லெந்து : தீண்டத்தகாதவர்களை தொடுதல். Lent: Touching The "untouchable". (114) 2 அரசர்கள் 5:1-10, திருப்பாடல் 10:1-12. எபிரேயர் 13:8-17. மத்தேயு 8:1-14.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
நண்பர்களே! இறைமைந்தன்
இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில்வாழ்த்துக்கள்."தீண்டத்தகாதவர்களை தொடுதல்"( "Touch ing the Untouchables") என்ற தலைப்பில்சிந்திப்போம். யூதர்கள் ஆதிகாலம் முதற்கொண்டு தன்னை தனி இனமாக, மற்ற இனமக்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர். மற்ற இன மக் களிடம் உறவும் இல்லை ஒட்டும் இல்லை என்றகோட்பாடு ஏற்ற தாழ்வுகளை கொண்டு வந்தது. இது இயேசு கிறித்துவின் காலத் தில் உச்சத்தில் இருந்தது. யூதர்கள், கிரேக்கர்கள் என்றும்
சமாரியன், கலிலேயன் என்ற பாகுபாடும் இருந்தன.
தமிழகத்தில் ஏறக்குறைய 16% மக்கள் கிறிஸ்துவர்கள். அனை த்து திருச்சபைகளையும் சேர்த்து மிக பெரிய சாதியாக இருப்பது தலித் கிறிஸ்தவர்கள் தாம். (அதனையடுத்துள்ள பெரிய சாதி கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வன்னியர்கள் ஆவர். அதனையடுத்துள்ள பெரிய சாதி தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்த நாடார்கள் ஆவர்). இதில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகம் தலித் கிறிஸ்துவ சமூகமே.
கிறித்துவ திருச்சபைகளில் உள்ள உயர் பதவிகளிலும் சாதி தலை விரித்தாடுகிறது. இது சம்பந்த மாக சபைகளுக்குள் நடக்கும் பூசல்கள் குறித்து செய்திகள், செய்திதாள்களில் காணக் கிடைக் கிறது.( https.//Velsmedia. com)
குமரி மற்றும் சில மாவட்டத்தில் தலித்கிறித்தவர்களுக்கானசர்ச்சுகளுக்கு, உயர் சாதி கிறித்தவர் கள் செல்ல மாட்டார்கள். சாதிக் கான தனி சபைகள், கல்லறைகள்
இருப்பது அவமானத்தின் சின்
னங்கள்.கிறிஸ்தவர்களிடை யேயும் சாதிக் கொடுமைகளுக்கு சிறிதும் குறைவில்லை. சாதி விட்டு சாதி திருமணங்கள் மிகவும் குறைவு. சாதிவிட்டு, சாதி காதல்கள் நசுக்கப்படுகின்றன. கவுரவ கொலைகளுக்கும் குறைவில்லை. மவுனமாக கொல்லப்பட்ட இதயங்களுக்கு கணக்கில்லை.
