தன்னலத்தை மறத்தல். A Call to Self- Denial.(112) யோவேல்: 2:12-20. திரு.பாட.32. கலாத்தியர்: 2: 15:21. லூக்கா 9: 23-27. சாம்பல் புதன் கிழமை. Ash Wednesday. 14:02:2024.
முன்னுரை: அன்பின் இறை மக்களே !. கிறித்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தபசு காலம் மிக முக்கியமானது. நம் பாரம்பரியத்தின் மிகமுக்கியமாக அனுசரிக்க வேண்டியதாகும். நம் ஆண்டவர் இயேசு கிறித்தும் நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி நற்செய்தியில் உள்ளது.இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள் கள் நோன்பிலும் இறைவேண்ட லிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.
தன்னலம் மறத்தல் என்ற தலைப்பு ஆண்டவரின் வார்த் தையான, "என்னைப் பின் பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என் னைப் பின்பற்றட்டும்.
(லூக்கா நற்செய்தி 9:23) என்ற
வசனத்தின் அடிப்படையாக
கொண்டது.(மத்தேயு 16:24) ஆண்டவரின் கட்டளை வார்த்தை
"தம் சிலுவையைச் சுமக்காமல்
ஒரு கிறிஸ்தவன் என கூற முடியாது. கிறித்துவமே, பாடுகள், துன்பங்கள், மத்தியில் வளர்ந் தது. ரோம அரசன் நீரோ (கி.பி 37 - 68,) ரோம் பற்றி எரியசிறுபான்மை கிறித்தவர்களே காரணம் என பழி சுமத்தி, அவர்கள் துன்புறுத்தும் நோக்கில், தீ வைத்ததற்குத் தண்ட னையாகப் பொது வெளியில் அவர்களை துக்கிலிடச் செய்தார், காட்டு ஓநாய்களின் முன் அவர் கள் வீசப்பட்டனர், இரவில் உயிரு டன் எரிக்கப்பட்டனர், பொது மக்கள் அந்தக் காட்சியைக் காண கூட்டப்பட்டனர். இவன் ஆட்சிக் காலத்தில்தான் பேதுரு தலை கீழாக சிலுவையில் அறையப் பட்டு கொலை செய்யப்பட்டார்.
திருதூதர் பவுல் அடிகளாரும்
கி.பி 67ல் நீரோவால் கொள்ளப் பட்டனர்.இந்த துன்புறுத்தல் கிறித்தவர்களுக்கு ரோம அரசின்
முதல் கிறித்தவ மன்னன் கான்ஸ்டான்டினால் கி பி 313 ல்
நீக்கப்பட்டது. சுமார் 250 ஆண்டு
களாக கிறித்தவர்கள் துன்பட் டனர். துன்பத்தினால் தான் கிறித்தவம் வளர்ந்தது. எனவே தான் ஆண்டவர், "எல்லாவற் றையும் விட்டு உம்மிடம் வந் தோமே எங்களுக்கு என்ன
கிடைக்கும்" என கேட்ட திருத்தூ தர் பேதுருவிடம், "எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றுனைப் பின்பற்றி வருவோர் தம் சிலுவையைச் சுமக்காமல் என்னு டையோர் எனக் கருதப்படத் தகுதி யற்றோர். (மத்தேயு நற்செய்தி 10:38) தம் உயிரைக் காக்க விரும் புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். (மத்தேயு நற்செய்தி 10:39)தன்னலம் துறப்பதே லெந்து காலமாகும்.நாம்இந்தலெந்துகாலத்தில் என்னென்னவற்றை துறக்க இருக்கிறோம் என்பதைதீர்மானிப் போம்.கோபம்,வெறுப்பு,தீயபழக்க வழக்கங்கள், சோம்பல், சண்டை,
வீன் பேச்சுகளை தவிர்போம்.
இரவும் பகலும் கர்த்தரின் வேதத்
தில் தியானமாய் இருப்போம். தர்மம் (Charity) செய்வோம். அனைவரிடமும் அன்பு பாராட்டு
வோம். ஆண்டவரின் சிலுவை
பாடே நமக்கு சிந்தனையாக
இருக்கட்டும். உண்ணாநோம்பும்,
இறை வேண்டலும் லெந்து காலத்
தின் அடையாளங்கள் என்பதை
கை கொள்வோம்.
