உயிர் காக்கும் பற்றுறுதி.Life Saving Faith. (116). 2 அரசர் 4:1-7. திருப்பாடல் 72. திருத்தூதர் பணிகள் 5:12-16. லூக்கா 5: 17-26.

முன்னுரை: கிறித்துவின் அன்பு 
இறையியலாளர்களே! துன்புறும்
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக் கள்.உலகில் உயிர் காக்கும் மருந்
துகள் இருப்பது போல, நம் உயிர்
காக்கும் மாமருந்து பற்றறுதி யாகும்  (விசவாசம்). எப்படி எனில் வேதம் கூறுகிறது "தன் விசு வாசத்தினாலே ( பற்றுறுதி, நேர்மை) நீதிமான் பிழைப்பான். – (ஆபகூக் 2:4) என தீர்க்கர் கூறுகி றார்.  தூய பவுல் அடிகளார் இந்த வசனத்தை தன் மூன்று நிருபங்க ளில் குறிப்பிடுகிறார்.(ரோமர், கலாத்தியர், எபிரேயர்).ஏனேனில், விசுவாசம் என்ற பற்றுறுதி உயிர் காக்கும் மருந்தாகும்.பவுல் அடிகளாரும்நம்பிக்கையினாலன்றி (பற்று றுதி) எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும். (எபிரேயர் 11:6) என கூறுகிறார்.விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகி றோம்.நீதிமான் என்பவர், இயேசு கிறிஸ்துவின்சிலுவைமரணத்தால் நீதியாக்கப்பட்டவர்களே நீதி
மான். திரு தூதர் யாக்கோபு கூறு
கிறார் எனவே மனிதர் நம்பிக்கை யினால் மட்டுமல்ல, செயல்களி னாலும் (கிரியை) கடவுளுக்கு ஏற்புடைய வராகின்றனர் எனத் தெரிகிறது. (யாக்கோபு 2:24).
மார்டாடின் லூதர் (The Father of Reformation) இவ்வாறு கூறுகிறார், “கிறிஸ்து உங்கள் பாவங்களுக் காக மரித்தார் என்பதை நீங்கள் தொடர்ந்து நம்பியிருக்க வேண்டு ம்; அத்தகைய நம்பிக்கை உங்க ளை நியாயப்படுத்துகிறது என் கிறார். "நம்பிக்கையை சேமிப்பது (Faith Saving) என்பது இரட்சிப்பு க்காக கடவுளை தீவிரமாக நம்பு வதாகும். 
விசுவாசத்தை சேமிப்பது என்பது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி யை பற்றிய உண்மைகளை அறி ந்து புரிந்துகொள்வது மட்டுமல் லாமல், இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் மீது  மட்டுமே நம்பிக்கை வைப்பதாகும். பற்று றுதி என்பது ஒருவரின் கொள்கை
யை உறுதியுடன் பற்றி கொள் வது. இது நம்பிக்கையின் அடிப்ப
டையிலானது. கண்களினால்
கானாவிட்டாலும், நிச்சயமாக
நம்புவதே பற்றுறுதி. பற்றுறுதி
யின் தந்தை என அழைக்கப்படும்
ஆபிரகாம் கிரியையினாலும், 
ஆண்டவரை நம்பினதாலும், நீதி
மானக கருதப்பட்டார். அவர் ஆண்
டவர் மீது அதீத நம்பிக்கையினால்
அவரின் சன்னதி கடல் மணலைப்
போல் ஆசிர்வதிக்கப்பட்டார்.
இதன் மூலம் நமக்கு உணர்த்து வது பற்றுறுதியே ஆசிர்வாதத் தின் திறவுகோள்.  Faith is the key
to blessings. Without Faith, blessings
are un obtainable. ஆபிரகாமின்
பற்றுறுதியே ஈசாக்கின் உயிரை
காத்தது. எனவே, ஆண்டவருக்கு
பிரியமானவர்களே! ஆண்டவர் மீது நாம் வைக்கும்பற்றுறுதியே நம் உயிர் காக்கும். 
1.எலிசாவின் உயிர் காக்கும் சேவை: A life Saving service Eliza;
2. அரசர் 4:1-7. 
அன்பின் இறை மக்களே! எலிசா
தீர்க்கரின் காலம் கி.மு 800- 910.
எலிசா… இறைவாக்கினர் எலியாவுடன் இருந்த இன்னொரு இறைவாக்கினர்.எலியாவைப் போல் இரண்டு மடங்கு அருள் பெற்றவரான எலிசா, ஏராளமான அற்புதங்கள் செய்தார். எலிசா
என்றால் "கடவுள் என் மீட்பு" எனப்
படும். இஸ்ரேலின் வடக்கு அரசுப் பகுதியில்  முக்கிய தீர்க்கதரிசி யாக இருந்தார். அங்குஒரு ஏழை விதவை எலிசாவைஅணுகினாள். அவரது கணவர் ஒரு தீர்க்கதரிசி யாக இருந்தார்.இந்த ஏழை விதவை, கணவன் விட்டுச் சென்ற கடனை அடைக்க முடியவில்லை. அக்காலத்தில் தீர்க்கர்கள் எவ்வளவு கஸ்டத்தில் இருந்தார் கள் என்பது இது காட்டுகிறது. அந்த விதவை வீட்டில் ஒரு சிறிய அளவு ஆலிவ் எண்ணெய் மட்டுமே இருந்தது - வேறு எதுவும் இல்லை. அந்தக் கால வழக்கப்படி, அவளுடைய இரண்டு மகன்களும் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வரை கடன் கொடுத்தவரிடம் வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்த வழக்கில், அவர்கள் அவரு டைய அடிமைகளாக ஆக வேண் டும்.