சிலுவையின் மூன்றாம் திருமொழி.சிலுவையும் புது உறவும். " அம்மா, இவரே உம் மகன்....இவரே உம் தாய்". (131) யோவான்: 19:25-27.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!ஆண்டவர் சிலுவையில் மொழிந்த மூன்றாம் திருமொழி ,"அம்மா இவரே உன் மகன், இவரே உன் தாய்." சிலுவையில் ஆண்டவர் மொழி ந்த இந்த வார்த்தை அவரது அன் னை மரியாளையும் அவருடைய அன்பு சீடன் யோவானையும் ஒரே குடும்பமாக மாற்றுகிறது. ஆதர வற்று நின்ற தன் குடும்பத்தில் பெற்றோரையும் தன்னையே நம்பின சீடரையும் இனைக்கும் இந் நிகழ்வு இயேசுவின் துன்ப மான பாடுகளின் சூழலிலும் வெளிப்படுகிறது. இந்த  துன்ப மான பாடுகளின் உறவின் வார்த்தையில் அன்பு, அரவணை ப்பு, ஏற்பு, பரந்துபட்ட இணைப்பு:(inclusiveness) போன்ற பல உயர் ந்த பண்புகள் அடங்கியுள்ளன.
1. ஆண்டவரின் குடும்பம்:
அன்பானவர்களே யூதேய நாட் டைச் சேசேர்ந்தயோசேப்பு, அவரின் மனைவி மரியாள், இவர்களுக்கு யாக்கோபு, யோசே, யூதா  மற்றும் சீமோன் ஆகிய நான்கு ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் இருந்தனர். இவர்கள் மூத்த மகன் இயேசு என்று நாம் அறிவோம். பிழைப்புக் காகதன்சொந்தஊரைவிட்டு கலிலேயாவில் குடியேறியவர் யோசேப். மிகவும் அருமையான குடும்பம். தன் குழந்தை இயேசு வுக்கு காணிக்கையாக ஆட்டுக் குட்டி தர இயலாமல் புறாவை காணிக்கை தந்தவர்கள். (லூக்கா 2: 24)  மூத்த ஆண் மகனை கடவு ளுக்கு நியமிக்க வேண்டுமென மோசையின் சட்டம் இதனை வலியுறுத்துகிறது. (விடுதலைப் பயணம் 13 :2, 12,15) மரியாள் தன் மகனை பரிசேயனாகவே வளர்த்தார்.(யோவான்3:2)  அவரும் ரபீ என்று அழைக்கப்ப ட்டார். யூத தாய், சமயம் சார்ந்த அனைத்துக் கட்டளைகளையும் தன் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டியவர் அதனையும் சிறப்பாக செய்துள்ளார். இதனை இயேசுவின் வாழ்விலும் காண முடிகின்றது. எருசலேம் சென்ற போது இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வு இதனை நமக்கு உறுதி செய்கிறது. வாரந்தோறும் ஆலயம் செல்வது, தவறாமல் பண் டிகைக்கு எருசலேம் செல்வது,  திருமறையை புரிந்து கொள்வது, அதற்கு  விளக்கம் தருவது ஆண்ட வரின் தூய பணியாகும்.  ஆண்டவர்  ஒரு தச்சன் பிள்ளை  எவ்வகை உடை உடுத்திருக்க இயலும், இதனை இயேசு தன் உடையை போர்சேவகர்கள் பங்கி டும் போது, நிச்சயம் நினைத்து தனக்கு உடை உடுத்திய தாயை நோக்கி பார்ப்பதாக யோவான் அழகுற பதிவு செய்துள்ளார். தனக்கு ஏற்பட்ட துன்ப நிலையி லும், ஆண்டவர் தாய்க்கு தலை மகன், தன் தாயைகாக்கவேண்டும் என்று பொறுப்பை உணர்ந்து, தனக்கு அன்பாய் இருந்த சீடனா ன யோவானிடம் தன் தாயை ஒப்படைக்கிறார். சீடர்களிலேயே இயற்கை மரணம் அடைந்த ஒரே சீடன் யோவான் தான். அவன் நீடித்த நாட்களாய் தன் தாயை காப்பான் என்ற நம்பிக்கையோடு தான் அவனிடம் தன் தாயை ஒப்படைத்து பராமரிக்க செய் கிறார். தன் தாய் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக தன் வாழ்நாட்களை  அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னை கடவுளுக்கு கருவியாக்கினது மட்டுமின்றி தன்னையும் இரட்சிப்பின் கருவி யாக்கினது அவள் எடுத்துக் கொண்ட வாழ்க்கை பயணத்தை இயேசு நினைத்துப் பார்க்கிறார். பெற்று வளத்ததோடு கடமை முடிந்து விட்டது என்று நின்று விடாமல், தன் பணி பயணத்துடன் தன்னை இனைத்துக் கொண்டு