குருத்தோலை ஞாயிறு: ஓசன்னா: கோவிலுக்குள் புதிய அரசர். (124) Hosanna: New King in the Temple. ஏசாயா: 56: 1-8, திரு.பாட.24;1 கொரிந்தியர்: 3:16-23,:மத்தேயு: 21: 1-17.

முன்னுரை; கிறித்துவின் அன்பு
பற்றுறுதியாளர்களே! உங்கள்
அனைவருக்கும் குருத்தோலை ஞாயிற்றின் வாழ்த்துக்கள்.  ஓசன்னா: கோவிலுக்குள் புதிய அரசர் என்ற சிறப்பான தலைப்பை குறித்து சிந்திப்போம்.
ஓசன்னா என்பது யூத மதம் மற்றும் கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு வழிபாட்டு வார்த்தையாகும்.
ஓசன்னா என்றால்,"இப்போது இரட்சியும்”  என அர்த்தமாகும். ஓசன்னா' என்னும் எபிரேயச் சொல்லுக்கு 'விடுவித்தருளும்' என்பதே பொருள். ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் ஒரு சொல்லாகும்.
இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரப் பண்டிகையை வருடந்தோறும் ஆசரிக்கும்போது, கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவ ர்களாய், பலிபீடத்தை ஒரு நாளு க்கு ஒரு முறைவீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவதுண்டு. எட்டாவது நாள் பெரிய ஓசன்னா நாள்! அந்த நாளில் மட்டும் ஏழு முறை "ஓசன்னா" என்று ஆர்ப் பரித்து, மிகுந்த உற்சாகத் தோடு சுற்றி வருவார்கள். சங்கீதத்தில்"ஆண்டவரே! மீட்டரு ளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 118:25. என ஓசன்னாவின்
அர்த்தமாக கூறப்படுகிறது. 
இந்த பயணம் 500  ஆண்டுகளு க்கு  முன்பாக வாழ்ந்த தீர்க்கர்
சகரியாவால்  முன்னறிவிக்கப்
பட்டது. "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப் பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டி யாகிய மறியின்மேல் ஏறி வரு கிறவர். (செக்கரியா 9:9) ஆண்ட வர் வெற்றிவேந்தராய் இந்த இறுதி பயணத்தை நிறைவேற்றி னார். ரோமானியர்கள், வீர விளை யாட்டுகளில் வெற்றிபெற்றால் ஒலிவமரத்தின் கிளைகளைக் கையில் ஏந்திக்கொண்டு தெருக் களில் ஊர்வலமாக வருவார்க ளாம். இந்தப் பழக்கம்தான் இஸ்ரவேல் மக்களாகிய யூதர்கள் வாழ்க்கையிலும் தொற்றிக் கொண்டது. ஆனால் அவர்களோ ஒலிவமரக்கிளைகளுடன் பேரீச்சை மரத்தின் கிளைகள், லில்லி மலர்க் கொத்துகள் போன் றவற்றை பவனியாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் அமைந்ததே 'பாஸ்கா' பண்டிகை. குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலை மேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ் சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.

1.ஆலயம் அனைவருக்குமான வேண்டுதல் இடம். The temple is a place of prayer for all. ஏசாயா 56:1-8.
கிறித்துவின் அன்பர்களே! ஆண்டவரின் எருசலேம் ஆலய
பயணம் ஒரு அரசரின் பயணமாக
கருதப்படுகிறது. ஆண்டவர் தாவீதோடு செய்த உடன்படிக்கை யின்படி, "எனக்குச் செவிகொடு ங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்க ளுடன் ஓர் என்றுமுள உடன் படிக்கையைச் செய்து கொள் வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். (எசாயா 55:3) பிற
இனத்தவரும் தம் ஆலயத்தை
தேடி வர அழைக்கிறார். இந்த பகுதி பல நாடுகளிலிருந்து சிறை
இருப்பிலிருந்து மீண்ட இஸ்ர வேலருக்காக எழுதப்பட்டது.