திருதூதர் பேதுரு அவர்கள் தன் னை யூதர்களுக்காகவே ஊழியம்
செய்ய அழைக்கப்பட்டதாக என்னி தன்னை யூதேயா மற்றும் அதன்
சுற்றுப்பகுதியில் ஆண்டவரை
அறிவித்தார். அவருக்கு ஒருநாள் ஒரு கனவு காட்சி வந்தது. அதில் பெரிய கப்பற்பாயைப் போன்ற தொரு விரிப்பு நான்கு மூலைக ளிலும் கட்டப்பட்டு, வானிலிருந்து தரையில் இறக்கப்படுவதைக் கண்டார். அதில் நடப்பன, ஊர்வன, பறப்பன அனைத்தும் இருந்தன. “பேதுருவே, எழுந்து
இவற்றைக் கொன்று சாப்பிடு”, என்ற குரல் கேட்டது. அதற்கு, “வேண்டவே வேண்டாம் ஆண்ட வரே, தீட்டானதும், தூய்மையற் றதுமான எதையும் நான் உண்ட தேயில்லை”, என்றார். மீண்டும் இருமுறை, முன்பு ஒலித்தது போலவே குரல் ஒலித்தது.இதன் உட்பொருளான, அனைத்து சாதியினருக்கும் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டுமென்பது, பின்பு அவருக்கு உணர்த்தப் படுகிறது. அனைத்து சாதியின ரும் சமம், எந்தவித பாகுபாடும் கூடாது, என பேதுருக்கு அறிவுறுத் தப்படுகிறது.( திருதூதர் பணிகள்
10:1-23)
இயேசுவின் காலத்தில் யூத குரு மார்கள், சதுசேயர், பரிசேயர் (யூத மேல் தட்டு மக்கள்) ஆகியோர் சமூகத்தில் உயர் நிலையிலிருந் தனர். இவர்கள் சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தி ஒடுக்குதலை யும், சுரண்டுதலையும் செய்து வந்தனர். சமாரியர்கள்தாழ்த்தப் பட்ட மக்களாக கருதப்பட்டவர்கள் இவர்கள் (சமாரியா என்ற நிலப் பகுதியைச் சார்ந்தவர்கள்) இவர்கள் அன்றைய சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள். இவர்களை யூதர்கள் தொட மாட் டார்கள், அவர்களுடன் உணவு அருந்தமாட்டார்கள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைத் தொடக்கூடமாட்டார்கள். அவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள்
(Untouchables) இந்த சமூகத்தில் வந்த சமாரிய பெண்ணிடம்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தண்ணீர் கேட்டார். இதே சமூகத் தை நல்ல சமாரியன் என்று சொல்லி உயர்த்தி காட்டினார். எந்த சமூகம் ஒதுக்கப்பட்டதோ தாழ்த்தப்பட்டதோ அந்த சமூகத்தோடு ஆண்டவர் அதிக இணக்கம் காட்டினார் நேசித்தார் என்பதுதான் உண்மை.கிறிஸ்து ஒரு முறை எருசலேம் செல்லும் வழியில், கலிலேயா, சமாரியா பகுதிகள் வழியாகச் சென்றார். ஒரு ஊரில் பத்து தொழு நோயா ளிகள் எதிர் கொண்டு வந்தனர். அவர்கள், அவரிடம் குணமளிக் கும்படி வேண்டினர். அவர், அவர்க ளிடம், நீங்கள் போய் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். அவர் களும் சென்றார்கள். செல்லும் வழியிலேயே அவர்கள் குண மாகினர். அவர்களில் ஒருவர் மட்டும் திரும்பி இயேசுவிடம் வந்து, நன்றி செலுத்தினார். அவர் ஒரு சமாரியர்.(லூக்கா 17 : 12 – 19) திரும்பி வராத மற்ற ஒன்பது பேரும் யூதர்கள். இச்சம்பவம் சமாரியரின் நற்குணத்தையும், நன்றியறிதலையும் காண்பிக் கின்றது.சாதி மனிதனின் குணங்களைதீர்மானிப்பதில்லை.கிறித்துவுக்குள் யூதனென்றும் இல்லை; கிரேக்கன் என்றும் இல்லை' என்னும் திருவிவிலியக் கருத்தை மறந்து விட்டனர்.
