வன்முறையும், அமைதி வழியும்.(121) Encountering Violence with Peace. மத்தேயு: 5:38-42.

முன்னுரை: கிறித்துவின் அன்பு
பற்றுறுதியாளர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறித் துவின் இனிய நாமத்தில் இந்த லெந்து கால வாழ்த்துக்கள்.
வன்முறையும், அமைதி வழியும் என்ற தலைப்பில் நாம் சிந்திக்க இருக்கிறோம் . உலகத் தோற்றம் முதற்கொண்டு வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. வன்முறை மனித இனத்திற்கு ஒரு சவாலாக இருக் கிறது. மனிதனுடைய சிந்தனை கள் எப்பொழுதும் தீமையா இருப்பதினாலே வன்முறையாய் அது சமூகத்தில் பிரதிபலிக்கிறது.
 "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்க ளின் இதயச் சிந்தனைகளெல் லாம் நாள் முழுவதும் தீமையை யே உருவாக்குவதையும் ஆண்ட வர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது." 
(தொடக்கநூல் 6:5,6) கடவுள் மனம் வருந்துகின்ற அளவிற்கு அவன் உள்ளத்தில் வன்முறை இருந்த தை நாம் படைப்பிலே பார்க்கி றோம். Violence mentality is in born
nature of the Mankind. So, violence
begets violence. இதற்கு காரண த்தை பவுல் அடிகளார்; "நான் விரும்பும் நன்மையைச் செய்வ தில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாத தைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகி றது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன், (உரோமையர் 7:19-21) ஆக வன்முறை மனிதனோடு கூட இணைந்து இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. அதே நேரத்தில் அமைதியை அருளும் ஆண்டவர் நம்மோடு இருப்பதினால் அந்த வன்முறை குணங்களை அடியோடு மாற்றி விட முடியும்.
1. விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.Givers do not Perish. மத்தேயு: 5:38-42.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
ஆண்டவர் கூறுகிறார்." நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண் டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு ங்கள். (மத்தேயு நற்செய்தி 5:39) இதன் அடிப்படையில்தான் பவுல்
அடிகளாறும் ரோமில் உள்ள விசுவாசிகளுக்கு; "ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள். தீமையால் வெல்லாதீர்கள், தீமையை நன்மையால் வெல்லு ங்கள் ( ரோமர் 12:17 ; 21 ). என்கிறார்.ஆக வன்முறைக்கு வன்முறை பதிலாகாது. "Tit for tot" is not for Christians. எனவே, ஆண்டவர்; "இதோ! ஓநாய்களிடை யேஆடுகளைஅனுப்புவதைப்போல நான் உங்களைஅனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி (cautious) உடையவர் களாகவும் புறாக்களைப்போலக் கபடு(வஞ்சகம்)அற்றவர்களாகவும் இருங்கள். (மத்தேயு நற்செய்தி 10:16) கிறிஸ்தவர்களின் உண்மை அடையாளமே அன்பு அமைதி, மன்னிப்பின் அடித்தளமாக இருக்கிறது.ஆண்டவர் மேலும்
"ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடை யையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். (மத்தேயு நற்செய்தி 5:40) என்கிறார்.விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதி ல்லை’ என்று பழமொழி உண்டு. விட்டுக்கொடுப்பதால் நாம் தோல்வியடைந்துவிட்டோம்; நாம் நினைத்தது கிடைக்காது, அத னால் கஷ்டம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. விட்டுக் கொடுக்கும்போதுதான் இயல்பாக கிடைப்பதைவிட அதிகமாக பெறுகிறோம். பெருந்தன்மை யோடு மன்னித்து விடுவது மன அமைதியைத் தரும்.கெட்டு போகிறவன்தான் விட்டு கொடுப் பதில்லை. 'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று கூறப்பட் டிருப்பதைக் கேள்விப்பட்டிருக் கிறீர்கள்.(மத்தேயு நற்செய்தி 5:38)
இது அனியாயக்காரர்களுக்கும்,
கொலை குற்றவாளிகளுக்கு
கொடுக்கும் தண்டனையாக மோசே குற்றங்கள் குறைவதற்கா கவும், குற்றங்கள் நடக்க கூடாது
என்பதற்காக 4000 ஆண்டுகளு க்கு முன்பாக கொண்டுவந்தார். அது மனித நேயத்திற்கு எதிரா னது. பழிவாங்குதல் என்னுடை யது" (உபாகமம் 32:35) என்று கர்த் தர் கூறுகிறார்.ஆண்டவர்நம்மை இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டுகிறார்."இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு நற்செய்தி5:7)என்கிறார்.
நாம் என்றுமே, அமைதி வழியில்
மற்றவர்களுடன் நடந்து கொள்ள
அழைக்கப்படுகிறோம். ஆண்டவர்
நம்மை கடவுளின் மக்களாக அழைக்கப்பட விரும்புகிறார்.
"அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக் கப்படுவர்.(மத்தேயு நற்செய்தி 5:9)
நம்மை உதவி நாடி வருவோரை
முடிந்த உதவி செய்ய வேண்டும்.
"உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும் புகிறவருக்கு முகம் கோணாதீர் கள். (மத்தேயு நற்செய்தி 5:42)
என்கிறார் ஆண்டவர். இதன்மூலம் கிறித்துவின் அன்பை வெளிப்படு த்துகிறோம்.அமைதியை நமது செல்வத்தாலும், புகழ்ச்சியாலும் பெற முடியாது. நாம் செய்யும் நற்செயல்களால் மட்டுமே பெற முடியும். அதிலும் இந்த உலகம் தரும் அமைதி நிலையானது அல்ல. மாறாக, இயேசு தரும் அமைதியே நிலையானதாக இருக்கிறது. அருள் தூதர் பிரான்
சிஸ்  அசிசி (St.Francis of Assesi)
"இறைவா, என்னை அமைதியின் கருவியாக்கும். எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பை யும், எங்கே கயமை நிறைந்து ள்ளதோ அங்கே மன்னிப்பையும், எங்கே அவநம்பிக்கை நிறைந்து ள்ளதோ அங்கே நம்பிக்கையை யும், எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும், எங்கு மனக் கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும் விதைத்திட அருள்புரியும். என் இறைவா, ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும், புரிந்து கொள்ளப் படுவதைவிட புரிந்துகொள்ளவும், அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரம் அருள்வாய்". என நம்மை அமைதி
ஏற்படுத்தும் கருவியாகவும்,  கடவு
ளின் பிள்ளைகளாக மாற அமைதி
ஏற்படுத்தவும் கடவுள் நமக்கு இந்த லெந்துகால பாடமாக
அமைய கிருபை செய்வாராக!
ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam, 
Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 
 









பேறுபெற்றோர் சொற் பொழிவு - ஜேம்ஸ் டிசோட், 1886-







Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.