"இதோ, நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய்; உன் கடவு ளாகிய ஆண்டவரை, இஸ்ரயே லின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தி யுள்ளார். (எசாயா 55:5)
இந்த கட்டளை, ஆண்டவரின்
கோவிலுக்கு புதிய அரசராய்
பயணித்த குருத்தோலை ஞாயி றுவில் நிறைவேறுகிறது. அது மட்டுமல்ல, ஒவ்வொரு கிறித்தவ ருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை "பிற இனத்தாரை ஆண்டவரின் ஆலயத்திற்கு கொண்டு சேர்ப் பதே "என்பதை நாம் மறந்து போகக்கூடாது. குருத்தோலை ஞாயிறுபயணத்தில்  கலந்து கொண்ட கூட்டமே பிற இனத்தார் தாவீதின் குமாரனே என்று போற்றினர், வணங்கினார்கள்.
ஆண்டவர் மக்களின தலைவர், அரசர் என்பதை ஏசாயா தீர்க்கர்
"நான் அவரை மக்களினங்க ளுக்குச் சாட்சியாகவும், வேற்றின ங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். 
(எசாயா 55:4) என்கிறார்.
அவ்வாறு,ஆண்டவரின்ஆலயத்திற்கு வருவோர், " நீதியை நிலை நாட்டுங்கள், நேர்மையைக் கடை பிடியுங்கள்; நான் வழங்கும் விடு தலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரை வில் வெளிப்படும். (எசாயா 56:1)
என்கிறார்."இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்; ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப் பிடித்து, எந்தத் தீமையும் செய் யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறு பெற்ற வர். (எசாயா 56:2) "அவர்களை
 நான் என் திருமலைக்கு அழைத் துவருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களி னங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும். (எசாயா 56:7) இதை கள்ளர்குகையாக, வியா பாரதலமாக மாற்றியதால் ஆண்
டவர் கோபம் கொள்கிறார்.
விரட்டி அடிக்கிறார். தூய்மை படுத்துகிறார்.
2. கிறித்துவே திருச்சபையின்
அடித்தளம். Christ is the foundation of the Church. 1.கொரிந்தியர்: 3:16-23 
 கிறித்துவின் அன்பு நண்பர்களே!
திருத்தூதர் பவுல் அடிகளார்
கொரிந்து திருச்சபையை ஆரம்பி க்க 18 மாதங்களாக அங்கு தங்கி
அதன் அடித்தளத்தைஅமைத்தார். 
இங்கிருந்து பவுல் அடிகளார் எபேசு திருச்சபைக்கு சென்ற பிறகுதன் உடன் திருப்பணியாள ரான அப்பொல்லோ என்றவர்
அலக்சாந்திரியாவில் பிறந்தவர்.  இவர் யூதர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்த வர். (திருத்தூதர் பணிகள் 18:24)
கடவுளின் வேலையாட்களாக இருந்த பவுலும், ,அப்பொல்லோ வும் பயிரிடப்பட்டு தண்ணீர் பாய்ச் சப்படும் வயலுடன் அவர்களை ஒப்பிட்டார் ( 1 கொரிந்தியர் 3:5-9 ). தேவாலயம்தனக்குசொந்தமானது அல்ல,  அது நிச்சயமாக வேறு எந்தமனிதனுக்கும்சொந்தமானது அல்ல, ஆனால் கிறிஸ்துவுக்கு மட்டுமே. ஏனெனில், ஒருவர் "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்" என்றும் வேறொருவர் "நான் அப்பொல் லோவைச் சார்ந்துள்ளேன்" என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப் போக்கில்தானே நடக்கிறீர்கள்? 
(1 கொரிந்தியர் 3:4) ஆலயம்
ஆண்டவருக்கே சொந்தம்.
நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சு கிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொ ருவரும் தம் கூலியைப் பெறுவர். 
