படைப்பின் வீழ்நிலை. (110)The Fallenness Of Creation. தொடக்க நூல் (Genesis) 3:1-10, திரு.பாடல் 53. உரோமையர்: 3: 21-26. மத்தேயு: 18:23-35.

முன்னுரை: கிறித்துவின் அன்பு
பற்றுறுதியாளர்களே! அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். படைப்பின் வீழ்நிலை( வீழ்ச்சி) என்றால் ஆண்டவரின் படைப்பின்
உன்னத நோக்கத்தை மீறுவதே
வீழ்ச்சியாகும்.   கடவுள் மனிதரைப் படைத்ததற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தாம் மனிதரோடு அன்புற வில் நிலைத்திருப்பது. கடவுள் மனிதரோடு என்றென்றும் அன்பு றவோடு இருக்கவும், ஐக்கியம் கொள்ளவும் மனிதரை கடவுள்   படைத்தார். மனிதரை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உறவாடு கிறவராக இருந்தார். ஏதேன் தோட்டத்திலே கடவுளோடு கூட மனிதரின் உறவு மிகச் சிறப்பான தாக இருந்தது."மென்காற்று வீசிய பொழுதினிலே, (Evening) தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக் கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திரு முன்னிருந்து விலகி, தோட்டத்தின்மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். "
(தொடக்கநூல் 3:8) அனுதின
மாலை வேலையில், கடவுளுடன்
உறவாடிய ஆதாம், ஏவாள்  கடவுளின் முதல் எச்சரிப்பை மீறினார்கள்.
" தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்; என்று கடவுள் சொன்னார்", என்றாள். "
(தொடக்கநூல் 3:3) இது மனித னின் வீழ்ச்சி , கடவுளின் சாயலில்
படைக்கப்பட்ட மனிதனின் கீழ்
படியாமை என்ற முதல் பாவத்தி னால், ஏதேன் என்னும் சொர்கத்
திலிருந்து விரட்டியடிக்கப்பட்டான்.
The Paradise lost. இதன் விளை வாக மூன்று சாபங்கள் (Curses came to Humanity ) மனித இனத் திற்கே விதிக்கப்பட்டது .சாவு என்ற மரணம் சாதமாக வந்தது 
இதன் நீட்சியாக ஆதாம் காலத்தி லிருந்து நோவா காலம் வரை
1056 ஆண்டுகள் மனிதனின்
பாவ வாழ்க்கை கடவுளை துக்கப்
படுத்தியது; "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகு வதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக் குவதையும் ஆண்டவர் கண்டார். 
மண்ணுலகில் மனிதரை உருவாக் கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. 
(தொடக்கநூல் 6:5,6) ஆண்டவரின்
விரோதியான லூசிபர் மனிதனின் வீழ்ச்சிக்கு முக்கிய
காரணமாக கருதப்படுகிறான்.
இவன் ஒரு தூதன், கடவுளால் நல்ல தூதனாகவே படைக்கப் பட்டான். ஒரு குறிப்பிட்ட தூதர் குழுவுக்கு தலைவனான லூசிபர், உன்னதமான கடவுள் வாசம் பண்ணும் கடவுளின் ஆராதனை கூடத்தின் மிக உயரிய இடத்தில் வைக்கப்பட்டவன். மகிமையான கடவுளை ஆராதித்து வந்த லூசி பர் கடவுளின் மகிமையை இச்சித்து,இறைவனைப்போலாகும்படி நினைத்தான். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் இறைவனாக ஆகவேண்டும் என நினைத்தான். எனவே லூசிபர் இறை சமூகத்தை விட்டு தள்ளப்பட்டான். ஒரு கூட்ட தூதர்கள்அவனைபின்பற்றினார்கள். அந்த லூசிபரே வேதாகமத்தில் சாத்தான் என்று அழைக்கப்படுகி றான். அவனை பின்பற்றின தூதர்கள் பிசாசுகள். இவனே
இன்றளவும் மக்களை கடவுளுக்கு
விரோதமாக செயல்படுகிறான்.
