மேலான கிறித்தவ அழைப்பு. (113)(Higher Christian Calling.) ஒழுக்கம், ஒப்புரவாகுதல். Discipline, Reconciliation. மத்தேயு 5:21-26. First Friday. 16-2-2024.
முன்னுரை: கிறித்துவின் அன்பர்களே! உங்கள் அனைவருக் கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இயேசு கிறித்துவின் அமைதி உங்கள் அனைவருக்கும் உரித்தாகுக. லெந்து காலத்தின் முதல் வெள்ளியின் அருட் பொழிவு மத்தேயு நற்செய்தியின் 5,6,7 அத்தியாயங்களை கொண்ட மலைப் பொழிவாகும். ஆண்ட வரின் மலைப்பொழிவு என்பதுபழைய ஏற்பாட்டில் மோசே அவர்கள் சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளை களையும், நியாப் பிரமானங் களையும் கடவுளின் விரலால் கல் பலகைகளில் எழுதியதை பெற்றுக் கொண்டார்.இதற்காக சீனாய் மலையில் மோசே 40 நாட்கள் கர்த்தருடன் இருந்தார். நமது ஆண்டவரின் மலைப் பொழிவு கலிலேயக் கடலின்
வட மேற்கு கரையில் உள்ள
மவுண்ட்ஆஃப் பீடிட்யூட்ஸ் மலையாகும். (The Mount of Beatitudes) உலக மக்கள் அனைவ
ருக்குமான அருட் பொழிவை
தருகிறார். இது கி.பி 30ம் ஆண்டு.
நமது தேச தந்தை மகாத்மா காந்திஅவர்களுக்கு பிடித்த பகுதி இந்த மலை பொழிவுதான்.இது மனிதநேயத்தின்அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் ஒழுக்க நெறி
களை வலியுறுத்துகிறது. இங்கு
விண்ணரசைப் பெற்றவர்கள் எட்டு வகையான வாழ்வுடைய மக்களே என குறிப்பிடுகிறார். ஏழையரின் உள்ளத்தோர்,
துயருறுவோர் பேறுபெற்றோர்,
கனிவுடையோர் பேறுபெற்றோர்,
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்,
இரக்கமுடையோர்பேறுபெற்றோர், தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்,
அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்,
நீதியின்பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்க ளுக்குரியது. இவர்கள்தான்
இறையாட்சியைப் பெற்றவர்கள்.
இத்தகைய மேலான அழைப்பை
பெற இந்த லெந்து காலங்களில்
கடவுள் நம்மை அழைக்கிறார்.
இந்த அழைப்பு ஒழுக்கம், ஒப்புரவாகுதலின் அடிப்படையில்
அமைந்தது. The Divine Calling is based on Christian Discipline and Reconciliation.
1.ஒழுக்கம்: கிறித்துவத்தின் மேலான அழைப்பு. Higher Christian Calling is based on Discipline. மத்தேயு :5:21-26.
கிறித்துவின் அன்பர்களே! நமது அழைப்பு ஒழுக்கத்தின் அடிப் படையில் அமைந்துள்ளது. ஏனேனில், ஆண்டவரின் நாமங் களில் ஒன்று" இம்மானு வேல்". அவர் நம்மோடு இருக்கிறார். எனவே, நாம் ஒழுக்கமாக
இருப்பது மிக அவசியமாகும். தூய பவுல் அடிகளார் நம் அழைப்பை;" நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங் கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். (2 தெசலோனிக்கர் 2:14) என கூறுகிறார். மிக முக்கியமாக, இறைபணியாற்ற
அழைக்கப்பட்டோர் ஒழுக்கத்தின்
அடிப்படையில் தான் பணியாற்ற
வேண்டும். ஆண்டவராகிய இயேச
கிறித்து "தம் சகோதரர் சகோத ரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியை யோ "முட்டாளே" என்பவர் தலை மைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநர கத்துக்கு ஆளாவார். (மத்தேயு நற்செய்தி 5:22) எனஎச்சரிக் கிறார். இது நம் சுய ஒழுக்கத்தை
வலியுறுத்துகிறது.(Self -discipline)
ஒரு நல்ல கிறிஸ்தவர்களின் அடையாளமே ஒழுக்கமாகும். மிக முக்கியமானது தனி மனித ஒழுக்கமாகும். ஒழுக்கம் இல்லா மல் கடவுளுக்கு ஏற்றவனாய் இருப்பது எவ்வாறு? கடவுள் நம்மை நேசிப்பாரா? ஒழுக்கம் ஒன்றே நம்மை கடவுளோடு இனைந்து செயல்பட வலிமை தரும். மிக முக்கியமானது லெந்து
காலங்கள் நம் ஒழுக்க கேடான
செயல்களை விட்டுவிடும் கால மாகும். நாம் கடவுளின் அன்பு
பிள்ளைகள், "கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய் வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயி ருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. (1 யோவான் 3:9), இந்த
உறுதியை கொடுப்பது சுய
ஒழுக்கமே.
