சிலுவையும் மண்ணின் உரிமையும். " நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பார் என உறுதியாக உமக்கு சொல்கிறேன்"(130). என்றார். லூக்கா 23:43.

முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே ! சிலுவையில் ஆண்டவர் மொழிந்த இரண்டாம் வார்த்தை:" நீர் இன்று என்னோ டு பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்ற உறுதியான வார்த்தையை கூறுகிறார். இயேசுவின் காலத்தில் அரசுக்கு எதிராக கலக காரர்கள் கல்வர்கள் (குற்றவா ளிகள்) என்றும் அழைக்கப்பட் டார்கள். இவர்கள் ரோம அரசுக்கு எதிராக தங்கள் சமய உரிமையை, அரசியல் உரிமையை நிலைநாட்ட போராடிய மக்கபேயு புரட்சியாள ர்கள். இவர்கள் இயேசுவின் கால த்தில் ஆயுதம் ஏந்தி ரோமருக்கு எதிராக கலகம் செய்த செலோத் தியன். ஆண்டவராகிய இயேசு வின் சீடர்களில் ஒருவரான சீமோன் என்பவரும் சிலோத்திய ன் என்ற குறிப்பை நாம் லூக்கா 6:15ல் பார்க்கிறோம். இந்தக் கல்வ ர்கள் குகைகளில், மலைகளில், அடர்ந்த காடுகளில் மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் மறைந்து வாழ்ந்தனர். மனிதர்கள், செல்வந்தர்கள், பயண வழி செல் லும் போது அவர்கள் வருகையை கண்ணமிட்டு அறிந்து, இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பதே இவர்கள் வழக்கம். ரோம அரசு தன் ஆளுகைக்கு உட்பட்ட ரோமர் அல்லாத ஆண்கள் அரசுக்கு தலை வரி(poll tax) செலுத்த வேண்டும். ஆனால் அக்காலத்தில் உணவுக்கு வழியில்லாமல், வேலை வாய்ப்பு இல்லாமல், மக்கள் அவதிப்பட்டனர்.(மத் தேயு:20:6,7) இந்நிலையில் வரி எப்படி இவர்களால் கட்ட முடியும்? இதனால் ஆண்கள் அரசின் அடக் குமுறைக்கு பயந்து ஊரை விட்டு வெளியேறி மறை வாக வாழ்ந்த கள்வர்கள் என அழைக்கப்பட்ட விடுதலை போராளிகளுடன் தங்களை இணைத்துக் கொண் டனர்.
1. இயேசுவின் மீது என்ன குற்றச்சாட்டுகள்?
அன்பானவர்களே! இந்த உலகம்
குற்றம் காணும் உலகம். நீங்கள்
ஆயிரம் நன்மை செய்தாலும் ஒரே
குற்றம் செய்தால் அதையேதான்
அவர் கண்களுக்கு தெரியும். உங் கள் நன்மைகள் மறந்துபோகும். 
1. இயேசு தன்னை இறை மைந் தன் என அறிக்கை செய்தான்
என்றனர் (யோவான்19:7,12)
2. ரோம அரசர்  சீசருக்கு வரி கொடுக்க வேண்டாம் என்று மக்களை தூண்டிவிட்டார் (லூக்கா23:2)
3. மக்கள் சீரழிய காரணமாக இருந்தார். (லூக்கா 23:5)
4. கலிலேயா முதல் யூதேயாவரை
மக்களை கலகத்தில் தூண்டிவிட்
டார்.(லூக்கா23:5) என குற்றம் சாட்டினர்.