இவனே பாம்பின் வடிவில் (Disguise) வந்து ஏவாளை ஏமாற் றினான். இதனால்  மனிதருக் குள்ளிருந்த இறை சாயல் முற்றி லுமாக பாவத்தினால் கறைப் பட்டது. பாவம் மரணத்தை மனிதனுக்கு கொடுத்தது. 900 ஆண்டுகளுக்கு மேலாய் வாழ்ந்த மனிதனின் ஆயுள் 120 ஆக ஆண்டவர் நோவாவின் வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு குறைத்தார்.
 "அப்பொழுது ஆண்டவர், "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதி ல்லை. அவன் வெறும் சதை தானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார். 
(தொடக்கநூல் 6:3) படைப்பின் நோக்கமே; மனுக்குலம் கடவு ளோடு அன்புறவிலும் சக மனித ரிடத்திலும், இயற்க்கையோடும் இசைந்து வாழ்வதற்காகவும் படைக்கப்பட்டவர்கள். எனவே, அன்பானவர்களே! கடவுளின் படைப்பின் வீழ்ச்சிக்கு நாமே
காரணமா இருக்கலாமா?
1. ஆசையே வீழ்ச்சியின் ஆரம்பம்: தொடக்க நூல் (Genesis) 3:1-10.Desire is the beginning of the fall.
கிறித்துவின் அன்பர்களே!
மனிதனுக்கு இயல்பாகவே மண்
ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை, பதவி ஆசை, பண ஆசை
என்ற ஆசைகளில் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறான். ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனால்
பேராசை (Greed) இருக்கவே கூடாது.  ஏவாளுக்கு ஆசையை
தூண்டியவன் பிசாசு. "ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப் படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்;" என்றது. (தொடக்கநூல் 3:5) கடவுளைப் போல மாறி நன்மை,
தீமை அறியும் அறிவை பெறுவீர்
கள் என்ற பேராசையேவீழ்ச்சிக்கு 
காரணம். திருதூதர் பவுல் அடிகளார் திமொத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில்; " பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால்சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரி ந்து பல வேதனைகளைத் தாங்க ளாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். 
(1 திமொத்தேயு 6:10) பண ஆசை யினால் நம் திருச்சபைகளும் பாதிக்கப்படுகின்றன.
பிசாசானவன் தவறான ஆலோச னையை ஏவாளுக்கு வழங்கு கிறான்." பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 
(தொடக்கநூல் 3:4) என்று கூறிய
தால் கடவுளின் கட்டளையை
மீறினார்கள், இதனால் பாவத்தில்
வீழ்ந்தனர்.சாத்தான் தந்திரமாக
ஒரு கேள்வியுடன் சந்திக்கிறான்.
 "கடவுள் உங்களிடம் தோட்டத் திலுள்ள எல்லா மரங்களிலிருந் தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. 
(தொடக்கநூல் 3:1) கடவுளை எதிர்ப்பதே சாத்தானின் பிரதான வேலை. அவன் ஆண்டவருடைய பிள்ளைகளையும் இவ்வாறே ஏமாற்றிவருகிறான். நமது ஆண்ட
வராகிய இயேசு கிறித்துவும்
பிசாசினாள் சோதிக்கப்பட்டார்.
ஆனாள் அவர் ஆண்டவரின் வார்
த்தையினாலே பிசாசை வென்றா
ர். பிசாசை வெள்ள திரு வசனமே
வழியாகும். சங்கீதக்காரன் கூறு வதுபோல; " உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.(திருப்பாடல் கள்(சங்கீதங்கள்) 119:11) 
ஆதாம் ஏவாலின் பாவத்தினால் ஏதேனும்  என்னும் அழகான இடத்திலிருந்துவிரட்டியடிக்கப்பட்டனர், ஆண்டவரின் பிரசன்னம் தடைப்பட்டது தனக்குத்தானே  சாபத்தை வரவழைத்துக் கொண் டார்கள். நமக்கும் சோதனைவரும்.
" உங்களுக்கு ஏற்படுகின்ற சோத னை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கை க்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோத னைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிரு ந்து விடுபட வழி செய்வார். 
