இறைவேண்டலில் விடாமுயற்சி.(118) Persistence in Prayer. 2 அரசர் கள் 20:1-11. திருப்பாடல்: 116. 1 தெசலோனிக்கேயர் 5:12-22. மாற்கு: 7:24-30.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இறைவேண்டல் என்பது கடவுளி டம் பேசும் மொழியாகும். இறை வேண்டுதல் செய்யாமல் இறைவனிடம் செல்ல முடியாது. இறைவனிடம் கேட்டு பெரும் ஒரு வழியே இறை வேண்டல். கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற வார்த்தை இறைவேண்டல் மூலமாகவே செயல்படுகிறது. இறைவேண்டுதளுக்கான தகுதியான நேரம் அது காலை நேரம். காலை நேரமே கர்த்தரின் மகிமையை காணும் நேரம். திருப்பாடல்(சங்கீதம்)5:3ல்,"ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறை யில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.
தாவீது அதிகாலையில் எழுந்த வர்; தான் மாத்திரமல்லாது தனது உதடுகளும் இசைக்கருவிகளும் அதைப் போன்று துதிகளைப் பாடவும் தீர்மானித்திருந்தார். ஆதலால் அவர் “வீணையே, சுர மண்டலமே, விழியுங்கள்” என்று அழைக்கிறார். "வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன்."
திருப்பாடல்(சங்கீதங்கள்) 108:2.
இறை வேண்டல் முதலில்
துதித்தலுடன் ஆரம்பிக்க வேண் டும், துதிகளுக்குள் வாசமாயிரு க்கிற தேவரீரே பரிசுத்தர். (திரு ப்பாடல்:22:3)என துதியுங்கள். உதடுகளின் கனியாகிய ஸ்தோத் திரப் பலிகளை செலுத்துங்கள்.
இரண்டாவதாக நம் இறை வேண்ணடலில்; ஆண்டவர் செய்த
அனேக நன்மையான செயல்களு க்கும், ஆசிர்வாதங்களுக்கும், கண் மணி போல் உங்களை காத் த கர்த்தருக்கு உள்ளத்தின் ஆழத் திலிருந்து நன்றி செலுத்துங்கள். மூன்றாவதாக உங்கள் தேவைக ளுக்காகவும், மற்றவர்களுக்காக வும், இறையரசு இவ்வுலகில் வர
இறை வேண்டுதல் செய்யுங்கள்.
"ஏனெனில், கேட்போர் எல்லொ ரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடு வோர் கண்டடைகின்றனர்; தட்டு வோருக்குத் திறக்கப்படும்.
(மத்தேயு நற்செய்தி 7:8) என ஆண்டவர் உறுதியளித்துள்ளார்.
பிரியமானவர்களே! நான் பல
புற மதத்தினரின் புதிய இல்ல
திறப்புவிழாவிற்கு சென்றுள் ளேன் , அவர்கள் வீட்டில் ஒரு சிறிய பூசை அறை கட்டுகிறார் கள். உயிர் உள்ள ஆண்டவரை
துதிக்கின்ற நாம் இறை வேண்டு தலுக்காக ஒரு சிரிய அறையை
கட்டுகிறோமா? பல லட்ச்சம் செலவு செய்கிறோம். நான் வெட்
க்கப்படுகிறேன். நான் அதை செய்யவில்லை.வீட்டில் இறை வேண்டல் செய்ய TV, போன்ற சாதனங்கள், தடை யாக இருக் கின்றன.தனி அறையே சிறந்த, அமைதியான இடம். குடும்ப இறை வேண்டலுக்கும், தனி இறை வேண்டலுக்கும் தனி அறையே சிறந்தது. சங்கீதக்
காரன் கூறுவதுபோல்;
"அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்;
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 46:10) நம்முடைய இல்லங்களில் ஆண்டவருக்கென்று இறைவேண் டல் செய்ய தனி அறை இருக் கின்ற பொழுது "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்து வேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
(திருவெளிப்பாடு 3:20) என உறுதியளிக்கிறார். நம் இல்லமும் ஒரு ஆலயம்தான். இறை வேண் டலில் விடாமுயற்சி என்பது
"தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடு படுங்கள்".(கொலோசையர் 4:2) என பவுல் அடிகளார் கூறுகிறார்.