1. சிறுமி என்று எண்ணாதே!. Don't think as a small child: 2.அரசர்கள் 5: 1-12.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களேசிறுதுரும்பும்பல்குத்தஉதவும் என்பார்கள். ஒரு சிறுமிதான் ஒரு அற்புத தீர்க்கர் எலிசா என்ப வர் இஸ்ரவேலில் இருக்கிறார் என்பதை உலகத்திற்கு தெரிவித் தாள். சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலை வனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில், அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்; ஆனால், தொழுநோயாளி. யூத இனத்தில் காலம் காலமாக தொழுநோயாளி கள் குடியிருப்பிற்கு புறம்பாக வைக்கப்பட்டனர்.தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தகாலத்தில்,சிரியா நாட்டின் அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதை யைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.அவன் மாவீரன் எனவே அவனின் வீரத் திற்கும், அறிவிற்கும் மதிப்பு கொடுத்து தொழுநோயை காரணமாக வைத்து ஒதிக்கி வைக்கவில்லை. யூதர்கள்தான்
தொழுநோயாளிகளை தீண்ட தகா தவர்களாய் கருதினர். சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளை யடிக்கச் சென்ற பொழுது, இஸ்ர யேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணி விடை புரிந்து வந்தாள். அவள் பெயர் குறிப்பிடப் படவில் லை. இவள் குழந்தை தொழி லாளி. இவளுக்கு 12 வயது இருக் கலாம்.(May be a teenager) பெயர் ஒரு அடையாளம். அங்கீகாரம். தற்சமயம் அன்னிய நாட்டில் ஒரு அடிமை. ஆனாலும் தன் நாட்டை யும், தன் நாட்டின் இறைவாக்கி னரையும் மறக்கவில்லை. தன் எசமான் நாமானை பழிவாங்க நினைக்க வில்லை. தன் நாட்டை கொள்ளை அடித்தவர்கள் என்றும் நினைக்காமல் மனித நேயத் தோடு உதவி செய்ய முன்வரு கிறாள் இதுதான் பண்பாடு. அக்காலத்தில்தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில், அரசவையி லேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.அந்த சிறுமி தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில்,அவர்இவரதுதொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள். இந்த சிறுமி சொல்லை நாமான் அலட்சியப்படுத்தவில் லை. சிறுமி எனக்கு ஆலோசனை கூறுவதாஎன்றும்ஒதுக்கவில்லை. இவள் சொல்லி நான் கேட்பதா என மறுக்க வில்லை. உடனே, நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்றுஅவனுக்குத் தெரிவித்தார்.அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்” என்றார். எனவே, நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுக ளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக் கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்பு கிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.இஸ்ரயேல் அரசன் அம்மடலை ப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்றான். அந்த சிறுமிக்கு இருந்த ஞானம் எலிசா என்ற தீர்க்கனால் முடியும் என்ற அறிவு இந்தமன்னனுக்குஇல்லை. எலிசா ஒரு கடவுளின் மனிதன், தீர்க்கன்என்றஎண்ணமும்இல்லை. ஆடையைகிழித்துக்கொண்டான்.
கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார். அவ்வாறே நாமான் எலிசாவிடம் சென்றார். தீர்க்கர் அவனின் பரிசுகளை வாங்க
வில்லை. மாறாக நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்” என்று சொல்லச் சொன்னார். அவன் தொழுநோய் கண்ட இடத்துக்கு மேலே கைகளை அசைத்து எனக்கு சுகம் கொடுப்பார் என நினைத்தேன். நான் சகதியாய்க் கிடக்கும் யோர்தானில் மூழ்க வேண்டுமாம். எங்க நாட்டில் ஓடும் அபானா, பர்பார் நதிகளெல்லாம் யோர்தானை விட ஆயிரம் மடங்கு நல்லது” என்று கோபத்துடன் கத்திவிட்டு திரும்பிச் செல்லத் தொடங்கினார்.அப்போது அவரு டைய வேலைக்காரர்கள் அவரிடம் சென்று “எம் தந்தையே” என பாச மாய்அழைத்துப்பேசினார்கள்.ஒருவேளை இறைவாக்கினர் கடுமை யான ஒரு வேலையைச் செய்யச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்லவா. அதே போல இந்த எளிய செயலையும் செய்யுங்கள்” என்றார்கள்.நாமான் அவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுத்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது நாமான் முதலில் அந்த சிறு பெண்ணி னுடைய ஆலோசனை கேட்டான் இரண்டாவதாக தன்னு டைய வேலைக்காரனுடைய ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கிறான் அவருடைய பணிவு தன்மை வெளிப்படுகிறது.எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற் கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். கடவுளின் வார்த்தை அற்புத மானது மகத்தானது. வேண் டியதை செய்யும் ஏற்ற காலத்தில் செய்ய வேண்டியது செய்தேதீரும். உடனே நாமான் சொன்னார்,” இனிமேல் இஸ்ரயேலின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !” ஒரு சிறு பெண்ணால் ஏற்பட்ட மாற்றத்தை பாரீர். கடவுள் யாரையும் சாதி யால், இனத்தால், வியாதியால்
ஒதுக்குவதில்லை. தீண்டாமை
மனித செயல், இது மனித இனத்
தின் மாபெறும் குற்றம்.
