Holy Monday. Cross and Rejection. சிலுவையும், புறக்கணிப்பும். Rejection in Family. குடும்பத்தில் புறக்கணிப்பு (125). மத்தேயு: 21:23-32.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
இறை மக்களே! இந்த புனித வாரத்தில் நம் எண்ணங்களும்,
செயல்களும் சிலுவை தியான த்தின் தலைப்பாக "சிலுவையும், புறக்கணிப்பும் " முலம் புனித மடைய ஆண்டவர் அனுதினமும் வழி நடத்துவாரகா.இவற்றில் தூய திங்கள் தியான தலைப்பாக குடும்பத்தில் புறக்கணிப்பு (Rejection in Family.) என்ற தலைப் பில் சிந்திப்போம். புறக்கணிப்பு என்பது ஒவ்வொறு மனிதனுக்கும்
தன் வாழ்நாளில் எதாவது வழியில் சந்தித்திருக்க வேண் டும். நாம் நம்பியவர்களே நம்மை
புறக்கணிப்பர். ஆனால், நமக்கு என்றும் கைவிடா கர்த்தர் உண்டு. "என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். " திருப் பாடல் கள்(சங்கீதங்கள்) 27:10) இதுவே,
நம் நம்பிக்கை.உலகம் சுய நலமா
னது. பணம், பொருள் உள்ளோரை
ஏற்றுக் கொள்ளும். ஆண்டவரா கிய இயேசு கிறித்து, " அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
(யோவான் நற்செய்தி 1:11) எனவே, ஆண்டவரையே ஏற்றுக்
கொள்ளாத உலகத்தில் நாம்
எம்மாத்திரம்.
குடும்பம் கடவுளின் ஈவு. அன்பி னால் கட்டப்பட்டதே குடும்பம்.
பலர் தன் சொந்த குடும்ப மக்க ளால் புறக்கணிக்கப்படுவது
மிகவும் வேதனை. ஆண்டவரை
அவரின் சொந்த சகோதரர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. "ஏனெனில் அவருடைய சகோதர ர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. "
(யோவான் நற்செய்தி 7:5)
யோசேப் தன் சொந்த சகோதரர்
களால் புறக்கணிக்கப்பட்டார்.
அதுவே, அவருக்கு வெற்றியாக
மாறியது.
புறக்கணிக்கப்படுகிற அனைவ
ருக்கும் ஆண்டவர் அருளும்
நம்பிக்கை வார்த்தை,""உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(யோவான் நற்செய்தி 15:18)
உலகம் உங்களை புறக்கணிக்க
ன்ற போது, " தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பேதள்ளிவிடமாட்டேன்.
(யோவான் நற்செய்தி 6:37) ஆண்டவரிடம் வாருங்கள் அவர்
உங்களை என்றும் ஏற்றுக்
கொள்வார்.
1. சிலுவையும், புறக்கணிப்பும். Cross and Rejection.
அன்பின் இறை மக்களே! நம் ஆண்டவர் இயேசு தன் சீடரான யூதாஸால் 30 வெள்ளிக் காசுக் காக புறக்கணிக்கப்பட்டார்.
இயேசுவுக்கு எதிராக எந்த சாட்சி களும் இல்லாத போதிலும் யூத தலைவர்கள் தங்கள் அதிகார த்தை பயன்படுத்தி இயேசுவுக்கு மரண தண்டனையை பெற்றுக் கொடுத்தனர்.மத தலைவர்களால்
புறக்கணிக்கப்பட்டார்.
தீர்ப்பிடப்பட்ட ஆளுநர் மாளிகை யில் இருந்து சிலுவையில் அறை யப்பட்ட கல்வாரி மலை வரை பாரமான சிலுவையோடு இயேசு மேற்கொண்ட பயணத்தை சிலுவைப் பயணம் என நாம் அழைக்கின்றோம். இப்பயண த்தில் தன் சீடர்களாலும், தன்னால்
சுகம் பெற்ற மக்கள் யாரும் தன்னை கண்டுகொள்ளாமல்
புறக்கணிக்க பட்டது, வலியிலும்,
பெரிய வேதனை.
சிலுவைப் பயணத்தில் இயேசு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்பங்களை அனுபவித்தார். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டு அதை சுத்தியலால் அடித்தார்கள் அந்த முள்முடி இயேசுவின் தலையை துளைத்துக் கொண்டு சென்று அவரது தலையோடு ஒட்டிக்கொண்டது. ஆனால் தன் தாய் மரியாளின் கல்வாரி பயணம் முழுவதும் இயேசுவோடு இருந்து தனது உடன் இருப்பால் இயேசுவிற்கு ஆறுதல் வழங்கி னார். தன் அன்பான சீடனான
யோவானின் உடன் பயணம் வழியிலும் கொஞ்சம் ஆறுதல்.
