CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு
க்கும் இயேசு கிறித்துவின் இனி
ய நாமத்தில் வாழ்த்துக்கள். 
இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம்
தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24
பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது.
இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 
4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ வில் நடைபெற்ற சர்வதேச மிஷனரி மாநாட்டைத் தொடர்ந்து, தேவாலயங்களுக்கிடையில் கூட்டுறவு மற்றும் ஒன்றியத்திற்கு இன்னும் அதிக உத்வேகம் கொடுக்கப்பட்டது.இன்று இருக் கும் தென்னிந்திய திருச்சபை யானது, ரெவ். வேதம் சாண்டியா கோவின் விடாமுயற்சி மற்றும் உறுதியான முயற்சிகளால் உருவானது,அவர் நீண்ட காலமாக SIUC, தென்னிந்திய ஐக்கிய தேவாலயங்களுக்கு தலைமை தாங்கினார், பின்னர் ரெவ. வி சாண்டியாகோ, மற்றும் பிஷப் அசரியா (Dornakkal) தென்னிந்திய திருச்சபையின் முதல் பேராயர் ஆவார். (He was from Anglican Church)ஆகியோரின் கூட்டு முயற்சியால் தென்னிந்திய திருச்சபை ஆனது.


கிறிஸ்தவ இல்லங்களில் பிறக் கும் குழந்தைகளுக்கு குழந்தை திருமுழுக்கு அளிக்கும் முறையை CSI நடைமுறைப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு, விசுவாசிகளின் (அல்லது வயது வந்தோர்) திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. ஞானஸ்நானம் பெற்ற குழந்தைகள் தேவாலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
 ஆரம்பத்தில் ஆண்களை மட்டுமே ஊழியத்திற்கு நியமிக்க முடியும். ஆனால் ஊழியத்தில் பெண்க ளின் பங்கைக் கருத்தில் கொண்டு, பெண்களையும் நியம னம் செய்வதற்கு ஆதரவாக தேவாலயம் முடிவெடுக்க வழி வகுத்தது. 1960 இல் பெண்களை டீக்கன்களாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டு முதல், பெண்களும்
ஆயர்களாகும் நடைமுறை வந்தது.
ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு பிஷப் உள்ளார். ஒரு மறை மாவட்ட கவுன்சில், செயலில் உள்ள அனைத்து பிரஸ்பைட்டர் கள் மற்றும் சபைகளின் சாதாரண பிரதிநிதிகள் மற்றும் பிஷப் தலை மையில், முழு தேவாலயத்திற்கும் கொள்கை உருவாக்கும் குழுவை உருவாக்குகிறது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. ஆயர், பிஷப், மாடரேட் டர் என்று மூன்றடுக்கு அமைப் பாக செயல்படுகிறார்கள். மேலும் 
இவர்களின்  பதவி காலங்கள்
தற்சமயம் நீதி மன்றத்தில் இருக்கிறது. மிக வருத்தமான செயலாகும். CSIயின் தலைமை யகம் சென்னையில் உள்ளது.
இறையியல் கல்வி பயிற்சி:
தென்னிந்திய திருச்சபையானது தென்னிந்தியாவில் உள்ள ஐந்து இறையியல் கல்லூரிகள், ஐக்கிய இறையியல் கல்லூரி, பெங்களூர், செகந்திராபாத்தில் உள்ள ஆந்திர கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மதுரையில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி, திருவனந் தபுரத்தில் உள்ள கேரள ஐக்கிய இறையியல் கல்லூரி மற்றும் மங்களூரில் உள்ள கர்நாடக இறையியல் கல்லூரிகள் ஆயர்களுக்கான சிறப்பான இறைகல்வி வழங்குகிறது.  
தென்னிந்திய தேவாலயம் (CSI) ஆரம்பத்திலிருந்தே உலக தேவாலய கவுன்சிலில் உறுப்பினராக இருந்து வருகிறது, மேலும் அதன் பல முக்கியமான குழுக்கள் மற்றும் கமிஷன்களில் குறிப்பாக மத்திய குழு மற்றும்  நம்பிக்கை மற்றும் ஒழுங்கு ஆணையம். உலக சீர்திருத்த கூட்டணி, பரந்த எபிஸ்கோபல் பெல்லோஷிப், லாம்பெத் மாநாடு போன்றவற்றிலும் CSI பங்கேற் கிறது.
Motto:
"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபை யின் விருதுவாக்காகவும் உள்ளது.