நாங்கள் கடவுளின் உடன் உழைப் பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத் தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப் பும் கட்டடம். (1 கொரிந்தியர் 3:8,9)
நாம் ஆலயத்தின் வெறும் கட்டிட
மாக இருக்கிறோம். ஆனால் நம்
ஆண்டவர் என்றும் நம் ஆலயத்தி
ன் அடித்தளமாகவும், புதிய அரச ராய் இருக்கிறார். பவுல் அடிகளார்
நம்மை ஆலயத்திற்கான  கடவுளி ன் உடன் உழைப்பாளிகள் என் றும்  நம்மை கடவுள் பண்படுத்தும் தோட்டம் என்றும் நாமே அவர் எழுப்பும் கட்டடம். (1 கொரிந்தியர் 3:9) என்றும் கூறி," நீங்கள் கடவு ளுடைய கோவி லென்றும் கடவு ளின் ஆவியார் உங்களில் குடியி ருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெ னில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். (1 கொரிந் தியர் 3:16,17) எனவே, நாம் ஆண்டவரின் ஆலயம், ஆண்டவர் நமது ஆலயத்தின் புதியஅரசர்.
3.ஓசன்னா: கோவிலுக்குள் புதிய அரசர்.  Hosanna: New King in the Temple.மத்தேயு: 21: 1-17.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! குருத்தோலை ஞாயிறு(palm sunday) என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு (Triumph Entry) நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டு தோறும் அனுசரிக்கின்றனர். இது "பாடுகளின் குருத்து ஞாயிறு" (Palm Sunday of Sufferings)என்றும் அழைக்கப்படுகிறது. Palm Sunday is the final Sunday of Lent.  இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச் சியை விவிலியத்தின் நான்கு நற்செய்தியாளரும் விவரித்து ள்ளனர். இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந் தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக் கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக் கப்பட்டிருக்கிற ஒரு கழுதையை யும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக் குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்" என்றார். ஆண்டவர் தன்னை இங்கு அரசராக வெளிப் படுத்தவில்லை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கர் சகரியா ஆண்டவரை அரசராக முன்னரிவிக்கிறார். "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ள வர்; கழுதையின் மேல் ஏறி வருகி றார்; கழுதைக்குட்டியாகிய மறி யின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத் தார் (சகரியா9:9). சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித் தார்கள். வேறு சிலர் மரங்களிலி ருந்து கிளைகளை வெட்டி வழி யில் பரப்பினர். அவருக்கு முன் னேயும் பின்னேயும் சென்ற கூட்ட த்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்ற போது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று பதிலளித்தனர்.
அக்காலத்தில் யூத சமூக மரபுப்படி ஆளுநர்கள், அரசர்கள், தலைமை க் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்ப ள வரவேற்பு பெறுதல்ஆகியஉயர் பெருமை நிலையைப் பெற்றிருந் தனர். மக்களும் இம்மூவர்களுக்கு மட்டுமே ஒலிவ் மர குருத்து ஏந்தி வரவேற்பு அளிப்பர். ஆனால் தச்சரின் மகனான இயேசு, மக்கள் செல்வாக்கு மிகுதியால் கழுதை மேல் அமர்ந்து கம்பள வரவேற் புடன் தலைநகர் எருசலேமில் அரசரைப் போல நுழைந்தார். எருசலேம் மக்களும் அவருக்கு அரச மரியாதையுடன் ஒலிவ மர குருத்து ஏந்தி ஆடம்பரமான வர வேற்பு அளித்தனர். இது அந்த கால அரசியல் சூழலில் சாதாரண செயல் அல்ல. இது யூத சமுதா யத்தில் பிரிவினை வாதங்களால் கட்டுண்டு கிடந்த ஏழை எளியோ ருக்கு இந்நிகழ்வு விடுதலை தரும் நம்பிக்கையாக அமைகிறது. இன்றைய  குருத்தோலைஞாயிறு, வேறுபாடுகளற்ற சமத்துவ சமு தாயம் படைக்கவும் அதற்காக இலட்சிய மரணமேற்கவும் நம்மை அழைக்கிறது.   
4. இயேசு அரசரா? Was Jesus a King?