முன்பின் தெரியாத சீமோன் இயேசுவின் சிலுவையை சுமந்ததும் இயேசுவிற்கு சற்று இளைப்பாறுதலைபெற்றுக் கொடுத்தது. எருசலேம் பெண்க ளின் கண்ணீர் கலந்த மௌன வார்த்தைகளும் இயேசுவுக்கு கரடுமுரடான கல்வாரி பாதையில் ஆறுதலைத் தந்தது. நம் வாழ்விலும் சிலுவை பாடுகள்
உண்டு. அவற்றை தாங்கி பொறுமையுடன் முன்னேற அழை
க்கப்படுகிறோம்.
2. சிலுவை நாயகனும் கேள்வி களும். The Crusader and the Questions. மத்தேயு: 21:23-32.
அன்பின் இறை மக்களே! ஆண்ட
வரை பல கேள்விகள் அவரை
கேட்டுக் கொண்டே வந்தனர்.
மத்தேயுவின் நற்செய்தியில் எல்லா வகையான மக்களும் இயேசுவிடம் கேள்விகளைக் கேட் கிறார்கள், அவர்களின் கேள்விக ளும் இயேசுவின் பதில்களும் குறிப்பிடத்தக்கவை. திருமுழுக்கு யோவான் அவர்கள் ஆண்டவரை
பார்த்து," எதிர்பார்த்துக் கொண்டி ருந்தவர் நீர்தானா ?என்று கேட்கி றார் (மத்தேயு 11:2-3), நீ யூதர் களின் ராஜாவா என்று பிலாத்து கேட்கிறார் (27:11). பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், சதுசேயர் கள், தலைமைக் குருக்கள் மற்றும் மூப்பர்கள் இயேசுவை சிக்க வைக்க கேள்விகள் கேட்டார்கள்; அவரின் சீடர்கள்." அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று கேட்டார்கள்.
(மத்தேயு நற்செய்தி 18:1)நித்திய ஜீவனைப் பெற நாம் என்ன நற்செயல் செய்ய வேண்டும் (19:16), என கேட்டனர் நீங்கள் செய்யும் காரியங்களை யாரு டைய அதிகாரத்தால் செய்கிறீர் கள் (21:23).என்றும் கேட்டனர். பேதுரு "நான் எத்தனை முறை மன்னிக்கவேண்டும் (18:21) உனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டோம், எங்களுக்கு என்ன கிடைக்கும்?" (19:27).இப்படி கேட்கப்பட்டஎல்லாகேள்விகளுக்கும் ஆண்டவர், ஞானமாய் பதில் அளித்தார். இப்படி கேள்விகளை கேட்டவர்களுக்கு ஆண்டவர் கேட்ட கேள்வி;
இந்த 2 பேரில் யார் தந்தையின் விருப்பத்தை செய்தார்?
ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். தந்தை தன் முதல் மகனை அழைத்து, திராட் சைத் தோட்டத்தில் வேலைக்குச் செல்லும்படி கூறினார். அவர் "இல்லை" என்று கூறினார், ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு வேலைக்குச் சென்றார்.இத்தகைய முரன்பாடு கள் நம் குடும்பத்திலும்நடக்கிறது. அதனால், முதல் மகன் வேண்டாம் என்று சொன்னதால், இரண்டா வது மகனையும் அழைத்து அதையே சொன்னார். இரண்டா வது மகன் "ஆம்" என்று சொன் னான் ஆனால் வேலைக்குச் செல் லவில்லை.இதில் தன் தகப்ப னுடைய சித்தத்தைச் செய்தவன் “முதல்மகன்”. இவன் முக்கிய மாக மனந்திரும்பி மற்றும் கடவு ளின் சித்தத்தைச்செய்கிறான். முதலில் தன் தந்தையின் வேண்டுதலை புறக்கணித்தான் பிறகு மனம் மாறுகிறான். இயேசு அவர்களிடம் கூறினார்: "உண்மை யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், வரி வசூலிப்ப வர்களும் விபச்சாரிகளும் உங்க ளுக்கு முன்னால் கடவுளுடைய ராஜ்யத்திற்குப் போகிறார்கள்" ஏனெனில் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள் கடவுளின் ராஜ்யத்தில் இன்றி யமையாதது ஒருவரின் நிலை, அறிவு அல்லது அதிகாரம் கடவுளிடமிருந்து வந்தாலும் அல்ல, மாறாக ஒருவரின் மனமாற்றம் மற்றும் கடவுளின் சித்தத்தைச் செய்வது என்பதே ஆண்டவரின் கருத்து. அன்பானவர்களே! ஆண்டவரின்
சிலுவை பாட்டை நாம் மறக்காமல்
அவரோடு பயணிப்பது நம்
கடமையாகும்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.
திராட்சை தோட்டம்
Comments
Post a Comment