தென்னிந்தியத் திருச்சபையின் முத்திரை (லோகோ) இந்திய பாரம்பரியத்தை நினைவுறுத்தும் வகையில் தாமரையோடு இணைந்த சிலுவையுடன் காணப்படுகிறது. 
தென்னிந்தியத் திருச்சபை
(Church of South India)
தென் இந்திய திருச்சபையின் முத்திரை.
இது கடவுள் மற்றும் மக்களின் ஒற்றுமை வெளிப்பாடு ஆகும்.

Sacraments: அருட்சாதனங்கள்:

நம் அன்பின் ஆண்டவர், திருமுக்கு, மற்றும் கடைசி திரு
விருந்து என்ற அருட்சாதனங் களில் நேரிடையாக பங்கு பெற்
றவர். இவற்றில் சீடர்களின்
கால்களை கழிவிய தூய்மை
சடங்கை நம் CSI ஏன் பின்பற்ற
வில்லை, (யோவான் 13:4-10)
என்பது Million Dollar Question. 
1. எழுந்து கட்டுவோம் வாருங்கள்: Come, Let us rise up and build. நெகேமியா 2:17-20.
அன்பின் இறை மக்களே! நேகேமியா 5ம் நூற்றாண்டின் யூத
தலைவர்.இவர் பாரசீக தலை நகரான சூசாவின் அரசரான அர்தக்செர்க்சஸுக்கு பானபாத்திரம் தாங்கிச் சென்ற யூத நாட்டிலிருந்து கடத்தப்பட்ட நெகேமியாவை நான் ஒரு பேராயராக ஒப்பீடு செய்ய விரும்புகிறேன். ஏனேனில், ஜெருசலேமின் உடைந்த சுவர்கள் மற்றும் வாயில்கள் உட்பட அதன் மோசமான நிலை பற்றிய செய்தி களை நெகேமியா பெறுகிறார். அவரின் உள்ளம் கொதிக்கிறது.
மனம் வாடி இருந்தது, வேதனை யை வெளிப்படுத்தியது. ஒரு தலைவனாக, இரண்டாம் ஆலயம் மீண்டும் கட்டப்பட அவர் எருசலேமுக்குத் திரும்பவும், அதன் சுவர்கள் மற்றும் வாயில்க ளை மீண்டும் கட்டுவதை மேற்பார் வையிடவும் அரசர் அர்தக்செர்க் ஸால் அனுமதி பெறுகிறார். (நெகேமியா 2:17-20), 
எருசலேம் நகரை கட்டி எழுப்ப "வாருங்கள், எழுந்து கட்டுவோம்"
என மக்களை அழைக்கிறார்.. நகரின் சுவர்கள் அழிக்கப்பட்டு வாயில்கள் எரிக்கப்பட்ட நிலையில் இடிந்து கிடப்பதை அவர் விவரிக்கிறார். இந்த உணர்தல், நகரின் பாதுகாப்பை மீண்டும் கட்டமைக்கும் முயற்சி யில் சேர மக்களை அழைக்க தூண்டுகிறது.நெகேமியா தனது கடவுளின் கரம் தன் மீது இருப்ப தைக் கண்டதாகவும், அரசனிடமி ருந்து சாதகமான வார்த்தை களைப் பெற்றதாகவும் மக்களு டன் பகிர்ந்து கொள்கிறார். தனக்கு ஏற்பட்ட உத்வேகம் மற்றும் ஊக்கம்,  கடவுளின் வழிகாட்டு தலும், அரசரின் ஆதரவும், மக்களிடையே நம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்தியதே இந்தத் திட்டத்தை மேற்கொள் வதற்கான தனது திறனைக் காரணம் என்று அவர் கூறுகிறார்.
பிராந்திய தலைவர்கள், நெகேமி யாவையும் மக்களின் முயற்சிக ளையும் கேலி செய்து கேவலப் படுத்துகிறார்கள். ஒரு நல்ல
செயல் செய்யும் போது எதிர்ப்பு,
தடைகள் வரும். இதை தகர்த் தெரிந்து சிறப்பாக செய்வதே ஒரு
தலைவனின் தலைமை பண் பாகும்.பரலோகத்தின் கடவுள் மீது தனது நம்பிக்கையை உறுதிப்ப டுத்துகிறார். கடவுள் அவர்களின் வேலையை செழிக்கச் செய்வார் என்றும், அவர்களை எதிர்ப்பவர் களுக்கு ஜெருசலேமின் மறுசீரமைப்பில் பங்கு இல்லை என்றும் அவர் அறிவித்தார்.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! எவ்வாறு எருசலேம் மறு
சீரமைப்பை நெகேமியா மூலம்
பெறுகிறதோ;, அவ்வாறே, திருச்
சபைகளும், பேராயங்களும்
அதன் தலைவர்களும் மக்களுக்கான, கடவுளுக்கு ஏற்ற
வாறு சீரமைத்து, பணியாற் றுவதே தென்னிந்திய திருச்சபை
நிறுவிய நன்னாளின் நோக்கமாக
இருக்க வேண்டும்.

