லெந்து : ஒப்புரவாகுதலின் காலம். Lent: A Time of Reconciliation. (111) தொடக்க நூல் 45: 1-15. திருப்பாடல் 85. எபேசியர்: 2: 11:22. யோவான் 2; 1-11.

முன்னுரை:  இயேசு கிறிஸ்து வோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறை மக்க ளாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களி லும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ் துவை அறிக்கையிடும் யாவருக் கும், நம் தந்தையாம் கடவுளிட மிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். அவர்
மீது அளவற்ற அன்பும், பற்றுறுதி
யும் வைத்துள்ள நாம்; லெந்து காலத்தை அனுசரிக்க இருக்கி றோம். லெந்து என்றாலே சக
மனிதறோடும், ஆண்டவருடன்
ஒப்புரவாகுதலின் காலமாகும்.
தவக் காலம் (Lent)என்பது கிறித் தவர்களின் வழிபாட்டு ஆண்டில் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். இது சாம்பல் புதன்என்றும் வழங்கப்படுகின்ற நாளிலிருந்து கிறித்துவின் மரணத்திலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்வைக் கொண்டாடும் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரை நீடிக்கின்ற நாற்பது நாள் காலத்தைக் குறிக்கும். ஒரு மரத்தின் கனியினால் ஏற்பட்ட 
பாவம் கழு மரத்தினால் மீட்பை
பெறும் காலமே லெந்து காலம். 
 இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் சிறப்பான கவனம் செலுத்துவர். ஆண்ட வரின் சிலுவை பாட்டை என்றும்
நாம் மறக்க கூடாதின்  அணுகு முறையே லெந்தாகும்.
ஒப்புரவாகுதல் (Reconciliation) என்பது கிறித்துவ திருவருட் சாதனம்(Sacrament) நம் பாவங் களே நம்மை ஆண்டவரின் நல்
உறவிலிருந்து நம்மை பிரிக் கிறது. லெந்து காலம் நம்மை 
ஆண்டவரோடு இணைந்து செயல்
பட அழைக்கிறது. இதற்கான ஒரே
வழி மனம் திரும்புதல், பாவத்தை
விட்டோழிப்பதே ஒப்புரவாகு தலின்  அடையாளமாகும். ஒப்புரவாகுதல் சக மனிதரோடும், 
ஆண்டவரோடும் நல்லுறவு கொள்
வதே. Reconciliation is the opportunity to grow closer to God. 
கிறிஸ்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கியதாக திருவிவ லியம்  கூறுகிறது (ரோமர் 5:10; 2 கொரிந்தியர் 5:18; கொலோசெயர் 1:20-21). நமக்கு ஒப்புரவாகுதல் தேவையாக இருக்கிறது என்பதன் அர்த்தம் ஆண்டவருடன்  உள்ள நம் உறவு முறிந்து விட்டது என்பதாகும். லெந்து காலம் இதை
சீர்படுத்துகிறது.
1. சிறைச்சாலை முதல் பிரதம மந்திரி அலுவலகம் வரை - Prison cell to Prime Minister Office. தொடக்க நூல் Genesis:45:1-15.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
ஒப்புரவாதலின் அடையாளமே 
யோசப்புதான். தன் சகோதரர்கள்
செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்காமல், அவர்களை பழி
வாங்காமல் மன்னித்து அரவனி த்துக்கொண்டார். இதுதான் உண்மையான ஒப்புரவாகுதல்.
யோசப்பு தன் சகோதரர்களை
பார்த்து; " உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக் கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார். 
(தொடக்கநூல் 45:7) தனக்கு
 ஏற்பட்ட அநீதியை, நன்மையாக
கருதுகிறார்.அவர் 9 ஆண்டுகள் எகிப்தின் பிரதமராக இருந்த பிறகுதான் அது அவரது வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணம் - யோசேப் தனது 10 சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்திய தருணம், தமக்கு எதிராக அவர்கள் செய்த அனை த்து தீய செயல்களையும் மன்னி த்து, அவர்களை வளர்ப்பதாக உறு தியளித்தார். இது அவரை பழைய ஏற்பாட்டில்கிறிஸ்துவைப்போன்ற நபராக மாற்றியது.அவர் தங்கள் தந்தையின் விருப்பமான மகன் மற்றும் அவர்கள் அவரை வணங் குவதை சித்தரிக்கும் அவரது கனவுகளை அவர்களால் தாங்க முடியவில்லை.அவருடைய 10 சகோதரர்கள் அவர் மீது மிகவும் பொறாமை கொண்டனர், ஏனென்றால் அவர்களுடைய பொறாமை மிகவும் அதிகமாக இருந்தது.பொறாமையே ஒரு