இதற்கு ஆதாரமாக ஆண்டவர் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து லூக். 18:1-8. ஆம் அதிகாரத்தில் ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுசரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு வித வையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரி யத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்” இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்”. அந்த நியாயாதிபதியே மனமிர ங்கி இவ்விதமாக செயல்படும் வண்ணம், அவள் சோர்ந்து போகாமல் விடாப்பிடியாக தன்னுடைய நியாயத்திற்காக போராடினது போல நாம் காணப்படுகிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
1. இறை வேண்டலின் அற்புதம். Prayer brings Miracles.2 அரசர்கள் :20:1-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! அற்புதங்கள் இறைவேண் டலில் மட்டுமே நடைபெறும். இறைவேண்டல் இல்லாமல் அற்புதங்களைப் பெற முடியாது. எரேமியா தீர்க்கர் எருசலேமிலும், எகிப்திலும் ஊழியம் செய்த காலத்தில் எசேக்கியா அரசன் கி.மு. 715 முதல் 686 வரை பாபிலோனில் அரசாட்சி செய்தார். அநேக ஆவிக்குரிய அனுபவங்க ளைப் பெற்றவர். தனது பணியி னிமித்தமாக தனது மனைவியை இழக்க நேரிட்டபோதிலும் முறு முறுக்காமல் கர்த்தருக்காகப் பணி செய்தார். கர்த்தருடைய கட்டளையினால் பலநாட்கள் ஒருபுறமும், மீண்டும் பல நாட்கள் மற்றோரு புறமும் சரிந்து படுக்க நேரிட்டாலும், தனது தலையையும், தாடியையும் சிரைக்க நேரிட்டா லும் அவைகளைப் பொறுமை யோடு ஏற்றுக் கொண்டவர். ஒருநாள் ஏசாயா (38 : 1) என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டு க்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப் போவீர் என்று கர்த்தர் சொல்லு கிறார் என்றான்.”எசேக்கியா ராஜாவாயிருந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் எருசலேமானது அசீரியரின் இராணுவத்தால் முற்றுகை போட்டிருந்த நேரத்தில் எசேக்கியா ராஜாவின் சரீரத்தி லுள்ள பிளவையினால் (Cleft Disease)துன்பப்பட்டுக்கொண்டிருந்தான். அந்த வியாதியானது மரணத்துக்கு ஏதுவாக இருந்தது. மரிக்கும் தருவாயிலிருந்தான். மேலும் அசீரியர்களாலும் மிகவும் வேதனைப்பட வேண்டியதாயிருந் தது. மரணப் படுக்கையிலிருந்த எசேக்கியாவின் வீட்டை ஒழுங்கு படுத்த ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியைக் கர்த்தர் அனுப்பினார். நாம் ஒவ் வொருவரும் எந்த நாளிலே, எந்த நேரத்திலே மரிக்கப் போகிறோம் என்று தெரியாவிட்டாலும் தேவன் நியமிக்கப்பட்ட நேரத்தில் மரிப்பது உண்மையே (எபிரேயர் 9 : 27). ஒரு மனிதனின் ஆயுசு நாட்கள் ஏற்கெனவே கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கும். அவற்றை அவர் அதிகரிக்கவும்,குறைக்கவும் கூடும். இங்கு எசேக்கியாவின் ஆயுசுநாட்கள் எவ்வளவு என்பதை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தெரிவி த்தார்.