ஒரே கடவுள், ஒரே திருமுழுக்கு. (107)One Lord, One Babtism. எண்ணிக்கை 11:23-30. சங்கீதம் 23. 1 கொரிந்தி: 10:1-4, யோவான்: 10:7-18. (14:01:2024)
முன்னுரை: கிறித்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் " ஒரே கடவுள், ஒரே திருமுழுக்கு" என்ற தலைப்பில் நாம் சிந்திக்க இருக் கின்றோம். இப்புத்தாண்டில் கடவுள் அருளும் புது வாழ்வு நம்மை, தூய்மை, நீதி, அமைதி, சமத்துவத்தை அடிப்படையாக
கொண்டதாக இருக்க அழைக் கிறார். கிறித்துவ சமயத்தின் மிக முக்கிய சாக்கிரமங்களில் ஒன்று திருமுழுக்காகும். தூய பவுல் அடிகளார் எபேசியருக்கு எழுது கின்ற நிருபத்தில்; "ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல் லார் மூலமாகவும் செயலாற்று பவர்; எல்லாருக்குள்ளும் இருப் பவர். (எபேசியர் 4:5,6) என தீர்க் கமாக நமக்கு உணர்த்துகிறார். நாம்அனைவரும் திருமுழுக்கு மூலமாக கிறித்துவின் அங்க அடையாளங்களாக ஒன்றினைக் கப் பட்டி ருக்கிறோம் என்றும் கூறுகிறார்.
மெதடிஸ்ட் இயக்கத்தின் நிறு வனர் ஜான் வெஸ்லி அவர்கள்
திருமுழுக்கு மூலமாகவே நாம்
திருச்சபையில் சேர்க்கப்படுகி றோம். Babtismal ceremony is a gate way to admit in to the church as a member, திருமுழுக்கு மூலமாகவே குழந்தைகள் கடவுளின் பிள்ளை களாகின்றனர். ("Children of God")
என்கிறார். கிறித்தவ விசுவாச பயணத்தில், திருமுழுக்கு மிக
முக்கியபங்காகும்.திருமுழுக்கினால், ஆண்டவரின் கிருபை ஊற் றப்படுகிறது. மற்றும் திருமுழு க்கு ஆண்டவரின் திரு சரிரத்தின்
அங்கமாகவும், திருச்சபையின்
ஐக்கியத்தில் பங்கு பெறுகிறோம்.
என வெஸ்லி அவர்கள் கூறுகி றார்.
பவுல் எபேசிய திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் பாவ மன்னிப் பின் அடையாளச் சின்ன மாகிய திருமுழுக்கைப் பற்றி பேசுகின் றார். "Babtism is a sign of forgiveness of sins".இத்திருமுழுக்கு ஒப்புரவா குதலின் அடையாளமாகும் (1 கொரி 1:10-14)."Babtism is a symbol of reconciliation."என்றும்
மேலும், ஒரே திருமுழுக்கினை பவுல் வலிறுத்துகின்றார் (எபேசியர் 4:1-6). ஒரே கடவுள் ஒரே திருமுழுக்கு என்பது கிறிஸ்தவர் களின் அடிப்படை நம்பிக்கை யாகும்.
1.ஒரே கடவுள் - ஏகத்துவம் Monotheism. எண்ணிக்கை 11:23-30.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் வழியாக தோன்றிய
மதங்கள் யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் இம்மூன்றும்
" ஒரே கடவுள்" கொள்கை உடைய வை. நம்முடைய ஆன்மா ஒன்று, நம் கடவுளும் ஒன்று. இந்த ஒரே கடவுள்தான் நம்மை படைப்பிலி ருந்து நம்மை காத்துவருகிறார்.
430 ஆண்டுகள் அடிமைதனத்தில்
வாழ்ந்த இஸ்ரவேலரை மோசஸ்
தலைமையில் மீட்டெடுத்த ஆண்ட
வரை எதிர்த்து முறுமுறுத்தனர்.
இறைச்சிக்காகவும், உணவுக்கா கவும் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்தனர். மோசேயிடும் முறை யிட்டனர், மோசே கர்த்தரிடத்தில் பேசினார் . அதற்கு ஆண்டவர் மோசேயிடம், "ஆண்டவரின் கை குறுகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார்" என்றார். (எண்ணிக்கை 11:23) இது ஒரே கடவுளின் மகத்துவ த்தை வெளிப்படுத்துகிறது.