மனிதனின் அழிவாகும்.ஆனால் கடவுள் எல்லாவற்றையும் அற்புத மாகச் செய்தார். 10 ஆண்டுகளுக் குப் பிறகு யோசப் எகிப்தின் பிரதமரானார். எகிப்து மக்கள் 7 வருட வறட்சியின் போது பசியால் வாடாமல் இருக்க, முதல் 7 வருடங் களில் நல்லவிளைச்சலில்இருந்து போதுமான இருப்புகளைச் சேமித் து வைக்க கடவுள் அவருக்கு ஞானத்தைக் கொடுத்தார்.  மனித னுக்கு பழி வாங்கும் எண்ணமோ, பாவச் செயலோ, பதிலுக்கு பதில் என்ற எண்ணமோ, சிந்தனையோ இல்லை என்றால் ஞானம், அறிவு , ஆற்றல் அதிகமாக இருக்கும். அன்பினாலே அவன் உயர்த்தப்படுவான். இதுதான் யோசேப்பினுடைய வெற்றிக்கு காரணம். மன்னிக்கத் தெரிந்த வர்கள் உள்ளமே மாணிக்க கோவில். அதை தன் சகோதர ரிடத்தில் காண்பித்தார்.
 19 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரர்கள் அவரை எவ்வாறு தவறாக நடத்தினார்கள் என்பதை அவர் நினைவு கூறவில்லை, - அவர்கள் அவரது பல வண்ணங் களின் மேலங்கியைக் கழற்றி அவரை ஒரு பயங்கரமான குழியில்தள்ளினார்கள்.அப்பொழுது யோசேப் பின் வயது 17. காலங்கள் மாறும்காட்சிகளும் மாறும். யாக்கோபு கானானில் ஏற்பட்ட பஞ்சத்தினால், தன் பிள்ளைகளை எகிப்துக்கு உணவு வாங்க அனுப்பினார். எகிப்து வந்தாரை வாழ வைக்கும் நாடு. நம் ஆண்டவரை குழந்தையாக இருக்கும் போது உயிர் வாழ அடைக்கலம் கொடுத்த நாடு.
 யோசேப் தனது சகோதரர்களை எகிப்துக்கு வந்தபோது அடை யாளம் கண்டுகொண்டார், ஆனால் அவர்கள் அவரை அடை யாளம் காணவில்லை, ஏனென் றால் அவர் இப்போது ஒரு எகிப் தியஅதிகாரிபோல்இருந்தார்.அன்பிற்கு உன்டோ அடைக்கும் தாழ்.
 அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னி லையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், "எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்" என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை. உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள் விப்பட்டனர். (தொடக்கநூல் 45:1,2) Blood is thicker than water என்பர். சகோதரர்சிநேகிதம் உங்களில் நிலைத்திருப்பதாக.யோசேப்பு தன் சகோதரர்களைத் தழுவி, முத்தமிட்டு, அழுவதைக் காண்கிறோம். அவர் அவர்களிடம் பேசியது மற்றும் செய்தது அனைத்தும் அவர் மீது எந்த வெறுப்பும் இல்லை, கசப்பும் இல்லை, என்பதைக் காட்டுகிறது. இதுதான் ஒப்புரவாதலின் அனுபவம். லெந்து கொடுக்கும் பாடம் மன்னிப்பு. மத்தேயு 18:15 சொல்கிறது - "உன் சகோதரன் உனக்கு விரோதமாகத் தவறு செய்தால், நீயும் அவனும் தனி யாக இருக்கும்போது அவனிடம் போய் அவனுடைய குற்றத்தைச் சொல்." மன்னிப்பிற்கு அளவு இல்லை. 
2 பிர இனத்தாரையும், யூதரை
யும் கிறித்துவுக்குள் இனைப் பதேஒப்புரவாகுதல். எபேசியர் 2:11-22 Unite Jews and Gentles in Christ is Reconciliation. 
இயேசு கிறிஸ்துவின் அன்பின் இறை மக்களே! தூய பவுல் அடிக ளார் எபேசியர்களுக்கு எழுதுகி ன்ற நிருபத்தில் பிர இனத்தாரை யும் யூதரையும் கிறிஸ்துவுக்குள் இணைப்பதே ஒப்புரவாதளின் நோக்கமாக கொண்டிருக்கிறார். புர இனதார்களே ! அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும், வாக்கு றுதியைக் கொண்டிருந்த!உடன் படிக்கைக்கு அன்னியர்களாகவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாக வும் இவ்வுலகில் இருந்தீர்கள். 
பிறப்பால் பிற இனத்தாராய் இருந்த நீங்கள், உங்கள் முன் னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்து வோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்
உங்களை என்றும் ஆண்டவரோடு
இனைந்திருக்க பல கட்டளைக ளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார்.  நீங்கள் கிறிஸ்துவுக் குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக் குரியவர். (1 கொரிந்தியர் 3:23)
நீங்கள் கிறித்துவின் புதிய
படைப்பாளிகள்.ஆண்டவர் தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக் கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். கொடிகள் மரத்தோடு இனைந்திருப்பது போல நீங்கள் கிறிஸ்துவிள் இணைந்திருக்கிறீர்கள்.எனவே அன்பின் புர இனத்தாரே! இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நீங்களும் அவ ரோடு இணைந்து தூய ஆவி வழி யாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். இனி  நீங்கள் கடவுளின் மக்களுடன் சக குடிமக்கள் மற்றும் கடவுளின் குடும்ப உறுப்பினர்களாக இருக்கிறீர்கள். என புர இனத் தவருக்கும் பவுல் அடிகளார் ஆண்டவரின் ஒப்புரவாதலை கொடுக்கிறார்.
