மண வாழ்வும் மன நிறைவும். Family Life as Fulfilling Life. (117) மத்தேயு: 5: 31,32.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
நண்பர்களே! இந்த லெந்து காலத்தில் மண வாழ்வும் மன நிறைவும். என்ற தலைப்பை
சிந்திப்போம்.மண வாழ்வு புது வாழ்வாகும். இது மகிழ்ச்சியின்
அடிப்படையில் அமைய வேண் டும்.மணவாழ்வில் பிரச்சினைகள் இன்று நேற்று அல்ல, மனித சரித்திரம் ஆரம்பமான காலத் திலிருந்தே உள்ளன. நம் முதல் பெற்றோரிடத்தில் (ஆதாம், ஏவாள்) தலைதூக்கிய குணங்க ளும் மனப்பான்மைகளுமே இன்று மணவாழ்வில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். ஆதாம் ஏவாள் தங்கள் தன்னல ஆசைகளுக்கு அடிபணிந் தபோது பாவம் எனும் படுகுழியில் விழுந்தார்கள், இப்படித்தான் ‘பாவம் உலகத்திலே பிரவேசித் தது.’ (ரோமர் 5:12) ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, ‘மனிதனின் இருதயத்து நினைவுகளின் அதாவது, சிந்தனைகளின் தோற் றமெல்லாம் நித்தமும் பொல்லாத தாகிவிட்டது’ என்று காட்டுகிறது.(தொன்மைநூல்:ஆதியாகமம் 6:5.)
திருமணம் என்பது கடவுளின் உடன்படிக்கையை பிரதிபலிக்கும் ஒரு தூய உடன்படிக்கை என்று வேதம்கற்பிக்கிறது.ஆண்டவராகிய இயேசு கிறித்துவும்; "இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத் ததை மனிதர் பிரிக்காதிருக் கட்டும். "என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:6) விவாக ரத்து என்பது மோசஸ் காலத்தி லிருந்து இன்று வரை உள்ள நடை முறை. இது பல ஆண்டுகளாக வருகிறது, மேலும் இயேசுவின் காலத்திலும் இது ஒரு பொது வான நடைமுறையாகஇருந்தது.
1. மோசே ஏன் தள்ளுதல் சீட்டை
கொடுக்க சொன்னார்? Why did Moses ask to give the Divource slip?
அன்பின் இறை மக்களே!
மோசேயின் காலத்தில், யூத ஆண்கள், பெண்களை திருமணம்
செய்து, அவர்களின் சீதனங்கள்
அனைத்தும் செலவு செய்து விட் டப்பிறகு, அந்தப் பெண்கள் தங்களை தாங்களே பராமரித்துக்
கொள்ள அவர்களை தெருக்களில்
அலைய விட்டனர். பிறகு ஆண் கள் சீதனம் தரும் வேறு பெண் களை திருமணம் செய்வது இவர்
களின் தவறான வழக்கமாக
இருந்தது. இந்த சூழ்நிலையில்
மோசே அவர்கள் பெண்களுக்கு
சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பதற்காகவும், விவாகரத்தை
ஊக்குவிக்காமல் இருக்கவுமே இனைச்சட்டம் (உபாகமம்) 24:1-4,
இந்த வசனப்பகுதி கொடுக்கப் பட்டது. இதில் சட்டபூர்வமாக தள்ளுதல் சீட்டு கொடுத்துதான்
ஒரு கணவன் தன் மனைவியை
விவாகரத்து செய்ய முடியும். இரண்டாவதாக கணவன் விவாக
ரத்து செய்த மனைவியை மீண்டும் மறு திருமணம் செய்ய
முடியாது. இது கணவன் அவசரப் பட்டு முடிவு எடுக்க கூடாது என்பதற்காக வடிவமைக்கப் பட்டது. விவாகரத்து வேதத்தில்
ஒரு சட்டம் அல்ல; அது ஒரு சலுகை."Divource is not a law, but a choice"
கடவுள் இனைத்ததை மனிதன்
பிரிக்காதிருக்ககடவன் என்பதே
சட்டம். ஆண்கள் தங்கள் மனைவி களை விவாகரத்து செய்ய மோசே அனுமதித்தார், ஏனெனில் அவர் களின் இதயத்தின் கடினத் தன் மை காரணமாகவும் அவளை விபசாரம் செய்ய வைக்கிறான், விவாகரத்து செய்யப்பட்ட பெண் ணை மணந்தவன் விபச்சாரம் செய்கிறான்.
