சிலுவை: மேசிய காலம் குறித்த புதிய திருக்காட்சி (122) Cross: A New Vision of the Messianic Age. இணைச்சட்டம் உபாகமம் (Deuteronomy) 18: 15-22, திரு.பாடல்: 73. 2 கொரி.1:3-11, லூக்கா: 18: 35-43

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.இந்த லெந்து கால ஞாயிறு ஆராதனையின் தலைப்பு: "சிலுவை: மேசிய காலம் குறித்த புதிய திருக் காட்சி" (Cross: A New Vision of the Messianic Age.) உலகில் ஆபிரகாம்
வழிவந்த மூன்று மதங்களும்
எபிரேய( யூத. மதம்), இஸ்லாமிய,
கிறித்துவ மதங்கள்இதில்மேசியா ஆட்சி செய்து, எந்த தீமையும் இல் லாமல் உலகளாவிய அமைதி யையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வருவார் என்ற நம்பி க்கையே மேசியா காலமாகும் . ஆண்டவர் மோசேக்கு வழங்கிய அருள் வாக்கின்படி, "உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை.      ( இயேசு கிறித்து) அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர் களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்ட ளையிடுவது அனைத்தையும் அவன்அவர்களுக்குச்சொல்வான்.
 (இணைச் சட்டம் 18:18) இது நமது
 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வை மேசியாவாக குறிப்பிடுவதை நாம் காணலாம். உலகளாவிய அமைதியின் சகாப்தத்தில் மேசி யாவின் கருப்பொருளை ஏசாயா தீர்க்கர் திட்டமாய் விளக்குகிறார். 
அவர்(இயேசு)வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்க ளாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒரு போதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். (எசாயா 2:4)தற்போது நடக்கும் உலக நிகழ்வுகளில் ஆண்டவருடையஅரசுஇந்தஉலகில் இன்னமும் அமையவில்லை.
மேசியாவின் காலம்,"அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டி யோடு தங்கியிருக்கும்; அக்குட்டி யோடு சிறுத்தைப்புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக் குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். 
 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத் துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்;  பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம் பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். (எசாயா 11:6-9)
 உலக முழுவதிலும் அவர்கள் தீங்கு விளைவிப்பதில்லை, அழிக் க மாட்டார்கள், ஏனென்றால் கடலில் தண்ணீர் நிறைந்திருப் பது போல பூமி கர்த்தரைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.
ஏசாயாவின் கூற்றுப்படி , மேசியா வின் காலம் அதன் அபிஷேகம் செய்யப்பட்ட தலைவரான மேசி யாவைக்கொண்டிருக்கவேண்டும், அவர் தனது இரட்சிக்கும் வேலையைச்செய்ய ஆவியின் வரங்களால் நிரப்பப்படுவார், இதன் அடிப்படையில் தான்
ஆண்டவர் கற்று கொடுத்த வின்
னப்பத்தில் " உமது அரசு வருக"
எனவேண்டுகிறோம்.ஆண்டவரின் அரசே மேசியாவின் காலமா கும். அவர் அரசு இவ்வுலகில் வர காத்திருக்கிறோம்.
1. மேசியானிக் காலமே சிலுவையின் அடையாளம்; The Cross is the symbol of Messianic Age. இணைச்சட்டம்  (Deuteronomy) 18: 15-22.
