மேலான கிறித்தவ அழைப்பு: தன்னடக்கமும், நன்னெறி வாழ்வும்.(115) Self Control and Virtuous Life மத்தேயு: 5:27-30 .

முன்னுரை: கிறித்துவின் அன்பு
நண்பர்களே! இந்த லெந்துகால செய்தியாக "தன்னடக்கமும், நன்னெறி வாழ்வும்" என்ற  தலைப்பை சிந்த்ப்போம். தன்ன டக்கம் (Self Control) என்பது,"சினம், அச்சம், பதற்றம்,முதலியவற்றுக்கு ஆட்பட்ட நிலையிலும் உணர்ச்சி களைக் (Feelings) கட்டுப்படுத்தி அமைதியுடன் தோன்றும் ஆற்றல்; தன்னடக்கம்; or தற்கட்டுப்பாடு எனப்படும்.  வேதத்தில் முதல் விபச்சார செய்தி யோசுவா 2 ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படு கிறது. எரிகோவில் வசிக்கும் ஒரு கானானியப் பெண், ராகாப் ஒரு விபச்சாரி, யோசுவா கானானைக் கைப்பற்றுவதற்கு முன்,  இரண்டு ஆட்களைஒற்றர்களாகநிலத்தைக் காண அனுப்புகிறார். அவர்கள் தங்குவதற்கும், நாட்டைப் பற்றி அறியவும் ராகாபின் வீட்டிற்கு வருகிறார்கள். இரண்டு பேரைப் பற்றி கேள்விப்பட்ட எரிகோவின் அரசர்,  அவர்களைக் கைவிடும்படி ராகாப்பிடம் கோருகிறார். ஆனால் ராகாப் ஆட்சியாளரை எதிர்த்து இஸ்ரவேலர் களைக்காப்பாற்று கிறார்.  இதனால் இஸ்ரவேலரின் வம்சவரலாற்றில் இவள் பெயர் இடம் பெறுகிறது. (மத்தேயு 1:5). விபச்சாரம் (Adultry) வேதத்தில் கடவுளின் 7 வது கட்டளையான " விபசாரம் செய்யாதே. 
(விடுதலைப் பயணம் 20:14) என்ற
தூய கட்டளைக்கு விரோதமானது.
பெண்கள் தன்னடக்கம் தவறி
விபச்சாரத்தில் ஈடுபட முக்கிய
காரணங்கள்: பொருளாதாரம், அடிமைத்தனம், அடக்குமுறையை
காரணங்கள். இந்தியாவில் 
தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக் காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர். இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று கடவுளுக்கு திருமணம் செய்விக்கப்பட்டனர். இவர்கள் கோவிலை சார்ந்த வீதிகளில் குடியிருப்பர்.இவர்கள்விபச்சாரத்திற்கென்றேநிர்பந்திக்கப்பட்டவர்கள். இது கோவிலில்தூய்மையை கெடுப்பதுமட்டுமல்ல;பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க செயல்.  தமிழகத்தில் இவர்கள் நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரி யாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பி னராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி, தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். தன் னடக்கமும், நன்னெறி வாழ்க்கை 
உடல் சார்நத உளவியல் ரீதியான சமுக பிரச்சனையாகும். Adultery is 
a physical, psychological and social 
problem. 
1.தன்னடக்கத்தின்அடையாளமே யோசேப்புதான்: Joseph is a symbol of Self Control. தொன்மை நூல் 39:1-23.
அன்பின் இறை மக்களே! வேதத்தில் யோசேப்பை போல்
தன்னடக்கத்திற்கும், சகோதர அன்பிற்கும், மன்னிப்பிற்கும்
உதாரணமாக யாரையும் ஒப்பிட
முடியாது. ஒருநாள் , யோசேப்பின் மீது கண்வைத்திருந்த போத்தி பாரின் மனைவி  "என்னோடு படு" என்றாள். யோசேப்பு அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, "என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை. இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியா யிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார். 
அவள் நாள்தோறும் வற்புறுத் தியபோதிலும், யோசேப்பு அவளோடுபடுக்கவோஇருக்கவோ இணங்கவில்லை.  இவ்வாறி ருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக் குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை. 
அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, "என்னோடு படு" என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பி யோடினார். இதுதான் நமக்கு ஒரு பாடம், பாவத்தை விட்டு விலகி
ஓடு. இந்த சோதனையில் யோசேப்பு உத்தமனாய் நடந்து
கொண்டதால் கடவுள் அவனை
அரசுமாளிகைவரைஉயர்த்தினார்.