2. இயேசுவின் போதனை என்ன?What is the teaching of Jesus on Divource?
கிறித்துவின் அன்பு சகோதரர் களே! மோசசின் காலத்திலும்
ஆண்டவராகிய இயேசு கிறித்து வின் காலத்திலும் பெண்களின் நிலை மிக மோசமாகவே இருந் தது. பெண்கள் மீது கடுமையான
அடக்குமுறை இருந்த காலத்தில்
ஆண்டவரிடம் பரிசேயர்கள்
கேட்ட கேள்விக்கு "பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதி க்கும் நோக்குடன், "ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தை யாவது முன்னிட்டு விலக்கிவிடு வது முறையா?" என்று கேட்டனர்.
(மத்தேயு நற்செய்தி 19:3) அதற்கு ஆண்டவர்; மறுமொழியாக, "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்" ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" என்று நீங்கள் மறைநூலில் வாசித்த தில்லையா?" என்று கேட்டார்.
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக் காதிருக்கட்டும். "என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:4,6) ஆண்டவரின் அநாதி திட்டமே
குடும்ப வாழ்வு. இதன் மூலமாக
தான் உலகில் வின்னரசை நிறுவ
முடியும். எனவே, ஆண்டவர்
"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனை வியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசா ரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
(மத்தேயு நற்செய்தி 5:32) என்றார்.
குடும்பம் மனித நாகரீகத்தின் கடவுளின் பரிசு.குடும்பத்தை வெற்றியாக நடத்துவது ஒரு கிறிஸ்துவனின் வெற்றியாகும். இதற்கு அடிப்படை கிறிஸ்துவின் அன்பு நம் இல்லத்தில் இருக்க வேண்டும், பொதுவாக மண வாழ்வில், நேசமும் பாசமும், அன்னியோன்னியமும், உண்மைத்தன்மையும், பிள்ளைச் செல்வங்களும், பரஸ்பர திருப் தியும் எதிர்பார்க்கப்பட்டன.
குடும்பம் என்பது அன்பு உள்ளங் களின் சங்கமம். பின் ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். ஆண்டவர் சமாரியா பெண்ணைப் பார்த்து; இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்" என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, "எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவரிடம், "எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார். (யோவான் நற்செய்தி 4:16,17,18) இதன் மூலம்,இயேசு காலத்து சமூகம் எப்படி பெண்களை நடத்தியது என்பதை காணலாம்.