எலிசா அவரை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக் கிறாய்? என்று சொல்” என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை” என்றாள். எலிசா, “நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற் றுப் பாத்திரங்களைக் கேட்டு வாங்கிக் கொள். நீ உன் புதல்வரு டன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை” என்றார்.அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார். பின்பு நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சிய தைக் கொண்டு நீயும் உன் புதல்வ ரும் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
 எலிசாவீன் அற்புதம் காலி பாத்தி
ரத்தில் எண்ணெய் நிரப்பியது, நமது ஆண்டவர் இயேசு கிறித்து வின் கானா ஊர் திருமணத்தில்
தண்ணீர் திராட்சை இரசமாக
மாற்றியது நினைவுக்குவருகிறது.
நம் இறை பற்றுறுதியே நம்மை
என்றும் உயிர் காக்கும் மா மருந் தாகும்.
2.திரு தூதர்களின் உயிர் காக்கும் சேவை. The Apostles' life Saving service.திருத்தூதர் பணிகள் 5:12-16.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர்களின் தொடர்ச் சியான ஊழியத்தைப் பற்றியும், அவர்கள் மூலம் நடத்தப்பட்ட அற்பு தத்தையும் திரு தூதர் லூக்கா அறிக்கை செய்கிறார் . அவர்கள் எருசலேம் மக்களிடையே அற்பு தங்களைச் செய்தார்கள், இதயங் களையும் மனதையும் கடவுளிட மும், மனந்திரும்புதல் மற்றும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட நற்செய்தியிலும் வழி நடத்தினர்.  பல அரும் பெறும் அடையாளங்களும் அருஞ்செயல் களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். இந்த வெற்றிக்கு காரணமே ஒருமனத்தின் ஆவியே.
சீடர்கள் செய்த அடையாளங் களும் அற்புதங்களும் மக்களை நெருக்கமாக கர்த்தர் பக்கம் இழுத்தன.இந்த அற்புதங்களின் நோக்கம், கடவுளின் சக்தியை, வல்லமையை வெளிப்படுத் துவதும், அவற்றைச் செய்தவர்கள் கடவுளிடமிருந்து வந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதும் ஆகும்,  அற்புதங்களைக் கண்ட மக்கள் அற்புதம் செய்பவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். ஆரம்பகால தேவாலயம் வேகமாக வளர்ந்து வந்தது. இதன் விளை வாக எருசலேமின் தெருக்களில் பேதுருவின் பிரசங்கத்திற்குப் பிறகு 3000 பேர் நம்பினர் (திருதூதர் பணிகள் 2:41), பின்னர் அந்த எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்தது ( திருதூதர் பணிகள் 4:4). மக்கள் நோயாளிகளை தெருக்களில் கொண்டு சென்று கட்டில்கள் மற்றும் பலகைகளில் கிடத்துகிறார்கள், இதனால் பேதுரு வரும்போது குறைந்த பட்சம் அவரது நிழலாவது அவர்களில் யாரேனும் ஒருவர் மீது விழக்கூடும். இது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கி னால் வருந்திய பெண் ஒருவர்  இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயி ற்று. (லூக்கா நற்செய்தி 8:44) என்ற நிகழ்வும் நினைவுப்படுத் துகிறது.
பேதுருவும் அப்போஸ்தலர்களும் கடவுளின் கருவிகள் என்று பொதுவான ஒருமித்த கருத்து இருந்தது , மேலும் அவர்களிட மிருந்து வரும் ஆசீர்வாதத்தை மக்கள் இழக்க விரும்பவில்லை. வார்த்தை பரவியது, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மக்கள் எருசலேமிற்குள் வர ஆரம்பித்தனர்: மேலும், எருச லேமின் சுற்றுப் புறங்களில் உள்ள நகரங்களில் இருந்து மக்கள் கூடி, நோய்வாய்ப்பட்ட அல்லது அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு வந்தனர், அவர்கள்அனைவரும் குணமடைந் தனர். ஆண்டவர் திருத்தூதர்கள் மூலம் மக்களின் உயிர் காக்கும் திருப்பணியைநிறைவேற்றினார்.
3. கிறித்துவே உயிர் காக்கும்
மா மருந்து. Christ is the life Saving 
Medicine:லூக்கா 5: 17-26.