இவ்விதம்ஆயுசுநாட்களைத் தெரிந்து கொள்வதற்காக எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” என்றும், தாவீது, ஒரு மனிதனின் ஆயுசுநாட்கள் ஏற்கனேவே கர்த்த ரால் நியமிக்கப்பட்டவை என்ப தால் அல்ல. அவற்றை அவர் அதிகரிப்பதும் குறைப்பதும் உண்டு (சங்கீதம் 55 ; 23). ஒருவன் மரணத்தை எதிர் நோக்கும் நிலை வரும்போதுதான் உலகப்பிரகார மான காரியங்களைச் சரியாக நினைக்கத்துவங்குகிறான்.அதேபோல்எசேக்கியாவும்கர்த்தருடைய வார்த்தைகளைக்கேட்டவுடன் தன்னுடைய முகத்தை சுவர்ப் புறமாகத் திருப்பிக் கர்த்தரை நோக்கி மிகவும் அழுதான். தான் கர்த்தருக்கு முன்பாக உண்மை யும், மன உத்தமுமாய் நடந்ததாக வும், கர்த்தருடைய பார்வைக்கு நல மானதைச்செய்ததாகவும், அவைகளைநினைத்தருளவேண்டி மிகவும் அழுதான். எசேக்கியா தேவனுடைய வல்லமையின் மேல் நம்பிக்கை கொண்டுதமதுவியாதி சுகமாகும்படி ஊக்கமுடன்ஜெபித் தான். அப்பொழுது ஏசாயா அவ னுடைய இடத்திலிருந்து பாதிமுற் றத்தைக் கூடக் கடக்க வில்லை. அப்பொழுதே கர்த்தருடைய வார்த் தை திரும்பவும் ஏசாயாவுக்கு உண்டானது அதுமட்டுமல்லால் அவனைத் திரும்பி எசேக்கியா விடம் போகச் சொல்லி கட்டளை யிட்டதைப் பார்க்கிறோம். தேவன் தனது வார்த்தைக்குச்செவிகொடு ப்பவர்களுக்காகத் தன்னுடைய திட்டங்களைமாற்றுகிறார்.அதன்பின் ஏசாயா அத்திப்பழ அடை யைக் கொண்டு பற்றுப் போடச் சொல்லிப் போட்டபோது எசேக் கியாபிழைத்தான்.எசேக்கியேலுக்குக்கர்த்தர்கொடுத்தஅடையாளம்:
ஏசாயா 38 : 7 “இதோ, ஆகாசுடைய சூரியகடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப் புவேன் என்றார்.”
அதன்பின் எசேக்கியா தான் குண மாகி மூன்றாம் நாளில் கர்த்த ருடைய ஆலயத்திற்குப் போவ தற்கு அடையாளம் கேட்டார். ஏசாயா கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வா ரென்பதற்கு அடையாளமாக சூரி யக் கடியாரத்தின் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போக வேண் டுமா, அல்லது பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமா என்றான். அதற்கு எசேக்கியா சாயை முன்னால்போவதுலேசான காரியமாதலால், பின்னிட்டுத் திரும்ப வேண்டுமென்றான். அப்பொழுது ஏசாயா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். அப்பொழுது கர்த்தர் ஆகாசுடைய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன் போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய் தார் (2இராஜாக்கள்20:1–11). தேவனிடம் அடையாளம் கேட்கா மல் விசுவாசிப்பது நல்லது. ஆனால் தம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்கு அடையாளம் தருவதற்குத் தேவன் தயங்குவதி ல்லை. நியாயாதிபதிகள் 6:36-40 இஸ்ரவேலைத் தான் இரட்சிப் பதற்கு கிதியோன் கர்த்தரிடம் அடையாளம் கேட்டான். அது என்னவென்றால் கிதியோன் களத்தில் போட்ட தோலில் மட்டும் பனிபெய்திருக்கவேண்டுமென்றும், திரும்பத் தோலில் மட்டும் பனி பெய்யாதிருக்கவும் கட்டளையிடச் சொன்னான். அப்படியே தேவன் செய்தார்.
எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் அவனைக் கிருபையால் சுகமாக்கி அவனது ஆயுசு நாட்களை 15 ஆண்டுகள் கூட்டி மீண்டும் உலகத்தில் வாழ வைத்தார். அது மட்டுமல்லால் எசேக்கியாவின் நாட்டை எதிரியி னின்று கர்த்தர் தப்புவித்தார். கர்த்தர் மீது உண்மையான விசு வாசம் உள்ளவர்களின் ஊக் கமான ஜெபத்திற்கு கர்த்தர் நிச்சயம் நல்ல பதிலாகக் கொடு ப்பாரென்று இதிலிருந்து அறிகி றோம். தான் அளிக்கும் தீர்க்கதரி சனத்தின் நிறைவேறுதலை 15 ஆண்டுகள் தள்ளிப்போடும் அளவுக்கு எசேக்கியாவின் ஜெபம் கேட்கப்பட்டது. மரணப்படுக்கை யாகத் தோன்றும்போது கர்த்தரின் அற்புத சுகத்திற்காக ஜெபிக் கலாம் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
2.இறைவேண்டல் வெற்றிப் பெறநாம் செய்ய வேண்டியது. 1.தெசலோனிக்கேயர் 5:12-22.
Prayer brings victory.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்முடைய இறைவேண்டல் வெற்றி பெற நாம் என்ன செய்ய வேண்டும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தூய பவுல் அடிகளார் அறிவுறுத்துகிறார். உங்களுக்காக உழைப்பவர்களை யும், உங்களுக்குப் புத்திசொல் பவர்களையும் மதிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள் கிறோம். அவர்களை அன்புடன் நடத்த வேண்டும். உங்களுக்குள் சமாதானமாக இருங்கள். சோம் பேறிகளுக்குப் புத்திசொல்லவும், மனச்சோர்வடைந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனமானவர் களுக்கு உதவவும், அவர்கள் அனைவரிடமும் பொறுமையாக இருங்கள். உங்களில் எவரும் தீமைக்குத் தீமை செய்யாமல், எப்பொழுதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய விரும்புவதைப் பாருங்கள்.எப்பொழுதும் மகிழ்ச்சி
யாக இருங்கள். இடைவிடாமல் இறை வேண்டல் செய்யுங்கள், எல்லாசூழ்நிலைகளிலும் நன்றி சொல்லுங்கள்; ஏனெனில், இதுவே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்காகத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.இப்படி நாம்
நடந்துக்கொண்டால், நம் இறைவேண்டல் நிறைவேறும்.
3.கானானிய பெண்ணின் இறை வேண்டல். The Request of Cananite woman. மாற்கு: 7:24-30.
கிறிஸ்துவுக்குள் பிரியமான இறை மக்களே! ஆண்டவர் இறைவேண்டுதலை அனைவரி டமும் எதிர்பார்க்கிறார். அவரிடம் வந்தவர்களை அவர் வெறுமை யாய் அனுப்பியது இல்லை. அவர் புற இனத்தாரையும் நேசித்தார்.
பாவிகள் என்று இஸ்ரயேல் மக்களால் முத்திரை குத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட 'கானான்' இனத்தைச் சேர்ந்த ஒரு தாய், தீரூ, சீதோன் நாட்டின்( Now it is in Labenon) எல்லைப் பகுதிகளில் ஒரு கானானியப் பெண் வசித்து வந்தார்.யூதர்கள் இல்லாத தேசம் . இது கப்பர்நகூமிலிருந்து 40 மைல் அல்லது 45 கிலோமீட்டர் துரத்திலுள்ளது. தீய ஆவி பிடித்த தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவைத் தேடிவந்தார். இந்த தாய், தீய ஆவி பிடித்த தன் மக ளைக் குணமாக்கும்படி இயேசு வைத் தேடிவந்தார். அப்பெண், 'தம் மகளிடமிருந்து பேயை விரட்டி விடுமாறுஇயேசுவைவேண்டினார்( மாற். 7:26) அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற் புதங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் ஊழிய மோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது. அந்த கானானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது ராஜாவின் வம்சம் என்பதும், அவரே இரட்சகர் என்பதும் எல்லாமே தெரிந்திரு ந்தது. அவளுடைய மகளை இயேசுவால் மட்டுமே குணப்படு த்த முடியும் என அவள் நம்பினாள். ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப் படுகிறாள் என்று வேண்டினாள் (மத்தேயு 15 :22) ஆண்டவர் அவளுடைய விசுவாசத்தைக் கொஞ்சம் சோதிக்க விரும்பினார். எனவே அமைதியாகப் போய்க் கொண்டிருந்தார்.அதுசீடர்களுக்கே பொறுக் கவில்லை.“இவளை
அனுப்பிவிடும் என வேண்டினர்.
