உண்மையும் நற்சொல்லும். (119)Truth and Honesty in Words. மத்தேயு: 5:33:37.

முன்னுரை: கிறித்துவின் அன்பின் தீவிர பற்றுறுதியாளர் களே! தென்னிந்திய திருச்சபை இந்த லெந்து காலத்திற்கான சிறப்பான தலைப்புகளை தேர்வு செய்து  மானிடவியல் நல் நெறியு டன் வாழ நமக்கு வழிகாட்டி வருகிறது. இதன் அடிப்படையில் அமைந்த தலைப்புதான் "உண்மையும் நற்சொல்லும்."
 Truth and Honesty in Words. 
சத்தியம்" என்பதற்கான கிரேக்க வார்த்தை அல்லேதேயா ஆகும், இது "மறைக்காதது" அல்லது "எதையும் மறைக்காதது" என்று எழுத்தியல்படி பொருள்படும்.
சத்தியம்" என்பதற்கான எபிரேய வார்த்தை எமெத், அதாவது "உறுதி," "நிலை" மற்றும் "காலம்" ஆகும். சத்தியத்தின் மறு பெயர் "வாய்மை."
திருவள்ளுவர் (குறள் 291:)
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."என்கிறார்.
அதாவது;வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லு தல் ஆகும். ஒருவரின் மனதை
துன்பபடுத்தாத செயலை கூறுகிறார். 
உண்மையும் நேர்மையும் மகாத்மா காந்தியால் போதிக்கப்படும் அடிப்படை மதிப்புகள் . "சத்தியமே கடவுள்" என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கை யில் சோதிப்பதிலும் செலவழித் தார்.சுதந்திரப் போராட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி சத்தியம் மட்டுமே வெல்லும் என்பதை நமக்குக் காட்டினார். இது அவரது பல நிஜ வாழ்க்கை சம்பவங் களில் இருந்து தெரிகிறது. காந்தியடிகள் உண்மையை மட்டுமே தேடும் வாழ்க்கையை நடத்தினார். 
சத்யமேவ ஜெய் தே என்ற வார்த்தையை தமிழில் வாய்மை யே வெல்லும் என பேரறிஞர் அண்ணாதுரை தூய தமிழில் மாற்றினார். (Truth Triumphs)
சத்யமேவ ஜெய் தே என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியா வின் தேசிய குறிக்கோளுரை ஆகும். இக் குறிகோளுரை இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக் கப்பட்டுள்ளது. இதுதேச தந்தை மகாத்மாகாந்தியின் சத்தியமே மற்ற எல்லா நற்பண்பு களுக்கும் அடித்தளம் என்ற கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது. காந்தியின் கோட்டு பாடுகள் உலகபுகழ் வாய்ந்த மலைப் பொழிவை (The Sermon on Mountain.தூய. மத்தேயு 5:37)அடிப்படையாககொண்டது. "ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது. (மத்தேயு நற்செய்தி 5:37)   சத்யமேவ ஜெய் தே   தேசிய சின்னமான அசோக சக்கரத்தில் பதியபட்டுள்ளது என்பது ஆண்டவரின் வார்த்தையின் தாக்கம் காந்தியை ஈர்த்தது என்பது உண்மை. அது உயிர் உள்ளது, வல்லமையானது.
இயேசு தம் மக்களுக்கு கூறிய “பொய் சத்தியம் செய்யாதீர்கள், ஆனால் நீங்கள் பொருத்தனை செய்வதையெல்லாம் ஆண்ட வருக்கு நன்மை செய்யுங்கள்.
அரசு அலுவலகம் - நீதிமன்றம் இவைகளில் "வாய்மையே வெல்லும்' என எழுதப்பட்ட வாசகங்களைக் காணலாம்.  மேலும், "பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று முற்காலத்த வர்க்குக் கூறப்பட் டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். (மத்தேயு நற்செய்தி 5:33) இது
உன் கடவுளின் பெயரைக் கெடுக்கும் வகையில், என் பெயரால் பொய் சத்தியம் செய்யாதே; நானே கர்த்தர் ”
(லேவியராகமம் 19:12).ஆண்டவர்
இதை இங்கு நினைவுப்படுத்து கிறார்.மற்றும் "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்தி ருந்தால், அதைச் செலுத்துவதற் குக் காலந்தாழ்த்தாதே.ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி. (இணைச் சட்டம் 23:21 உபாகமம்)
ஒரு சத்தியம் (அ) நேர்ச்சை என்பது இரண்டு நபர்களுக்கு இடையேயான உடன்படிக்கை. மனிதனுக்கும் சக மனிதனுக்கும், மற்றும் சத்தியம் மனிதனுக்கும் கடவுளுக்கும் உடையது.நான் எவ்வளவு தூரம் கடவுளுக்கு உண்மையா இருககிறேன்?
