அன்பும் அயலார் உறவும்.(123) Love and Neighbourly Relations மத்தேயு: 5:43-48.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த லெந்து காலங்களில் நாம் கடவுளிடம் மிக பிரியமாய் இருக்க கொடுக்கப் பட்டு இருக்கின்ற தலைப்பு தான் "அன்பும் அயலார் உறவும்". உன்னைப் போல் உன் அண்டை வீட்டாரை நேசிப்பது திருவிவலிய த்தில் எட்டு முறை காணப்படு கிறது.நம்அயலார் அனைவருமே, நமக்கு அன்பானவர்களாய் இல்லை. நம் மீது பொறாமை, பகை, தீங்கு விளைவிப்போர் அதிகம். ஆனாலும் ஆண்டவர் அவர்கள் மீது அன்பும், நல் உறவு பேனவும் அழைக்கிறார். இதற்கு அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனமும் மிக அவசி யம். பவுல் அடிகளாரின் கூற்றுப் படி; " இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமை தியுடன் வாழுங்கள். அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவு ளின் சினத்திற்கு விட்டுவிடுங் கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு,"பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன" என்கிறார் ஆண்டவர்.
நீயோ, "உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந் தால், அவன் குடிக்கக் கொடு. இவ் வாறு செய்வதால், அவன் தலை மேல் எரிதழலைக் குவிப்பாய்." (உரோமையர் 12:18-20). இதுவே,
நாம் நம் அயலகத்தாருடன் செய்
யும் செயலாகும்.
திருவள்ளுவர் அன்பை உள்ளத் தின் அகத்து உறுப்பு என்கிறார்.
உங்கள் அண்டை வீட்டாரை நேசிப் பது வேலிக்கு மேல் எட்டிப்பார்ப் பதைத் தாண்டியது.உங்கள் அண் டை வீட்டாரை நேசிப்பது என்பது நாம் நமது சமூகங்களுக்குச் சேவை செய்வதாகும் - நாம் உண் மையாகப் புன்னகைக்கும்போது மற்றவர்களிடம் மாற்றும், இரக்கம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் துகிறது.உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டாரையும் நேசியுங்கள் என்பது இயேசுவின் இரண்டாவது பெரிய கட்டளை.
ஏனென்றால், “உன்னிடத்தில் அன்புகூருவதுபோல் உன் அயலா னையும் நேசி” என்ற இந்த ஒரு கட்டளையைக் கடைப்பிடிப்பதில் முழுச் சட்டமும் நிறைவேறுகிறது. ( கலாத்தியர் 5:14 )
1. அன்பு செலுத்துவதே ஆண்ட வரின் புதிய கட்டளை.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அன்பு செலுத் துவதே ஆண்டவரின் புதிய கட்ட ளையாக இருக்கிறது இவற்றில் முதல் கட்டளையாக உன் ஆண்டவ ராகிய கடவுளிடம் அன்பு கூர்வா யாக' என்பதே."பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத் திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!
(லேவியர் 19:18) என்பது அடிப்
படை கட்டளையாகும்.
நாம் பிறர் மீது அன்பு கூறுவது
பத்து கட்டளைகளையும் அடங்கி
உள்ளது. அன்பு ஆண்டவரின்
புதிய கட்டளை."ஒருவர் மற்றவரி டம் அன்பு செலுத்துங்கள்" என் னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக்கொடுக்கிறேன். உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்பதே இரண்டாவது கட்டளை. முதல் கட்டளையும் இரண்டாவது கட்ட ளையும் அன்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.அன்பு உள்ளவரே இறைவனை அறிவார் எனில் ஆண்டவர் அன்பாகவே இருக்கி றார். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத் துங்கள்.(யோவான் நற்செய்தி 13:34)உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கி றீர்கள். ஆனால் நான் உங்களுக் குச் சொல்கிறேன்; உங்கள் பகை வரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக் காகஇறைவனிடம்வேண்டுங்கள்.
"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித் தெழச் செய்கிறார். நேர்மையுள் ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கி றார். (மத்தேயு நற்செய்தி 5:43-45)
2. நிலைபேறுடைய வாழ்வைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? லூக்கா 10:25-37)
இரக்கம், அன்பு என்பனவேயன்றி ஒருவனது சட்ட அறிவோ பதவி யோ நிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத் தாக நல்ல சமாரியன் உவமை
அமைந்துள்ளது.ஒருவர் எருசலே மிலிருந்து எரிக்கோவுக்குப் போகு ம்போது கள்வர் கையில் அகப்பட் டார். அவருடைய ஆடை களைக் கள்வர்கள் உரிந்து கொண்டு, அவ ரை அடித்துக் குற்றுநயிராக விட்டு ப் போனார்கள். தற்செயலாய் அவ் வழியே வந்த சமயகுரு ஒருவர் குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து குற்றுயிராகக் கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். விழுந்து கிடந் தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனா ரியத்தை (நாணயம்) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுநத்து, "இவரைக் கவனித் துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். இதுவே, நமக்கு நம் அயலகத்தாரு
டன் அன்பு கூறும் வழி.அன்பும் மரியாதையும் உறவை வளர்க்கும் முதன்மையான காரணிகள்.
அண்டை வீட்டாரை நேசிப்பது என்பது இரக்கத்துடன் செயல்படு வதாகும்.அவர்களின் ஆபத்தில்,
தேவையில் உதவுவது, கருனை,
இரக்கம் காட்டுவதே. நாம் ஆண்ட வரின் அன்பின் கட்டளைக்கு
கீழ்படிவதே நமது உன்னத கடமை
யாகும். அவ்வாறு, நாம் செயல்பட
நம் ஆண்டவர் கிருபை செய்வாராக. ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer,
www.davidarulsermoncentre.com
www davidarulblogs.com
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், உங்கள் உடன் பணிபுரிபவர், அஞ்சல் செய்பவர், காசாளர் என யாரிடமும் வணக்கம் சொல்லி புன்னகைக்கவும்.
.
Comments
Post a Comment