2. லெந்து: கடவுளுக்கு புகழ்ச்சி
பலிகளை செலுத்துவது: Lent; Offer sacrifice of Praise to God. எபிரேயர்13:8-17.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
திருத்தூதர் பவுல் அடிகளார்,
எபிரேயர் திருமுகத்தை யூத கிறித் தவர்களுக்காக எழுதப்பட்டது. இவர்கள் கிறித்துவ நம்பிக்கை யில் உறுதியாய் இல்லாமல் மீண்டும் யூத சமயத்திற்கு திரும்ப நினைத்தார்கள். இவர்களுக்கு அருளுரையாக; தலைவர்கள் வந்து போகிறார்கள்; இறுதியில் அவர்கள் இறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஒரு தலைவர் எப்போதும் மாறமாட்டார், எப்போதும் அவர் நம்முடன் இருக்கிறார். அவர் இயேசு கிறிஸ்து, "நேற்று, இன்று மற்றும் என்றென்றும்" மாறாதவர் (வச. 8). இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இந்த ஆழமான, சுருக்க மான கருத்து, அவர் ஒருபோதும் முறியடிக்கப்படமாட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது. கிறிஸ்து அல்லது அவருடைய இரட்சிப்பின் செய்தி எப்பொழுதும் மாறும் என்று பயப்படத் தேவையில்லை-இப்போதும் அல்ல; எதிர்காலத்தி பல விசுவாசிகள் அநேகமாக யூத சட்டங்கள் மற்றும் யூத சடங்குக ளுடன் தொடர்புடைய உணவுகள் தொடர்பான விதிமுறைகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த உணவுச் சட்டங்கள் சில விவிலியம் அடிப்படையிலும், பல மனிதனால் உருவாக்கப்பட்டவை. இத்தகைய உணவு பழக்கங்களும்
மக்களை தீண்டத்தகாதவர்களாக பிரிக்கிறது.எனவே யூத மதத்தை கிறிஸ்தவத்திற்கு மேல் உயர்த் தும் பழக்கங்களுக்கு எதிராக வேதம் எச்சரிக்கிறது. மற்றும் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.
யூத விசுவாசிகள் லேவிய முறை யைத் தொடர்ந்து தழுவினால், புதிய உடன்படிக்கையின் ஆசீர் வாதங்களில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்று ஆசிரியர் குறிப்பிட்டார்: "எங்களிடம் ஒரு பலிபீடம் உள்ளது, அதில் இருந்து வாசஸ்தலத்திற்குச் சேவை செய்பவர்களுக்கு சாப்பிட உரிமை இல்லை" விலங்குகளின் இரத்தத்தைப் பாவம் போக்குவத ற்கென தலைமைக் குரு தூயகத் திற்குள் எடுத்துச் செல்கிறார். ஆனால், அந்த விலங்குகளின் உடல்கள்பாளையத்திற்குவெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.
இதனால்தான், இயேசுவும், தம் சொந்த இரத்தத்தால் மக்களைத் தூயவராக்க நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார். லெந்து மனிதர்களை தூய்மை படுத்தும் காலம்.நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை. ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கை யிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே (fruit of lips) இப்புகழ்ச்சிப் பலியாகும். லெந்து
துதிகளை செலுத்தும் காலம். அவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறார். துதிக்கு பாத்திரமா னவர். துதிக்கப் படதக்கவர்.