Truth is truth in between man and and man and woman and woman as well as God. உலகில் இன்று நேர்மை யான மனிதர்கள் இல்லை. கிறித்தவர்களாகிய நாம் உத்த மமுள்ள ஆண்களாகவும், பெண் களாகவும், தங்கள் வார்த்தை யின்படி இருப்பவர்களாகவும் ஆண்டவரின் அருள் வார்த்தை படி இருக்கவும் அழைக்கப்படுகி றோம். அப்படி இருந்தால் அது அற்புதமாக இருக்கும். எருசலேமின் அரசராக இருந்த தாவீதின் மகனாகிய சாலமன் தன் பிரசங்கி என்கிற சங்கத் திருவுரை ஆகமத்தில்;
"கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்; தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப் பின்றி நடப்போரிடம் அவர்(ஆண்ட வர்)விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று கொடுத்த வாக்கை நிறைவேற்றா மற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல். 
வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்; தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும் படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்? 
(சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 5:4-6)
"மண்ணுலகும் அதில் நிறைந் துள்ள அனைத்தையும் ஆண்ட வருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவர்க்கே சொந்தம்’ (திபா 24:1) என்பார். எதின்பேரில்
சத்தியம் பன்னுவாய்? ஆண்டவர்
திட்டமாய்  கூறுகிறார்.
" நான் உங்களுக்குச் சொல் கிறேன்; ஆணையிடவே வேண் டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென் றால் அது கடவுளின் அரியணை. 
மண்ணுலகின் மேலும் வேண் டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். 
(மத்தேயு நற்செய்தி 5:34,35)
மனிதர்கள் எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்பதற்கு இரண்டாவது காரணம், நேர்மை, உண்மையை விடுத்து மிகுதியாக வருவதெல்லாம் தீயோனிட மிருந் துதான்வரும்என்பதாகும்அதனால் அவர்கள் எதன்மீதும் ஆணை யிடுவதற்கு அதிகாரம் இல்லாமல் இருக்கின்றார்கள். அப்படியா னால் மனிதர்கள் செய்ய வேண்டியது "ஆம் " என்றால் ஆம் எனவும் "இல்லை" யென்றால் இல்லை எனவும் சொல்வதுதான்
Yes is for yes. No is for no. நீதி மன்றங்களில்;"நான் சொல்வ தெல்லாம்உண்மை;உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று கூறும்படி குற்றம் சுமத்த ப்பட்டவரிடம் நீதிமன்றப் பணி யாளர் சொல்வதையும் கேட்டிரு க்கலாம். ""பொய் அழியக் கூடியது; மெய் அழியாதது'' என்பதை உணர்ந்து நடந்தாலே நமது வாழ்க்கை இன்பத்தில் திளைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்பது உறுதி
சத்தியம் என்றாலே; அது இயேசு கிறித்துவை குறிக்கும். பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லு கிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்’ (யோவான் 18:33-38).சத்தியம் என்பது இயேசு கிறித்துவை அறிவதே.
"சத்தியத்தை அறிவீர்கள், சத்தி யம் உங்களை விடுதலையாக்கும்.’ என்று எருசலேம் தேவாலயத்தில் கூடியிருந்த திரளான மக்களுக்கு போதிக்கையில் இயேசு சொன்ன வார்த்தை இவை. (யோவான் 8:32) ஆண்டவரே சத்தியமாய் இருக்கிறார். அவரில் பற்றுறுதி
கொண்டேரே; இந்த லெந்து
காலங்களில் விடுதலை பெறுவர்.
இயேசு கிறிஸ்து இவ்வாறு விளக்கினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் (சத்தியத் தோடும்,”) தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர் களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”—(யோவான் 4:23.) நம் தொழுகை
உண்மையாக இருக்க வேண்டும்.
நம் வேதத்திற்கு மற்றோரு பெயர்
" சத்திய வேதம்". எனவே, கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்முடைய வாழ்வில் உண்மையும் நற் சொல்லும் வாழ்வின் நடை முறையாக இருக்கட்டும். அவ்வாறு இருக்க ஆண்டவர் நமக்கு கிருபை செய்வாராக ஆமென்..

Prof. Dr. David Arul Paramanandam 
Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 




"உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. 
(யோவான் நற்செய்தி 17:17)






John 8:31-32



Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.