பண்டைய இஸ்ரேலில், நிச்சய தார்த்தம் திருமணமாகவே கருதப் பட்டது. யோசேப் மரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட போது, அவர் அவளுடைய கணவர் என்று அழைக்கப்பட்டார்.மத்தேயு 1:19"அவளுடைய கணவனாக இருக்கும் யோசேப்பு ஒரு நீதி யுள்ள மனிதனாக இருந்ததாலும், அவளை தள்ளிவிடாமல் ஏற்றுக்
கொண்டார்.கடவுள் தெய்வீக சந்ததியை விரும்புகிறார், எனவே நாம் நம் வாழ்க்கைத் துணைகளு க்கு உண்மையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் உடலா கிய தேவாலயமாக, விவாகரத்து மூலம் துன்பப்பட்டவர்களை நாம் நேசிக்க வேண்டும்,குடும்ப நீதி மன்றங்களில் வரும்வழக்குகளில் 25 வழக்கில் 9 வழக்குகள் கிறித்தவ விவாகரத்து
வழக்குகள், இது வரதட்சினை,
வன்முறை, Ego என்ற "நான் என்ற"
அகங்காரம், ஒழுக்க கேடும் முக்கிய காரணங்கள், கடவுளின்
பரிசான குடும்பத்தையும், ஆலயத்
தில் திருமணமான அன்று
சபைக்கு முன்பாக கொடுக்கப் பட்ட உறுதிமொழிகள் காற்றில்
பறப்பதையும் கடவுள் வருத்தத்து
டன் அமைதியாக பார்கிறார். கடவுளின் அன்பை மறக்கின்ற பொழுது, மன்னிப்பு சிந்தனை இல்லாத போதும், பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாத போதும். குடும்பம் சிதைந்து போகிறது. இதை மாற்ற ஒரே வழி
குடும்ப ஜெபமும், மன்னிப்பு சிந்தனையும் தான்.
3. நம் திருமணத்தை எப்படி பாதுகாக்க முடியும்?
கிறித்துவின் அன்பர்களே!
தற்போதிய சமுதாயத்திலும் சரி, மணவாழ்க்கைக்குக் கொடுக்கப் பட்ட மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது”.கடவுள் மனிதகுலத் தை தம் சாயலில் படைத்தார், கடவுளின் சாயலில் அவர்களைப் படைத்தார், ஆணும்பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்." ஆணும் பெண்ணும் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள், ஆனால் இந்த உருவம் அவர்களின் திரு மணத்தில் குறிப்பாகக் காணப் பட்டது.விவாகரத்து மன்னிக்க முடியாத பாவம் அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். கிறிஸ்து நம் ஒவ்வொரு பாவங்களுக்காகவும் இறந்தார், மேலும் கடவுளின் அன்பும் கிருபையும் பெரும்பாலும் நம் தோல்விகளில் இன்னும் பெரிய வழிகளில் அனுபவிக்கப் படுகின் றன.திருமணமானவர்களுக்கு நான் இந்த கட்டளையை கொடுக் கிறேன் - நான் அல்ல, ஆனால் இறைவன் - ஒரு மனைவி ஒரு கணவனை விவாகரத்து செய்யக்கூடாது (ஆனால் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கட்டும், அல்லது கணவனு டன் சமரசமாக இருக்கட்டும்), கணவன்மனைவியைவிவாகரத்து செய்யக்கூடாது.கோமேரை திருமணம் செய்ய தேவன் ஓசியாவிடம் கட்டளையிடுகிறார், ஆனால் அவள் அவனுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்ற பிறகு, ஓசியாவைவிட்டுப் பிரிந்து தன் காதலர்களிடம், காமுகர்களிடம் செல்கிறாள்.(ஓசியா 1:2,3)
ஓசியாவின் மனைவி அவரை விட்டுவிட்டு அவரை ஏமாற்றிய பிறகு, அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் உறவை மீட்டெடுக்க முயன்றார். துரோகம் சம்பந்தப்பட்டிருந்தாலும், திரும ணங்கள் எப்போதும் கடவுளின் மகிமையைக் காட்டுவதாகும்.
விபச்சாரம் திருமண உடன்படிக் கையை மீறுகிறது. ஒரு திருமண மான பெண் தன் கணவன் உயிரு டன் இருக்கும் வரை சட்டத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறாள்.
திருதூதர் பவுல் அடிகளார், "நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடு விக்கப்படுகிறாள். தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந் துகொண்டால் அவள் விபச்சாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகி றாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந் தபின் எல்லா திருமண விதிக ளிலும் இருந்தும் அவள் சுதந்திர மாகிறாள். அப்போது அவள் இன் னொருவனை மணக்க வேண்டும் என்றால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.( ரோமர் 7:2,3) என்பதையும் நாம் மனதில்
புரிந்துக் கொள்ள வேண்டும்.