(1 கொரிந்தியர் 10:13) 
ஆதாம் ஏவாள் தங்களின்  பாவத் தினால் தோட்டத்தில் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஆனாலும் ஆண்டவர் அவர்களே அழைக் கிறார்."தோட்டத்தில் ஆண்டவரா கிய கடவுள் உலவிக்கொண்டி ருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவரா  கிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்ககளு க்கு இடையே ஒளிந்து கொண்ட னர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். 
(தொடக்கநூல் 3:8,9) கடவுள், தான்
படைத்த பிள்ளைகளை தேடுகி றார். தன் பிள்ளைகள் தனக்கு 
எதிராக பாவம் செய்ததை குறித்து
அவர் உள்ளம் எவ்வளவு வருத்தப்
பட்டிருக்கும் என்பதை நாம் உணர
வேண்டும். காணாமல் போன தன்
மகன் திரும்பி வரும் போது ஓடிச்
சென்று அழைத்த தந்தையை
போல், மனம் திருந்தும் மக்கள் மீது அன்பு காட்டும் ஆண்டவர் நம்
ஆண்டவர்.ஆதி மனிதனால் ஏற்பட்ட வீழ்ச்சி மனுச குமாரன்
மூலமாகவே மீட்பு பெறுகிறோம்.
2 பாவம் கடவுளின் மேன்மை யை இழந்தது.Sin Deprived us of God's Glory. உரோமையர் 3:21-26.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
ஏதேன் தோட்டத்தில் படைக்கப்
பட்ட ஆதி மனிதன் தான் செய்த
பாவத்தினால் கடவுளின் சாயலை
இழந்தனர்.இதன் நீட்ச்சியாக திரு தூதர் பவுள் அடிகளாரும் "நாம் எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். (உரோமையர் 3:23) என
கூறுகிறார்.தேவ சாயலே, தேவ னோடு  இருப்பதற்கான தகுதி யாகும்.
 திருச்சட்டமும், இறைவாக்கும் மனிதரை கடவுளுக்கு ஏற்றவராக் கும் செயலுக்கும் தொடர்பில்லை.
நமது ஆண்டவராகிய இயேசு கிறித்துவின் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையின் வழி
யாகக் கடவுள் அனைத்து மக்க ளையும் தமக்கு ஏற்புடையவராக் குகிறார்; இதையே, திருதூதர்
யோவான் அவர்கள், "இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு அவரை ஏற் றுக்கொண்ட ஒவ் வொருவருக் கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். 
(யோவான் நற்செய்தி 1:12)
ஆண்டவரின் மீட்பு செயல் அனை வருக்குமானது, இலவசமானது.
ஆண்டவரின் சிலுவை பாடு
கடவுள் கொடுத்த கட்டளை. இது அவர் மீது நம்பிக்கை கொண் டோரை மீட்பதற்காக தன் தூய
இரத்தத்தை சிந்தினார். இதனா லேயே,  கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டார் இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். கடவுளின்
அநாதி தீர்மானமே படைப்பில்
ஏற்பட்ட வீழ்ச்சியை சீர்படுத்தவும்,
புதுபிக்கவுமே  ஆண்டவராகிய 
இயேசு கிறித்து இவ்வுலகிற்கு
அனுப்பட்டார்.இரத்தம் சிந்தி மனி தருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார்.அவரிடம் நம்பிக்கை கொள்வோர், அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். 
பாவத்தினால் இழந்த தேவ மகிமையை, இயேசு கிறித்துவின்
வழியாகவே பெறுகிறோம்.
3.மன்னியுங்கள்உள்ளம்கோவிலாகும். Forgive, your heart becomes a Temple.மத்தேயு: 18:23-35.
ஆண்டவரின் அன்பு நண்பர்களே!
ஆண்டவர் கூறும் உவமையின்
மைய கருத்தே;" உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக் கா விட்டால் விண்ணுலகில் இருக் கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு நற்செய்தி 18:35) என்ற கருத்தை நமக்கு பாடமாக தருகிறார். ஆங்கிலத்தில் "To Err is human, to
forgive is divine" என்பார்கள். தவறு
செய்வதே மனித இயல்பு, அதை
மன்னிப்பது கடவுளின் மான்பு. 
ஏதேன் தோட்டத்தில் தொடங்கிய
பாவம் இன்றளவும் தொடர்கிறது.