3. லெந்து:தீண்டத்தகாதவர்களை தொடுதல். Lent: Touching The "untouchable".மத்தேயு 8:1-14.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! இயேசு கிறித்து மனித நேயம் உள்ளவர். தன் தூய இறை
பணியில் யூத தன்மையிலிருந்து
சமாரியனானார். அவர் மலையிலி ருந்து இறங்கிய பின் பெருந்திர ளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்.
இயேசுவால் தன்னை முற்றிலும் குணமாக்க முடியும் என்று நம்பினான். ஆனால் தனக்கு சுகம் தருவதற்கு தேவனுக்கு விருப்ப முண்டா என்பதை மட்டும் சந்தே கப்பட்டார்.ஏனேனில் அவன் ஒரு
தொழுநோயாளி. ஆண்டவர் தன்னை தொட்டு சுகம் தருவாரா?
என்ற சந்தேகம்.பரிசுத்தமான கரம் ஒரு தீட்டான உடலைத் தொட்டது. “எனது விருப்பத்தை, திட்டத்தை, சித்தத்தை இம் மனி தன் சந்தேகப்பட்டு விட்டானே” என்ற மனவேதனை தமது கையி னால் தொழுநோயாளியைத் தொடச் செய்தது. பாவமும் தொழுநோயைப் போன்றதாகும். எந்தப் பாவியும் இயேசுவிடம் வந் தால் அவர் தொட்டு மன்னிப்பார், மாற்றுவார். ஆண்டவரால் தொடப் பட்டவர்களும், ஆண்டவரை தொட் டவர்களும் சுகம் பெற்றனர்.
வேதத்தில் தொழுநோய் தூய்மையின்மை மற்றும் பாவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் மற்ற மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
"தொழு நோயாளி உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக் கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழு நோய்; அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார். (லேவியர் 13:3)
இவர்களே தீண்ட தகாதவர்கள்.
இவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, "தீட்டு, தீட்டு ", என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல் லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப் பார். (லேவியர்13:45,46)இத்தகைய மக்களை ஆண்டவர் தொட்டு சுகம் கொடுத்தார்."Jesus Christ had transformed the Untouchables into
Touchables" . தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறையாகும். தீண்டாமை பெறும்
குற்றமாகும்.ஆலயத்தில் இறந்த
வர்களை கல்லரைக்கு எடுத்து செல்ல தனி தனி தூம்பா( ஊர்தி)
பயன்படுத்துவது சாதியின்
உச்ச கட்டம். இரட்டை குவளை களை பயன்படுத்தும் கடைகள்
போல் இரட்டைக் கல்லறைகள்
உள்ள ஆலயங்கள் ஆண்டவரின்
உயிர்த்தெழுதலில் நம்பிக்கை யற்றவர்கள்.
பிதாவே, இவர்களை மன்னியும்
தாங்கள் செய்வதை இன்னும்
அறியாமல் இருக்கிறார்கள். கிறி ஸ்து அதிகார மையங்களுக்கு எதிராக இருந்தார். தற்போது அதி காரங்களின் மையமாக அவர் ஆக் கப்பட்டுவிட்டார். இவைகளை யெல்லாம் பார்க்கும்போது “உலகில், ஒரே ஒரு உண்மை கிறிஸ்துவர், கிறிஸ்து மட்டுமே”, என்ற தாஸ்தயேவேஸ்கியின் (Fyodor Distoevsky- A Russian Novelist) கூற்று, நமக்கு நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது. இந்த லெந்து காலம்
சமூக நீதி, மனித நேயம், சிலுவை யின் மேன்மைகளை சிந்திக்கும்
நாட்களாக அமைய கடவுள்
நம்மை காப்பாராக! ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.
"When Jesus touches us, he can cause us to see other people as people of worth, people that he created and died for, and people that we should love as he loves. " Amen.
கிறித்துவ மதத்தில் சாதி பேதம்
Comments
Post a Comment