புனித வியாழன். Holy Thursday திருவிருந்து: இயேசுவை நினைவு கூறுதல் (128) Eucharist: The Remembering Jesus. விடு.பயண.12:1-17, திரு.பாடல் 116. 1 கொரிந்தி 11:23-34 மத்தேயு 26:17-30.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
இறைபணியாளர்களே! உங்க
அனைவருக்கும் இறை மைந்தன்
இயேசுவின் இனிய நாமத்தில்
வாழ்த்துக்கள். திருவிருந்து: இயேசுவை நினைவு கூறுதல்,
நற்கருணை (Eucharist) என்ற திருவிருந்து கிறித்தவர்களின் மிக முக்கிய அருட்சாதனம் ( சாக்க
ரமந்)ஆகும். நற்கருணை திரு விருந்து, இயேசு தனது இறுதி இரவுணவு வேளையில் வழங்கிய அறிவுரைகளுக்கு ஏற்ப கொண் டாடப்படுகிறது. இயேசுவின் சிலுவைப் பலியின் முன் அடை யாளமாக உருவாக்கப்பட்ட நற் கருணை பலி, அவரது திரு விருந் தையும் கல்வாரித் தியாகத்தை யும் நினைவுகூரும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது.திருவிருந்து திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.ஆண்டவரின் திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவுணவைக் (The Last Supper) குறிக்கிறது.
1.திருவிருந்தின் வரலாறு:
அன்பானவர்களே! விடு.பயணம் 12, (Exodus) படி, 430 ஆண்டு கால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந் து இஸ்ரேல் மக்களை கடவுள் அற்புதமாக மீட்பதில் இந்நிகழ்வு முன்வைக்கப்படுகிறது: ஒரு ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயதுகுட்டியாகஇருக்கவேண்டும். தேர்ந்தெடுப்பதுவெள்ளாடாகவோ செம்மறியாடாகவோஇருக்கலாம்.
அதன் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை நெருப்பிலே வாட்டி
புளிப்பற்ற அப்பத்தோடும், கசப்பு
கீரையோடும் அந்த இரவிலேயே உண்ண வேண்டும். மீதி வைக்க
கூடாது.நீங்கள்அதனைஉண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந் து, கையில் கோல் பிடித்து விரை வாக உண்ணுங்கள். இது "ஆண்ட வரின் பாஸ்கா ". இந்த ஆட்டுக்குட் டியும் புளிப்பில்லாத ரொட்டி உண வும் இஸ்ரவேலின் அடிமைத்தன த்திலிருந்து விடுபட்டதற்கான நிலையான அடையாளமாக மாறியது.
2.புதிய உடன்படிக்கை இரத்தத்தினால் எழுதப்பட்டது. The New Covenant is written in blood.1 கொரிந்தி 11:23-34.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
கிறித்துவின் புதிய உடன்படிக்கை
தூய பவுல் அடிகளார்; "அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத் தையும் எடுத்து, "இந்தக் கிண் ணம் என் இரத்தத்தால் நிலைப் படுத்தப்படும் புதிய உடன் படிக் ". நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
(1 கொரிந்தியர் 11:25)நீங்கள் இதைப் பருகும்போதெல்லாம், என்னைநினைவில்கொள்வதற் காக( In remembrance) இதைச் செய்யுங்கள்" என்றார். இது மிக முக்கியமானது. கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் எது வேண்டு மானாலும் மறந்துவிடலாம் ஆனால் ஆண்டவரின் சிலுவைப் பாட்டில் சிந்திய ரத்தத்தை மறக்கவே கூடாது.ஏனெனில், அது நம்மை மீட்பதற்காக. நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத் திரத்தில் பானம் பண்ணும் போ தெல்லாம், கர்த்தர் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக் கிறீர்கள். ஆண்டவரின் சிலுவை மரணத்தை அறிவிப்பது நம்மு டைய அனுதினக் கட்டளையாகும்.
அன்பர்களே! முழு புதிய ஏற்பாட் டில் உள்ள எந்தப் பகுதியும் இதை விட அதிக ஆர்வத்தை ஏற்படுத்த வில்லை. ஒன்று, இது தேவாலய த்தில் மிகவும் புனிதமான வழி பாடு ஆகும். இது கர்த்தருடைய சாக்ரமென்ட்; மற்றொன்று, கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம், நற்செய்திகளின் முந்தை யதை விட முந்தையது என்பதால், இது உண்மையில் இயேசுவின் எந்த வார்த்தையிலும் நாம் வைத் திருக்கும் முதல் பதிவு செய்யப் பட்டகணக்கு.***(கொரிந்தியர்க ளுக்கு பவுல் எழுதிய முதல் கடிதம், அனேகமாக கி.பி 53-54 இல் எபேசஸில் எழுதப்பட்டது.) It's written before the Gospels. இந்த புனித திருவிருந்தில் பங்கு பெரு
பவர் மிகுந்த விசுவாசத்துடனும், அன்புடனும் அவனது கைகளிலும் உதடுகளிலும், அது நினைவாற் றலுக்கு மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவுடனான வாழ்க்கைத் தொடர்பிற்கும், பாடுகளில் பங்கு பெரும்ஒருவழியாகும்.