கிறிஸ்துவுக்குள்பிரியமானர் களே! மேசியானிக் காலமே சிலுவையின் அடையாளமாகும். கடவுள் மோசேக்கு நமது ஆண்ட வரைமுன்குறித்து;"உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர் களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்து வேன். என் வார்த்தைகளை அவ னுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல் வான்.(இணைச் சட்டம் 18:18) என
உறுதியாக முன்னறிவித்தார்.
மேசியானிய ராஜ்யத்தின் போது, ​​பவுல் அடிகளார்: "இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படு வார்கள்" (ரோமர் 11:26). என கூறினார். இது இன்னும் நிறை
வேறவில்லை.
ஆண்டவரின் மேசியானிக் காலம் ஆண்டவர் படைக்கும் புதிய உலகத்தில்தான் உருவாகும். "இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக் கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. (எசாயா 65:17)
என தீர்க்கர் கூறுகிறார். அவரின்
புதிய உலகம் "ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒருமித்து மேயும்; சிங் கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவ திலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர். 
(எசாயா 65:25) இக்காலமே மேசி யானிக் காலமாகும். தீர்க்கர் எரேமியாவின் கூற்றுப்படி;
"இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டா ரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். (எரேமியா 31:31) அந்த புதிய உடன்படிக்கை
சிலுவையின் அடிப்படையாக
கொண்டது. மேசியானிக் காலத்
தில் தோன்றும் புதிய பூமியில்
சிலுவையின் அடையாளம் நெற்
றியில் இடப்பட்டவர்களே பிரவேசி க்க முடியும் . சிலுவையே நம்
தகுதியை நிர்ணயிக்கிறது. 
2. மேசியானிக் காலம் கடவுளை போற்றுவதே: The Messianic Age is Praising God at all stages. 2  கொரிந்தியர் 1:3-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மேசியானிக் காலம் ஆண்டு வரை என்னிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் போற்றுவதே ஆகும். இதைதான் பவுல் அடிக ளார் கொரிந்து திருச்சபைக்கு அறிவுறுத்துகிறார்.கொரிந்தியர்கள் துன்பப்பட்டாலும், "இரக்கத்தின் பிதா" மற்றும் "எல்லா ஆறுதலின் கடவுள்" அவர்களுக்கு ஆறுதல் அளிக்கப்படும் என்று பவுல் ஊக்குவிக்கிறார்.(The God of Comforter) நாம் சந்திக்கும் எந்த துன்பத்திலும் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்று நம்பிக்கை
ஆண்டவர் தருகிறார்.நம் ஆண்ட வர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனை த்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிட மிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. 
(2 கொரிந்தியர் 1:3,4) நம் ஆண்
டவர் நமக்காக சிலுவை சுமந்து
துன்புற்றார். அந்த சிலுவை பாடே நமக்குமீட்பைதருகிறது,ஆறுதலை அளிக்கிறது. நமக்கு ஏற்படும் துன்பங்களிலும் கடவுளை நாம் துதிக்கவும் போற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும்.ஆண்டவரு
க்காக நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களு டைய ஆறுதலிலும் பங்குபெறுவீர் கள். எங்களுக்கு ஏற்பட்ட மரண தண்டனைகளிலிருந்தும் கடவுள் எங்களை விடுவித்தார் எந்த நிலையிலும் அவர் எங்களை கைவிடுவதில்லை. எங்கள் உப தேசம் சிலுவை குறித்தானது. சிலுவையை குறித்தே அன்றி வேறு எவற்றையும் குறித்து நான் மேன்மை பாராட்டாத இருப்பே னாக.
 