2.கடவுளின் அன்பே இறை பணியாளர்களின் தகுதி யாகும். The love of God is the qualification for The Servantof God.. ரோமர் 8;31-39
அன்பின் இறை மக்களே! கடவுள் மீதும், திருச்சபை மக்கள்மீதும்
கொள்ளும் அன்பே இறைபணி
யாற்றும் இறைபணியாளர்களின்
அடிப்படை தகுதியாகும். திரு தூதர் பவுல் அடிகளார் உரோம
திருச்சபையினருக்கு இத்திருமு
கத்தை எழுதினார். அவர், கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? 
என கேட்கிறார். திருச்சபை தலைவர்களுக்கும், கிறித்த வராகிய நமக்கும் எதிராளிகள்
யார்? என்பதை சிந்திக்க வேண்டும்."தீதும் நன்றும் பிறர் தர வாரா! '" என கணியன் பூங்குன்ற
னாரின் கூற்றாகும்.நம் செயல்
களே எதிராளிகளை உறுவாக்கு
கிறது என்பதுஉண்மை.கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை யார் பதவி நீக்கம் செய்வார்கள்? கடவுள் தான் குற்றமற்றவர். கண்டனம் செய்பவர் யார்? இயேசு கிறிஸ்து மரித்தவர், மாறாக, மரித்தோரிலிருந்து எழுப்பப்ப ட்டவர், கடவுளின் வலது பாரி சத்தில் இருக்கிறார், அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவர் யார்? சோதனை, அல்லது துன்பம், அல்லது துன்புறுத்துதல், அல்லது பஞ்சம், அல்லது நிர்வாணமா, அல்லது ஆபத்து, அல்லது வாள்? அது எழுதப்பட்டிருப்பதைப் போல, "உன் பொருட்டு நாங்கள் நாள் முழுவதும் கொல்லப்படுகிறோம்; நாங்கள் கொல்லப்படுவதற்கு ஆடுகளாகக் கருதப்படுகிறோம்." ஆனால், நம்மை நேசித்தவர் மூலம் இவை அனைத்திலும் நாம் வெற்றியாளர்களாக இருக்கி றோம். ஏனென்றால், மரணமோ, வாழ்வோ, தேவதைகளோ, அதிபர்களோ, தற்போதைய யுகமோ, வரப்போகும் யுகமோ, சக்திகளோ, உயரமோ, ஆழமோ, வேறு எந்தப் படைப்போ நம்மை ஆண்டவரின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.என
பவுல் அடிகளார் கூறுகிறார். அப்படி இருக்க, ஆண்டவரின் பணியாளர்களாக அழைக்கப் பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட நம் திருச்சபை ஊழியர்கள் அன்பின்
அடிப்படையில், அன்பாக இருக்க வேணடும், பழிவாங்குதல் ஊழியரின் பணியல்ல. ஒரு மனிதன் (ஆபிரகாம்) கடவுளுக்கு விசுவாசமாக இருப்பதில் உலகின் மிகப்பெரிய மனித உதாரணத்தை நினைத்துப் பாருங்கள்; கடவுள் உங்களுக்கு உண்மையாக இருப்பது போன்றது." ஆபிரகாம் கடவுளுக்கு எவ்வளவு உண்மையுள்ளவராய் இருந்தாரோ, அதுபோலவே அவர் தனது பிரியமான மகனை  தியாகம் செய்யத் தயாராயிருந் தாரே, அதேபோன்று கடவுள் மனிதர்களுக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர்களுக்காகத் தம்முடைய ஒரே மகனைப் பலியிடத் தயாராக இருக்கிறார். எதற்கும் அப்படிப்பட்ட விசுவாசத்தை நிச்சயம் நம்பலாம்.
