழும் இல்லம் எனவேதான் வள்ளுவரும் ''மனுத்துக்கண் மாசிலன் ஆதல் "எனக் கூறுகிறார்
5.விரும்பதக்கவை. Lovable. 
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். (1 பேதுரு 4:8)
6 பாராட்டுதற்குறியது. Admirable. 
திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னை யும் விடப் புகழைப் பெறுவதே மேல் (நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 22:1)
7.நற்பண்பு. Virtuous. 
 நற்பண்போடுஅறிவும்,அறிவோடு தன்னடக்கமும்,தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், பெறுங்கள்.
(2 பேதுரு 1:6)
8.போற்றதற்குறிய. Praiseworthy.
தாம் செய்யும் எந்த செயலும், அனைவராலும் போற்றதற்குறிய
தாகவும், ஆண்டவர் நாமம் நம்மால் போற்றப்படவேண்டும்.
இவ்வாறு, இந்த எட்டு பண்பாட்டு
செயல்கள் நம்மிடம் இருந்தால், 
பவுல் அடிகளார்;நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழி யாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந் தவை யாவற்றையும் கடைப் பிடியுங்கள். அப்போது அமை தியை அருளும் கடவுள் உங்க ளோடிருப்பார். (பிலிப்பியர் 4:9) என வலியுறுத்துகிறார். 
3.வீட்டின் நல்லுறவே, நாட்டின்
நல்லுறவு: மத்தேயு:5:21-26.
கிறித்துவின் அன்பு உலக திருச்
சபை அங்கத்தினர்களே! 
நீதி மற்றும் அமைதிக்கான ஒற்றுமை.(Unity for Justice and Peace.)நம் வீட்டிலிருந்துஆரம்பிக் கட்டும். Charity begins at home. என்பார்கள். நம் குடும்பம் ஒரு
கோவிலாக இருக்க முதலில் நம்
உறவுகளில் நல்லுறவு மிக அவசி
யம். ஆண்டவர் கூறுவது;  "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதர ரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரக த்துக்கு ஆளாவார். (மத்தேயு நற்செய்தி 5:22) என்கிறார். ஒரு வருக்கொருவர் அன்பு காட்டாமல், நீதியையும் அமைதியையும் நிலை நாட்ட முடியாது. சகோத ரர்களிடம் நல்லுறவு பேனாமல், கடவுளிடம் பிரியமாக இருக்க முடியாது. நாம் அனைவரும்; " நீதி நிலைநாட்டும் வேட்கை கொண் டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். (மத்தேயு நற்செய்தி 5:6) நம் செயல்கள் நீதியின் செயல் பாடுகளாய் அமைய வேண்டும். காண்கின்ற சகோதரிடத்தில் அன்பு காட்டாதவன் காணாத கடவுளிடத்தில் எப்படி அன்பு பாராட்டுவான்  எனவே நம் உறவுகள் மத்தியில் அன்பு உள்ளவர்களாய் நீதி உள்ளவராய் இருப்பது மிக அவசியம். குடும்பத்தில் ஏற்படும் அமைதி, அன்பு, சந்தோஷம் சமூகத்தில் ஏற்படும் சமூகத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் நாட்டிற்கும் ஏற்படும். எனவே நம் குடும்பங்கள் நல்ல மாற்றத்தின் துவக்கமாக இருக்கட்டும், நம் குடும்பங்கள் திருச்சபையின் அங்கங்கள். குடும்பஅமைதியே திருச்சபை யின் வளமும், நலமுமாகும்.
கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். 
(எபேசியர் 5:2) அன்பின் அடிப்படையான வாழ்வே அமைதி
யின் அடையாளமாகும். 
இயேசு தம்முடைய சீஷர்களை எப்படி நடத்தினாரோ அப்படியே கணவர்களும் தங்கள் மனைவி களை நடத்த வேண்டுமென்று திருவிவலியம் சொல்கிறது. பைபிள் தரும் இந்த வழி நடத்துதலைச் சிந்தித்துப் பாருங் கள்: ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர் களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லை யே; கர்த்தர் சபையைப் போஷித் துக் காப்பாற்றுகிறது போல ஒவ் வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.’—(எபேசியர் 5:23, 25-29.) 
ஜெபம் என்பது இருவழிப் பாதை. நாமும் பேசுவோம். கடவுளும் பேசுவார். நாம் குடும்பமாக ஜெபிப்பதை நிறுத்தவே கூடாது.
ஜேபமே குடும்ப அமைப்பின்
அமைதியை நிலைநாட்டும்.
நீதியும், அமைதியும் இணைந்தே பயணிப்பவை. நீதி எங்கே நிலவுகிறதோ, அங்கே அமைதி யும் அமர்ந்திருக்கும். அமைதி எங்கே உலவுகிறதோ, அங்கே நீதியும் நடமாடும். நீதியற்ற தன்மை, அமைதியற்ற சூழலை உருவாக்குகிறது. நீதியற்ற தன்மை அச்ச உணர்வை உருவாக் குகிறது. நீதியற்ற தன்மை பதட் டத்தை பிரசவிக்கிறது.
எங்கே நீதி நசுக்கப்படுகிறதோ, அங்கே அமைதி தனது அமைதி யை இழக்கிறது. எங்கே நீதி புறக்கணிக்கப்படுகிறதோ அங்கே அமைதி ஒப்பாரியிடுகிறது. நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை வலுவிழக்கும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையும் அர்த்தமிழக்கிறது.
நாம் ஆண்டவரின் அன்பான
பிள்ளைகள், நம்மாள் யாருக்கும்
அநீதி, அமைதி இழக்க காரணமாக இருக்கவே கூடாது.
அமைதிக்கான விதை நீதியில் இருக்கிறது The seed of peace lies
in Justice. " நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். (மத்தேயு நற்செய்தி 5:6) நாம் யார்? உலகில்
அமைதியை ஏற்படுத்தும் கடவுளின் திருத்தூதர்கள். We are 
Peace makers. We are the Messenger of Peace. என்பதை மறந்துவிட
கூடாது.
அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப் படுவர். (மத்தேயு நற்செய்தி 5:9)
நாம் கடவுளின் மக்கள் இவ்வுல
கில் நீதி மற்றும் அமைதிக்கான ஒற்றுமை ஏற்படுத்தும் தகுதியான
பொருத்தமான மக்கள், உலகத்தி ற்கு வழிகாட்டிகள். நம் பற்றுறுதி ஜீவன் உள்ள தேவன் மீது உறுதியாய் உள்ளது  எனவே நாம் நீதிக்காகவும், அமைதிக்காகவும், நம்முடைய உழைப்பு, முயற்சி முன்னெடுப்பாய் எடுத்துச் செல்ல அன்புடன் அழைக்கிறேன்.  ஆண்டவர் அருளும் அன்பு, அமைதி, நீதி, மகிழ்ச்சி என்றும் உங்களுக்கு விளங்குவதாக ஆமென் .


Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 





"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 
(மத்தேயு நற்செய்தி 5:45)








நீதி,மற்றும் அமைதியை நோக்கிய பயணம்

"நீதியும், அமைதியும் இணைந்தே பயணிப்பவை. நீதி எங்கேயோ அமைதியும் அங்கே"


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.