2. இயேசுவின் பார்வையில் விபச்சார பெண்: யோவான்8:1-11. 
 இயேசு ஒலிவ மலையிலிருந்து இறங்கி வந்து ஆலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார் . வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களின் குழு இயேசுவை எதிர்கொள்கிறது, அவருடைய போதனைக்கு இடையூறு விளைவிக்கிறது. விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, ஒரு பெண்ணை அழைத்து வந்து , அந்தச் செயலில் அவள் பிடிபட்ட தாகக் கூறுகின்றனர். அவளைப் போன்ற ஒருவருக்கு மோசேயின் சட்டத்தின்படி கல்லெறியப்பட வேண்டும் என்று அவர்கள் இயேசு விடம் கூறுகிறார்கள் . இயேசு தனது விரலைப் பயன்படுத்தி தரையில் எதையோ எழுதத் தொட ங்குகிறார்; அந்தப் பெண்ணின் மீது குற்றம் சாட்டுபவர்கள் தங் கள் சவாலைத் தொடரும்போது, ​​பாவம் இல்லாதவன் தான் அவள் மீது முதல் கல்லை எறிய வேண்டு ம் என்று கூறுகிறார். குற்றம் சாட்டுபவர்களும் கூட்டத்தினரும், அவர்களில் ஒருவர் கூட பாவம் செய்யவில்லை என்பதை உணர் ந்து, இயேசுவை அந்தப் பெண்ணு டன் தனியாக விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள். இயேசு அந்தப் பெண்ணை யாராவது கண்டனம் செய்தார்களா என்று கேட்கிறார், அவள் இல்லை என்று பதிலளித்தாள். தானும் அவளைக் கண்டிக்கவில்லை என்றும், "இனிமேல் பாவம் செய்ய வேண்டாம் " என்றும் இயேசு கூறுகிறார். இது ஆண்டவரின் அன்பையும், மன்னிப்பையும், துன்புறும் பெண்கள்மீது ஆண்டவர் காட்டும் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது. அவர் யூத ஆண்வர்க்கத்தின் பெண் அடிமைதனத்தை வெறுக்கிறார்.. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட
ஒரு ஆணையும் கொண்டுவர வில்லை. இதில் அவர்கள் நேர்மை
யாக நடக்கவில்லை. சட்டத்தின் படியும் நடக்கவில்லை. எனவே, ஆண்டவரும் சட்டத்தின்படி தண்டி
க்கவில்லை. சட்டம் அனைவரு க்கும் சமம்.மனித நேயம் சட்டத்தை விட மேலானது.

3. இறையரசில் இடமில்லை: Christians who commit Adultery and unrighteous shall not enter into the Kingdom of God.
ஆண்டவரின் பார்வையில் விபச்சாரம் மன ரீதியில் அளவிடப் படுகிறது:"விபசாரம் செய்யாதே என்று சொல்லப்பட்டதைக் கேள்வி ப்பட்டிருக்கிறீர்கள் . ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை ஆசைப்படும்படி பார்க்கும் எவனும் தன் இதயத்தில் அவளுடன் ஏற்கனவே விபச்சாரம் செய்தான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்யச் செய் தால், அதைப் பிடுங்கி எறிந்து விடு! உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதை விட, உங்கள் உறுப்புகளில் ஒன்றை இழப்பது நல்லது.உன் வலது கை உன்னைப் பாவம் செய்ய வைத் தால், அதை வெட்டி எறிந்து விடு! உங்கள் முழு உடலும் நரகத்தில் செல்வதை விட உங்கள் உறுப்பு களில் ஒன்றை இழப்பது நல்லது (மத்தேயு 5:27-30) என மிகவும்
கண்டிக்கிறார். விபச்சாரம் கொலை குற்றத்திற்கு சமமாக
வேதத்தில் காணப்படுகிறது.தூய
பவுல் அடிகளாறும்; தீங்கிழைப் போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்க ளுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர் 
திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. 
(1 கொரிந்தியர் 6:9,10) எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பர்களே! இந்த லெந்து காலங்களில் நாம் அனைவரும் தன்னடக்கமும், நன்னெறி வாழ்வும் வாழ முயற்சி செய் வோம். ஆண்டவரின் பாடும் மரணங்கள் நமக்கு புது வாழ்வு தரட்டும். நம்முடைய வாழ்வும் வளமும் என்றுமே நம்மை விண்ணரசுக்கு தகுதி படைக் கட்டும். கடவுள்தாமே உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து காப்பாராக. ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam.
Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 



Points to Ponder;

* The unrighteous will not inherit God's kingdom
* Let us seek first The Kingdom of God 
* Do not commit Adultery 
* The drunkards are not eligible to
enter into the Kingdom of God.
* Self Control is a power with in you 
* Self Control is the Spirit of Fruit.












 விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்

விபச்சாரியை இயேசு மன்னிக்கும் படத்தின் முடிவு


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.