ஜீவனும் மரணமும் நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியாது. வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவுடன் வாழ்கிறோம்; மரணத்தில் நாம் அவருடன் இறக்கிறோம்; நாம் அவரோடு இறப்பதால், நாமும் அவரோடு உயிர்த்தெழுகிறோம். மரணம், இதுவரை ஒரு பிரிவாக இருந்து, அவரது அருகில் இருப்பதற்கான ஒரு படி மட்டுமே; முடிவு அல்ல, ஆனால் "வானத்தில் உள்ள வாயில்" இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு வழிவகுக்கிறது.
ஒரு தலைவர் " தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம். 
(1 திமொத்தேயு 1:5) என திருதூதர்
பவுலடிகளார் கூற்று நம் தலைவர்
களுக்கும் பொருந்தும் அல்லவா?
3.திருச்சபையின் உன்னத நோக்கம் எது? What is the prime duty of the Church? லூக்கா 9:1-6.
கிறித்துவின் அன்பான இறை
மக்களே! நம் ஆண்டவர், கடவுளின் அரசை குறித்து  பிரசங்கிக்கவும், ( Preaching Ministry) குணமடையவும், உடலிலும் உள்ளத்திலும் மனிதர்களைக் காப்பாற்றுவதற் காக இயேசு முதலில் தம்முடைய 12 சீடர்களை அனுப்பினார்(Medical Ministry) என்பதைத் நம் திருச்சபை தலைவர்கள் நன்கு புரிந்துள் ளனர். அன்பானவர்களே! நற்
செய்தி பணியானது, ஆண்ட வரின் விருப்ப படி இந்தியாவில்
விரிவாக்கம் செய்வதில் மிகவும்
பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கிறித்தவ மக்கள் இந்தியாவில் (2024) 3,3 கோடி கிறித்தவர்கள் அதாவது (33 மில்லியன்) இது, மொத்த மக்கள் தொகையில் 2.35% ஆகும்.எனவே, நம் நற்செய்திபணியை முழுமூச் சுடன் செயல்படுத்த நம் திருச்சபை தலைவர்கள், பேராயங்
கள் இன்னும் உழைக்க வேண்டும்.
ஆண்டவரின் உலக வருகையே
விண்ணரசுக்கானது. இதை செயலாக்கம் செய்யாமல்
நாம் காலத்தை கழிக்க முடியாது . 78 ஆண்டுகள் நம் தென்
னிந்திய திருச்சபை  உருவாக்கம்
பெற்று இணைந்து பணியாற்று கிறோம்.அவ்வாறே, மருத்துவ
பணிகள் மிகவும் பின்னடைவு
கண்டுள்ளது. இதற்காக பல
முயற்சிகள் நம் தலைவர்கள்
எடுத்துவருகின்றனர்.நம் மருத்துவ மனைகளில் பணி
செய்து ஓய்வு பெற்றவர்களுக்கும்
பணிகொடை பல ஆண்டுகளாக தரப்படாமல் இருப்பதும்,தற்போது பணியில் உள்ளவர்களுக்காக வழங்கப்படும் ஊதியம் கொடுக்க
முடியாத சூழலில் இருப்பதும்
நம் குறைபாடுகளாகும்.ஒன்றை
நாம் கவணிக்க வேண்டும். நம்
ஆண்டவர் இயேசு, இந்த வேலையைச் செய்வதற்கான அதிகாரத்தையும், அதிகாரத்தையும் ஒப்படைக் காமல் வேலையை ஒப்படைக்க வில்லை என்பதையும் நாம்
நற்செய்தி வாயிலாக புரிந்து
கொள்கிறோம்.ஆண்டவர்,இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிகாரத்து டன் நல்லது செய்ய; முழு நபரையும் ஆசீர்வதிக்கவும், நோயாளிகளைக் குணப்படுத் தவும் சீடர்களுக்கு அதிகாரம்
கொடுத்தார். அவ்வாறே, நம்
திருச்சபையில் அதிகாரம்
பெற்றவர்கள் செயல்பட வேண்
டும் என்பதே, இந்த நன்னாளின்
இறை செய்தியாகும்.  
பிரதம பேராயரும், பேராயர் களும் எப்படி இருக்க வேண்டும்?
1.பண ஆசை இல்லா பேராயர் :
"பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினி ன்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். 
(1 திமொத்தேயு 6:10)பண ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை எனக்
கில்லை என்று சொல்லிலும், செயலிலும் காட்டியவர் முன்னாள்
பேராயர் மா.அசரியா ஐயா 
அவர்கள்.