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டா ரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி, மற்றப்படியல்லயென்றார்.
இயேசு அவளை சோதிப்பதை நிறுத்தவில்லை. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத் தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.* (மத்தேயு 15 :26) இது மிக கண்ணி யமற்ற வார்த்தை. கானானியப் பெண்ணை நாய் என்று குறிப்பிட் டார். ஆனாலும் அவள் அதை மனதில் வைக்காமல், அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். (மத்தேயு 15 :27)அவளுடைய விசுவாசத்தைக் கண்ட இயேசு வியந்தார். “பெண்ணே உன் விசுவாசம் பெரிது. நீ விரும்கிறபடியே ஆகக் கடவது என்றார். அந்த வினாடியே அவள் மகள் ஆரோக்கியமானாள்.”
.இந்த கானானிய சகோதரிபோல்
விடாமல் இறைவேண்டல் செய்ய
வேண்டும். நம் தந்தையை "உண்
மையான மேய்ப்பர், நம் ஆண்ட
வரோ நல்ல மேய்ப்பர். நம்
வேண்டுதலுக்கு நல்லதையே
செய்வார்.
4.இயேசுவின் இறைவேண்டல்.
The Prayer of Jesus Christ.
அன்பின் இறைமக்களே! இறை வேண்டலில் நாம் நமது ஆண்ட வரின் வழியை பின்பற்ற வேண் டும். நமக்காக அவர் இறை வேண் டுதலை கற்றுக் கொடுத்திருக் கிறார். அவர் எப்பொழுதும் தன்
தந்தையை நோக்கியே இறை வேண்டல் ஏற் எடுத்தார்.
நம் ஆண்டவர் இடைவிடாது இறை
வேண்டல் செய்தார் என்பதை நற்செய்தி நூல்கள் மீண்டும் மீண்டும் பறைசாற்றுகின்றன. தன் இறைபணியைத் தொடங்கும் முன் தந்தையிடம் மன்றாடினார் (லூக் 3:21-22). பன்னிரு திருத்தூ தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இறைவனின் அருள் வேண்டி னார்(லூக் 6:12).அப்பங்களைப் பிட்டு, அற்புதமாக உணவளித்த நேரத்தில் தந்தையைப் புகழ்ந்து செபித்தார் (மத் 14:19, 15:36). மலைமீது புதிய தோற்றம் பெற்று உரு மாறியபோது அவர் செபித்துக்கொண்டிருந்தார் (லூக் 9: 28-29). காது கேளாதவரும், திக் கிப்பேசுபவருமான மனிதரைக் குணமாக்கும்போது வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு செபித்தார் (மாற் 7:34). இறந்த லாசரை உயிர்பெற்றெழச்; செய்தபோது இறைவனுக்கு நன்றி கூறி செபித்தார் (யோவா 11:41).பேதுருவிடம் விசுவாச அறிக்கை கோரும் முன் தனித்து செபித்துக்கொண்டிருந்தார் (லூக் 9:18). தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்த நேரத்தில் அவர் இறைவேண்டலில்ஈடுபட்டிருந்தார் (லூக் 11:1). சீடர்கள் நற்செய்தி அறிவித்துவிட்டுத் திரும்பிய போது இயேசு தந்தையைப் போற் றிப் புகழ்ந்தார் (மத் 11:25). சிறு குழந்தைகளுக்கு ஆசி வழங்கிய போது வேண்டினார் (மத் 19: 13). பேதுருவின் நம்பிக்கை தளராதிரு க்க அவருக்காக மன்றாடியதாக இயேசுவே அவரிடம் கூறினார் (லூக் 22:32).