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
எருசலேமின் வெற்றிப்பயணமாக
இயேசு கழுதை குட்டியின் மீது சென்ற பயணம் ஒரு அரசராக கருத முடியாது. அரசர்கள் இரானு வத்திற்கு பயன்படும் குதிரைக ளோ, இரானுவ வீரர்களுடன், கத்தியுடனோ, யுத்த  தளவாளங்க ளுடனோ பயணிக்கவில்லே. அதை அவர் என்றுமே விரும் பியதில்லை. பேதுருவைப் பார்த்து கத்தியை எடுக்காதே என்று அறிவுருத்தினார். வான அறிஞ்சர்கள், ஏரோதின் அரன்மனைக்கு சென்று; "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண் டோம். அவரை வணங்க வந்திரு க்கிறோம் என்றார்கள். 
(மத்தேயு நற்செய்தி 2:3) ஆனால்
அவர் அரணமனையில் பிறக்க
வில்லை. தாழ்மையின் வடிவமா
ய் மாட்டு தொழுவத்தில் பிறந்தார்.
அன்பின் அரசராக வாழ்ந்தார்.
உலக அரசர்கள் மற்ற மக்களை
அழித்துதான் அரசராக முடியும்.
இவர்கள் ஒரு இனத்திற்கும்,
நாட்டிற்கும் மட்டுமே அரசராக
இருப்பர். ஆனால் நம் ஆண்டவர்
உலக இரட்ச்சகர். அமைதியின்
அரசர். ஆனால் சகரியா தீர்க்கர்
முதன்முதலாக;மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருச  லேம்! ஆர்ப் பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறி யின்மேல் ஏறிவருகிறவர். (செக்கரியா 9:9) அரசராக அறிமுக
படுத்துகிறார்.  யூதர்களின் ராஜா" என்ற தலைப்பு புதிய ஏற்பாட்டில் புறஜாதிகளால் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. உ.ம். பிலாத்து
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற் பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், "இதோ, உங்கள் அரசன்!" என்றான். ஆனால் யூதர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை" என்றார்கள். 
(யோவான் நற்செய்தி 19:14,15)
யூதர்கள் ஆண்டவரை அரசராக
ஏற்க வில்லை. என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அல்ல" என்றும் ஆண்டவர் குறிப்பிடு கிறார். இயேசு பிலாத்து முன்னி லையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறினார். மத்தேயு  நற்செய்தி 27:11) தான் அரசன் என ஆண்டவர்
கூறவே இல்லை.இருப்பினும், யூதர்களின் ராஜா என்பதை இயேசு நேரடியாக மறுக்க வில்லை.ஆனால், பிலாத்து "இவரே யூதர்களின் ராஜா. என ஒரு தலைப்பை எழுதி, சிலுவை யில் வைத்தார். It was a Statutory Report. அரசாங்க அறிவிப்பு.அவர்
என்றும் அரசர். இந்த தலைப்பு பின்னர் யூதர்களில் பலரைப் படிக்க வைத்தது: ஏனென்றால் இயேசு சிலுவையில் அறையப் பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தது: அது எபிரேயு, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் எழுதப் பட்டது. இதனால், போர் வீரர்கள் அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.(யோவான் நற்செய்தி 19:3)
 ஆனால் ஆண்டவர் உலக
அரசர் அல்ல. உலக இரட்சகர். உலக அரசர்களின் காலம் குறிப்பிட்ட காலத்தில் அழிந்து
விடும். ஆனால் நம் ஆண்டவர்
வின்னரசர். அது நிலையானது.
நித்திய பிதா, அவர் அரசை இவ்வுலகில் நிறுவவதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதுவே, குருத்தோலை ஞாயிற்றின் நம் சூளுரையின் பயணமாகும். கடவுளின் அரசு நம் உலகில்
நம்மால் அமைய ஆண்டவர்
கிருபை அருள்வராக. ஆமென்.

Prof. Dr David Arul Paramanandam Sermon Writer 
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 

  





இயேசு வெற்றி வேந்தராய் எருசலே முக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.





Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.