அவ்வாறே மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; ஆறு
லட்சம் மக்களில் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடார த்தைச் சுற்றிலும் அவர்களை நிறு த்தி வைத்தார். ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்தும் தன் ஊழியத் தில் வேறே எழுபது பேரை நியமி த்து அவர்களை ஊழியத்திற்கு அனுப்புகிறார். அந்த எழுபது பேரும் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட ஊழியத்தை நிறைவேற்றி விட்டு சந்தோஷத் தோடே இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி வருகிறார் கள். அவ்வாறே, ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசவு
டன் பேசினார், பின்பு அவரின்
தூய ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத் தனர்; ஒரே கடவுளின் தூய ஆவி. ஆண்டவர் அளிக்கும் ஈ வாகும். அதன் மூலம்தான் இறை வாக்கு
உரைக்கமுடியும். மோசே யோசு வாவிடம் கூறும் போது, ஆண்ட வரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார். திருதூதர்
பவுலடிகளார், கடவுள் யூதருக்கு மாத்திரமா கடவுள்? புறஜாதிகளு க்கும் கடவுள் அல்லவோ? கடவுள் ஒருவர் என்றால் புறஜாதிகளு க்கும் அவரே கடவுள்.” (ரோமர் 3 : 29) என்கிறார்.கடவுள் ஒருவரே. அவரே முழு மனுக்குலத்திற்கும் தந்தை. இதை கடவுள் தமது ஒரே பேரான குமாரனில் வெளிப்படுத் தினார். ஒருவரும் கெட்டுப் போகா மல் நிலையான வாழ்வைப் பெறவே கடவுள் இவ்வுலகில் தோன்றினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்பதை ஏற்போம். அண்ட சரா சரங்களையும் படைத்த கடவுள் ஒருவரே என்பதைப் பறை சாற்றுவோம். எல்லா ஏற்ற தாழ் விற்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பதை உணர்வோம்.
2. ஒரே திருமுழுக்கு, ஆண்டவ ரில் ஐக்கியம்.The unity in Christ is One Babtism.1கொரிந்தியர்19:1-4.
கிறித்துவின் அன்பர்களே! ஒரே
கடவுள், ஒரே திருமுழுக்கு நம்மை ஆண்டவரோடு இனைக்கப் படுகி ன்ற கருவியாகும். திருமுழுக்கில் கிறிஸ்துவின் சிலுவை அடையா ளம் நம் நெற்றியில் இடப்பட்டு நம்மை இயேசு கிறிஸ்துவின் பாடுகளுக்கு இணையாகவும், பாவ மன்னிப்பின் மீட்பாகவும் திருமுழுக்கு கருதப்படுகிறது. இதை திருச்சபை மிகப்பெரிய தூய சடங்காக சபையாரோடு இணைந்து உறுதிமொழிகளோடு நடத்துகிறது. தூய பவுல் அடிக ளார், நம்மை திருச்சபை யோடு ஐக்கியப் படுத்துவது ஒரே கடவுள், ஒரேபற்றுஉறுதி,ஒரேதிருமுழுக்கு, ஒரே தந்தை, தூய ஆவி என்ற
மகத்தான கோட்பாடாகும்.
சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன் னோர் இஸ்ரவேலர் அனை வரும் மேகத்தின்கீழ் வழி நடந்தனர். அவர்கள்அனைவரும்செங்கடலை கடந்து சென்றனர். ( தண்ணீர் திருமுழுக்கின் அடையாளம்)
அவர்கள் அனைவரும் மோசே யோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் (தூய ஆவி) கடலாலும் திருமுழுக்குப் பெற்றார் கள். அனைவரும் ஒரே திரு முழுக்கை ஒரே நாளில் பெற்றார்கள். ஆண்டவரே இதை
நடத்தி காட்டினார்.அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். இது திரு
விருந்தின் அடையாளமாகும்.
அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள்பருகினார்கள்.கிறிஸ்துவே அப்பாறை.(கன்மலை) என தூய பவுல் அடிகளார் முன்மொழி கிறார்.ஆண்டவர் கொடுக்கும் தண்ணீர்அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" . எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத் தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு நற்செய்தி 28:19) என்ற
ஆண்டவரின் கட்டளை, திருமுழு க்கு மூலம் சீடராக்கப்படுகிறோம்.