2. பணம் வாங்கி கொண்டு பதவி தருபவர்களை உடனே பதவி நீக்கும் அதிகாரம் நிர்வாக குழுவி ற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும்  வழங்கப்பட வேண்டும்.
3. அவசியமின்றி, சுய நலத்திற் காக நீதிமன்றங்களுக்கு செல்ல 
பேராயத்தின் பணம் பயன்படுத்
தக் கூடாது.சொந்த பணத்தை செலவு செய்யவேண்டும். இவற்றில், திருச்சபை பாதுகாப்பு போன்ற நல்ல செயல்களுக்கு விளக்களிப்பு அளிக்கப்பட வேண்டும். 
4. ஒழுக்க கேடான செயல் புரிவோர் பதவி பறிக்கவேண்டும்.
5. ஆலயங்கள் புதிதாக, புதிய
இடங்களில் கட்டி, புதிதாக உறுப்பினர்களை திருமுழுக்கு மூலம் சேர்க்கும் ஆயர்களுக்கு, சிறப்பு ஊதியம் Special Allowance வழங்கப்பட வேண்டும். Accountability is very important in Missionary.
6. ஒவ்வொரு பேராயத்தில்
இயங்கும் நிருவனங்களுக்கு
ஆற்றல்மிக்க தலைவர்களை 
கொண்டு மறு சீரமைப்பு செய்ய
வேண்டும்.Reconstruction is a scientific approach, and a continuous 
process  
7. பேராய சொத்துக்களை  நேர்மையாக பராமரிக்க குழு 
அமைக்க வேண்டும்.
8. கிராமப்புற மாணவர்களின்
கல்வி, மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, பேராயம்
நடத்தும் ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் படிக்கும் அனைத்து
மாணவர்களுக்கு " பேராய
கல்வி உதவித்தொகை வழங்க
வேண்டும்.It will help to prevent
deployments of teachers and closure
of schools 
9. வேலை வாய்ப்பில் பதிவின்,
மற்றும் வயது, குடும்ப சூழ்நிலை, தகுதி, அனுபவம் ஆகியவைகளை
 கருத்தில் கொண்டு (without nepotism and favoritism) பணி
நியமனம் வழங்கப்பட வேண்டும்.
10. அனைத்திலும் வெளிப்படை
தன்மை Transparency மிக அவசியம்.
My Appreciations to;
1. நம் பேராயத்தில் செயல்படும்
அனைத்து சீரமைப்பு (Reformation)
குழுவினர்களின் நற்பணிகளு க்கு என் பாராட்டுகள், it's my personal request to the group members not to insult any one personally, but it is our duty to bring
their corruption to the public domain 
2. நம் பேராயத்தில் செயல்படும்
சட்ட குழுவினருக்கும்( legal team) 
அவர்களின் சிறப்பான போராட் டத்தின் விளைவாக மத்தியாஸ்
கல்லறை முழுமையாக மீட்கப்
பட்டது. இதற்காக போராடிய, 
அனைவரையும், பேராயத்தை
யும், திருச்சபை போராளிகளை
யும், சிறை சென்ற முன்னோடிக
ளையும் பாராட்டுகிறேன். ஆண்டவர் உங்களனைவரை
யும் காப்பாராக.
3. நம் பேராயத்தில் தற்போது
இருக்கும் மதிப்பிற்குறிய
உப தலைவர், செயலர், பொருளர்
அவர்களின் நேர்மை, அற்பணிப்பு
மற்றும் அறவனைத்து செல்லும்
மனப்பாங்கிற்கும், முக்கியமாக
ஊழலற்ற பேராயமாக மாற்ற
பாடுபடும் இவர்களை மிகவும்
பாராட்டுகிறேன்.
இத்தகைய திருச்சபை முன்னேற்றங்களை எதிர்காலத் திலும், இப்போதும் எடுத்துச்
செல்வோமானால், தென்னிந்திய
திருச்சபை நிறுவியதின் உன்னத 
நோக்கம் நிறைவேறும். அவ்வாறு,
நிறைவேற இனைந்து செயல்படுவோம். ஆண்டவர்
நம்மை இதற்காக தகுதி படைப்பாராக! ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 







              (LIFE magazine)
Inauguration procession of Church of South India. Photo by Mark Kauffman (LIFE magazine)

Inauguration procession of Church of South India. Photo by Mark Kauffman 27/09/1947,

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.