1. லெந்து :ஆண்டவரிடம் வர அழைப்பு: The Lent : A call to return to God. யோவேல்: 2:12-20.
ஆண்டவரின் அன்பர்களே! தீர்க்கர் யோவேலின் காலம் கி.மு
835.யோவேல் என்ற பெயரின் அர்த்தம்“தேவனேகர்த்தர்”என்பதாகும். யோவேலின் தகப்பன் பெத்துவேல். யூதா வம்சத்தான். ஆண்டவரின் வம்சமும் யூதா வம்சம். தீர்க்கர் யோவேலின் நோக்கமே;யூதாவின்குடிகளையும், எருசலேமின் குடிகளையும் தேசத் தின் பேரழிவின் காலத்தில் புலம்பலோடும், அழுகையோடும் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்று யோவேல் அழைக்கிறார்.
இப்பொழுதாவது அதாவது இந்த லெந்து காலத்தில்; உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத் தோடுஎன்னிடம்திரும்பிவாருங்கள் ; என்கிறார் ஆண்டவர்.
நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரி டம் திரும்பி வாருங்கள். ; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள் ளவர், பேரன்புமிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.(யோவேல் 2:12,13)
கடவுளிடத்தில் நாம் ஏன் வர வேண்டும்? தீர்க்கர் அவர்கள் கடவுளின் ஐந்து சிறப்புமிக்க குணாதிசயங்களை வெளிப்படுத் துகிறார். எனவே நாம் கடவுளிடத் தில் திரும்ப வேண்டும்? கடவுளிடத்தில் திரும்புவது இந்த லெந்து காலத்தின் மிக முக்கிய நோக்கமாகும். உடைகளை கிழிப்பது அவசியமில்லை. Rend your Heart and not your Garments.
யோனா தீர்க்குகரின் எச்சரிக் கையை கேட்ட நினிவே மக்களும், அரசனும் நல்ல உடையை தூக்கி
எரிந்து சாக்கு உடை அணிந்தனர்.
மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செய ல்களையும் விட்டொழித்து(Self Denial) கடவுளிடம் திரும்ப வேண் டும். (யோனா 3:8) என்றார்.
அவ்வாறே யோபு தனுக்கு ஏற்பட்ட சோதனையில்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கினார் (யோபு 1:20) ஆடைகளை கிழிப்பது மனிதனின்
பெருமை, கர்வம், மேட்டிமையை
அழிப்பதற்கு சமம் . இப்படி ஆடை
களை கிழித்துக் கொண்டிருந்த
மக்கள் மத்தியில் நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம்,இதயத்தைக்கிழித்துக் கொண்டு ஆண்டவருடத்தில் திரும்புங்கள் என்பதே புதிய ஏற்பாட்டின் சிந்தனை. இதய தூய்மையுடன் ஆண்டவரிடத்தில்
திரும்புவர்கள் ஏழையரின் உள்ளத்தோர் இவர்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என ஆண்டவர் கூறு கிறார்(மத்தேயு நற்செய்தி 5:3)
2..லெந்து: ஆண்டவரை ஏற்றுக்
கொள்ளும் காலம். Lent: A Time for Accepting Lord. கலாத்தியர் 2:15-21
கிறித்துவின் அன்பின் சகோதரர்
களே! தூயபவுல் அடிகளார் பதினாலு வருஷம் சென்ற பின்பு,(கி.பி 49-58) இரண்டாம் முறை யாக, எருசலேமுக்குப் போகும் போது தீத்துவும் அவரோடு கூடப் போகிறார். இவர் புற இன மார்க் கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர். பவுல் இப்போது எருசலேமுக்குப் போகும்போது, தீத்து கிறிஸ்து வின் நற்செய்தியைப் பிரசங்கி க்கிற பிரசங்கியாராக ஊழியம் செய்கிறார்.பிறப்பினால் இவர் புற இனத்தார்.யூதர் அல்லாதவர் விருத்தசேதனம் செய்து கொள் ளாதவர். பவுல் விருத்தசேதன மில்லாத தீத்துவை தன்னோடு கூட எருசலேமுக்கு கூட்டிக் கொண்டு போகிறார். விசுவாசத்தினால் மாத்திரமே நாம் நீதிமானாக முடியும் என்றும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுச னும் நீதிமானாக்கப்படுவதில்லை என்றும் பவுல் அடிகளார் பிரசங் கம் செய்கிறார். இதற்கு சான்றுதான் தீத்து (Titus). தன்னுடைய பிரசங்கத்திற்குச் சாட்சியாக, பவுல் தன்னோடுகூட, விருத்தசேதனம்செய்துகொள்ளாத தீத்துவையும் எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.