We will become his disciples by Baptism.
3. தந்தேயே நல் மேய்ப்பர். Father
as a Good shephered. யோவான் 10:7-18.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யூதர்களுடைய பாரம்பரிய தொழிலே ஆடுகளை மேய்ப்பது ஆகும். அவர்கள் ஆண்டவரே மேய்ப்பராக கருதினார்கள். எனவேதான் தாவீது அரசர் கர்த்தர் என் மேய்ப்பராயிருக் கிறார் என்று உரைக்கிறார். ஏசாயா தீர்க்கர் ஆண்டவரை ," ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டி களைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். " (எசாயா 40:11) ஆண்டவரே இஸ்ரவேலின் மேய்ப்பராக இருக்கிறார். விசுவா சிகளின் தகப்பனாகிய ஆபிரகாம்,
மகன் ஈசாக்,இவரின் மகன்கள் ஏசா, யாக்கோபும், அவரின் பனிரெண்டு பிள்ளைகளும் யோசப்பை தவிர மேய்ப்பர்களே! மோசஸ் 40 ஆண்டுகள் மேய்ப் பராக இருந்தார்.
இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார். "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக் கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந் திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டு ள்ளார்.புற இனத் தாரையும் தன் மந்தையாக தன் வின்னரசில் கொண்டு வருவதே ஆண்டவரின் அழைப்பு. ஆயன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார்.தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் இதன்மூலம் அனைவரும்இரட்சிக்கப்படுவதே ஆண்டவரின் அருள் திட்டம். ஏனேனில், பாவிகளை இரட் சிக்கவே கிறித்து இவ்வுலகில் வந்தார் . அதனால் தான் காணா மல் போன ஆட்டையும் தேடி கண்டுபிடிக்கிறார், கண்டுபிடித்து பெருமகிழ்ச்சி அடைகிறார், அவைகளையும் தன் மந்தையில் அடைக்கிறார்.
இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக் காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
இயேசுவுக்குரிய ஒரே மந்தையின் உறுப்பினர்களாக, ஒரேகடவுளின், உலக மக்களை ஒன்றிணைக்க நாம் அழைக்கப்படுகிறோம். இதன் மூலம், இறையரசு இவ்வு
லகில், நிறுவப்பட வேண்டும் என்பதே ஆண்டவரின் வேண்டு கோள். இதை முன்னிட்டு நாம்
இறைபணியாற்ற அழைக்கப்படு
கிறோம்.
நிசேயா விசுவாச அறிக்கை யின் படி "ஒரே கடவுளை விசு வாசிக்கிறேன். இவர் வானத் தையும், பூமியையும் காணப்படு கிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர். சர்வத்திற்கும் வல்ல பிதாவுமான வர். ஒரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். என்ற திருச் சபையின் உறுதி மொழியை இதயத்தில் வைத்தும், பாவ மன்னிப்புக்காக ஒரே ஞானஸ் நானம் உண்டொன்று அறிக்கை யிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலையும், வரும் நித்திய ஜீவனையும் எதிர்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆமென். என்ற அறிக்கை இயேசு
வே கடவுள் என்பதையும், ஒரே திருமுழுக்கு என்ற அருட்சா தனமும் உலகிற்கு வெளிப்னபடுத் தியது. நம் கடவுள் மெய்யான
மேய்ப்பர், நம் கிறித்துவோ நல்
மேய்ப்பர், நம் தூய ஆவியோ, நம்மை மெய்யான, நல் இனண
மேய்ப்பராக மாற்றுகிறார்.
ஆம், ஆண்டவரே! எங்கள் நம்பிக்கை ஒரே கடவுளான உம்
மீதும், ஒரே திருமுழுக்கை கொண்டுள்ள எங்களையும்
ஆசிர்வதித்து காப்பீராக! ஆமென்.
இறை செய்தி உருவாக்கம்:
பேரா. முனைவர். டேவிட் அருள்
பரமானந்தம்,
www.davidarulblogspot.com
www.davidarulsermoncentre.com.
" உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். "
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:6)
I am the Good Shephered.
Comments
Post a Comment