ஒரு உடன்படிக்கை என்பது இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள உறவாகும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு பழைய உடன்படிக்கை இருந்தது. (Old Covenant) பழைய உறவு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, The old Covenant is based on the Law, the command ments. அதில் கடவுள் இஸ்ரவேல் மக்களைத் தேர்ந்தெடுத்து அணு கினார்.
ஆண்டவர் இயேசுவின் புதிய உடன்படிக்கை ஒரு புதிய உறவு மனிதனுக்கு திறக்கப்பட்டது, அது சட்டத்தின் மீது அல்ல, ஆனால் அன்பினை அடிப்படையாக கொண்டது. கிறிஸ்துவின் உயிர் இரத்தத்தைக் குறிக்கிறது. இது இல்லாமல் புதிய உடன்படிக்கை, கடவுளுடன் மனிதனின் புதிய உறவு, ஒருபோதும் சாத்தியமி ல்லை.கிறிஸ்துவின் உடல் என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் திருச்சபையைக் குறிக்கிறது.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்ட வருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.
(1 கொரிந்தியர் 11:26)ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல் லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். என
மனதில் நிறுத்தி, எனவே ஒவ் வொருவரும் தம்மையே சோதித் தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். (1 கொரிந்தியர் 11:28)
நான் உன்னை நேசித்தது போல ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்" என்ற புதிய கட்டளையைக் கொடுத்தார்.
3.திருவிருந்து: இயேசுவை நினைவு கூறுதல்.Eucharist: The Remembering Jesus. மத்தேயு 26:17-30.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திரு விருந்து என்ற புனித சாக்கிரமந்த். இயேசுவை நம் வாழ்நாள் வரையிலும் நினைவு கூறுகின்ற ஒரு நன்னாள் இது புனித வியாழன் என்றும் அழைக் கப்படுகிறது.
வியாழன் தினமாகிய இன்றைய நாள் இயேசுவின் வாழ்விலும் அவருடைய சீடர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்விலும் முக்கியமான நாள். இன்றுதான் உலகம் உள்ளளவும் தமது ஒப்பற்ற உடனிருப்பை உணர்த்தும் நற்கருணை என்னும் அருளடையாளத்தை இயேசு நிறுவினார். அந்த நற்கருணையைப் பொருளுணர்ந்து கொண்டாடவும், தந்தை இறைவனுக்கும் இத்தரணிவாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாக விளங்கவும் குருத்துவம் என்னும் அரிய அருள் அடையாளத்தை ஏற்படுத்தியதும் இந்த நாளில்தான். தாழ்ச்சியின் மாட்சியை இந்தத் தரணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவி, அன்புக் கட்டளையைக் கொடுத்ததும் இந்த நாளே.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, "நீர் பாஸ்கா விருந் துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்பு கிறீர்?" என்று கேட்டார்கள்.
,"நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல் லுங்கள்; "என்றார். இயேசு தங்க களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்து க்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டு கொண்டிருந்த பொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.அவர்கள்மிகவும்வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார் கள். யூதாஸை ஆண்டவர் குறிப் பிட்டு சொன்னார். அவர் பாத்திர த்தை எடுத்து இது எனது உடன் படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப் படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளி ல்தான் நான் உங்களோடு திராட் சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான்உங்களுக்குச்சொல்கிறேன்" என்றார்.
இது உயிருள்ள நீங்காத நினை வுச்சின்னம்அதுதான்நற்கருணை!
நற்கருணையில்பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை! அதிகாரமும், அகங்காரமும், நான் என்ற தன்முனைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சி யின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும்.(A model of Humility) இதைத்தான் இயேசு இன்றுநமக்குவாழ்க்கைப்பாடமாக செய்முறைப் பயிற்சியாக செய்து காட்டுகின்றார்.நற்கருணை இயேசு கிறிஸ்துவை முழுமை யாகவும், நிறைவாகவும், பிரசன்ன ப்படுத்தும் அருளடையாளம்.இதை
பயத்துடனும், பக்தியுடனும் பங்கு
பெறுவதே நம் தலையாய கடமையாகும்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
*****. Reference from William Barclay
Commentary.
Comments
Post a Comment