இறுதியாக, சகோதர சகோதரி களே, உண்மையானவை எவை யோ, கண்ணியமானவை எவை யோ, நேர்மையானவை எவை யோ, தூய்மையானவை எவை யோ, விரும்பத்தக்கவை எவை யோ, பாராட்டுதற்குரியவை எவை யோ, நற்பண்புடையவை எவை யோ, போற்றுதற்குரியவை எவை யோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். (பிலிப்பியர் 4:8)
என பவுல் அடிகளார் ஒழுக்கத்தை
வலியுறுத்துகிறார்.
2. ஒப்புரவாகுதல்: கிறித்துவத் தின் மேலான அழைப்பு. Higher Christian Calling is based on Reconciliation.
கிறித்துவின் பிரியமான சகோதரர்களே! "ஒப்பு"என்றால் சமம் என்று பொருள். ‘ஒப்புரவு’ என்றால் பிறரையும் தமக்குச் சமமாகக் கருதி அவர்களுக்கு இயன்ற அளவு உதவுதல். உலக நடையுடன் ஒத்து வாழ்தல், பகிர்ந்து உண்டு வாழ்தல் என்று பலபொருள்படும். ஒப்புரவு என்ற தலைப்பில் வள்ளுவர் கூறும் கருத்துகள், அவரது சமதர்மக் கோட்பாட்டைக்குறிப்பிடுகிறது என்பர். இத்தகைய ஒப்புரவு எனும் இயல்பு உடையவர்களையே வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகிறார்.சான்றாண்மைப் பண்புகளில் ஒன்று ஒப்புரவு. கிறித்தவமும் அதை வலியுறத் துகிறது . Reconciliation is the act of causing two people or groups to become friendly again after an argument or disagreement. இதற்கு
சான்றாக என்னை மிகவும் கவர் ந்த பகுதி; ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப் போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, உன் கருவி களான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக் கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார். ஆனால் யாக்கோபு தன் தாயின் தவறான ஆலோசனைபடி; தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்றான். என தந்தையையும், தன் சகோதரனையும் ஏமாற்றியது துரோகமாகும். இப்படி துரோகம்
செய்த யாக்கோபை ஏசா அவனை
பார்த்த உடன் ஓடிச் சென்று, அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர். (தொடக்கநூல் 33:4)
தன்னை யாக்கோபுஏமாற்றினான்
என ஏசா நினைக்கவே இல்லை.
அன்பு சகலத்தையும் தாங்கும், அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சிகொள்ளாது;இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவி னையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர் நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பே
ஒப்புரவாதலின் அடையாள மாகும். கடவுளிடம் அன்பு செலுத் துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோத ரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவு ளிடம் அன்பு செலுத்த முடியாது.
(1 யோவான் 4:20) எனவே, என்
அன்பு நண்பர்களே! ஒழுக்கமும்
ஒப்புரவாகுதலும் கிறித்தவர்க ளின் அடையாளமாகும் . இதுவே இந்த லெந்து காலத்தின் கிறித் துவின் மேலான அழைப்பாகும். சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.
(கலாத்தியர் 6:18)
Prof. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
" கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் கட்டளை. "
(1 யோவான் 4:21)
Comments
Post a Comment