விருத்தசேதனமுள்ளவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டது. விருத்தசேதனமில்லாதவர்களுக்கு பிரசங்கிக்கும்படி பவுலுக்கு கையளிக்கப்பட்டது. யூதமார்க்கத் திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள், விருத்தசேதனமானது அவசியம் என்று சொல்லுகிறார்கள். தங்கள் இரட்சிப்புக்கு விருத்தசேதனம் பெற்றுக்கொள்கிறார்கள். பவுலோ, விருத்தசேதனத்தினால் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை என்று பிரசங்கம் செய்கிறார். புற இனத்தார்இரட்சிக்கப்படவேண்டுமென்றால், அவர்கள் இயேசுகிறி ஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள். (திருத்தூதர் பணிகள் 16:31) இதன் அடிப்படையில்தான்
பவுல் அடிகளாரின் பிரசங்கம்
இருந்தது. நம் அன்பின் ஆண்ட வரை விசுவாசித்தால் போது மானது என்றும், விருத்தசேதனம் பெற்றுக்கொள்வதுதேவையற்றது என்றும் உபதேசம் செய்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பவுல் அடிகளார் மறுபடியும் எருசலேமுக்குப்போகிறார். தன்னோடுதீத்துவையும்,பர்னபாவையும் கூட்டிக்கொண்டு போகி றார். பவுல் அடிகளாரின் பிரசங் கம் இந்த பகுதியில், பேதுருவுடன் தகராறு செய்ததற்கான இறை யியல் காரணங்களை பவுல் விவரிக்கிறார். 17 ஆம் வசனத் தில், பவுல் 'நாம்'/'எங்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்து கிறார், அவரும் பேதுருவும் உண்மையில் விசுவாசத்தால் மட்டுமே நியாயப்படுத்தப்படுவ தைப் பற்றி ஒப்புக்கொண்டனர், மேலும் இந்த பரஸ்பர நம்பிக்கை யின் அடிப்படையில் பேதுரு முரண்பட்டபோது பவுல் கேபாவை எதிர்கொண்டார். கிறித்துவின் சிலுவை பாடு, மரணம் இதன் மூலமே ஒரு விசுவாசி இரட்சிக் கப்படுவார். நியாப்பிரமான சட்டம், மற்றும் விருத்த சேதனம் மூலம்
மீட்பு இல்லை என்கிறார்.
இனி சுயநலம் அல்ல, கிறிஸ்து வை மையமாகக் கொண்ட" புதிய வாழ்க்கையைக் கொண்டிருக் கிறார், உயிர்த்தெழுந்த கிறிஸ்து வின் உயிர்த்தெழுதல் வாழ்க்கை யில் வசிக்கிறார்.திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக் கிறேன். (கலாத்தியர் 2:19) இந்த
சிந்தனைதான் நம்மை ஆண்ட வரை ஏற்றுக் கொள்ள செய்கி றது.
3.தன்னலத்தை மறப்பது லெந்து, Lent: A Time for self-denial.லூக்கா 9: 23-27.