2. கள்வர்களின் கேலி பேச்சு:
அன்பானவர்களே!. இயேசுவோடு சிலுவையில் இரண்டு புறமும் இரண்டு கல்வர்கள் அறையப்ப ட்டார்கள் இவர்களும் மற்றவர்க ளோடு சேர்ந்து இயேசுவை கேலி பேசினார்கள்(மாற்கு15:32,மத்தேயு
24:44) முதல் குற்றவாளி "நீ மேசியா என்றால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள்"என்றுகூறினான்(லூக்கா:23:39). இப்படி கேலி பேசிய கள்வர் களில் இரண்டாம் குற்றவாளி  எப்படி மனம் மாறினான்? எந்த வார்த்தை அவனை மனமாற்றம் செய்தது ?ஆண்டவர் தன்னை அடித்தவர்களையும், பரிகாசம் பண்ணினவர்களையும் பார்த்து; " தந்தையே இவர்களை மன்னியும்" என்று சொன்ன வார் த்தை ஒரு கள்வனுடைய உள்ளத் தை மாற்றியது.  இவர் உண்மை யாகவே கடவுளாக இருக்க வேண் டும். இவர் யாரையும் நிந்திக்க வில்லை, தந்தையிடம் இவர்களுக் காக மன்னிப்பு கேட்கிறார். எனவே இவர் உண்மையான கடவுள் தான், மேசியா தான் என உணர்கிறார். இவர் யூதரின் அரசர் என சிலுவையில் எழுதி இருப்பதை பார்க்கிறான். ஒரு அரசராக இருந்தும் இவ்வளவு அன்புள்ளவராய், மன்னிக்கிறாரே என உள்ளத்தில் சிந்திக்கிறான். இவன் கள்வனாக இருந்தாலும், கடவுளுக்கு பயப்படுகிறவன். எனவே தான் மற்ற குற்ற வாளியை பார்த்து "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா"? என்று கேட்கிறான். அவனை திருத்து கிறான். நாம் முறைப்படி தண்டிக்கப்படுகிறோம் என தன் தவற்றை உணர்ந்து கொள்கி றான்.  உடனே அவன் மனம் மாறுகிறான். எனவே ஆண்டவரை பார்த்து; "இயேசுவே உம் அரசு இவ்வுலகில் வருகின்ற பொழுது என்னை நினைவில் கொள்ளும் என்று கேட்கின்றார் ( லூக்கா23: 42).ஆண்டவர் அருளும் கிருபை
நிறைந்த அருள் வாக்கு,"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்
டில் இருப்பீர்" என்ற உறுதி வாக்கை கொடுக்கிறார்.
3.இரண்டாம் குற்றவாளியின் நற்குணங்கள்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! "சேற்றில் தான்செந்தாமரை பூக்கும்" என்பார்கள். இவன் குற்ற வாளியாக இருந்தும் இவனிடத் தில் மிக சிறப்பான குணாதி சயங்கள் இருக்கின்றன.
1.கடவுள் மீது பயம். இவனுக்கு கடவுள் பயம் இருந்ததினால் தான் தன் நண்பனை பார்த்து;" நீ கடவுளுக்கு அஞ்சுவது இல்லை யா" என்று கேட்கிறான்.
2.தன் குற்றத்தை ஒப்புகொள் கிறான். நாம் நியாயப்படி தண்டிக் கப்படுகிறோம். இவர் ஒரு குற்றங் கள் செய்யவில்லையே என்கி றான்.
3. தன் நண்பனை திருத்த முயற்சிக்கிறான்.
4. ஆண்டவரை மேசியா என நம்புகிறான்.
5.ஆண்டவர் விண்ணரசை கொடு க்கும் விண்ணின் தந்தை என நம்புகிறான்.
6. ஆண்டவரின் இறையாட்சியை அவன் நம்புகிறான். எனவேதான் "இயேசுவே, நீர் ஆட்சி உரிமை பெற்று வரும் போது என்னை நினைவில் கொள்ளும்" என்று கேட்கிறார்.(லூக்கா23:42)
7. ஆண்டவர் அருளும் பேரின்ப வீட்டில் (paraduse)பங்கு பெற அழைப்பை பெறுகிறான். அதுவும் "இன்றைக்கே" என்ற உறுதியும் பெறுகிறான்.
Prof. Dr David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 






JanBruegel எழுதிய பாரடைஸ்.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.