கிறிஸ்துவின் அன்பு தேவ பிள்ளைகளே நமது ஆண்டவரே உயிர் காக்கும் மா மருந்தாய்  நம்மை காக்கிறார். நமது பாவங் களே நம்முடைய நல் உறவிலிரு ந்து நம்மை பிரிக்கிறது. அதனால் நம்முடைய பாவங்களை ஆண்ட வர் மன்னிக்கிறார்.இயேசு கப்பர் நகூமில் ஒரு குறிப் பிட்ட நாளில், அவர் போதித்துக் கொண்டிருந்த போது, ​​கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய எல்லா நகரங் களிலிருந்தும் வந்திருந்த பரி சேயர்களும் நியாயப்பிர மாணக் காரர்களும் உட்கார்ந் திருந்தார் கள். அவர்களைக் குணமாக்க கர்த்தருடைய வல்லமை இருந் தது. அப்பொழுது இதோ, முடக்கு வாதமுற்ற ஒரு மனிதனைப் படுக்கையின்மேல் ,அவரை உள்ளே கொண்டு வந்து இயேசு வின் முன்னிலையில் கிடத்த முய ன்றனர், ஆனால் அவரை உள்ளே கொண்டு வர வழியில்லாமல், ஜனக்கூட்டத்தால் கூரையின் மேல் ஏறினார்கள். , இயேசுவுக்கு முன்பாக அவருடைய படுக்கை யோடு ஓடுகளின் வழியாக அவரைக் கீழே இறக்கினார்கள். இயேசு, அவர்களுடைய விசுவாச த்தைக் கண்டு, “மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டன” என்றார். மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்றார். அந்த நண்பர்களின் பற்றுறுதியே அந்த மனிதனை காத்தது. ஆனால்,  நற்செயல்கள் யூதர்க ளுக்கு பிடிக்க வில்லை. பாவங் களை மன்னிக்க இவர் யார் என்று கேட்டனர். அதற்கு இயேசு, பூமியில் பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வதற்காக, அவர் முடங்கிப்போயிருந்த மனிதனைப் பார்த்து, "நான் உங்களுக்குச் சொல்கிறேன், எழுந்து, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள்." உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தான் படுத்திருந்ததை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குப் போனான். மேலும் அவர்கள் அனைவரையும் ஆச்ச ரியத்தில் ஆழ்த்தினார்கள், அவர் கள் கடவுளை மகிமைப்படுத்தி னர்.நம் உயிர் காக்கும் பற்றுறுதி யை ஆணடவர்  மீீது வைப்பதே லெந்துகால சிந்தனையாலும்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon writer 

www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 







    









Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.