கலிலேயே பெண்களுக்கு ஓர் அணி தலைவியாய் நெடும் பய ணத்தை ஆண்டவரோடு மேற் கொண்டு தனக்கு மறைவான ஆதரவாய் நடந்து வந்ததையும் இயேசு நினைத்துப் பார்க்கிறார். தான் குழந்தையாக இருக்கும் போது, தன்னை பாதுகாக்க யூத யாவிலிருந்து எகிப்துக்கும், பின்னர் எகிபத்திலிருந்து கலிலேயாவுக்கும் என மறைந்து, மறைந்து ஓடி ஒளிந்து பாதுகாத்த தாய்;  இப்போது தனியாய் கலிலேயாவிலிருந்து சமாரியா வழியாக யூதயாவுக்கு கூட்டத்து டன் வந்தவர்,பதுங்கி பாதுகாத்த தாய் தன்னை பலி கொடுத்து விட்டு துடி துடிக்க நிற்பதையும் நாம் காணலாம். தான் கைவிடப் பட்டு, துன்புறுவதை விட தன்னை சுமந்த தாய் என்ன பதட்டத்தில் நிற்கிறாரோ என்று நினைத்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் தன் சகோதரர்களோ, சகோதரிகளோ, சீடர்களும் கலீலேய ஆண்களோ ஒருவரும் அங்கு இல்லாத நிலையில் இயே சுவுக்கு இன்னும் வேதனையை கூட்டுகிறது. சீடர்கள் அன்று இரவே சிதறி ஓடி விட்டார்கள். ஒரு சீடர் நிர்வாணமாய் ஓடிவிட்டார். சிலர் ஒரு வீட்டிற்குள் தாயிட்டு பாதுகாப்பாக தங்கி விட்டார்கள். பேதுருவும் தலைமை ஆசாரியனு க்கு  அறிமுகமான ஒரு சீடர் மட்டுமே  இங்கும் அங்குமாய் நடமாடிக் கொண்டிருந்ததார்.( மாற்கு, எருசலேமைச் சேர்ந்த மரியாளின் மகன், பேதுரு, பவுலுடன் நற்செய்தியாற்றி யவன்) கானாவூர் திருமணத்தில் "பெண்ணே" என்று தான் இயேசு தன் தாயே அழைத்ததாக குறிப்பு உள்ளது (யோவான் 2:6) யோவான் நற்செய்தியில் 19 :26 ல் மட்டுமே ஆண்டவர் தனது தாயாரை அம்மா என்று அழைத்ததாக குறிப்பு உள்ளது.யோவான்  சிலுவை பயணத்தில், மரியாளுடன் இருந்தார்.
2. யோவான் யார்?
அன்பானவர்களே ஆண்டவருக்கு 12 சீடர்கள் இருந்தும் யோவானை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் யோவான் ஆண்டவரிடம் தனிப் பிரியமும், பற்றும், பாசமும் கொண்டவன். உடல ரீதியாக
ஆண்டவருடைய மார்பிலே சாய்ந்து பேசுகின்ற உரிமை பெற்றவன். யோவான் ஆண்டவ ருக்கு ஒன்று விட்ட சகோதரன் First Cousinஎன்றுகுறிப்பிடுவார்கள். புனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் செபதேயு. இயேசுவின் திருத்தூத ர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபு இவரது சகோதரர்.
ஆண்டவருக்கு அன்பான சீடன். ஆண்டவரின் தாயை தனக்குப் பிறகு காக்கும் கடமையை பெற்றான்.இயேசு யோவானை யும் அவர் சகோதரர் யாக்கோபை யும் 'இடியின் மக்கள்' என்று அழைத்தார்.திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு கூர்ந்தார்.இயேசுவின்திருப்பாடுகளின் போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக,தனதுதாய்மரியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு யோவானிடம் அளித்தார்.
இக்காலங்களில் பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளு க்கு ஆண்டவர் தன் தாயை காத்து முன்மாதிரியாய் இருக்கிறார் உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு வாயாக என்ற கட்டளைப்படி வாழ கடவுள் நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

Prof.Dr.David Arul Paramanandam Sermon 
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 





திருத்தூதர் புனித யோவான்
இயேசுவின் அன்பு சீடர்
நற்செய்தியாளர்




Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.