கிறித்துவின் உடன் பணியாளர் களே! நாம் ஒவ்வொரு நாளும் இந்த லெந்து காலத்தில் நம்
பாவ மாம்சத்தை சிலுவையில் அறைய வேண்டும், உலகத்தை வெல்ல வேண்டும், பிசாசை எதிர்க்க வேண்டும். நாம் நம் சரீரத்தின்கீழ்வைத்து,அவைகளை கீழ்ப்படுத்த வேண்டும். ஒருவன் என்னைப் பின்தொடர விரும்பி னால், அவன் தன்னையே வெறுத் து , அனுதினமும் தன் சிலுவை யை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." நாம் ஆண்டவரின்
பிள்ளைகள்." கிறிஸ்து இயேசு வுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச் சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். (கலாத்தியர் 5:24)
என பவுல் அடிகளார் கூறுகிறார்.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், சிலுவை என்றால் அதுமரணம் ஒன்றையே குறிக் கும். அந்நாட்களில் சிலுவை சுமக்கிறவன் ஒருபயங்கரக் குற்றவாளியாயிருப்பான். அவன் சிலுவையை மறைத்துச் சுமக்க முடியாது. போர்வீரர் சூழ எல்லோ ரும் காணும்படி, எருசலேம் வீதியிலே தான் அறையப்படப் போகின்ற சிலுவையைத் தானே சுமந்துசெல்ல வேண்டும். ஒருவன் சிலுவை சுமந்து செல்லுகிறான் என்றால், “அவன் மரணமடையும் இடத்திற்கே சென்று கொண்டிருக்கிறான்” என்பதில் சந்தேகமே இருக்காது. அவர் நமது பாவத்திற்காக, இவ்வுலக பாவத்திற்காகவே சிலுவை சுமந்துசென்றார். அவர் சுமந்த அந்தச் சிலுவையை யாரும் சுமக்கமுடியாது. இன்று நாம் நமது சிலுவையைச் சுமந்து, அவர் நடந்த பாதை செல்லவே அழைக்கப்பட்டுள்ளோம்.இதுதான் லெந்து காலம் நமக்கு உணர் த்துவது. சிலுவைப் பாதைபாதை; நம்மை ஆட்டிப் படைக்கும் சுயநலம் மரிக்கும்பாதை.அப் பாதையானது தேவனின் சித்த த்தை மட்டுமே செய்வதற்குறி யது. இந்தச் சிலுவையைக் குறித் தே, பவுல் அடிகளார் மேன்மை பாராட்டினார்.கிறிஸ்தவ வாழ்க் கையில் சிலுவையை சுமந்து கொண்டு நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டியதாய் இருக்கிறது. நம்முடைய ஆண்டவருக்காக, நாம் சில போராட்டங்களையும், துன்பங்களையும் நம் வாழ்வில் சந்திக்க வேண்டியதாய் இருக் கிறது. சிலுவையை தினமும் சுமந்தவர்களாக ஆண்டவரை பின் பற்றினால்தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசிர்வாதங் களை இக்காலத்தில் நாம் பெற முடியும்.தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற கடவன் ( மத்தேயு 10:38 )
என்பது சிலுவை சுமத்தல் ஒரு முழுமையான அர்ப்பணிப்பிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் அனுப வமாகும். இந்த அனுபவமாகிய சிலுவையை தினமும் சுமந்தவர் களாக, தன்னிலை மறந்தவராக பின்பற்றினால்தான், அவரால் நமக்கு ஆயத்தமாக்கப்பட்ட ஆசிர் வாதங்களை நாம் அடையமுடியும். ஏனென்றால் சிலுவை சுமந்து ஆண்டவர் உருவாக்கிய மேன்மையான ஆசீர்வாதங்களை நாமும் சிலுவையை சுமக்க முன்வருவதன் மூல மாகத்தான் அடைய முடியும்.
ஆக, இந்த லெந்து காலம் நம்மை
தன்னலம் மறந்து, சிலுவைப்
பாடுகளை அனு தினமும் தியானி க்க ஆண்டவர்தாமே நம்மை காப்பாராக.ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Points to Ponder:
* Ash Wednesday reminds us Fasting
and Prayer.
* Self -denial and bearing Cross are
Two important symbols of Lent.
* Ash Wednesday is preparing us to
come closer to God.
" கிறிஸ்து இயேசுவோடு இணை ந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களு க்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக் கை ஒன்றே இன்றியமையாதது. "
(கலாத்தியர் 5:6)
Comments
Post a Comment