மல்கியா 2:16ல், "நான் விவாக ரத்தை வெறுக்கிறேன்" என்று கடவுள் கூறுகிறார். விவாகரத்து ஏற்பட்டால், திருமணம் தோல் வியடைந்தது.கடவுள் அந்த திரும ணத்தை உங்களுக்காக புனித மாக மாற்றுவதற்காக வடிவமைத் தார், மகிழ்ச்சியாக இல்லை" என்று எழுதினார்.கடவுளின் வடிவமைப்பைப் பின்பற்றும் திருமணம் ஆசீர்வதிக்கப்பட்டது.
கணவனும் மனைவியும் நிரந் தரமாக ஒன்றாக வாழ வேண்டும் என்று கடவுள் எண்ணினார், விவாகரத்து என்பது திருமண துரோகம்.விவாகரத்து என்பது திருமணத் திற்கான கடவுளின் வடிவமைப்பு அல்ல; விவாகரத்து என்பது கடவுளின் வடிவமைப் பைக் கடைப்பிடிக்க மனிதகுலத் தின் தோல்வி. ஆனால், அது மன்னிக்க முடியாத பாவம் அல்ல. ஒரு நபர் விவாகரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து, கடவுளின் தயவை எதிர்பார்க்க முடியுமா? என்றால், முடியும்.
எனவே, பாலியல் தவறான நடத்தைக்காக தவிர விவாகரத்து செய்யாதீர்கள். இதன்மூலம் விவாகரத்து சான்றிதழ் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, விவாகரத்துக்கான காரணங் களைக் கூறவும். இரண்டு, அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்கப்படு வதை உறுதிசெய்யவும். மூன்று, அவளுக்கு மறுமணம் செய்து கொள்ளும் சுதந்திரத்தை அனுமதியுங்கள்.
வேதம் திருமணத்தை விரும்பு கிறது; "தனி மனிதராய் இருப் பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களு க்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம், பிரசங்கி. 4:9)
இறுதியாக, நண்பர்களே!
தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும், காலமெல்லாம் சேர்ந்து வாழவும் வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். மணத்துணை துரோகம் செய்தால் மட்டும்தான் விவாகரத்தை அவர் அனுமதிக்கிறார். அதேசமயத்தில், விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமையைத் தவறு செய்யாத துணைக்கு அவர் தந்திருக்கிறார். (மத்தேயு 19:9) ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கிறிஸ்தவர் களுக்கு அவர் தந்திருக்கும் சட்டம்.(1 தீமோத்தேயு 3:2.)
திருமணமாகாமல் இருக்கும் வரத்தை நன்றாகப் பயன்படுத் திக்கொள்ளுங்கள்திருமணமாகாமல் இருப்பது ஒரு வரம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:11, 12) அது தன்னைப்போல்
ஊழியத்தில் முழு நேர பணி யாளர்களாக இருக்க விரும்புகிற வர்கள் இப்படி இருக்க இயேசு விரும்பினார்.
மணத்துணைக்குத் துரோகம் செய்வதும் விவாகரத்து செய்வதும், தவறு செய்யாத துணையையும் பிள்ளைகளையும் பாதிக்கும்."திருமணத்தை அனை வரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.
(எபிரேயர் 13:4) என வேதம்
எச்சரிப்பதை மறவாதீர்.மன நிறைவான மண வாழ்வு வாழ
ஆண்டவர் நமக்கு கிருபை
செய்வாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.
www.davidarulsermoncentre.com,
www.davidarulblogspot.com.
Points to Ponder:
* Marrige is the devine's covenant
* He who finds a wife finds a good thing .
* He who loves his wife loves himself.
* An excellent wife is the crown of her husband,
* A truly good wife is the most precious treasure a man can find!
"நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர். "
(மத்தேயு நற்செய்தி 5:32)
Comments
Post a Comment