3.இயேசு அழைக்கப்பட்டார். Jesus was invited. யோவான்2:1-11
கிறிஸ்துவுக்குள் பிரிய மானவர்களே ! யோவான் நற் செய்தி பகுதியில் ஆண்டவர் ஒரு திருமண விருந்திற்கு தன் சீடருடன்அழைக்கப்பட்டார்.மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத் திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசு வின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ' அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள் ' என்றார். யூதரின் தூய்மைச் சடங்கு களுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், ' இத்தொட்டி களில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற் றை விளிம்பு வரை நிரப்பினார் கள். பின்பு அவர், ' இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையா ளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார் கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வை யாளர் மணமகனைக் கூப்பிட்டு, ' எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம்மாட்சியைவிளங்கபன்னினார்.
ஆண்டவர்அழைக்கப்படுவதினால் அற்புதங்கள் நடக்கிறது, அதிச யங்கள் நடக்கிறது. ஆண்டவர் அழைக்கப்படுவராய் இருக்கிறார் ஆண்டவரை அனேகர் அழைத் தார்கள் விருந்துகள் வைத்தார் கள், அவர்களை ஆண்டவர் இரட்சித்தார், பாவ மன்னிப்பு அளித்தார், அவர் இல்லங்களில் அற்புதங்களை செய்தார். எனவே ஆண்டவரை நாம் அழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் . ஆண்டவரை அழைக்கின்ற போது தான் அவர் தன் கிரியை நமக்கு செய்கிறார், நமக்கு இருக்கின்ற குறைவை நிரைவாக்குவார். அழைக்கின்ற போது அற்புதங்கள் செய்யும், அற்புத நாயகன் நம் ஆண்டவர். நாம் நம்முடைய திருமணங்களில் அவரை அழைக்க வேண்டும், குடும்ப நிகழ்வுகளில் அவரை அழைக்க வேண்டும், நம் இல்லங்களில் அவரை அழைக்க வேண்டும், நாம் விடுதலை, பெற பாவ மன்னிப்பு பெற அவரை நாம் அழைக்கின்ற மக்களாய் இருக்க வேண்டும். அவருடைய ஜெப விண்ணப் பத்தில் கூட விண்ணில் இருக்கும் எங்கள் அன்பின் பிதாவே! என அழைக்கின்றோம், அழைத்தால் தான் ஆண்டவர் நம்மிடம் வருவார்.  அவர் எப்போதும் வாசல் படியில் நின்று கதவை தட்டு கிறார், ஒருவன் என் சத்தத்தை கேட்டு தன் உள்ளக் கதவை திறந்தால் அவன் வீட்டிற்கு சென்று நான் உணவு அருந்துவேன் என ஒவ்வொரு வரும் அழைப்பார்களா? என காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவர், இந்த லெந்து காலங்களில் ஆண்ட வரை ஒவ்வொரு விடயத்திற்கும் நாம் அழைப்போம்.அழைக்கிறவர்களே அற்புதத்தை பெறுவர், ஆண்டவர் நம்மை காத்து இரட்சிப்பாராக! இந்த லெந்து காலங்கள் நாம் ஆண்டவரோடு அதிக நேரம் தியானத்தில் சேர்ந்திருக்க கடவுள் கிருபை செய்வாராக ஆமென்.
.

Prof. Dr. David Arul Paramanandam, Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 


"அழைக்கிறார் இயேசு, அவரிடம்
பேசு"


Points to Ponder:
The Lent is a  period of fasting and prayer,
The Lent is the period of coming closer to God,
The Lent is the time for Reconciliation
and Redumption, 
The Lent is a period of forgiving and forgetting the sins,
The Lent is the time of denouncing
our sins one by one,
The Lent is the time for inviting God in our life,
The Lent is the time for charity,
The Lent is the building of brotherhood
and love,
The lent is the period of love toward
Mankind.
The Lent is the period for the remembrance of the suffering of God on the Cross. Amen 







கானாவில்திருமணம்  
ஓவியர்: Giotto, 14ம் நூற்றாண்டு

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.