புனித வெள்ளி. Good Friday. சிலுவையின் முதலாம் திருமொழி. சிலுவையும் மன்னிக்கும் உரிமையும். (129)The Cross and the Right to forgive. லூக்கா 23: 32-36.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவர் சிலுவையில்  மொழிந்த ஒன்றாம் திரு மொழி "தந்தையேஇவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது இன்னவென்று இவர் களுக்கு தெரியவில்லை" என்ற வார்த்தையை ஆண்டவர் ஜெபத் தோடுதந்தையிடம்வேண்டுகிறார்.
இந்த வார்த்தை வேதனை, வலி,
இரத்தம் சிந்துதல் மத்தியிலும் தன் இறைப்பணியை ஆற்றும் விதமாக  வேண்டுகிறார்.
1. தந்தை, மகன் உறவு.
 இந்த முதலாம் வார்த்தையில் ஆண்டவருக்கும் தந்தைக்குமான உறவை மிக ஆழமாக வெளிப் படுத்துகிறார்.யோவான் நற்செய் தியில் தந்தை என்ற சொல் 84 முறை வருகிறது. ஏழு வார்த்தை யில் மூன்றுவார்த்தைதந்தையை  
குறிக்கிறது. இயேசுவும், தந்தை யும் இனைந்தே இருந்தனர்.
தன் திருப்பணியை துவங்குவத ற்கு முன்பு 40 நாள் பாலைவனத் தில் தந்தையுடன் இறை வேண்
டலில் இருந்தார்.இறை வேண்ட
லில் ஆண்டவர் ஒருமுறை கூட
கடவுளே என இறைவேண்டலை
தொடங்கவோமுடிக்கவோஇல்லை. அனைத்து இறை வேண்டலும் தந்தை, மகன் என்ற உறவே இருந்
தது.
2. இவர்களை:மன்னியும்.
 அன்பானவர்களே ஆண்டவர் இவர்களை மன்னியும் என்கிறார் யார் இவர்கள்? யாரெல்லாம் ஆண்டவரை சிலுவை சுமக்க காரணமாய் இருந்தார்களோ  அவர்கள் அனைவரையும் ஆண்டவர் "இவர்கள்" என்கிறார் முதலாவது ரோம ஆளுநரான பிலாத்து,  ரோமர்கள்,யூத மதத் தலைவர்கள்,பரியாசக்காரர்கள், பரிசேயர்கள், ஆசாரியர்கள் ஏரோ தியர்கள், சனகரிம் சங்கத்தினர், தான்வளர்ந்த ஊரான நாசரேத்தர்,(லூக்கா 4:29), இன்னும் பலர்
இந்த இவர்களில் அடங்குவர்.
3.மன்னியும்;
அன்பானவர்களே! ஆண்டவரின்
அருட்பணியே மன்னிப்பு. மனிதன்
அவர் வழியில் மன்னிக்கவும்,
மறக்கவும் வேண்டும். ஏனேனில்,
தன்னை சிலுவையில் அறைந்த வர்களையும் இயேசு நேசித்ததி னால், அவர்களை மன்னிக்கு மாறு பரமபிதாவிடம் வேண்டுதல் செய்கிறார். Forgiveness is the image
of God.மன்னிப்பு கடவுளின் சாயல். தவறு செய்வது மனித
இயல்பு, மன்னிப்பது கடவுளின்
செயல் To Err is human, to forgive is divine. கடவுள் பேதுருவிடம் ஏழு
எழுபது முறை மன்னிக்க சொன் னார். இயேசு தன் வாழ் நாளில்
பகைவர்களை மன்னிக்கவும், அன்பு செலுத்தவும், அவர்களுக் காக இறைவேண்டல் செய்யவும்
கற்றுக் கொடுத்தார்.மன்னிப்பு
ஒப்புரவாகுதலின் அடையாளம்.
Forgiveness is the symbol of Reconciliation. மன்னிப்பு இல்லை யேல் ஒப்புரவாகுதல் இல்லை.
மன்னிப்பு கடவுளின் சாயல்.அச்
செயலைப் பெற்று வாழ்வதே
நம் தூய கடமையாகும்.
4. தாங்கள் செய்வது என்னவெ
ன்று தெரியவில்லை.
அன்பானவர்களே! ஆண்டவர்
அன்பே வடிவம் ஆனாவர்.எனவே
தான், தமக்கு தீங்கு செய்வோரை
அறியாமல்செய்கிறார்கள்,எனவே, மன்னியும் தந்தையே என வேண்டுகிறார்.  இழந்து போன தைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்"என்றுசொன்னார். (லூக்கா நற்செய்தி 19:10)
அனைவருக்கும் மன்னிப்பு என்பது, ஆண்டவரின் செயலாகும்
அறியாமை, வேண்டுமென்றே அல்லது இல்லாவிட்டாலும், தீமை க்கு மன்னிப்பு இல்லை என்றா லும், அதற்காக - அல்லது வேறு எந்த பாவத்திற்காகவும் அவர்கள் நரகத்தில்தள்ளப்படுவதைகிறித்து விரும்பவில்லை. அவர்களுக் காக அவர் விரும்பியது என்ன வென்றால்: மன்னிப்பு -அதனுடன், நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் அவ ருடன்என்றென்றும்பரலோகத்தில் ஒரு இடம். இப்போது, ​​அத்தகைய தருணத்தில் நாம் பேசியிருக்க வேண்டிய பிரார்த்தனையா அல்லது நமக்கு இருந்திருக்கும் ஆசையா? ஒருவேளை இல்லை. ஆனால் பாவிகளின் மீது கிறிஸ் துவின் அன்பு எல்லையற்றது, மேலும் அவர் தனது மோசமான எதிரிகளின் இரட்சிப்பை விரும்பினார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எதற்காக சிலுவை யில் இருந்தார்: விரும்பத்தக்க நபர்களுக்காகவோ அல்லது அவர்கள் செய்த தவறான காரியங்களுக்கு "நல்ல சாக்கு ப்போக்கு"உள்ளவர்களுக்காகவோ அல்ல, அனைத்து உலகத் தின் பாவங்களுக்காகவும் செலுத்த வேண்டும். அவர் அங்கு தொங்குவது, இரத்தப்போக்கு மற்றும் துன்பம், கடமை அல்லது பலியைப் பற்றியது அல்ல, ஆனால்கருணை மற்றும் கரு ணை பற்றியது: கடவுளின் தகுதி யற்ற அன்பு மற்றும் தயவு, அவர் தனது மகனை எல்லா மக்களுக் காகவும் இறக்க, அவர்களின் பாவங்களுக்கு பரிகார பலியாக அனுப்பினார்.எனவே, அவர்
மன்னிக்க வேண்டுகிறார்.


Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 






Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.