3. மேசியானிக் காலம் அற்புதங்களின் காலம்: The Messianic Age is a time for miracles.
லூக்கா: 18: 35-43

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே ! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்த பொழுது தன்னுடைய மேசியா னிக் காலத்தை அற்புதங்கள் மூலம் தொடங்கி வைத்தார்.இதை
மத்தேயு பதிவு செய்கிறார். "நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள் ளது அல்லவா? (மத்தேயு 12:28)
புதிய வானங்களும் பூமியும்" என்பது மேசியானிய யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவ கமாகும்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமிலிருந்து 15 மைல் தொலைவிலுள்ள எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருந்தனர்.
   இது ஏசுவின் கடைசி எருசலேம்
பயணம். ( இதை பதிவு செய்யும்
போது உள்ளம் களங்குகிறது) கடைசி பஸ்காவை ஆசாரிப்ப தற்கு எருசலேமுக்குப் போனார். 
 இதுவே தனது வாழ்க்கையின் கடைசி வாரத்தின் ஆரம்பம் மற் றும் அவர் சிலுவையில் அறையப் படுவதை நோக்கி செல்லும் பய ணம் என்றுஅவருக்குத் தெரியும்.
பூமியில் வாழ்ந்த இயேசுவின் கடைசி அற்புதம் இதுவாகும்.
எருசலேம் மக்கள் கூட்டத்தால்
நிரம்பி இருந்தன. காரணம் அது
கடவுளின் பாஸ்கா பண்டிகை.
தெருக்களில் மக்கள் நிரம்பியிருந் தனர், இயேசு பஸ்கா பண்டிகை யின் போது போகிற இடங்களி லெல்லாம் பிணியாணிகளைக் குணமாக்கிக் கொண்டும், அற்புதங்களைச் செய்து கொண்டு வந்ததால், இயேசு எங்கிருந் தாலும் ஜனங்கள் அவரைத் தேடி வந்தார்கள் அங்கு ஒரு பார்வை யற்றவர் சாலையோரத்தில் பணத் திற்காக பிச்சை எடுக்கிறார். அவர் திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், அவர் வழிப்போக்கர்களின் உரையாடல் களைக் கேட்டு, இயேசு அங்கே இருப்பதைக் கேள்விப்பட்டு, இருள் சூழ்ந்த தனது உலகத்திலிருந்து தப்பிக்கத் துடித்து, 'இயேசு, தாவீதின் குமாரனே! என் மீது கருணை காட்டுங்கள்!' என சத்த மாக கூப்பிட்டான்.அவனை பேசா திருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள்.அவனோ: தாவீ தின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன் னார். அவர்கள் அந்த குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார் கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கத்தில் ஒன்று சங்கீதம் 146:8 ல் குருடரின் கண் களைத் திறப்பார் என்றும் மடங் கடிக்கப்பட்டவர்களைத் தூக்கி விடுவார் என்றும் கூறப்பட்டு ள்ளது.உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந் தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக்குருடன் ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் என்றார்.”அந்த நிமிடமே அந்தக் குருடன் பார்வை பெற்றான். இயேசுவுக்குப் பின் சென்றான்.பர்திமேயுவிடம் காணப்பட்ட சிறப்பு குணங்கள்;  விடாப்பிடியாகக் கேட்கும் பண்பு, அவனுடைய நம்பிக்கை, மேல் அங்கியை தூக்கி எரிந்தது போன்றவைகள் இயேசுவைப் பற்றி அவனுக்குள்ளிருந்த விசு வாசத்தைக் காட்டியது. எல்லாவ ற்றிற்கும் மேலாக பார்வை பெற்ற பின் இயேசுவைப் பின் தொடர்ந் தான். இதே போன்ற பண்புகள் நமக்குள் வர நாம் செயல்பட வேண்டும். 
சிலுவையின் பாதை ஒன்றே ஜெயத்திற்கான பாதையாகும்.
சிலுவையே மேசிய காலம் குறித் த புதிய திருக்காட்சி என நம்
மனதில் நிறுத்தி அனுதின சிலு வையை சுமப்போம்.
4.ஆண்டவர் அருளும் இறையரசு அல்லது நியா தீர்ப்பு?
கிறித்துவின் அன்பு இறை மக்களே!ஆண்டவர் அருளும் இறை அரசு முதலில் வருமா? நியாய தீர்ப்பு முதலில் வருமா?
சிலுவையின் வழியாக இவ்வுல கில் இறையரசு முதலில் வர வேண்டும். இதுவே மேசியானிக் காலமாகும்.  மேசியானிய யுகம் ஆண்டவர் இயேசுவால் ஆளப் படும். திருத்தூதர் பேதுரு "விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்க வேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் (மேசியானிக்) குறித்து கூறியிருந் தார். (திருத்தூதர் பணிகள் 3:21)
இயேசு ராஜாக்களின் ராஜாவாக இருக்கிறார் (வெளிப்படுத்துதல் 19:16) அவர் மகிமையுடன் திரும் பும்போது, ​​அவர் தம்முடைய எதிரி களைத் தோற்கடிப்பார், பூமியில் மீதமுள்ள மக்களை நியாயந் தீர்ப்பார், ஒரு பூமிக்குரிய அரசை நிறுவுவார், சாத்தானை ஆயிரம் ஆண்டுகள் பிணைப்பார். அவர் வந்து நியாதீர்பிற்கு முன்பாகவே
நாம் இவ்வுலகில் இறையரசை
நிறுவ கடமை பட்டுள்ளோம். இது
அனைவரின் கடமையாகும்.இந்த
இரட்சிப்பின் காலத்திற்குள் மனம்
மாறாதவர்கள் நியாதீர்ப்பிற்கு
உட்படுத்தப்படுவர் என்பது
மிக உண்மையாக உள்ளது. 


Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 
..







    

ஜோஹன் ஹென்ரிச் ஸ்டோவர், 1861-ல் குருடரான பார்ட்டிமேயஸை இயேசு குணப்படுத்துகிறார்.

மாற்கு நற்செய்தி பர்திமேயுஸ் என்ற மனிதனைக்




 

















 
















 


   



 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.