அரசர் ஒருவர், ( இயேசு கிறித்து) தம்மிடம் 10,000 தாலந்து. கடன் பட்டவர்மீது இரக்கம் கொண்டு, அவருடைய கடன் அனைத்தையும் தள்ளுபடிசெய்தார். ஆனால், அந்தப் பணியாளரோ (மக்கள்), தன்னிடம் 100 தெனாரியம் மட்டுமே கடன் பட்ட தம் உடன்பணி யாளர் மீது இரக்கம்கொள்ளாமல்,  அவரைச் சிறையில் அடைத்தார். அரசர் இதை அறிந்தவுடன் சின மடைந்தார். தாம் தள்ளுபடி செய்த 10,000 தாலந்தை திருப்பிச் செலுத் தும் வரை முதல் பணியாளரை வதைப் போரிடம் ஒப்படைத்தார். 
ஆண்டவரின் இறைவேண்டலில் "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்திருப்பதுபோல, எங்கள் குற்றங்களையும் மன்னியும்” என்று நாம் தினமும் இயேசுவிடம் வேண்டுதல் செய்கிறோம். அதன் படி, மற்றவர் நமக்கு எதிராகச் செய்த குற்றத்தை நாம் மன்னிக்கி றோமா? அவ்வாறு மன்னிக்காத வர்கள், பலமணிநேரம் ஆலயத் தில் வேண்டுதல் செய்தாலும், இயேசுவின் புதிய-உடன்படிக்கை யின் மன்னிப்பை பெறமுடியாது என்பதையே இந்த உவமை அறி விக்கிறது."எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன் மையை இழந்து போயினர்"  (உரோமர் 3 23). எனவே, நாம் அனைவரும் அறிந்தும் அறியா மலும் இறைவனுக்கு எதிராகப் பாவம் பல செய்கிறோம். கடவுளுக்கு எதிராக நாம் செய்த இப்பாவங்களைக் கடவுளைத் தவிர வேறு எவராலும் மன்னிக்க இயலாது. நம் அருகில் வாழும் மனிதர்களுக்கு எதிராகவும் பாவம்   பல செய்கிறோம். சினம், சண்டை, வழக்கு, வன்முறை, ஏமாற்றுதல், தன்னலம், திருட்டு, உதவி செய்யாமை போன்றவை மனிதருக்கு எதிராக மனிதர் செய்யும் சில பாவங்களாகும்.
ஆண்டவரின் பிரதான சீடனான சீமொன்பின்பு பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோ தரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட் டார்.(மத்தேயு நற்செய்தி 18:21)
அதற்கு இயேசு அவரிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். 
(மத்தேயு நற்செய்தி 18:22) என்றார். மன்னிப்பிற்கு அளவு
இல்லை. நாம் அதிக நன்மை களை செய்து, சிறிய தவறுகளை
அறியாமல் செய்தால், ஆண்டவர்
நமக்காக தன் தந்தையிடம் மன்னி க்க  பரிந்து பேசுவார். மற்றவர் களை மன்னிக்கிறவர்களே மன்னிப்பை பெறுவர். ஆண்டவர் படைப்பின் வீழ்ச்சியை மன்னிப் பின் மூலமே சீர்படுத்துகிறார்.
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும் பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதொ மனத்தாங்கல் உண்டென அங்கே நினை வுற்றால், அங்கேயே பலிபீடத்தி ன்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு காணிக் கையை செலுத்துங்கள்” என்றார் இயேசு. (மத்தேயு 5 24). கிறித்துவின் அடையாளம், மன்னிப்பாகும். இயேசுவின் புதிய உடன்படிக்கையிள் மன்னிப்புக்கு அளவில்லை. ஆண்டவரே! எங்க
ளுக்கு மன்னிக்கும் உள்ளத்தை
தாரும் . எங்கள் தப்பிதங்களை
தயவாய் மன்னியும். ஆமேன்.




Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com 









 நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். "
மத்தேயு நற்செய்தி 18:33





  • மனிதரின் வீழ்ச்சி



The Garden of Eden with the Fall of Man





Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.