சிலுவையில் ஏழாம் திருமொழி. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கத்தி உயிர்துறந்தார்.(132). லூக்கா:23:46.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆண்டவர் சிலுவையில் மொழிந்த ஏழாம் திரு வார்த்தை "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படை க்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கத்தி உயிர்துறந்தார். ஆறாம் வார்த்தை பணிநிறை வின் வார்த்தை. ஏழாம் வார்த் தையோ வாழ்வு நிறைவின் வார்த்தை. இந்த ஏழாம் திரு மொழி யூதர்களின் பாரம்பரிய இறைவேண்டலாகும்.இதுதிருப்பாடல்(சங்கீதம் 31:5) கூறப்பட்டு ள்ளது.
சிலுவையில் இயேசு மகா சத்தமாய் கூறிய வார்த்தைகள் இரண்டு. 1. என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர் 2. பிதாவே உம் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இவ்விரண்டு செய்திகளுமே இயேசுவின் பற்றுறுதியின் வெளிப்பாடு எனலாம். என்ன துன்பம் வந்தாலும் இவரே என் கடவுள். இவரிடமே என் வாழ்வை, உயிரை ஒப்படைப்பேன் என்ற உறுதிப்பாடு இந்த ஏழாம் வார்த் தையில் அமைந்துள்ளது.
யூத தாய்மார்கள் தங்கள் பிள்ளை களுக்கு இரவில் படுக்கைக்கு செல்லும்முன்னர்தங்கள்பிள்ளைகள் இந்த இறைவேண்டலை செய்ய கற்றுத் தருவார்கள். அவ்வாறே மரணத்தருவாயிலும் இந்த இறைவேண்டலைச் செய் யும் வழக்கும் இருந்துள்ளது. திருப்பாடலில் 31:5 ல் கூறிய வார்த்தையை தான் ஆண்டவர் சிலுவையிலே ஏழாம் வார்த்தையாக முழங்கினார்.
இதே வழியில் தான் ஸ்தேவான் (Stephen) தனது ஆவியை கடவு ளிடம் ஒப்படைத்தார் (திருத்தூதர் பணிகள் 7: 59,60).
1. எப்பொழுது இயேசு தனது உயிரை ஒப்படைத்தார்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!. ஆண்டவர் எல்லாவற்றை யும் நிறைவேற்றின பிறகு, அதா வதுகடவுளுக்கும்,மானுடத்திற்கும் இடையே இருந்த தடை சுவர் தகர் க்கப்பட்டது.அதன் அடையாளமே எருசலேம் கோயிலில் திரைச் சீலை இரண்டாய் கிழிந்தது. தூய திருத்தலும் காணக்கூடாதபடி அது மறைக்கப்பட்டிருந்தது, இப்பொ ழுது அது விலக்கப்பட்டது. கடவுளு க்கும் மனிதனுக்கும் இடையே மீண்டும் உறவு புதுப்பிக்கப்பட்டு விட்டது. அப்பொழுது சூரியன் தன் ஒளியை தரவில்லை. எங்கும் இருள் சூழ்ந்தது. ஆண்டவரின் படைப்புகளில் ஒன்றான சூரியன் தன்னை படைத்தவர் படும் பாடு களை, வேதனைகளை காண சகி க்காமல் கண்களை மூடி கொண் டதால் ஏற்பட்ட இருள். ஆனால் ஒன்று, எகிப்தில் விடுதலைக்கு முன்னர் இருள் ஏற்பட்டது. அது இஸ்ரேல் மக்களின் கடவுளின் ஆற்றலை வெளி ப்படுத்து வதற்கும், எகிப்தின் கடவுள் சூரியன். அந்த சூரியனையே ஒளி கொடுக்காமல் தடை செய்ததும், தங்கள் கடவுள் ஆற்றலை மோசே வெளிப்படுத்தினார். அந்த விடுதலைக்கு முன்னர் ஓர் இருள், இங்கே இயேசுவின் வழியே கிடைக்கும் மீட்புக்கு முன்பு ஓர் இருள்.
2. எதை ஒப்படைத்தார்?
அன்பானவர்களே! இயேசு ஒப்படைத்தது திருமுழுக்கின் போது பெற்றுக்கொண்ட தூய ஆவியல்ல. மாறாக, படைப்பின் பொழுது கடவுள் மானுடத்தின் நாசியில் தந்தாரே "உயிர்"அந்த உயிர் கடவுளுக்கு சொந்தமானது. வாழ்வின் ஆதாரம் கடவுளே என
தன் உயிரை ஒப்படைத்தார். மத்தேயும், மாற்கும் "உயிர்விட்டார்" என்று எழுதுகின்றனர். ஆனால் லூக்காவும், யோவானும் "ஒப்படை த்தார்" என்று எழுதுகின்றனர். "ஒப்படைத்தல்" என்பது மீண்டும் பெற்றுக்கொள்ளுதல் என்ற நம்பிக்கையுடன் ஒப்படைத்தல். உயிர்த்தெழுதலுக்கு ஆதார மாகவே உயிரை, இயேசு கடவு ளிடம் ஒப்படைத்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழ செய்தார். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், இவ்வுயிரை பெறுகிறோம் எனில் கிறிஸ்து நம்மில் வாழ்கிறார் என்ற பொருள்.
3. மகா சத்தமாய்:
அன்பான இறை மக்களே! நமது
ஆண்டவர் சிலுவையில் மகா சத்தமாக நான்காம், ஏழாம் வார்த்
தையை மட்டுமே உரக்க சத்தமாக
கத்தியுள்ளார். தன்னை சிலுவை யில் அறைந்த பிலாத்துவே, ஏரோதே, பிரதான ஆசாரியனே,
காய்பாவே, அன்னாவே உங்கள்
காதுகளில் கேட்கட்டும் என்
உயிரை என் தந்தையிடம் ஒப்படைக்கிறேன் என வெற்றி
முழக்கத்துடன் கத்தினார்.
ஆண்டவரே! முழு இருதயத்தின்
உயிரை உமது கைகளில் ஒப்புவிக்க அருள் தாரும். ஆமென்.
Prof Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Comments
Post a Comment