இயேசுவின் அன்றாட வாழ்வு செபத்தோடு பின்னிப் பிணைந்ததாக அமைந்திருந்தது. உண்மையில், அவரது பணிகள் அவரது செப அருளிலிருந்த புறப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தனிமையான இடங்களுக்கும், மலைப்பாங்கான இடத்திற்கும் சென்று இயேசு செபித்தார் என்பதை பல இடங்களில் பார்க்கிறோம் (மாற் 1:35. 6:46, லூக் 5:16. மத் 14:23). அதிகாலையிலேயே எழுந்து செபித்தார் (மாற் 1:35), இரவிலும் செபித்தார் (லூக் 6:12), இரவின் நான்காம் காவல் வேளை வரையிலும்செபித்துக்கொண்டிருந்தார் (மத் 14:25, மாற் 6:48). தனி யாக மட்டுமல்ல, பிற யூதர்களோடு பொது வழிபாடுகளில் சேர்ந்தும் இயேசு செபித்தார். தம் சொந்த ஊரிலுள்ள தொழுகைக் கூடத் திற்கு ஓய்வுநாளில் சென்று செபிப்பது இயேசுவின் வழக் கமாக இருந்தது என்று லூக்கா சுட்டிக்காட்டுகிறார் (லூக் 4:16). "இறைவேண்டலின் வீடு" என்று அவர் அழைத்த எருசலேம் கோவிலுக்கும் சென்று செபித்தார் (மத் 21:13).தன் வாழ்வின் இறுதி நேரம் நெருங்கியபோதும் (யோவா 12:27), தன் சீடரோடு இறுதியாக உணவு உண்டபோதும் (யோவா 17:1-26), கெத்சமனித் தோட்டத்தில் துயரமும் மனக்கலக்கமும் அடைந்தபோதும் (மத் 26:36-44), சிலுவையில் தொங்கியபோதும் (லூக் 23:34, 46)இயேசு செபித்து, தந்தையோடு ஒன்றித்தார்.சிலுவையில் மொழி
ந்த ஏழு வார்த்தைகளில் மூன்று
வார்த்தைகளும் இறைவேண்டல் தான்; தந்தையே என வேண்டி னார்.அவருடைய வாழ்வு முழவதுமே ஒரு செப வாழ்வாக இருந்தது என்பதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் இவ்வாறு சொல்கிறது: 'அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி. கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்' (5:7). இவ்வாறு, தாம் நிறைவுள்ளவராக்கியவர்களை தூயவராக்கினார் (எபி 10:14). தொடர்ந்து நமக்காகப் 'பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்' (எபி 7:25).நாம் எவ்வாறு செபிக்க வேண்டும் என்று இயேசு கற்றுத் தந்திருக் கிறார் (லூக் 11: 2-13, 18:1-14, மத் 6:5-8). அவரைப் பின்பற்றி நாமும் செப வீரர்களாகவும், செயல் வீரர்களாகவும் விளங்குவோமாக!ஆமென்.
Prof. Dr David Arul Paramanandam, Sermon Writer.
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
"இறைவேண்டல் என்பது ஒருவரின் மனதையும் இதயத்தையும் கடவுளிடம் உயர்த்துவது அல்லது கடவுளிடமிருந்து நல்ல விஷயங்களைக் கோருவது."
- செயின்ட் ஜான் டமாஸ்சீன்
Cananite Woman
Comments
Post a Comment